#100நாடுகள்100சினிமா #WW2Cinema #22.DENMARK - LAND OF MINE (2015)

6:45:00 AM


Martin Zandvliet | Denmark | 2015 | 100 min.

Genre - History, Drama

(*** English write-up & Download Link given below ***)

(பதிவிற்குப் போகும் முன் - இரண்டாம் உலகப்போர் பற்றிய ஒரு சிறு கட்டுரை எழுதியிருக்கிறேன். அதை வாசித்துவிடவும் - ) 

Original Photo - The Hitler Youth
நேசப்படைகளிடம் ஹிட்லரது நாஜிப்படைகள் கொஞ்சம் கொஞ்சமாக வீழ்ந்து கொண்டிருக்க, ஜெர்மனிக்காக சண்டையிட ஆளில்லாததால் இன்னும் மீசை முளைத்திராத சிறுவர்களையெல்லாம் வலுக்கட்டாயமாக நாஜிப்படையில் சேர்த்து சண்டையிட வைத்தனர். நாஜிக்கட்சியின் இளைஞர் அணியாக (Youth Organisation) 1922 களில் தோன்றிய இந்த அமைப்பு, ஹிட்லர் ஜெர்மனியின் ஆட்சிப்பொறுப்பில் அமர்ந்த பிறகு 1933 ஆம் ஆண்டு The Hitler Youth ஆனது. 1945 வரை முழுவீச்சில் இயங்கி வந்த இந்த இளைஞர் படையை, ஆரம்பக்காலகட்டத்திலிருந்தே ஜெர்மனியை வலுவானதொரு நாடாக்க, இளைஞர்களுக்கு போர்ப்பயிற்சி அளித்து, போர்க்களத்தில் ஜெர்மனிய வீரர்களுக்கு உதவி செய்ய வைத்து அவர்களை வருங்கால வீரர்களாக தயார்படுத்தி வந்தார் ஹிட்லர். ஹிட்லரின் கடைசி காலத்தைச் சொல்லும் Downfall (2004) படத்தில் இந்த Hitler Youth வீரர்களிடம் ஹிட்லர் உரையாடும் காட்சி உண்டு. போரில் ஜெர்மனி தோற்க, ஹிட்லர் தற்கொலை செய்துகொள்ள, மேல்மட்டத்தில் இருந்த அதிகாரிகள் நாட்டைவிட்டு ஓடி தலைமறைவாக, நேசப்படைகளால் போக்கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டவர்காளில் பெரும்பாலானோர் இந்த சிறுவர்களே. காரணம் கடைசி கட்டப்போர்களில் முன்னின்று (Frontline Soldiers) போரிட்டவர்கள் இவர்களே. 12 வயதுச் சிறுவர்கள் கூட இந்தப் படைப்பிரிவில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தப் படம் அந்த சிறுவர்களது கதை. 


போருக்குப் பிறகு 196 நாடுகள் கையெழுத்திட்ட சர்வதேச ஒப்பந்தமான Geneva Convention இல் இரண்டாம் உலகப்போரினால் பாதிக்கப்பட்ட மக்கள், கை கால்கள் உடைமைகளை இழந்தவர்கள், சிறைகளில் உள்ள போர்க்கைதிகள் (Prisoners of War) ஆகியோருக்கு நீதி, வாழ்வாதாரம் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டி பல உடன்படிக்கைகள் நிறைவேற்றப்பட்டது, பெயருக்கு. அதன்படி போர்க்கைதிகளை அவர்களது விருப்பமில்லாமல் கட்டாயப்படுத்தி வேலை வாங்கக்கூடாது. ஆனால் 1942 இல் இருந்து 1944 வரை போர் நடந்து கொண்டிருந்த சமயம் The Atlantic Wall என்ற பெயரில் டென்மார்க்கின் (Continental Europe and Scandinavia) கடல் எல்லை முழுக்க நாஜிப்படை புதைத்து வைத்திருந்த லட்சக்கணக்கான கன்னிவெடிகளை அகற்றும் பணி சிறுவர்களான ஜெர்மனிய போர்க்கைதிகளுக்கு கொடுக்கப்பட்டது. நேசப்படைகள் இந்தப்பக்கமே வராமல் Normandy கடற்கரையைத் தாக்கியது தனிக்கதை (பார்க்க - Saving Private Ryan (1998) Steven Spielberg). கிட்டத்தட்ட 2000 ஜெர்மனியர்கள் இந்தப் பணியில் அமர்த்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. அவர்களில் பாதி பேர் கூட பணி முடிவில் மிச்சமிருக்கவில்லை. சிறுவர்களை கன்னிவெடி அகற்ற வைத்ததை டென்மார்க் சரித்திரத்திலேயே மிக மோசமான போர்க்குற்றமாகப் பார்க்கிறார்கள் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள். இந்தப் படம் வெளியான 2015 ஆண்டு கணக்குப்படி இன்னும் அகற்றப்படாத 9900 கன்னிவெடிகள் டென்மார்க் கடற்கரை எல்லைகளில் (West Coast of Denmark, Skallingen) இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

