சிலுக்கு - ஒரு பெண்ணின் கதை...
12:47:00 AMகவர்ச்சி நடிகை சிலுக்கு சுமிதாவைப் பற்றி பொதுவாகவே ஒரு மோசமான கருத்து தான் நம் எல்லோர் மனதிலும் இருக்கும். கவர்ச்சி நடிகை, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட இன்னொரு நடிகை என்பதைத் தவிர எனக்கும் சிலுக்கைப் பற்றி பெரிதாக எதுவும் தெரியாது. ஆனால் ஒரு முறை, 80 களில் தமிழ் சினிமாவையே தன் கையில் வைத்துக் கொண்டிருந்த 'கவர்ச்சி ' நடிகையைப் பற்றி நான் படித்த செய்தி என்னைத் தாக்கியது உண்மை. ஒரு கவர்ச்சி நடிகை, அதுவும் கொஞ்சம் புகழ் பெற்ற நடிகையிடம் ' நீங்க நடிக்க வரலைனா என்னவா அகிருப்பீங்க?' என்று கேட்டால் பதில் என்னவாக இருக்கும்? doctor...Engineer... அல்லது இப்போது உள்ள மாதிரி கொஞ்சம் பேன்சியாக 'அம்மவாயிருப்பேன் சார்' என்று ஏதாவது...? இப்படி அவர் எதுவுமே சொல்லவில்லை. வேறு என்ன பெரிசா சொல்லியிருப்பா...'விலைமாது' ஆயிருப்பேன் சொல்லியிருப்பா...இந்த பதிலைத்தான் நான் பேசிய பலர், சொன்னார்கள். நம்மளவில் சிலுக்கைப் பற்றி தெரிந்தது அவ்வளவுதான். உண்மையில் அவர் சொன்ன பதில் 'நக்சலைட் ஆயிருப்பேன்...'
புகழின் உச்சியிலிருந்த சிலுக்கு தற்கொலை செய்து கொண்டு இறந்தார்.காரணம் இன்றும் புரியாத புதிராய் இருக்கிறது. அவரைப் பற்றி நான் படித்த சில விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன்.
* சிலுக்கின் இயற்பெயர் விஜயலட்சுமி. கூப்பிடுவது விஜி. வறுமையில் வாடிய ஒரு ஏழை ஆந்திர குடும்பத்தின் மூத்த பெண் இந்த விஜி. 18 வயதிலேயே திருமணம் ஆன பிறகும் கூட வறுமையிலிருந்து மீள முடியவில்லை. தூரத்து உறவு அத்தையுடன் சினிமா ஆசையில் சென்னைக்கு வந்துவிட்டார்.
* இந்த விஜிக்கு 'சிலுக்கு சுமிதா ' என்று பெயர் வைத்து சினிமாவில் முறையாக அறிமுகப்படுத்தியது வினு சக்கரவர்த்தி. படம் வண்டிச் சக்கரம். கள்ளுக் கடை நடத்துபவளாக வேடம். இதற்கு முன் ஓரிரு படங்களில் கூட்டத்தில் ஒருவராக நடித்துள்ளார். அந்த அனுபவங்கள், பட்ட அவமானங்கள் பல என்று சிலுக்கு பல முறை கூறியுள்ளார்.
* சிலுக்கிற்கு நடனம் ஆடத் தெரியாது. ஆனாலும் அவர் இந்த அளவிற்கு நடனத்தில் புகழ் பெறக் காரணம் புலியூர் சரோஜா. சிலுக்கின் உடல் அசைவையும், கொஞ்சும் பார்வையையும் மட்டுமே வைத்து அவரை மிகப் பெரிய Dancer ஆக்கிய ஆஸ்தான டான்ஸ் மாஸ்டர்.
* Item Dance வகையில் சிலுக்கு ஆடி முதன்முதலில் புகழ் பெற்றது, ' பொன் மேனி உருகுதே - மூன்றாம் பிறை' பாடல். நேத்து ராத்திரி யம்மா பாடலில் அந்த யம்மா அவ்வளவு 'கிக்' ஆக இருந்ததற்கு காரணம் S.ஜானகி. அந்தப் பாடல்காட்சி 'கிக்' ஆக இருந்ததற்குக் காரணம் புலியூர் சரோஜா சிலுக்கின் இடுப்பைக் கிள்ளி கிள்ளி உணர்ச்சி மிக்க நடனம் அமைத்த விதம். பிறகு மூன்று முகம் , அமரன் படங்களும் அப்படியே....
* சிவாஜியுடன் பல படங்களில் நடித்திருக்கும் சிலுக்கு M.G.R ருடன் ஒரே ஒரு படத்தில் நடித்திருக்கிறார். அலைகள் ஓய்வதில்லை அண்ணி வேடத்தை M.G.R மேடையில் பாராட்டியிருக்கிறார். தொடர்ந்து அதே மாதிரி குணச்சித்திர வேடங்களில் நடிக்கக் கூறியுள்ளார்.
* சிலுக்கு இல்லாத காரணத்தால் ரஜினி படத்தையே ஒரு முறை விநியோகிஸ்தர்கள் வாங்க மறுத்தார்கள். பின் சிலுக்குடன் ரஜினி ஆடும் ஒரு பாடலை இணைத்து வெளியிட்டுயிருக்கிறார்கள்.
