புல்லரிப்பு...

7:56:00 AM

நன்றி...நன்றி...நன்றி... I AM SO HAPPY...

நமக்கு வாசகர்கள் அதிகம் ஆகிக்கொண்டு வருவது போல் தெரிகிறது..(என் நண்பர்கள் தயவால் ..ஹி ஹி...)

மேலும் இரண்டு நாட்களுக்கு முன் காலங்காத்தால ஒரு அஞ்சு மணிக்கு இருக்கும் ஒரு போன்... எவன்டா அவன்னு பார்த்தா... FOREIGN CALL !!! ஆஸ்திரேலியாவுல இருந்து ஒரு ரசிகை...(சாமி சத்தியமா ஆஸ்திரேலியா தான்...) Blog ரொம்ப நல்லா இருக்கு...உணர்ச்சிகரமா இருக்கு...சூப்பர் னு சொன்னாங்க...பொசுக்குனு மூஞ்சி ரெட் ஆகி வெட்கம் வந்திருச்சு...

அப்புறம் சாட்ல ஒரு ரசிகர்! கேட்டா அமெரிக்கா ன்னு சொல்றார் (இதுவும் சத்தியமா...நம்ப மாட்டேன்குரானுவ...) உங்க Blog அ ரெகுலரா Follow பண்றேன். அடுத்தது எப்போங்கறார்... கண்ணுல ஜலம்...

உள்ளூர்ல ரசிகர்கள் சிலர் என் திறமைய புரிஞ்சுகாம அசிங்கப்படுத்திக்கிட்டு இருந்தாங்க... அவங்களும் முன்ன மாதிரி இல்லாம இப்போ நல்லா இருக்குன்னு சொல்லிடாங்க...வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம்...

அதுதான் கமிட் ஆயிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்... இனிமே விடாம எழுதணும்...கண்ணுல ரத்தம் வர்ற வரைக்கும் கதறக் கதறக் எழுதணும்(என்னகில்லை... உங்களுக்கு தான்)...Committedனு Orkut லகூட Status மாத்திட்டேன்...

மறுபடியும் நன்றி நன்றி நன்றி...அப்புறம்...
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

ஆஸ்திரேலியா ரசிகை என் அக்கா...
அமெரிக்கா ரசிகர் என் இன்னொரு அக்காவோட கணவர்...
லோக்கல் ரசிக்கக் கூட்டம் வந்து என் இன்னொரு அக்கா...

என் அக்காக்கள் இல்லன்னா...இல்லன்னா... டயலாக் கடைசி நேரத்துல மறந்து போச்சு...இத்தோட முடிச்சிக்கலாம்...

அன்பு, பாசம், பரிவுடன்,
ஆனந்தன்...

You Might Also Like

1 comments

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...