#100நாடுகள்100சினிமா #WW2Cinema #23.CHINA - CITY OF LIFE AND DEATH (2009)

7:44:00 AM


Lu Chuan | China | 2009 | 133 min.

(*** English write-up & Download Link given below ***)

வன்முறையும், இழப்பும், அவலமும் ஒவ்வொரு போரிலும் உண்டு. ஆனால் எந்தவொரு போரிலும் ஒரு குறிப்பிட்ட சம்பவம் நூற்றாண்டுகள் கடந்தும் மறக்கப்படாமல், ஆறாத வடுவாய் சரித்திரத்தின் இருண்ட பக்கங்களாக நினைவில் தங்கிவிடும். இரண்டாம் உலகப்போரால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நாட்டிற்கும் அப்படி சில மறக்க முடியாத, பெரும் துயர் நாட்கள் உண்டு. வெற்றிபெற்றவர்கள் எழுதிய சரித்திரப்புத்தகங்களில் ஜெர்மனிக்கும், ஹிட்லருக்கும் மட்டுமே அதிக கவனம் கொடுக்கப்பட்டு உலகப்போருக்கும் அதனால் ஏற்பட்ட பெருந்துயரங்களுக்கும் காரணம் என்று விடாது சொல்லப்பட்டு வருகிறது. அதே சமயம் உலகிலேயே மிகப்பெரிய இனப்படுகொலையாகக் கருத்தப்படும் (யூதர்களை விட) Native Americans என்றழைக்கப்படுகிற அமெரிக்கப் பழங்குடியினரின் இன அழிப்பு பற்றி தொடர்ந்து மௌனமும் சினிமாவில் எதுவும் வந்துவிடாதவாரு கவனமாகவும் இருந்து வருகிறது அமெரிக்கா. இரண்டாம் உலகப் போரைப் பொறுத்தவரை ஜெர்மனிக்கு சற்றும் குறைவில்லாமல் ஆசியாவிலேயே மிகப்பெரிய பேரரசு ஆகவேண்டும் என்ற வெறியில் கொத்துக்கொத்தாக மக்களைக் கொன்ற நாடு ஜப்பான். இரண்டாம் உலகப்போரை தொடங்கிவைத்ததே ஜப்பான் தான்.

சீனா மீது எப்போதுமே ஒரு கண் வைத்திருந்த ஜப்பானியப் பேரரசு, முதன்முதலில் 1894-95 ஆண்டு ஆறு மாதகாலம் ஒரு பெரும் போரை நடத்தி சீனாவைப் படாத பாடுபடுத்தியது. First Sino - Japanese War என்று அந்தப் போரை அழைக்கிறார்கள். அதன் பிறகு மீண்டும் 1937 முதல் 1945 வரை மீண்டும் ஒரு பெரும்போர் நடத்தப்பட்டது. அந்தப் போருக்கு Second Sino-Japanese War என்று பெயர். 8 வருடங்கள் நடந்த இந்தப் போரில், சுமார் மூன்றரை கோடி (35 மில்லியன்) சீன மக்கள் கொல்லப்பட்டார்கள். வெறியாட்டம் ஆடிய ஜப்பானியப் படை செய்த மாபெரும் கொடும்பாவச் செயல்களில் ஒன்று தான் The Nanking Massacre. சீனக்குடியரசின் அன்றைய தலைநகரமாக இருந்த Nanking ஊருக்குள் புகுந்த ஜப்பானியப் படை, மூன்றே நாளில் அந்த ஊரைக்கைப்பற்றியது. 6 வார காலம் அங்கு தங்கியிருந்தனர் ஜப்பானிய ராணுவத்தினர். அச்சமயம் அந்த ஊரில் இறந்தவர் எண்ணிக்கை மட்டும் 3 லட்சம். வெறி பிடித்த மிருங்கங்களுக்கு இறையான இளம்பெண்கள் சுமார் 20,000 பேர். ஆரம்பகாலகட்டப்போரான Battle of Shanghai க்குப் பிறகு தலைநகர் நாங்கிங் கைக் காப்பாற்ற முடியாத என்பது தெளிவாகத் தெரிந்ததால் தலைநகரை Wuhan என்ற இடத்திற்கு இடமாற்றும் பணியில் ஈடுபட்டனர் சீன அதிகாரிகள். ஜப்பானியர்கள் நெருங்கி வரும் விஷயம் கேள்விப்பட்ட மக்கள், தங்களது உயிரையும் உடைமைகளையும் காப்பாற்றிக்கொள்ள ஓட்டமெடுத்தனர். நாட்டை விட்டு, தலைநகரை விட்டு மக்கள் வெளியேறுவதை விரும்பாத சீன அரசு, ரோடுகளை மறித்தும், கிராமங்களைத் எரித்தும் மக்களைத் தடுத்தனர். வரும் ஆபத்து தெரிந்தே நான்கிங் மக்கள் சொந்த நாட்டுப் படையினராலேயே தடுத்து நிறுத்தப்பட்டு, பின்னர் கைவிடப்பட்டனர். டிசம்பர் 13, 1937 நான்கிங் நகருக்குள் புகுந்தது ஜப்பானியப் படை.