* சிலுக்கு தான் ஆசைப்பட்டு நடிக்க விரும்பியது பாக்கியராஜ் உடன். நடித்த படம், ரகசிய போலீஸ்.
* சிலுக்கு நடித்த 'லயனம்' மலையாள படம் தான் முதன்முதலில் வெற்றிகரமான 'மலையாள' படம் என்று ஒரு பேச்சும் உண்டு. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என்று பல மொழிகளில் நடித்திருந்தாலும், சிலுக்கு நடிக்காமலேயே அவர் பெயரை மட்டும் போட்டு ஓடிய பதினோரு மணிக் காட்சிகள் பல.
* சிலுக்கிடம் தெலுங்கு கற்றுக் கொள்ளுங்கள், சிலுக்குடன் போனில் பேசுங்கள், சிலுக்கின் கையெழுத்திட்ட புகைப்படம் இலவசம் என்று குமுதத்திலிருந்து சலூன் கடை வரை சிலுக்கு என்ற Brand Name தேவையாய் இருந்தது.
* சிலுக்கு shot break இல் கடித்து வைத்துவிட்டுப் போன 2 ரூ ஆப்பிள் 120 ரூ க்கு ஏலம் போனது. தெரிந்திருந்தால் 1001 ஆகக் கொடுத்து பிரசாதமாய் அதை வாங்கியிருப்பேனே என்று ஏங்கிய மிட்ட மிராசுகள் பல.
* சொந்தமாக படம் தயாரித்து சம்பாதித்த காசை மொத்தமாக இழந்தவர்கள் பட்டியலில் சிலுக்கின் பெயரும் உண்டு.
* ஒரு படத்திற்கு கதாநாயகி வாங்கிய சம்பளத்தைவிட, சிலுக்கு வாங்கிய சம்பளம் மிக அதிகம். ஆனாலும் சிலுக்கு பெரிதாக எதுவும் சொத்து சேர்த்ததாய்த் தெரியவில்லை.
* சிலுக்கு கடைசி வரை யாரையுமே திருமணம் செய்து கொள்ளவில்லை. யாரையும் கிட்ட நெருங்க விடாமல் இருந்த சிலுக்கு தன் தூரத்து உறவினரான doctor ஒருவருடன் வாழ்ந்திருக்கிறார். எப்பவும் சிலுக்குடன் ஒட்டிக் கொண்டிருந்த அந்த தாடிக்காரர் ரொம்பவுமே பிரபலம்.
* சிலுக்கு தன் வாழ்நாளில் பலருக்கு உதவியாய் இருந்துள்ளார். சில நக்சலைட் ஆதரவாளர்களுக்கு ஆதரவாக இருந்துள்ளார். நக்சலைட் ஆட்கள் 'அக்கா' என்று அழைக்கும் அளவிற்கு பழக்கம் இருந்திருக்கிறது.
* சிலுக்கிற்கு நண்பர்கள் மிகவும் குறைவு.முன்கோபி. சிலுக்கினால் பயனடைந்தவர்கள் பலர் என்றாலும் கடைசிவரை அவருக்கு நண்பர்களாய் இருந்தவர்கள் மனோரம்மா, லட்சுமி, வடிவுக்கரசி, வினு சக்கரவர்த்தி, முத்து ராமன், கங்கை அமரன் போன்ற ஒரு சிலர் தான். அவரது இறுதி ஊர்வலத்திற்கு வந்தவர்களும் இவர்கள் மற்றும் ஒரு சிலர் தான்.
* சிலுக்கு கடைசி வரை எந்த கட்சியிலும் சேரவில்லை. ஆதரவாகவும் இல்லை.
மொத்தத்தில் சிலுக்கு ஒரு சாதாரண பெண்ணாகத்தான் வாழ்ந்துள்ளார்.பலர் அவரது வரலாற்றை தெரிந்து கொள்ள விரும்புவதாய் படித்திருக்கிறேன். சிலுக்கு - ஒரு பெண்ணின் கதை , எழுதியது தீனதயாளன், கிழக்கு பதிப்பகம் ஒரு நல்ல முயற்சி.
(இதைஎல்லாமாடா 70 ரூ கொடுத்து வாங்கி படிக்கிற என்று என் அப்பா என்னை முறைத்தது தனி கதை...)
4 comments
நல்ல ரெவ்யூ ... நானும் படிச்சுடறேன்! புக்ல கில்மா சமாச்சாரங்கள் இருக்கா?
ReplyDeleteI have not read the book yet, but will try to pick a copy on my next visit. I beleive, the tag line of the story from your review falls as "you can not judge one by the outlook". Good review, Best
ReplyDeleteMachi nalla tha eluthura... Unakullayum etho irukka pola....Innum niraya ethirpakuren un kitta irundhu.....
ReplyDeleteநண்பர் திரு . தீனதயாளன் அவர்களுக்கு மிக்க நன்றி .ஒரு பெண்ணின் உள்ளத்தை உலகுக்கு தெரிவித்தமைக்கு நன்றி காலத்தால் அழியாது சிலுக்கின் படைப்பு தங்களின் முயற்சி எங்களுக்கு மகிழ்ச்சி நன்றி இப்படிக்கு
ReplyDeleteசிலுக்கின் ரசிகன்
மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...