கற்றதனால் ஆன பயன்...

12:06:00 PM

ஆனந்த விகடனில் படித்தது...

எங்களது சம்பளம்
உங்கள் கண்களை உறுத்திற்று
வாழ்க்கை முறை கண்டு
வயிறு எரிந்தீர்கள்
கலாசாரத்தைக் கெடுத்தோம்
என்றொரு புகாரும் உண்டு
பப்புகளில் புகுந்து உதைத்தீர்கள்
சினிமா எடுத்தீர்கள்
பத்திரிகைகளில் கிழித்தீர்கள்
பெண் கொடுக்க மறுத்தீர்கள்
எங்களது சம்பாத்தியத்தின்
பெரும் பகுதியை
வரியெனப் பிடுங்கினீர்கள்
நாங்கள் அந்நிய தேசங்களிலிருந்து
ஈட்டி வந்த பணத்தில்
பாலங்கள் கட்டினீர்கள்
'இந்தியா ஒளிர்கிறது' என
விளம்பரங்கள் செய்தீர்கள்
இதோ கும்பல் கும்பலாக
நடுத்தெருவுக்கு வந்துவிட்டோம்
சந்தோஷம்தானா
சகோதரர்களே?
உங்கள் சட்டைகளைப் பற்றிக்
கேட்கிறோம்...
'கணினிமொழி கற்றதன்றி
வேறென்ன பிழை செய்தோம்?'

You Might Also Like

1 comments

  1. வாழிய எம்மொழி , பண முதலைகளின் பிடியில் இருக்கும் கணினி துறை, காரணங்கள் ஏதும் இன்றி , அவர்களின் சம்பாத்தியம் என்ற தனிப்பட்ட காரணத்திற்காக, பல்லாயிர கணக்கான பொறியாளர்களை துரத்தி கொண்டிருக்கறது!
    என்று தணியும் இந்த ஐ டி தாகம்?
    என்று விடியும் இந்த அடிமை மோகம் ?

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...