தீரவில்லை ஆசை...

11:14:00 AM

விடுதலைப்புலிகள் கூண்டோடு அழிக்கப்பட்டு விட்டனர், பிரபாகரன் குடும்பமே கொல்லப்பட்டு விட்டது, லட்சத்திற்கு மேல் மக்கள் அகதி முகாம்களில் விடியலுக்காக ஏங்கிக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இனி அந்த மக்களின் நிலை என்ன ஆகுமோ என்று உள்ளுர என்னைப் போல் நிறைய பேர் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இவர்களை வைத்து அரசியல் செய்து, ஜெய்த்தவர்கள் பங்கு பிரித்துக்கொள்வதில் பிசியாக இருக்கிறார்கள். இவர்களை வைத்துப் பணம் பண்ணுவதில் இப்போது முழு மூச்சாய் இறங்கி இருக்கிறார்கள் மீடியா கனவான்கள் !

ஊடகம் - தமிழ் மக்களின் அன்றாடத் தேவையாய் இருந்து வரும் டிவி, செய்தித் தாள்கள், புத்தகங்கள், இன்டர்நெட் போன்றவை ஈளத் தமிழர்கள் பிரச்சனையை வைத்து தற்போது நடத்தி வரும் வியாபாரம் அரசியல் விஷயங்களையும் மிஞ்சும் வண்ணம் உள்ளது. குவியல் குவியலைப் பிணம், ரத்தம், நெருப்பு, ஆயுதங்கள், வெடிமருந்துகள் என்று நாள் முழுவதும் காட்டுகின்றன தொலைக்காட்சிகள். கவர் ஸ்டோரி என்ற பெயரில் கிறுக்கித் தள்ளுகின்றன பத்திரிகைகள். தனி ராஜ்ஜியம் ஒன்றே அழிந்து விட்டதை வலைப்பதிவுகள் அலசி, பிரித்து மேய்ந்து தொங்கவிட்டுக் கொண்டிருக்கின்றன. செய்திகள் முந்தித் தருகிறார்களாம்...ஹும்...

TRP Rating ல் நீ முதலிடமா, நான் முதலிடமா என்று சர்வதேசத் தொலைகாட்சிகளுகிடையே போட்டி. வாசகர் எண்ணிகையில் நீயா நானா என்று பத்திரிக்கைகளுகிடையே போட்டி!

நடுநடுவே பிரபாகரன் இறக்கவில்லை, படகில் தப்பி விட்டார்; பழ நெடுமாறன் சொன்னார்; திருமாவளவன் பேட்டி கொடுத்தார் என்று விடுதலைப் புலிகள் ஆதரவு வலைத்தளம் ஒன்று வேறு கூவிக் கொண்டிருக்கிறது...

இதை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில் நக்கீரனில் இந்த வாரம் கவர் ஸ்டோரியுடன் நிறுத்திக் கொள்ளாமல் போட்டோவே போட்டு விட்டார்கள்!

பிரபாகரன் ஒரு அறையில் உட்கார்ந்து தான் இறந்த செய்தியைத் தானே டிவி யிலும் பேப்பரிலும் பார்த்துக் கொண்டிருப்பதைப் போல!
அதைப் பார்த்துவிட்டுப் பலர், இந்த வார நக்கீரனுக்குப் பஞ்சம் வரும் அளவிற்கு வாங்கிப் படித்தார்கள். வாசகர்கள் எண்ணிக்கையில் கண்டிப்பாக இப்போது நக்கீரன் தான் முதலிடம்!

மிகவும் அழகாக 'வொர்க்' செய்யப்பட்டிருக்கும் அந்தப் படம் எங்கிருந்து வந்தது தெரியுமா?
ஐய்யா டிவி, தொலைக்காட்சி நண்பர்களே, எங்கள் உணர்வுகளையும், ஈழ மக்களின் உயிர்களையும் வியாபாரம் ஆக்காதீர்கள். பணம் பண்ண ஆயிரம் வழிகள் இருக்கிறது. உங்கள் பண ஆசைக்கு உங்கள் மனசாட்சியை அடக்கம் பண்ணாதீர்கள்! நம் மக்களைக் காப்பாற்றுங்கள்...

You Might Also Like

2 comments

  1. good find da.. Enga pudicha intha original photo va

    ReplyDelete
  2. .nakeeran din imply the photo was true .the photo was printed jus to lull lakhs of refugess in and around madurai camps.nedumaran is not a politician ,he abandoned his mp post for eelam cause da.You can call vaiko a politician but definitely not nedumaran.It's not jus the money but sweeping the tears of of true tamils.If you have time go to a refugee camp .You can find this edition of nakeern in every camp.The photo s jus to keep the hopes of eelam alive,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...