X Men Origins - Wolverine

11:42:00 AM

நல்ல வித்யாசமான படங்களின் விமர்சனங்களை மட்டுமே எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் Wolverine பற்றி எழுதாமல் என் சினிமா blog முழுமையடையாது. ஆங்கில படப் பிரியர்கள் மத்தியில் Hugh Jackman ரொம்பவுமே பிரபலம். Swordfish, Prestige, Australia போன்ற படங்களில் நடித்திருந்தாலும் Jackman பேரைக் கேட்டவுடன் நியாபகத்துக்கு வருவது X Men னின் Wolverine தான். இதுவரை வெளிவந்திருக்கும் மூன்று X Men படங்களிலும் ஹீரோ Wolverine தான்.

அசத்தலாக
இருபுறமும் கொம்பு முளைத்தார் போல ஒரு ஹேர் ஸ்டைல், மீசை இல்லாமல் கிருதாவோடு ஒட்டிய பாதி தாடி, வாயில் ஒரு பெரிய சுருட்டு என்ற Wolverine னின் தோற்றமே மிரட்டலாய் இருக்கும்.எந்நேரமும் கோபம், கோபம் வந்தால் கையை முறுக்கி மூன்று Adamantium கத்திகளை வரவழைத்து சண்டையிடுவது என்று ஒரு அழிக்க முடியாத அசுரனைப் போலத் தான் உலா வருவான் இந்த Wolverine. தான் யார் என்பதே தெரியாமல், தன் கழுத்தில் இருக்கும் Dog Tag ல் பொறிக்கப் பட்டிருக்கும் 'Wolverine' என்ற பெயரையே தன் பெயராகக் கொண்டு குழப்பத்துடனும், கோபத்துடனும் Xavier என்னும் ஆசிரியர் நடத்தும் சிறப்புப் பள்ளியில் தங்கியிருப்பவனே இந்த mutant.(mutant கள் பிறப்பிலேயே எதாவது ஒரு விசேஷ சக்தியுடன் இருப்பவர்கள் X Men கதையே mutant களை பற்றியது தான்)


X Men இரண்டாம் பாகம் புரிய முதல் பாகம் பார்த்திருக்க வேண்டும். அதே போல் தான் மூன்றாம் பாகம் புரிய முதல் இரண்டு பாகங்களையும் பார்த்திருக்க வேண்டும் என்கிற Trilogy Need லிருந்து விலகி நிற்கிறது இந்த X Men Origins. இதுவரை வெளியான மூன்று படங்களிலும் முக்கிய கதாபாத்திரமாக இருந்தவர்களின் பின்னணியை கூறுகிறது இந்த Origins Series. mutant கள் ஒரு குழுவாக வாழ்கிறார்கள், அநியாயத்தை எதிர்த்து போரரடுகிறார்கள் என்று தான் X Men Trilogy இருக்கும். யார் அவர்கள்? எங்கிருந்து வந்தார்கள்? எப்படி ஒன்று சேர்ந்தார்கள்? என்று அப்போது யாருக்கும் தெரியப்படுத்தவில்லை. X Men முதல் பாகத்தில் Wolverine ற்கு சின்னதாய் ஒரு பிளாஷ் போல் வரும் கனவு தான் இந்தப் படத்தின் மொத்த கதையே.

உண்மையில் அவன் யார், எங்கிருந்து வந்தவன், எப்படி இப்படி ஆனான் என்று அவனது வரலாறை இந்தப் படம் கூறுகிறது.

பிறப்பிலேயே ஒரு mutant ஆக தன் அண்ணனுடன் வில்லன் கூட்டத்திடமிருந்து தப்பித்து ஓர் போர் வீரனாக வளர்கிறான் JAmes Logan. காயம் பட்டால் உடனே ஆறுவதும், கோபம் வந்தால் கையை முறுக்கி தன் எலும்பை கத்தி போல் வெளியே எடுப்பதும் இவனது சக்தி. இவனது அண்ணன் Victor ரும் இவனப் போலவே காயமாரும் சக்தியும், அசுர பாலா சக்தியும் கொண்ட ஒரு mutant. ஒரு முறை ஒரு பெண்ணிடம் தப்பாக நடக்க முயலும் மேலதிகாரியை கொலை செய்ததற்காக மரண தண்டனை விதிக்கப்படும் இருவரும் காயம் ஆறும் சக்தியால் பிழைத்து புதியதொரு கூட்டத்தில் சேர்கிறார்கள். இந்த கூடத்தின் தலைவன் General Stryker.

