Mr. and Mrs. கல்யாண சுந்தரம்

10:43:00 AM

Mr. and Mrs. கல்யாண சுந்தரம்...
மிகவும் அந்நியோநியமான ஜோடி. அவர்களுக்குள் நடக்கும் கூத்து நமக்கு விருந்து. அதை கல்யாண சுந்தரமே சொல்வது போல் எழுதியுள்ளேன். ரமணி Vs. ரமணி மாதிரி முயற்சி பண்ணியிருக்கேன். பாத்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.

சண்டை ஆரம்பமானது...

நான் T.V பார்த்துக் கொண்டிருந்தேன்.
சுந்தரி என்னருகில் வந்து உட்கார்ந்தாள்.
' T.V ல என்னங்க? ' என்றாள்.
'தூசி' என்றேன்.
சண்டை ஆரம்பமானது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------

நான் பேப்பர் படித்துக்கொண்டிருந்தேன்.
சுந்தரி பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.
' ஏங்க...ரொம்ப Bore அடிக்குது. நான் போய் ரொம்ப நாள் ஆன ஏதாவது ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போங்க' என்றாள்.
நான் உடனே கையை பிடித்து Kitchen னுக்கு கூடிச் சென்றேன்.
சண்டை ஆரம்பமானது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------

நான் Coffee குடித்துக்கொண்டிருந்தேன்.
சுந்தரி பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.
' ஏங்க என்ன ஏதாவது costly யான இடத்துக்கு Shopping கூட்டிட்டு போறிங்களா? ' என்றாள்.
நான் Petrol Bunk கிற்கு கூட்டிச் சென்றேன்.
சண்டை ஆரம்பமானது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
நான் வெளியூர் கிளம்பிக்
கொண்டிருந்தேன்.
சுந்தரி பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.
' ஏங்க ஊரலிருந்து வரும் போது பள பளன்னு சுத்தி கல்லு வச்ச, 200 250 கிராம் இருக்கிற மாதிரி ஒண்ணு வாங்கிட்டு வாங்க' என்றாள்.
நான் சின்ன எடை machine வாங்கி வந்தேன்.
சண்டை ஆரம்பமானது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------

நானும் சுந்தரியும் அவளது College Alumini விழாவிற்குச் சென்றிருந்தோம். ஒருவன் அங்கு குடித்துக் கொண்டிருந்தான்.
' அவன் எனது பழைய காதலன். நான் பிரிந்ததிலிருந்து அவன் விடாமல் குடித்துக் கொண்டிருக்கிறான்' என்றாள்.
'விடாமல் குடிக்கிறானா? அவ்வளவு சந்தோஷமா?' என்றேன்.
சண்டை ஆரம்பமானது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------

(பி.கு: ஒரிஜினல் ஐடியா என்னுடையது இல்லை. ஒரு forward mail லிற்கு தமிழ் வடிவம் கொடுத்து கொஞ்சம் காரம், மசாலா, உப்பு, பொடி சேர்த்துள்ளேன்...)

You Might Also Like

2 comments

  1. நல்லா இருக்கு பிரதீப்.. வேர்ட் வெரிபிகேஷனை தூக்கிவிடுங்கள்

    ReplyDelete
  2. Machi it is nice da But for every scene the Starting script is same machi

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...