சிறுகதை : காலம் காலமாக வாழும் காதலுக்கு...

6:25:00 AM

அப்போது எதிரில் வந்த லாரி ஒன்று பைக்கை மோதியது...எங்கும் ரத்த வெள்ளம்.தலையில் பலமான அடி. எழ முடியவில்லை. தூரத்தில் எந்த அசைவும் இல்லாமல் சந்த்யா. மூக்கிலும் காதிலும் ரத்தம். அந்த ப்ளூ சுடிதார் இப்போது சிகப்பாய்...சந்த்..யா.....ந்..யா...கத்த நினைத்தாலும் முடியவில்லை. கண்கள் இருளத் தொடங்கியது. சந்த்யா இப்போது மங்கலாய்த் தெரிந்தாள் .
அதோ அங்கே ...

என் பெயர் ஆதர்ஷ். IT உலகின் தலைநகரம் பெங்களூரு இப்போது, எனக்கும். வந்து மூன்று வருடமாகப் போகிறது. தூத்துக்குடியிலிருந்து பெட்டி படுக்கையை சுருட்டிக் கொண்டு வந்த ஆதர்சமூர்த்திக்கும் இப்போதிருக்கும் ஆதர்ஷ் ற்கும் நிறைய வித்யாசம். காரணம் ' அவள் '...

White Shirt, Black Pant, Tie சகிதம் முதல் நாள் அந்த IT கம்பெனியில், நான் மட்டும் ஏதோ வேற்று கிரக வாசி மாதிரி தெரிந்தேன். T Shirt, ஜீன்ஸ் என்று உலா வந்தவர்கள் என்னை ' அப்பத்தா ' ரீஞ்சிர்ற்கு ஏற இறங்கப் பார்த்தார்கள். எனக்கு அவர்கள் English புரியவில்லை. என்னுடைய ரஜினி ஸ்டைல் இங்கிலிஷ் அவர்களுக்குப் புரியவில்லை.

அடித்துப் பிடித்து கொஞ்சம் கொஞ்சமாக செட்டில் ஆன போது அறிமுகமானாள் என் Cindrella அவளைப் பார்த்த அந்த நொடி !! என் இதயம் கொஞ்சம் இறங்கியது. அவள் முகம் அந்த இடத்தை நிரப்பியது. Yes, I am fallin in Love. Yes I am in Love...I am Overloaded...I am in Love with her...கத்தினேன் காதல் கிறுக்கனாய்...மனதிற்குள்.

அடுத்து வந்த நாட்கள் முழுவதும் அவளுக்காகவே விடிந்தது. என் காதலை சரியான நேரத்தில் சரியான முறையில் அவளிடம் சொன்னேன்... Now...She...Loves...Me... எங்கள் கண்கள் புதியதொரு மொழியைக் கண்டு பிடித்து பேசிக் கொண்டது. என் விரல்கள் அவளது விரல்களை அணைக்கும் பாக்கியம் பெற்றது.

'ஆதர்ஷ்... இப்படி கூப்பிட்டாதான் நல்லா இருக்கு...'

'ஆதர்ஷ்... இந்த ஹேர் ஸ்டைல் தான் உனக்கு நல்லா இருக்கும்'

'ஆதர்ஷ்...தயவு செய்து இனிமேல் formals ஆபீஸ் வராத...ப்ளீஸ்...இது IT கம்பெனி டா...'

'ஆதர்ஷ்...படத்துக்கு போகலாமா?...Boogie Nights?'

'ஆதர்ஷ் என்னடா வண்டி ஓட்ற... fly man...u r in bangalore...'

இப்படி ஒரு நாளைக்கு ஆயிரம் முறை என் பெயர் அந்த செவ்விதழ் வழியே கேட்டுக் கொண்டே இருந்தது.என் இதயம் அவள் பெயரைச் சொல்லியே துடித்துக் கொண்டிருந்தது.

அவள் அப்பா நான் நினைத்து போல் ராதாரவி மாதிரியெல்லாம் இல்லை. டில்லி கணேஷ் மாதிரி அமைதியாய் இருந்தார். மகளின் விருப்பத்திற்கு சம்மதம் தெரிவித்தார். என் வீட்டில் சின்ன இராக் போர் நடந்து, கடைசியில் அமைதிப் புறா பறந்தது. நாளை எங்களுக்கு நிச்சயதார்த்தம்.

இன்று பைக்கில் என் பின்னால் என் வருங்கால மனைவி. நான் முதன்முதலில் வாங்கிக் கொடுத்த ப்ளூ சுடிதாரில். பைக் 60 ல் போய்க்கொண்டிருந்தது.

'ஆதர்ஷ்...ப்ளீஸ் வேகமா ஓட்டு....ம்...ம்...வேகமா...I am So Happy...I feel Like flying u know? Take Me to heaven ஆதர்ஷ்...take Me to heaven... '

'ஹேய்...இது road...இன்னும் கொஞ்ச தூரம் தான் இருக்கு. அதுக்குள்ள பறக்கணும்னு கத்துற...ட்ராபிக் ஜாஸ்தியா இருக்கு மா...' என்று சொல்லிக் கொண்டே வேகமாகத் திரும்பினேன். அப்போது...

