சிறுகதை : மற்றுமொரு காதல் கதை...

9:21:00 AM

...தற்கொலை !

தற்கொலைதான் ஒரே முடிவு...
காரணம்...? வழக்கமான காரணம் தான்...என்னை விரும்பாதவர் வாழும் இந்த உலகத்தில் வாழப் பிடிக்கவில்லை...இத்தனை நாள் உருகி உருகி காதலித்தவள் நாளை வேறு
ஒருவனுக்கு மனைவியாகப் போகிறாள். இத்தனை நாட்களாக எனக்கென்று ஒருத்தி இருக்கிறாள் என்று நினைத்த நினைப்பு பொய்யாகப்போகிறது. அதனால் தான் சாகப் போகிறேன்.

எப்படிச் சாவது?

ஹும்...வழியாயில்லை? வீட்டில் எலி பாஷனம் இருக்கும். கண்ணை மூடிக்கொண்டு மடக்கென்று குடித்துவிட்டால், படக்கென்று உயிர் போய்விடும். கொல்லையில் கட்டியிருக்கும் கொடிக்கயிறை இங்கே உத்திரத்தில் கட்டி தூக்கில் தொங்கலாம், அல்லது நேராக மொட்டை மாடிக்குச் சென்று தண்ணி தொட்டி மேல் ஏறி அங்கிருந்து குதித்தால் எலும்பு கூடத் தேறாது. இல்லையென்றால் பேசாமல் கத்தியை எடுத்துச் சரக்கென்று கையிலிருக்கும் நரம்பை அவளை நினைத்து அறுத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக சாகலாம்.

காலை பேப்பரில், காதல் தோல்வியால் வாலிபர் மரணம். தடயம் எதுவும் சிக்கவில்லை...இல்லை இல்லை. லெட்டர் எழுதி வைக்க வேண்டும். கடைசியாக. போன் பண்ண முடியாது. என் நம்பரைக் கண்டால் கண்டிப்பாக எடுக்க மாட்டாள். SMS அனுப்புவது பிரயோஜனமே இல்லை. கல்யாண கலாட்டவில் delete செய்யப்பட்டு விடும். லெட்டர் அப்படியில்லை. எப்படியும் அவள் கையில் சேர்ந்துவிடும், சேர்த்து விடுவார்கள்.

நான் தற்கொலை செய்து கொண்டதற்கு வருதப்படுவாளா? சந்தேகம்தான்...மூன்று வருடம்..மூன்று வருடம் அவளுக்கு காதலன் என்ற பெயரில் டிரைவராக, வாட்ச்மேனாக, கொரியர்காரனாக, வேலைகாரனாக கிட்டத்தட்ட ஒரு அடிமையாக எவ்வளவு செய்திருப்பேன்? எல்லாவற்றையும் மறந்துவிட்டாள்; அமெரிக்க மாபிள்ளை டாலரைக் காட்டியவுடன். அவளுக்கு காதலிக்க நாலாயிரம் சம்பளக்காரன் போதும், ஆனால் கல்யாணம் பண்ணிக் கொள்ள நாலு லட்சம் சம்பளக்காரன் வேண்டும். நொடியில் நான் தோற்று விட்டேன் அந்த அமெரிக்க ரிடர்னிடம்... தூக்கி எரிந்து விட்டாள். என்னால் முடுவில்லையே..

பெண்ணை நம்பி சீரழிந்தவர் பட்டியலில் என் பெயரும் இடம் பெறப் போகிறது.

இன்று 4000 சம்பாதிக்கும் மகன், நாளை 40, 000 சம்பாதிப்பான், குடும்பத்தைக் காப்பாற்றுவான் என்று நம்பிக் கொண்டிருக்கும் என் அம்மாவிற்கு நான் சம்பாதித்துக் கொடுக்கப் போவது என்ன? அவமானம், தலைகுனிவு, ஏமாற்றம்...கடைசியில் என் அப்பா போன இடத்திற்கே அவளும் போய் சேர்ந்து விடுவாள். புஷ்பா...?

புஷ்பாவின் நிலைமை...? அண்ணன் வருவான்; கரை சேர்ப்பான் என்று மணமேடையைத்
தினம் தினம் கனவில் கண்டுகொண்டிருப்பவளுக்கு நான் காட்டப்போவது எதை?

கோழை, வாழத்தெரியாதவன், தோற்றுப் போனவன், முட்டாள் என்று ஊரார் என்னைக் கேலி பேசுவர். ஹும்,
இப்போது எப்படி சாகலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் நானே அப்படிக் கூறிக் கொண்டிருந்தவன் தானே...

