#100நாடுகள்100சினிமா #29. URUGUAY - THE POPE’S TOILET (2007)

8:43:00 AM


César Charlone and Enrique Fernandez | Uruguay | 2007 

(***English write-up given below ***)

1988’ல் நடக்கும் (நடந்த) கதை. பிரேசில் - உருகுவே பார்டரில் இருக்கும் சிறிய கிராமம் மெலோ (Melo). கஸ்டம்ஸ் அதிகாரிகள் கண்களில் மண்ணைத்தூவி பிரேசிலில் இருந்து சிறு சிறு பொருட்களை (பெரும்பாலும் மளிகைசாமான்கள், மது, சிலிண்டர், பேட்டரி வகையறா) தனது சைக்கிளில் வைத்து உருகுவே கிராமத்திற்குள் கடத்தி வருவது தான் நம் ஹீரோ Beto வின் தொழில். ஏழ்மையில் மூழ்கிக்கிடக்கும் இந்த பராகுவே கிராமத்திற்கு விடிவுகாலம் 'போப்' இரண்டாம் ஜான் பால் (Pope John Paul II) வழியாக வருகிறது. 

“மெலோ-விற்கு போப் வருகிறார்” என்ற செய்தி மீடியா முழுவதும் பற்றி எரிய, குதூகலமடைகிறார்கள் மெலோவாசிகள். போப் வந்தால் அவரைக் காணப் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருவார்கள். அந்த மக்களை நம்பி இருக்கிற பணம், வீடு, வரப்பு எல்லாவற்றையும் போட்டு பல்வேறு “ஸ்டால்களை” ஊர் முழுக்கப் போடுகிறார்கள். மொத்தமாக 387 ஸ்டால்கள். பெரும்பாலும் சாப்பாடு ஐட்டங்கள். இங்கு தான் வித்தியாசமாக யோசிக்கிறான் நம் கதாநாயகன். எல்லோரும் சாப்பாடு ஸ்டால் போட, இவன் ஒருவன் மட்டும் "கட்டணக் கழிப்பறை" கட்ட முடிவு செய்கிறான். போப் வந்தாரா இல்லையா? மெலோ கிராம மக்கள் கண்ட கனவு பலித்ததா இல்லையா? என்பது தான் மீதிக்கதை. 

நமது 'பாமா விஜயம்' டைப் படம் தான். அமெரிக்க அதிபரது வருகையை ஒட்டி நடக்கும் களேபரங்கள் பற்றிய போஸ்னிய நாட்டுத் திரைப்படமான Fuse / Gori Vatra (#16https://goo.gl/c7i5nC) படத்தைப் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன். அமெரிக்க அதிபருக்கு பதில் / நடிகை பாமா விற்கு பதில் இங்கு போப்!

ஏழ்மையிலும் வாழ்க்கையை மிகுந்த நம்பிக்கையுடனும், சந்தோஷமாகவும் வாழும் மக்களைப் பொதுவாக ஈரானியத் திரைப்படங்களில் பார்க்கலாம். உருகுவே நாட்டு இயக்குனர்கள் தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபித்திருக்கிறார் படத்தை இயக்கியிருக்கும் Caesar Charlone மற்றும் Enrique Fernandez. இவர்களில் Caesar - City of God (2002), The Constant Gardener (2005), Blindness (2008) போன்ற பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். போப் வருகை, அதன் பிறகு நடந்த சம்பவங்கள் போன்றவற்றை பட்ஜெட்டை எகிற வைக்கும் சமாச்சாரங்கள் என்பதால் நிஜ footage‘களை காட்சிகளுடன் நேர்த்தியாக மிக்ஸ் செய்து டி.வி யில் நியூஸ் ரீல் ஓடுவது போல் காட்டுகிறார்கள்.#salute!

Black Humor வகையிலான மென்சோகக் காட்சிகள் படம் முழுக்க நிறைந்திருந்தாலும், படத்தில் காட்டப்படும் மக்களும், அவர்களது கண்களில் தெரியும் நம்பிக்கையும் ஆச்சரியப்படுத்துகிறது. போப் வருகையை ஒட்டி அவர்களுக்கு எழும் பரபரப்பு நம்மையும் தொற்றிக்கொள்கிறது. கணவன், மனைவி, மகள் என்று அழகான குடும்பம் பெட்டோவினுடையது. ஓட்டை சைக்கிளைக் கடாசிவிட்டு மோட்டார் பைக் ஒன்றை வாங்கவேண்டும் என்று அவனுக்கு ஆசை. மகளுக்கு டி.வி யில் காம்ப்பயர் ஆக வேண்டும் என்று ஆசை. மனைவிக்கு கணவன் இந்தத் தொழிலிலிருந்து வெளிவந்த நல்ல வேலை ஒன்றிற்குச் செல்ல வேண்டும் என்று ஆசை. சின்னச்சின்ன ஆசைகள், கனவுகள். ஆனால் அவற்றை நனவாக்க எப்படியெல்லாம் குட்டிக்கரணம் அடிக்க வேண்டியிருக்கிறது என்று இந்தப் படம் சொல்கிறது. 'உலக சினிமா' ஒன்றில் ஹீரோ குடித்துவிட்டு ஆர்பாட்டம் பண்ணுவதை முதல் முறையாக இந்தப் படத்தில் தான் பார்த்தேன். செம்ம ஜாலி.

உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம். எல்லாம் முடிந்த பிறகு பெட்டோ வீட்டிலிருந்து மெலோ வேலைக்குக் கிளம்ப, மகளும் உடன் நடக்கத் தொடங்குகிறாள் - நம்பிக்கை அதானே எல்லாம்!

பிடித்திருந்தால் லைக் & ஷேர் செய்யுங்கள். நண்பர்களுக்கும் இந்தப் பக்கத்தைப் பரிந்துரைத்து மகிழ்ந்திருங்கள் 

******************************

The Pope's Toilet (2007) is about an Uruguan village, Melo and it's preparation for the arrival of Pope John Paul II. Melo is located in the Brazil-Uruguay border and the people's main business including our Hero, Beto is smuggling - usually small items like Batteries, Liquor, Cylinder etc. The Villagers are excited when they hear that Pope John Paul II is visiting their village on his way to Uruguay. The people gossip about the hundreds of people who will come to see him - thousands as hyped by the media. For a struggling village, this is the time to earn a fortune. The people decide to open various stalls (mostly food stalls) for the visitors and start preparing. Our hero Beto thinks different and decides to open a paid toilet - The Pope's Toilet! 

directors - César Charlone & Enrique Fernández
Directed by Ceasar Charlone (Cinematographer - City of God (2002), The Constant Gardener (2005), Blidness (2008)) & Enrique Fernandez, The Pope's toilet is based on actual events that happened in 1988. The directors have even amazingly used some origial footage to the movie and made it look like a Bigger movie that it actually is. 

The Melo village is full of hope and their excitement and preparations around Pope's arrival is excellently shown in the movie. All the movie talks is about, Hope. If not the Pope, Hope still saves the day.

A must watch, dark-humour filled, Uruguayan Drama. 

Other Recommended Uruguayan movies:
1. Bad day to go fishing (2009)
2. Mr. Kaplan (2014)

Link – No working link available. Will update if I find any!


Hit Like & Share. Recommend this page to your Friends. Happy movie watching 

You Might Also Like

0 comments

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...