அந்த சமயத்தில் நான்கிங் நகரில் வியாபார நிமித்தமாக பல வெளிநாட்டவரும் தங்கியிருந்தனர். அவர்களில் மிகமுக்கியமானவர் John Heinrich Detlev Rabe (சுருக்கமாக John Rabe). நான்கிங் வீழ்ந்த போது இந்த வெளிநாட்டவர்கள் ஒன்றுசேர்ந்து அந்நகரின் மக்களைக் காப்பாற்ற வேண்டி The Nanking Safety Zone என்ற பாதுகாப்பு வலயத்தை உருவாக்கினர். ஜெர்மனியரும் நாஜிக்கட்சி உறுப்பினருமான John Rabe இதன் தலைமைப் பொறுப்பாளராக இருந்தார். ஜப்பானுக்கும் ஜெர்மனிக்கும் நட்பு ரீதியான ஒப்பந்தம் இருந்ததால் ஒரு ஜெர்மன் நாஜியை மீறி அவர் பாதுகாப்பில் தங்களுக்கு ஒன்றும் ஆகிவிடாது என்று நினைத்தனர் நான்கிங் மக்கள்.

அவர்கள் நினைத்தது பொய்யானது.

John Rabe இறுதிவரை போராடி சுமார் இரண்டரை லட்சம் சீனர்களைக் காப்பாற்றினார். அவரையும் மீறி இறந்தவர் எண்ணிக்கை 3 லட்சம்.

நான்கிங் நகரம் ஜப்பான் வசம் வந்தபிறகு தொடங்குகிறது City of Life and Death திரைப்படம். சீனப்படை வீரர்கள் அமைத்திருக்கும் தடுப்புகளையும் மீறி கூட்டம் கூட்டமாக தப்பித்துச் செல்லும் பொதுமக்கள், ஜப்பானியர்களிடம் போர்க்கைதிகளாக சிக்கிக்கொள்கின்றனர். போர்ப்பயிற்சி இல்லாத ஒரு சிறு படையை வைத்துக்கொண்டு ஜப்பானியர்கள் மீது அவ்வபோது தாக்குதல்களை நடத்துகிறார் Lieutenant Lu Jianxiong. எஞ்சியிருக்கும் பொதுமக்கள் John Rabe பாதுகாப்பில் பதுங்கியிருக்கிறார்கள். ராணுவம் தடைசெய்யப்பட்ட அந்த பகுதிகளுக்குள் அவ்வபோது அத்துமீறி நுழைந்து அங்கிருக்கும் பெண்களை வன்புணர்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் ஜப்பானிய வீரர்கள். ஒரு கட்டத்தில் Lu சிக்கிக்கொள்ள அவரையும், சிக்கிய போர்க்கைதிகளையும் ஒரு கோடௌன் போன்ற பெரிய கட்டிடத்தில் அடைத்து வைத்து மொத்தமாகக் கொளுத்தியும், துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும், உயிரோடு மண்ணில் போட்டுப் புதைத்தும் கொன்று குவிக்கின்றனர். குறிப்பிட்ட இந்தக் காட்சியைப் பார்க்க தனி தைரியம் வேண்டும். ஜப்பானிய வீரர்கள் எடுத்த ஒரிஜினல் வீடியோவை ரெப்ரன்ஸாக வைத்து இந்தக் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்கள். பார்ப்பவர் அதிர்ச்சியில் உறைவது உறுதி. ஆனால் அடுத்து வரவிருக்கும் அவலங்களுக்கு முன்னோடியாகவே இந்தக் காட்சி அமைந்திருக்கிறது என்பது முழுபடத்தையும் பார்த்தபின்பு தான் உணர முடிந்தது.