வெறும் கையுடன் பீச் மணலில் ஒரு குச்சியை வைத்துக்குத்தி குத்தி கன்னிவெடி இருப்பதைக் கண்டுபிடித்து அதிலிருக்கும் வெடிமருந்தை மட்டும் பிரித்து எடுத்து வெடிகுண்டை செயலிழக்கச் செய்து கணக்கு காட்டவேண்டும். 13 பேர் கொண்ட ஒரு சிறு குழு டென்மார்க் அதிகாரி Sergeant Carl Leopold என்பவரது கண்காணிப்பில் விடப்படுகிறார்கள். போரில் சண்டையிட்ட, ஜெர்மனியர்களை கடுமையாக வெறுக்கும் Carl இவர்கள் சிறுவர்கள் என்றாலும் ஜெர்மனியர்கள் என்ற கண்ணோட்டத்திலேயே வேலை வாங்குகிறார். 'உங்கள் ஆட்கள் வைத்த குண்டுகளை நீங்கள் தான் எடுக்க வேண்டும். அப்படிச் செய்யும் போது வெடித்துச் செத்தால் அது உங்கள் தலையெழுத்து' என்கிறார் (இந்தக் கன்னிவெடிகளை வைத்தவர்கள் நாஜிப்படையின் ப்ரென்ச் கைதிகள் என்பது தனிக்கதை). இவர் மட்டுமல்ல டென்மார்க்கில் உள்ள அனைவரும் இவர்களை வெறுக்கின்றனர். இவர்கள் துன்புறுவதை ரசிக்கிறார்கள்.      

ஒரு திரைப்படத்தில் (ஹவுஸ் ஃபுல், முதல்வன், ரிதம், பல விஜய்காந்த் அர்ஜுன் பாலைய்யா படங்கள், Hurt Locker) ஒரு வெடிகுண்டை ஹீரோ அகற்றுவதைப் போன்ற காட்சி இருந்தாலே பார்த்துக்கொண்டிருக்கும் நமக்கு பதற்றத்தில் ஹார்ட் வாய்க்கு வந்துவிடும். இந்தப் படம் நெடுக ஸ்கூல் பாய்ஸ் வெறும் கையில் கண்ணி வெடிகளை டிஃபியூஸ் செய்கிறார்கள். பதறிப் பதறி ஹார்ட் அட்டாக்கே வந்துவிடும் அளவிற்கு செம்ம த்ரில்லிங்காக அந்தக் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்கள். இரண்டாம் பாதியில் செண்டிமெண்ட் கொஞ்சம் தூக்கலாக இருந்தாலும் படம் முடிந்த பிறகு ஒரு நிறைவைத் தருகிறது.