' காதலில் தோல்வி அடைந்தவர் எல்லாம் தற்கொலை செய்து கொண்டால், இந்த உலகில் யாருமே இருக்க மாட்டார்கள் ' என்று ஒரு சினிமா டயலாக் வருமே? அது என்னைப்பொறுத்தவரையில் உண்மையாகிவிடும் இன்னும் கொஞ்ச நாட்களில். என்னைப் போல இன்னும் நிறைய பேர் தூக்கில் தொங்குவார்கள். காதல் தரும் வலி தாங்க முடியாதது...கரெக்ட், தூக்கு, தூக்கில் தொங்குவது தான் சரி...அதற்கு முன் லெட்டர்.

அன்புள்ள நித்யாவிற்கு,

இந்த மூன்று வருடங்களில் நான் உன்னக்கு எத்தனையோ லெட்டர் எழுதியிருக்கிறேன். கார்டு கொடுத்திருக்கிறேன்...நாளை உனக்குத் திருமணம். திருமணப் பரிசாக உனக்கு நான் எழுதும் கடிதம்...என் கடைசி கடிதம். உன் அமெரிக்க மாப்பிள்ளை சம்மதிப்பார் என்று நினைக்கிறேன்...

உயிருக்கு உயிராய் காதலித்தேன், என்னகெனப் பிறந்தவள் நீ என்று கனவில் மிதந்தேன். எல்லாம் பொய்யென்று கடைசியாக நீ அனுப்பியே ஒரு SMS, ' Engaged, hubby working in US. understand.do not disturb '
அதன் மூலம் அன்டர்ஸ்டான்டிக் கொண்டேன். நீ என் காதலை உன் ஹை ஹீல்ஸ் செருப்பால் கசக்கியதை அன்டர்ஸ்டான்டிக் கொண்டேன்.

எல்லாம் முடிந்துவிட்டது...இந்தக் கடிதம் நாளை உன்னக்குக் காட்டப்படும் போது, நான் இருக்க மாட்டேன். போலீஸ் உன்னை விசாரித்தால் பயப்படாதே...எனக்கு அவனைப் பிடிக்கவில்லை, ஒரு பிச்சைக் காரனைக் கட்டிக் கொள்ளப் பிடிக்கவில்லை என்று சொல்லி விடு...

என் உயிர் நாளை திருமணம் செய்துக்கொண்டு அமெரிக்கா செல்லப் போகிறது...என் உடல் இப்போது கயற்றில் தொங்கப் போகிறது...

இப்படிக்கு,
உன்னை மறக்க முடியாமல் சாகும் உன் முன்னாள் காதலன்...

கயிற்றை விட்டதில் கட்டிவிட்டேன். கதவைப் பூட்டிவிட்டேன். லெட்டர் இதோ பத்திரமாக என் பாக்கெட்டில். இனி விடுதலை...என் உயிருக்கு. நித்யா...


ட்ரிங்...ட்ரிங்...ட்ரிங்...

...நித்யா...இதுவும் உனக்காகத்தான்...நீ எங்கிருந்தாலும்...

ட்ரிங்...ட்ரிங்...ட்ரிங்...

'ஏன்டி...போன் அடிக்கிறது கூட தெரியாம அப்படி என்ன படிச்சிகிட்டு இருக்க... ஹலோ...யாரு...? '

குரல் கேட்டுத் திரும்பினேன். என் காதல் கணவர் ரிசீவரை வைத்துவிட்டு, என்னருகே வந்துகொண்டிருந்தார்.

' இல்ல சுரேஷ்...ஒரு நாவல்...இன்ரெஸ்டிங்கா போய்கிட்டு இருந்தது...'

' ப்ளீஸ் டா செல்லம்...எனக்கு ஒரு காபி மட்டும் கொடுத்துட்டு கன்டிநியு பண்ணேன்...' கொஞ்சினார் என் ஆசைக் கணவர். கையில் வைத்திருந்த நாவலை சேரில் வைத்து விட்டு, எழுந்து சமையல்அறைக்குச் சென்றேன்.

புரட்டியிருந்த நாவலின் அட்டையில் கொட்டை எழுத்துகளில் தெரிந்தது 'மற்றுமொரு காதல் கதை...'

You Might Also Like

3 comments

 1. something missing!!!! everyone can guess in the beginning, that this is not related to climax nu.. Kadhai padikka padika oru enthu varume!! adhu idhula missing!! By the way, this cannot be added to love genre....

  ReplyDelete
 2. who said this a love genre da...?
  name of the book is 'matrumoru kaathal kathai' not the name of the original story...

  ReplyDelete
 3. kadaisi varai..enna nadaka pogirathu endra aaval thodarvathe intha kathaiyin vettri...munthaiya kathaiyil iruntha kuraigal intha kathaiyil thuli kooda illai..un ezhuthu panpattu kondirukirathu nanba..

  ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...