‪#‎100நாடுகள்100சினிமா‬ #28.CZECH REPUBLIC - MEN IN HOPE (Muzi v nadeji - 2011)

9:16:00 AM

Jiri Vejdelek| Czech Republic | 2011 | 115 min.

(*** English write-up and download link given below ***)

தொடரந்து சீரியஸான படங்களாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஒரு மாற்றத்திற்காக இந்தப் படம். Chezh குடியரசிலிருந்து எத்தனையோ நல்ல படங்கள் வந்திருந்தாலும் இந்தப் படமும் அவசியம் பார்க்க வேண்டிய, நல்ல நல்ல கருத்துக்களை உள்ளடக்கிய படமே.

Ondrej - நம்மில் பெரும்பாலானவர்களைப் போன்றவன். சப்பை. திருமணமானவன். ஆனால் அதில் எந்தச் சுகமும் அனுபவிக்கத் தெரியாத, கடனே என்று வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு செம்ம சப்பை. அவனது மாமனார் Rudolf. வயதானாலும் மன்மதக்குஞ்சு. ஆடாத ஆட்டமில்லை, இல்லாத தொடர்பு இல்லை, மடியாத பெண்கள் இல்லை. என்ன தான் மன்மதனாக இருந்தாலும் தன் மனைவிக்கு மட்டும் நல்லவராகவே இருக்கிறார் ருடால்ஃப். வாழ்க்கையை சரிசமமாக பேலன்ஸ் செய்யும் மாமனாரைப் பார்த்து மருமகனுக்கு ஏகத்துக்கும் பொறாமை. அவரைப் பார்க்கும் பொழுதெல்லாம் அருகிலிருப்பவர் காது கிழியுமளவிற்கு மூக்கிலும் காதிலுமாக பெருமூச்சு விடுகிறான். இவன் இப்படியே கையாலாகாதவனாக இருந்தால் தனது மகள் வாழ்க்கை வீணாகிவிடும் என்று கவலைப்படுகிறார் ருடால்ஃப். மருமகனுக்கு சில யோசனைகளைச் சொல்கிறார். கூடவே Sarlota என்ற டான்சரையும் அறிமுகப்படுத்தி வைக்கிறார். Sarlota வின் அறிமுகத்தால் Ondrej வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பது தான் இந்தப் படம்.

சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் Czech தேசத்து 'சின்ன வீடு' இந்தப் படம். படம் பார்ப்பவர்களை, பார்த்தவர்களை Sarlota எனும் மாயமோகினி மயக்கப்போவது உறுதி. அவளது அறிமுகக்காட்சியை ரிப்பீட் மோடில் பார்த்து வீட்டில் வகையாக மாட்டிக்கொள்ளப்போவதும் உறுதி. படம் முழுவதும் செக்ஸ் காமெடி (செக்ஸும், காமெடியும்) கொட்டிக்கிடக்கிறது. ப்ரென்ச் காதல் திரைப்படங்களில் உள்ள நேர்த்தி இந்தப் படத்தின் டெக்னிக்கல் சமாச்சாரங்களில் தெரிகிறது. மிகையான அழகுணர்வுடன் கண்களில் ஒத்திக்கொள்ளும் கலர்ஃபுல் ப்ரேம்கள் நிறைந்த இந்த ஜாலியான திரைப்படத்தின் இயக்குனர் Jiri Vejdelek. 

இவர் கசமுசா படங்கள் எடுப்பதில் வல்லவர் போல. இவரது முந்தைய படமான (இந்தப் படத்தின் Prequel என்று சொல்லப்படுகிற) Women in Temptation (2010) என்ற படத்தையும் எடுத்து வைத்திருக்கிறேன்.

I served the King of England (2006) என்ற மார்டன் கிளாஸிக்கை தான் முதலில் தேர்தெடுத்து வைத்திருந்தேன். அதற்கு முன் இந்தப் படத்தை பார்த்துவிட்டதால் (obviously!) இதையே எழுதிவிட்டேன். இரண்டும் பார்க்க வேண்டிய படங்கள். எதைப் பார்க்க வேண்டும் என்பதை உங்களது சாய்ஸிற்கே விட்டுவிடுகிறேன். இந்த இரண்டு படங்கள் தவிர Divided We Fall (2000) என்ற படத்தையும் ஹெவியாகப் பரிந்துரைக்கிறேன்.

பிடித்திருந்தால் லைக் & ஷேர் செய்யுங்கள். உங்களது நண்பர்களுக்கும் இந்தப் பக்கத்தைப் பரிந்துரைத்து மகிழ்ந்திருங்கள் 
********

Ondrej is a timid, monotonous, good for nothing average Husband and a shity person when it comes to Women. On the contrary, his father-in-law Rudolf is a playboy. Rudolf is worried about his daughter's life because of 'the constantly boring' Onderj. He encourages Ondrej to live like him. Also he introduces a young dancer named Sarlota to him. Things change after the arrival of Sarlota, including Ondrej and his boring life.

Dir. Jiri Vejdelek
Directed by Jiri Vejdelek,This is a pure, unadultered sex-comedy from the Czech Republic. There are wonderful movies like 'I served the King of England (2006)', 'Divided We Fall (2000)' etc., from Czech Republic but prefered to write this once as I felt a little spice is not so wrong.

Do watch this movie and fall for Sarlota.

Or watch the other two.

meh 



Hit Like & Share. Recommend this page to your friends. Happy movie watching 

You Might Also Like

0 comments

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...