Perfume - The Story Of A Murderer

11:15:00 AM

கேபிள் சங்கரின் Blog ல் இந்தப் படத்தைப் பற்றி படிக்கும் போதே பார்க்கும் ஆர்வம் ஏற்பட்டது. அடித்துப் பிடித்து 3 நாட்கள் Torrents ல் download ஆகி என் கையில் வந்த இந்த பிரான்ஸ் நாட்டுத் திரைப்படம் நான் பார்த்த உலக சினிமாக்களில் One Of The Best.


18 ஆம் நூற்றாண்டின் பிரான்ஸ் நகரம் தான் கதைக்களம். Art Direction ல் நம்மவர்கள் இப்பொது செலுத்தும் கவனத்தை விட 10 மடங்கு அதிகம் செலவழித்தால் கூட இதில் பாதியைக் கூட கொண்டு வர முடியாது. அந்த அளவிற்கு பழைய பிரான்ஸ் நம் கண் முன்னே நிற்கிறது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு மிகப் பெரிய மீன் சந்தையில் பிறந்தவுடனேயே தன் தாயால் நிராகரிக்கப் பட்டு, பின் ஒரு அநாதை ஆசிரமத்தில் வளரும் Jean Baptise Grenouille (Ben Whishaw) விற்கு பிறப்பிலேயே ஒரு ஆபார சக்தி இருக்கிறது. இவனது நுகர் சக்தி சாதாரணமானவர்களை விட 1000 மடங்கு அதிகம். அதுவே இவனது வரம். பிறந்த பச்சிளம் குழந்தையாக ஆசிரமத்தில் விடப்படும் போது அங்கிருக்கும் ஒரு சிறுவன் இவன் முகத்தைத் தொட ஒரு விரலை நீட்டுவான். டக்கென அவன் விரலைப் பிடித்து முகர்ந்து பார்க்கும் அந்த முதல் காட்சியியே இவன் யார் என்பதைச் சொல்லிவிடும். புல்வெளியில் கண்ணைமூடிப் படுத்துக் கொண்டே தனக்கு அடுத்து இருக்கும் பொருட்களை (தூரத்துக் குட்டைக்குள் இருக்கும் தவளை முதற்கொண்டு) இவன் முகர்த்து பார்த்தே சொல்வது இவனது சக்தியைக் காட்டிவிடுகிறது.

அனாதை ஆசிரமத்திலிருந்து விற்கப்பட்டு பின் ஒரு தோல் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்கிறான். பின் அங்கிருந்து ஒரு திரவிய தயாரிப்பாளரிடம் (Perfume Maker) வேலைக்குச் சேர்கிறான். அந்த திரவியர் இவனிடம் இருக்கும் அபார சக்தியால் தோய்ந்து போய் இருந்த வியாபாரத்தை சரி செய்து பணம் சம்பாதிக்கிறார். பதிலுக்கு, என்ன வேண்டும் என்று கேட்க, வாசனையை சேமிக்கும் முறையை கற்றுக் கொடுக்கச் சொல்கிறான். 1000 ரோஜா மலர்களின் வாசனையை ஒரு 10 மில்லி எஸன்ஸாக சேமிக்கும் கலையை கற்றுக் கொடுக்கிறார். ஆனால் இந்த முறையை வைத்து உலகில் உள்ள எல்லா பொருட்களுடைய வாசனையையும் சேமிக்க முடியாது என்று தெரிந்து கொள்ளும் அவன் அங்கிருந்து வெளியேறுகிறான். (கண்ணாடி, இரும்பு, பிளாஸ்டிக், கடைசியாக ஒரு பூனை என்று கையில் கிடைக்கும் அனைத்தையும் அவன் சோதித்துப் பார்ப்பது சூப்பர்)