படத்தில் Sergeant Carl ஆக வரும் Roland Moller வாழ்ந்திருக்கிறார். 'Full Metal Jacket' Sergeant Hartman ற்குப் பிறகு மறக்க முடியாத ஒரு கதாப்பாத்திரமாக இவர் இருப்பார். கொஞ்சமாக மனமிறங்குவதும் பின்பொரு சம்பவத்தால் மீண்டும் முருங்கை மரம் ஏறுவதும் நடிப்பில் பின்னியிறுக்கிறார். நிஜத்தில் இந்த Mine Defusing Operation பொறுப்பு ஆங்கிலேயே அதிகாரிகளிடம் விடப்பட்டிருக்கிறது. அவர்களது தலைமையில் சிறுவர்கள் வெடிகுண்டுகளை அகற்ற அதை மேற்பார்வையிட்டு கணக்குகாட்டியவர்கள் சிறைபிடிக்கப்பட்ட ஜெர்மன் அதிகாரிகள் / நாஜிக்கள். மாணவர்களில் குறிப்பிட்டுச் சொல்லமுடியவில்லை, அவர்களுக்குத் தலைவன் போல் வரும் மாணவனது கண்கள், அதில் தெரியும் வலி, வெறுமை நம் மனதில் தங்கிவிடும்.

Dir. Martin Zandvliet
படத்தை இயக்கியிருப்பவர் Martin Zandvliet. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் படம் பெரும் வெற்றியடைந்திருக்கிறது. 2015 Toronto சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்பட்டிருக்கிறது. மொத்தம் இரண்டே லொக்கேஷன்கள். ஒரு பெரிய கடற்கரை, ஒரு ஆர்மி கேம்ப். அதிகாரி அவ்வபோது கேம்பிற்கும் கடற்கரைக்கும் ஜீப்பில் போய்வரும் காட்சிகள். மிகக்குறைந்த பட்ஜெடில் மிகநிறைவான படத்தை எடுத்து அசத்தியிருக்கிறார்கள். ஒளிப்பதிவும், பின்னணி இசையும் போட்டி போட்டுக்கொண்டு BP ஏற்றுகிறது.

போர் மட்டுமல்ல போருக்குப் பிறகான சம்பவங்களும் கொடூரமானவையே. அந்த வகையில் இந்த Land of Mine அவசியம் பார்த்தே தீர வேண்டிய படம்.     

பிடித்திருந்தால் லைக் & ஷேர் செய்யுங்கள். நண்பர்களுக்கும் இந்தப் பக்கத்தைப் பரிந்துரைத்து மகிழ்ந்திருங்கள்.

****************************

After World War 2, the German POWs were forced to clear 2 million Land Mines that the Germans had placed along the West Coast during 1942 to 1944. Most of the POWs are young German Soldiers from Nazi's 'Hitller Youth' who were forced to fight in the frontline during the final days of war and taken prisoners by the Allies. The Geneva Conventin that was signed between 196 countries after the War prohibits Forced Labour of captured Prisoners of War. Violating the same and considered as the worst Danish post-war Crime in History more than 2000 German Soldiers were forced to remove Live Landmines with their bare hands crawling in the beach.

Land of Mine is the story of a group of 13 young German soldiers who are forced to clear Landmines under the leadership of Danish Sergeant Carl Leopold Rasmussen. The first half is full of Bomb defusing scenes which will for sure bring us to our seat edges. The thrill was so intense and wonderfully picturized with beautiful camera work and background score. Second half has some sentiment scenes but that does not stop this movie from becoming a war classic.

Directed by Martin Zandvliet, Land of Mines premiered at the at the 2015 Toronto International Film Festival gaining wide critical and commercial acclaim. Danish actor Roland Moller has nailed his role as Sergeant Carl Leopold. His role was so amazing that it reminded me of 'Full Metal Jacket' Sergeant Hartman (still, R. Lee Ermey is the Legend - no doubt).

A must-watch WW2 movie.


Other Recommended movies from Denmark

1) The Hunt (2012)
2) After the Wedding (2006)
3) Flame and Citron (2008)
4) 9. April (2015)
5) Adam's Apples (2005)Hit Like & Share. Recommend this page to your friends. Happy movie watching.

You Might Also Like

0 comments

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...