சிறுகதை : விவகாரம்...
9:24:00 AMActually நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்றதுல என்னப் பிரச்சனை?
இன்னமும் கலாச்சாரம், கட்டுப்பாடு, பண்பாடு அது இதுவென்று என்னென்னவோ பேசிக்கொண்டு இருக்கிறார்கள். Living Together என்ன அவ்வளவு பெரிய குற்றமா? எனக்கு அவளைப் பிடித்திருக்கிறது, அவளுக்கு என்னைப் பிடித்திருக்கிறது . இதுவரை friends ஆக இருந்தவர்கள் இப்போது Life Partners. Whats harm in it? We like each other..We Love each other..We are Living Together...அவ்வளவுதான்.
எனக்கு மேக்னாவை ரொம்பப் பிடிக்கும். Infact, என்னோட friend, Wellwisher எல்லாமே அவள்தான். என் அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட். பயந்து பயந்து ஒவ்வொரு காரியத்தையும் செய்து கொண்டிருந்த நான், இப்போது இவ்வளவு தூரம் தெளிவாகியிருப்பதற்குக் காரணம் மேக்னா..மேக்னா...மேக்னா மட்டும் தான். கூடப் படித்த classmates, கூட வேலை செய்கிற collegues இப்படி யாருடனும் அதிகம் பழகியதில்லை நான். கூச்சம் என் சுபாவம். அதை மாற்றியது மேக்னா. இப்படி என் வாழ்க்கையில் நடந்த எல்லா நல்ல விஷயங்களிலும் மேக்னா மட்டுமே இருந்தாள்.
அவளுக்காக நான் எதையும் செய்யத் தயார், விட்டுக் கொடுக்கவும் தயார். அவளாலும் நான் இல்லாமல் இருக்கமுடியாது. எப்போதோ மனதார ஒன்று சேர்ந்து விட்ட நாங்கள் இப்போது ஒரே வீட்டில் சேர்த்து வாழ்கிறோம். எனக்காக நான், அவளுக்காக நான்.
வெளிநாடுகளில் இது ரொம்பவுமே சாதாரணம். அங்கெல்லாம் 15 வயதிலேயே தங்கள் பிள்ளைகளுக்கு முழு சுதந்திரம் கொடுக்கிறார்கள். பிள்ளைகள் முடிவில் பெற்றவர்கள் தலையிடுவது இல்லை. ஆனால் இங்கே? OH MY GOD! எத்தனை கேள்விகள், எவ்வளவு பிரச்சனைகள். I cant just bear with this !
எனக்கு 23 வயதாகிறது. அவளுக்கும் 23. வீட்டிற்குத் தெரியாமல் ஓடிப்போய், சேர்ந்து வாழ்வதற்கு அவசியமே இல்லை. என் Decision Correct என்று எனக்குத் தெரியும். நான் யாருக்கும் பயப்படவேண்டியதில்லை. "நீயும் அவளும் இப்படி சேர்ந்து வாழ்றது தெரிஞ்சா ஊர் சிரிக்கும். என்ன உறவுன்னு கேட்டா என்ன சொல்லுவீங்க ? வெட்கமாயில்ல? " என்று கேட்கிறாள் என் அம்மா. ஊர் சிரிக்கும் என்பதற்காக என் சந்தோஷத்தை நான் இழக்க வேண்டுமா? இல்லை ஏதாவது உறவிருந்தால் மட்டும்தான் இப்படி சேர்ந்து வாழ வேண்டுமென்று சட்டமா? புரியவில்லை எனக்கு.
திருமண உறவில் எனக்குத் துளியும் நம்பிக்கை இல்லை. அப்பா அம்மா பார்க்கும் ஏதாவதொரு தத்தியைக் கட்டிக் கொண்டு வாழ்நாள் முழுக்க கஷ்டப்பட எனக்கு விருப்பமில்லை. நான் விரும்பி, அவள் விருப்பத்தையும் கேட்டுத் தெளிவாக எடுத்த முடிவு தான் இந்த Living Together. இன்று வரை சந்தோஷம் மட்டும் தான் எங்களுக்குள். வெளியிலிருந்து பார்பவர்களுக்கு புரியாது. புரிய வேண்டிய அவசியமும் இல்லை. எல்லோரையும் போல ஒரு அர்த்தமில்லாத திருமண வாழ்கையை வாழ நாங்கள் விரும்பவில்லை. எங்களுக்கான வாழ்கையை நாங்கள் முடிவு செய்துவிட்டோம்.
ஒ! இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருக்கிறோம், இன்னும் என் பெயரைச் சொல்லவில்லை பாருங்கள். I ... am ... ஷீலா.
(மறுபடியும் முதல் பத்தியை வாசியுங்கள்)
4 comments
MM...Nalla irukku. Twistu...
ReplyDeleteaaana oru ques: ivanga friendsa ? illa ho....?
Nice one... Loved reading it..
ReplyDeleteeppadi vena vachukalaam devi...
ReplyDeleteஅட்டகாசம்!!! உன் எழுத்துல ஒரு "FLOW" வர ஆரம்பிச்சிருக்கு!! Keep it up! எனக்கும் இந்த ஓரின சேர்க்கைய பத்தி எழுத ஐடியா இருந்துச்சு. நீ முந்திகிட்ட!! All in the game!! U started writing beyond limits... Keep up the good work! Think in a perspective which others cannot, so u can create "shockS"
ReplyDeleteமேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...