Stryker தவிர அங்கு இருக்கும் வீரர்கள் அனைவரும் வெவ்வேறு சக்தி கொண்ட mutant கள். காலப் போக்கில் இந்த கூட்டத்தினர் செய்யும் ஆராஜகம் தாங்காமல் Victor சொல்லியும் கேட்காமல் அந்த கூட்டத்தை விட்டு விலகி தன் காதலி Kayla Silverfox உடன் சேர்ந்து வாழ்கிறான். அந்த நாட்களில் Silverfox சொன்ன கதையில் வரும் அவளது favourite வீரனின் பெயர் தான் Wolverine.

Logan னைத் தேடி வரும் Victor, Silverfox ஐக் கொன்று விடுகிறான். கொதித்து எழும் Wolverine, Victor ருடன் சண்டையிட்டு தோற்கிறான். அவனது கத்தி போன்ற எழும்பும் முறிந்து விடுகிறது. இந்த வேளையில் General Stryker தான் உதவுவதாகக் கூறி Wolverine ற்கு Weapon X Test செய்கிறான். Adamantium என்னும் உலகிலேயே கனமான உலோகம் அவனுள் செலுத்தப் படுகிறது. Wolverine என்று பொறிக்கப்பட்ட Dog Tag அவன் விருப்பப்படி கழுத்தில் மாட்டப் படுகிறது. இதற்கு பிறகு நடப்பவை தான் கிளைமாக்ஸ். அதை நான் கெடுக்க விரும்பவில்லை. படம் பார்த்து தெரிந்து கொள்ளுதல் நலம்.படம் இந்த மாத தொடக்கத்தில் தான் வெளிவந்தது என்றாலும் இதை நான் போன மாத தொடக்கத்திலேயே பார்த்து விட்டேன். Editing, Graphics வேலைகள் மிச்சமிருந்த நிலையிலேயே இதன் Work Print நெட்டில் உலா வரத் தொடங்கி சக்கை போடு போட்டது. நானும் ஆவலில் பார்த்து விட்டேன். தவறு என்று பிறகு தான் தெரிந்தது. அந்த 'முழு திருப்தி' இதில் இல்லை. கண்டிப்பாக தியேட்டரில் ஒரு முறை பார்க்க வேண்டும்.

அமெரிக்காவின் Most Expected லிஸ்டில் இருந்த இந்த படத்திற்கு Work Print லீக் எல்லாம் பெரிய பாதிப்பைத் தந்ததாகத் தெரியவில்லை. இதுவரை 129 மில்லியன் அமெரிக்கா டாலர்களை வசூலித்து Box Office Hit லிருக்கும் இந்த படத்தின் வார இறுதி வசூல் மட்டும் 26.4 மில்லியன் டாலர்கள். திருட்டு VCD எங்களை ஒன்றும் செய்யாது என்கிறது X Men Team. நமக்கு தான் இங்கு டவுசர் கிழிகிறது.

X Men Origins இன் அடுத்த வெளியீடு மூன்று பாகங்களின் வில்லன் Magneto பற்றியதாய் இருக்கலாம் என்கிறது ஒரு ஹாலிவுட் பட்சி. Xavier ருடன் நண்பனாயிருந்து பின் வில்லனாக மாறிய Magneto வின் கதையும் நன்றாகத் தானிருக்கும். 2011 ரிலீஸ். ஆனால் அதற்குள் X Men நாலாம் பாகம் ரிலீஸ் ஆகிவிடும்.

X Men Origins - Wolverine - என்னைப் போல் இல்லாமல், ' Only in Theatres !!!'

You Might Also Like

2 comments

 1. தல.. அருமையா எழுதறீங்க. நீங்க தொட்டிருக்கும் அதே மேட்டரைதான் நானும் எழுதியிருக்கேன்ங்கறது ரொம்ப ஆச்சரியமா இருக்கு.

  ஆனா. எழுதி.. நீங்களே வச்சிகிட்டா.. நாங்க எப்படி படிக்கிறது? தமிழிஷ், தமிழ்மணம் மாதிரி இடங்கள்ல போஸ்ட் பண்ண மாட்டீங்களா..?

  அருமையா எழுதறீங்க. இன்னும் நிறைய படங்களை பற்றி எழுதுங்க. என் ஆதரவு நிச்சயம் உண்டு.! :))

  வாழ்த்துகள்.!

  ReplyDelete
 2. அப்புறம் இந்த வேர்ட் வெரிஃபிகேஷனை எடுத்து விடுங்க..!!

  ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...