தீ = தமிழில் 150 வது அரசியல் X போலீஸ் ஸ்டோரி

11:29:00 AM

ஒரு சனிக்கிழமை இரவு என் பாட்டியுடன் இந்த படத்தை பார்க்க ஆரம்பித்தேன்.

ஹீரோ சுந்தர்.சி இன் இன்ட்ரோவே படம் பப்பரபேன் என்பதை சொல்லி விடும். அம்மணக்கட்டையாக நேராக காசியில் இருந்து வருவதைப் போல நடு ரோட்டில் நடந்து வருகிறார். அவருக்கு ஒரு டிராபிக் போலீஸ் ஒரு கட்சி துணி பேனரை கட்டி மானம் காத்து மானாவாரியாக திட்டி அனுப்புகிறார். அப்படியே படிப்படியாக 'வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்' னு ஒரு பாட்டு கூட இல்லாம அந்த தொகுதிக்கே MLA அகிடுறார். ஆக்குவது கட்சி பின்னால் இருக்கும் பட்சி நம்ம தலைவி நமீதா.

MLA ஆனதுக்கு அப்பால பயங்கரமா அராஜகமெல்லாம் பண்றார். யார் இவன் ? எதுக்கு இப்படி பண்றான்னு ? நம்ம யோசிக்கணும்னு.ஆனா, தமிழ் நாட்டுல எல்லாருக்குமே தெரியும் flasback ல நம்ம ஹீரோ ஒரு நேர்மை தவறாத போலீஸ் னு. அதான் படம் ரிலிஸ் ஆகுறதுக்கு மொத வாரமே வெற்றி நடை போடுகிறதுன்னு சன் டிவி, சன் நியூஸ், கே டிவி, சன் மியூசிக் னு பல சேனல்கள்ல 'ஹிந்துஸ்தான் பெட்ரோளியத்துல ஹிந்துக்கள் மட்டும் தான் பெட்ரோல் போடுறாங்கலானு ' பஞ்ச் டயலாக் பேசுறாரே ஹீரோ.

அப்பாடி கதைக்குள்ள வந்தாச்சுன்னு பாத்தா, ஒட்ராணுவ ஒட்ராணுவ பல படங்கள பிட்டு பிட்டா ஒட்ராணுவ. ரெண்டு புள்ளைகள கல்லால அடிச்சு கொன்னு, பொஞ்சாதியையும் கல்லால அடிச்சு படுக்க வச்சு, நம்ம நேர்மை ஹீரோவையும் சுத்தியால தலைல அடிச்சு ஒரு குட்டைல தூக்கி போட்டருவானுவ வில்லனுக. அப்புறம் அப்படியே ஒரு மொட்ட, நெத்தியில குங்கும பட்ட னு கெட் அப் மாத்தி பழிக்கு பழி வாங்குகிறார். மொட்ட போட்டு கெட் அப் மாத்துறதுக்கு பதிலா ஒரு மருவ மட்டும் ஓட்ட வச்சிக்கிட்டு எம் ஜி அர் பட ஸ்டைல் ல போயிருக்கலாமே.கதையே அந்த ஸ்டைல் லதான் இருக்கு...கமல் பத்து வேஷம் போட்டு என்ன பிரயோஜனம்? சுந்தர்.சி ஒரு மொட்ட கெட் அப் ல வில்லன் குரூப் ல புகுந்து கலக்கிடாருல...சுந்தர். சி MLA ஆகுறதுக்கு முன்னாடியே என் பாட்டி பாய விரிச்சு தூங்கிட்டாங்க. அவர் போலீஸ் ஆகும் போதே எனக்கு இழுத்துகிருச்சு...

மொத்ததுல 'தீ' னு வைக்கிறதுக்கு பதிலா 'பீ' னு வச்சிருந்தா இன்னும் கொஞ்ச தூரம் வெற்றி நடைய பூட்டிருக்கலாம்னு தோனுது...

(இதுலையும் ஒரு விசயத்த பாராட்டியே ஆகனும்...போலீஸ் இல்லைனா என்ன ஆகும் னு காட்டுறது 30 ரூவாக்கு இதையாவது காட்டுரானுவளே னு திருப்தி பட வைக்குது )

You Might Also Like

1 comments

  1. மூஞ்சில அடிச்சா மாதிரி இருக்கு! ஆனாலும் "sentence structure" ல நெறைய நீ கத்துக்கணும் தம்பி! சில சொற்றொடர்கள் , நீளமா புரியாத வகைல இருக்கு! Hot Words! Keep up the good work!

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...