கவித கவித...

12:26:00 PM

அப்பா அடித்தால்
அழுதது குழந்தை
அம்மா பாவம்

அருவாளை எடுத்து ஒரே வெட்டு
கருப்பா காப்பாத்து
கோவில் திருவிழா

திடீரென்று நின்றது அழுகைச் சத்தம்
நன்றி மின்சார வாரியம் - மெகா சீரியல்

காதருகில் கிருச்ச் கிருச்ச் சத்தம் போய்
கிர்ர்ர்ர் கிர்ர்ர்ர் சத்தம்
புதுபிக்கப்பட்ட சலூன்

வெளியூர் கிளம்பிய நொடியில்
விபத்து
நசுங்கியது எலுமிச்சைகள்

1000 ரூபாய் செருப்பு
கடித்தது
கையை

விட்டு விட்டு எரிந்த தெரு விளக்கில்
தெள்ளத் தெளிவாக தெரிந்தது
தமிழக அரசு

வாங்க வாங்க
குரல் கேட்டும் உள்ளே செல்லவில்லை
வெளியே "நாய்கள் ஜாக்கிரதை...

You Might Also Like

0 comments

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...