சில வருடங்களுக்கு முன்பே இந்தப் படத்தை பார்த்துவிட்டேன். #100நாடுகள்100சினிமா தொடருக்காக மீண்டும் ஒருமுறை நேற்று பார்த்தேன். படம் பற்றி நிறைய வாசித்துத் தெரிந்துவைத்துக்கொண்டேன். 'பாகுபலி'யையே தலையில் தூக்கி வைத்துக்கொண்டாடும் நாம் இது போன்ற படங்களை சாத்தியமாக்கியவர்களைக் கோவில் கட்டிக்கும்பிட வேண்டும். படத்தை எழுதி இயக்கியிருப்பவர் Lu Chuan. இந்திய மதிப்பில் சுமார் 80 கோடி ($12 மில்லியன்) பொருட்செலவில், 4 வருடங்கள் எடுக்கப்பட்டிருக்கிறது இந்தப் படம். முழுக்கக் கலரில் எடுக்கப்பட்டு பின்பு போஸ்ட் புரொடக்ஷனில் கருப்பு-வெள்ளையாக்கியிருக்கிறார்கள். படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது இந்த கருப்பு-வெள்ளை கலர்டோன். இயக்குனருக்கு இணையாக கொண்டாடப்பட வேண்டியவர் படத்தின் ஒளிப்பதிவாளர்கள் Cao Yu & He Lei மற்றும் கலை இயக்கக்குழுவினர். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருந்தாலும் உள்ளூர் சென்சாரிலேயே பெரும் எதிர்ப்பைச் சம்பாதித்திருக்கிறது படம். வெளியானபிறகு ஜப்பானிலிருந்து பல அச்சுறுத்தல்களை எதிர்கொண்டிருக்கிறார் இயக்குனர் Chan Lu. ஆனால் உலகளவில் பெரும் வரவேற்பையும் வசூலையும் வாரிக்குவித்திருக்கிறது படம்.  

- a scene from Red Cliff
சைனாவிலிருந்து பார்க்கவேண்டிய படங்கள் எத்தனையோ உண்டு. எனது பேவரிட் ஆக்ஷன் இயக்குனர் John Woo இயக்கிய Red Cliff இருபாங்கள் இதை விட மிகப்பிரம்மாண்டமான படங்கள். ஆனால் அவை 'பாகுபலி' வரிசையிலேயே வரும். City of Life and Death நமது 'ஹே ராம்' வரிசைப் படம். பிரம்மாண்டத்தை விட தரமும், வலியும், தாக்கமுமே அதிகம்.  

அவசியம் பார்த்தே தீர வேண்டிய படம். கொண்டாடப்பட வேண்டிய படமும் கூட.

பிடித்திருந்தால் லைக் & ஷேர் செய்யவும். நண்பர்களுக்கும் இந்தப் பக்கத்தை பரித்துரைத்து மகிழ்ந்திருங்கள்.

**********************************

City of Life and Death deals with the events that happened after the fall of Nanking, the then Capital of Republic China. Historians, especially the Americans have always focussed on the Germans and Nazis as reason for World War 2. The War actually started with Japan invading China in the Second Sino - Japanese War in 1937. Nanking fell in 3 days after the authorities abandonded the place and shifted Captial to Wuhan. The Imperial Japanese Army camped in Nanking for 6 weeks starting from December 13, 1937 and left a brutal mark in the history of China. 3 Lakh Chinese were killed and more than 20,000 women were brutally raped. This incident is known as the Rape of Nanking or the Nanking Maassacre.

Other than Chinese Nationals, many foreigners stayed in Nanking during the time for business purposes. One such Businessman and a German was 'John Rabe'. As a member of the Nazi Party he convinced the authorities and made a pact with the Imperial Army and with the support of an Internation Committe he was able to protect over 2.5 lakh Chinese in a Safety Zone inside Nanking.

The movie begins right after the fall of Nanking. The Imperial Japanese soldiers mass murder the POWs by burning, shooting, stabbing and buring alive. Thousands of Chinese women, Childrenand wounded soldiers take refuse in the safety zone run by John Rabe. However, the Jap soldiers forcefully enter the zone every now and then and rape the female refugees.   

Dir. Lu Chuan
Every war is brutal. The aftermaths of war are even more brutal. The greed for power and wealth is always above everything for man. Written and Directed by Lu Chuan, 'City of Life and Death' is a historic recreation of the brutality that happened in Nanking during World War 2. With a budget of US$ 12 Million (~80 Crores) and production lasting for more than 4 years, the movie is considered to be one of the most successful films in the history of Chinese Cinema. Red Cliff (2 parts) is another must watch Epic War movie from China but that is all about fantasy and glory. City of Life and Death is real History, a History that will never be forgotten.

A Must Watch Epic.
Hit Like & Share. Recommend this page to your friends. Happy movie watching :)   

You Might Also Like

1 comments

  1. Dear Mr Anandan,

    Very Interesting write up.. i keen to watch.. the torrent link is not working.. even i tried with other link aswell.. could not get.. could you help to me provide any more torrent link which can be downloadable...

    Regards,

    Prabhu.M

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...