...எதிரில் வந்த லாரி ஒன்று பைக்கை மோதியது...எங்கும் ரத்த வெள்ளம்.தலையில் பலமான அடி. எழ முடியவில்லை. தூரத்தில் எந்த அசைவும் இல்லாமல் சந்த்யா. மூக்கிலும் காதிலும் ரத்தம். அந்த ப்ளூ சுடிதார் இப்போது சிகப்பாய்...சந்த்..யா..ச...ந்..யா...கத்த நினைத்தாலும் முடியவில்லை. கண்கள் இருளத் தொடங்கியது. சந்த்யா இப்பொது மங்கலாய்த் தெரிந்தாள்.

அதோ அங்க...

...கார்னர்ல சீட். N 27, 28. போய் உட்கார் ப்ரியா...ஆரம்பிச்சாச்சு போல...சரி,
நான் போய் பாப்கார்ன் அண்ட் கோக் வாங்கிட்டு வரேன்...என்று சொல்லிக் கொண்டே வெளியே வந்தேன்...

நாளை நிச்சயதார்த்தத்தை வைத்துக் கொண்டு இன்று என் Cindrella ப்ரியாவுடன் PVR ரில் சினிமா பார்க்க வருவதும் ஒரு குஷி தான்...அப்புறம் என்ன ? கல்யாணம் தான்...மறக்காம வந்திடுங்க....

வித் லவ் ஆதர்ஷ்...ப்ரியா.

You Might Also Like

5 comments

  1. முதலில் , உன் எழுத்துக்களில் மாபெரும் முன்னேற்றம். ஜனரஞ்சகம் வந்திருக்கிறது. வாழ்த்துக்கள்!!!
    ஆனால், வழக்கம் போல் உன் கதைகளில் ஏற்படும், ஒரு குட்டி குழப்பம் இதிலேயும் உண்டு. அவர்கள், படம் பார்க்க தாமதமாக வருகிறார்கள் என்று எனக்கு புரிகிறது. அவர்கள் வரும்போது, அங்கே ஓடி கொண்டிருப்பது, படத்தின் ஆரம்ப காட்சிகளா, இல்லை க்ளைமாக்ஸா? ஏனென்றால் நீ கிளைமாக்ஸ் முதலில் சொல்லிவிட்டு, கதை சொல்லி, மீண்டும் க்ளைமாக்சில் முடிப்பதாக சொல்லி இருக்கிறாய்! அவர்கள் கிளைமாக்ஸ் நேரத்துக்கு படம் பார்க்க வருகிறார்களா? Some Logic Probs!!! ஆனால், இது கமர்ஷியல் கதை , சிம்ப்ளி சூப்பர்ப்!!

    ReplyDelete
  2. dai... Marvelous da!! Inime complete ah edit panni, nee nalla padichu paathutu apram post pannu! A writer can easily understand a story because he feel it, however "good" writers make readers to feel it, and obviously readers will understand... Good one!

    ReplyDelete
  3. daii.... Enna madri mr.Podujanathukku seriya purila!!! na nethu padicha kadhaila etho climax na irundhuchu but nw those words are missing....full confusion...

    ReplyDelete
  4. Nalla muyarchi machi..Irandu maatrangal seithal intha kathai sirappaga irukkum endru enaku thondrukirathu...

    1.Remove the lines in italics start from என் பெயர் ஆதர்ஷ். IT உலகின் ....
    2.'ஹேய்...இது road...இன்னும் கொஞ்ச தூரம் தான் இருக்கு. அதுக்குள்ள பறக்கணும்னு கத்துற...ட்ராபிக் ஜாஸ்தியா இருக்கு மா...' என்று சொல்லிக் கொண்டே வேகமாகத் திரும்பினேன்....

    அப்போது...

    ...எதிரில் வந்த லாரி ஒன்று பைக்கை மோதியது...எங்கும் ரத்த வெள்ளம்.தலையில் பலமான அடி. எழ முடியவில்லை. தூரத்தில் எந்த அசைவும் இல்லாமல் சந்த்யா. மூக்கிலும் காதிலும் ரத்தம். அந்த ப்ளூ சுடிதார் இப்போது சிகப்பாய்...சந்த்..யா..ச...ந்..யா...கத்த நினைத்தாலும் முடியவில்லை. கண்கள் இருளத் தொடங்கியது. சந்த்யா இப்பொது மங்கலாய்த் தெரிந்தாள்.



    Hey...கார்னர்ல சீட். N 27, 28. போய் உட்கார் ப்ரியா...padathoda first scene eh Tragedy pola.. sari...சரி, நான் போய் பாப்கார்ன் அண்ட் கோக் வாங்கிட்டு வரேன்...என்று சொல்லிக் கொண்டே வெளியே வந்தேன்...

    நாளை நிச்சயதார்த்தத்தை வைத்துக் கொண்டு இன்று என் Cindrella ப்ரியாவுடன் PVR ரில் சினிமா பார்க்க வருவதும் ஒரு குஷி தான்...அப்புறம் என்ன ? கல்யாணம் தான்...மறக்காம வந்திடுங்க....

    வித் லவ் ஆதர்ஷ்...ப்ரியா.

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...