தான் நினைக்கும் வாசனையை சேமித்து, உலகை ஆளும் ஒரு திரவியத்தை கண்டுபிடிக்க நினைக்கிறான். அப்படிப் பட்ட திரவியத்தை தயாரிக்கத் தேவைப் படும் மூலப் பொருள் பெண்ணுடல் என்று அவன் கண்டுபிடித்து, அதற்கு பின் செய்யும் காரியங்கள் அதிர்ச்சியின் உச்சம். இளம் பெண்களின் கூந்தலுக்கு மட்டுமல்ல, முழு உடலுக்கும் இயற்கையிலேயே வாசம் உண்டு என்று பாண்டிய மன்னனின் சந்தேகத்திற்கு பதில் கண்டுபிடித்து (ஹி ஹி ஹி...சொந்த பிட்டு ) அதை சேமிக்கவும் செய்கிறான்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பழம் விருக்கும் இளம் பெண் ஒருத்தியின் வாசத்தாலேயே அவளைப் பின் தொடர்ந்து, வேறு வழி தெரியாததால் கொன்று, ஆடைகளைக் களைத்து, ஆசை தீர, போதை ஏற முதன் முதலில் ஒரு பெண்ணின் வாசத்தை முழுதாக நுகர்ந்து பார்க்கும் அந்தக் காட்சி மறப்பதற்குப் பல நாள் ஆகும். அப்படி ஒரு அதீத காட்சியமைப்பு, நடிப்பு.

திடீர் திடீரென்று இளம்பெண்கள் காணமல் போவதும்,பின் மொட்டையடிக்கப்பட்டு, நிர்வாணமாக கொலையாகிக் கிடப்பதைப் பார்க்கும் மக்கள், சந்தேகத்தால் காண்பவரையெல்லாம் அடித்து (நம்ம Psyco கொலைகாரன் மேட்டரில் நடந்தது போல ), சுட்டுக் கொண்டு சாவது, தான் கொன்ற பெண்களின் உடல்களை பதப்படுத்தி அதிலிருந்து சில சொட்டு திரவியத்தை இவன் சேகரிப்பது, 13 பெண்களை கொலை செய்ததற்காக சிலுவையில் அறையப்படப் போகும் தருணத்தில் தான் கண்டுபிடித்த திரவியத்தின் மூலம் நூற்றுக்கணக்கான மக்களை தன்னிலை மறக்கச் செய்து, தனக்கு அடிமையாக்கி, பரவசப் படுத்துவது, இறுதயில் தான் பிறந்த அதே மீன் சந்தையில் தான் கண்டுபிடித்த அதே திரவியத்தாலேயே தன்னை சாகடித்துக் கொள்வது என்று Jean Baptise இன் கதை ஒரு வரியில் சொன்னால் பயங்கரம்.

பிறந்தவுடனேயே தாயைக் கொள்ள காரணமாயிருப்பது, ஆசிரமத்து நிர்வாகி இவனை விற்றவுடன் கொலையாவது, திரவியர் இவன் பிரிந்தவுடன் வீடு இடிந்து சாவது, கடைசியில் இவன் செய்த கொலைகளுக்காக இவன் வேலை செய்த ஆராய்ச்சி கூடத்தின் முதலாளி தூக்கில் போடப் பட்டு கொலையாவது என்று இவனது Background Characterisation நம்மை மிரட்டுகிறது.

படத்தின் Tagline, " He Lived to Find Beauty. He Killed to Possess It" இவனது வரமே இவனது சாபம்.

கேமரா, பின்னணி இசையைப் பற்றிக் கூறாமல் இருக்க முடியாது. மெலியதாய் ஒரு மைல்ட் டியுன் படம் நெடுக கேட்டுக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு பெண்ணாக அவன் கொல்லும் போது மெலிதாய் கேட்கும் அந்த இசை இது இவனுக்கு சாதாரணம் என்பதை சொல்லி நம்மை மிரட்டி விடுகிறது. Close Up Shots, Top Angle, Wide Angle என்று பிரான்ஸ் நகரை பக்கவாகக் காட்டுகிறது கேமரா. Run Rola Run படத்தைக் கொடுத்த Tom Kykwer ன் இன்னொரு மாஸ்டர் பீஸ் இந்த Perfume.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Perfume- The Story Of A Murderer - பயங்கரத்தை எதிர்கொள்ளுங்கள். Dont Miss It...

You Might Also Like

3 comments

  1. I got another story line for my bulletz thodar kadhai. Marmamaana saavugal, reason ramu body il irunthu varum smell.. kadhai peru, "Body" Spray!
    A story of a Serial Killer

    ReplyDelete
  2. nadathu...nadathu...mmmm.jamaaai....jamaaaaaiiii....

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...