தலைவன் இனி இல்லை...

10:56:00 AM

கண்ணீர் அஞ்சலி...
நம் தலைவன் இனி இல்லை!

புலித் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்ததாக இன்று காலையிலிருந்தே செய்திகள் வரத் தொடங்கியது.

முதலில் பிரபாகரனின் மகனும் புலிகளின் வான் படைத் தளபதியுமான சார்லஸ் அந்தோணி இறந்தது உறுதி செய்யப்பட்டது. அவரது உடல் சிதைந்த நிலையில் ராணுவ முகாமில் உள்ளதாக செய்திகள் வரத் தொடங்கியது.



பின் மதியம், தலைவர் பிரபாகரன் இறந்ததும் உறுதி செய்ப்பட்டது.

ஆம்புலன்ஸ் ஒன்றில் புலித்தலைவர்கள் பிரபாகரன், நடேசன்(அரசியல் பிரிவு), புலித்தேவன்(Peace Secretarait) , ரமேஷ் (Special Forces) ஆகியோர் தப்பிச் செல்ல முயன்ற போது சுற்றி வளைத்து, சுட்டுத் தள்ளியதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது... ஹும்...தப்பிச் செல்லும் போது சுட்டுப் பிடித்தார்களாம்! நம்பி விட்டோம், வழக்கம் போல் இதையும் நம்பி விட்டோம். தப்பிச் செல்லும் போது சுட்டுப் பிடிக்க இவர்கள் என்ன புள்ளி மான்களா? புலிகள்...!

காலையிலிருந்து தொலைக்காட்சிகளில் காட்டியதையே திரும்பத் திரும்பக் காட்டிகொண்டிருந்தார்கள்...குடும்ப போட்டோ, சிறு வயது போட்டோ, இறந்த உடல்கள், சின்ன சின்ன கிளிப்பிங்குகள் என்று... இடையிடையில் காங்கிரஸ் மறுபடியும் ஜெயித்து வந்து புதிய ஆட்சி அமைத்து நிமிர்தப்போவதையும் காட்டிக் கொண்டிருந்தார்கள்.


மேலும் வெற்றியைக் கொண்டாடும் வகையில், நமது
நிரந்தரத் தலைவர் முதல்வர் கலைஞர் அவர்களும், ஒரு அறிக்கை விடக் கூட நேரம் இல்லாமல் சிரித்துக் கொண்டே டில்லி கிளம்பி விட்டார், குடும்பத்தை வளர்க்க...இல்லை இல்லை தமிழையும், தமிழ் மக்களையும் வளர்க்க... அதற்காகத்தானே 6 மணி நேர சாகும் வரை உன்னவிரதமெல்லாம் இருந்தது...

தாய் மண்ணை முத்தமிட்டு, பால் சாதம் சாப்பிட்டு கொண்டாடுகிறார் இலங்கை வேந்தர், ராவண... இல்லை இல்லை...ராஜ பாக்ஷே. பிரபாகரனைக் கொன்றது மாபெரும் வெற்றி யல்லவா ?

இதுவரை இறந்த இரண்டரை லட்சம் உயிர்களுக்கும் பதிலில்லை, இடம் பெயர்ந்த லட்சோ லட்ச உயிர்களுக்கும் பதில் இல்லை, சிக்கிகொண்டிருக்கும் மிச்ச சொச்ச உயிர்களுக்கும் பதில் இல்லை. அடுத்த அமைச்சர் யார், எந்தெந்த துறை? அதற்கு மட்டும் பதில் நாளை தெரிந்து விடும். தலைவர் போயிருக்கிறார் !!!

25 வருட உரிமைப் போராட்டம் தகர்கப்பட்டுளது. வேரோடு பிடிங்கி எறியப் பட்டுள்ளது. போராட இனி தலைவனும் இல்லை, காப்பாற்ற இனி எம் மக்களும் இருக்கப் போவதில்லை.

இறந்த ஒரு சரித்திரத்திற்கு மரியாதை செய்வோம்.

நம்மையாவது காத்துக் கொள்வோம். இந்த துக்க செய்தியை வைத்துக் கூட அரசியலும், வன்முறையும் (இரண்டும் ஒன்றுதானோ?) நம்மை வேட்டையாடலாம். இன்று ஈழத் தமிழர் நாளை தமிழகத் தமிழராய் கூட இருக்கலாம்...ஜாக்கிரதை!!!

கண்ணீருடன் உண்மைத் தமிழன்...

You Might Also Like

1 comments

  1. insult to injury.the tiger s still alive and topbrass leadrers are still alive.the war s not over.after recieving the confirmed news about his death bloig this one da..

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...