#100நாடுகள்100சினிமா #31.PALESTINE - OMAR (2013)
10:18:00 PM
Hany Abu-Assad | Palestine | 2013 | 96 min.
(*** English write-up & Download Link given below ***)
இஸ்ரேல்
படம் ஒன்றைப் பார்த்துவிட்டும் பாலஸ்தீனப்படம் பார்க்கவில்லை என்றால் ஒரு முழுமையே
இருக்காது.
பாலஸ்தீனப்
படமான Omar (2013) படத்தைப் பற்றிய அறிமுகத்திற்கு முன் “பாலஸ்தீனம்” பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு பல
வருடங்களாக நடந்து வரும் இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சனையை பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். முடிந்தவரை
சுருக்கமாக படத்தைப் புரிந்து கொள்ள வேண்டிய அளவு வரலாறைப் பார்க்கலாம்.
ஆதி
ஆரம்ப வரலாறை எடுத்துப்பார்த்தால், யூதர்களது தாயகமாக பாலஸ்தீனத்தையே குறிப்பிடுகிறது பைபிள் (பழைய ஏற்பாடு). புனிதத்தந்தை
ஏபிரஹாம் அங்கு வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. தங்களுக்கென்று (யூத இனத்திற்கென்று) ஒரு நாடு இல்லாத குறையைப் போக்க, யூதர்கள் பாலஸ்தீனப்பகுதியை
தங்களது தாய்நாடாக ஏற்று அங்கு குடியேறத் தொடங்கினார்கள். ஆதியில் யூதர்கள் வாழ்ந்திருந்தாலும், அவர்களை அடித்து
விரட்டிவிட்டு ரோமானியர்கள் பாலஸ்தீனத்தைக் கைபற்றியிருந்தார்கள். அவர்களிடமிருந்து
அரபு மன்னர்கள் கைக்கு மாறியது. பல நூறு வருட அரபு மன்னர்கள் ஆட்சியால் முஸ்லிம்கள் அதிகம்
வசிக்கும் நாடானது பாலஸ்தீனம். அதன் பிறகு முதலாம் உலகப்போருக்குப் பிறகு அன்றைய ஐ.நா குழுவின்
முடிவுபடி 1922லிருந்து
பாலஸ்தீனம் என்ற பகுதியை (கவனிக்க நாடு அல்ல. பகுதி) நிர்வகிக்கும் பொறுப்பு பிரிட்டனுக்கு அளிக்கப்பட்டது (British Palestine).
1947 (பாலஸ்தீனம் ஆங்கிலேயர்களது காலனியாக இருந்த சமயம்) ஐ.நா சபையில்
வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, பாலஸ்தீனம் யூதர்களுக்கு ஒரு பகுதி, அரபுகளுக்கு
ஒரு பகுதி என்று இரண்டாக்கப்பட்டது. இந்தியா பாகிஸ்தான் பிரிந்தது போல, பாலஸ்தீனப்பகுதிகளை
இருவருக்கும் பிரித்துக்கொடுத்தது ஐ.நா. யூதர்கள் ஐ,நா சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்டு, தனி நாடாக
தன்னை அறிவித்து ‘இஸ்ரேல்’ ஆனது.
‘கோதாவரி வீட்டுக்கு நடுவுல ஒரு கோட்டப்போடுடி’ என்று தெளிவாகப்
பிரிக்காமல் ஆங்காங்கே, முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்றால் அது பாலஸ்தீனம், யூதர்கள் பகுதி
என்றால் இஸ்ரேல் என்று கொத்து பரோட்டா போடப்பட்டது. முஸ்லீம்கள் (பாலஸ்தீன + உலக) ஐ,நா வின் இந்த செயல்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து. பாலஸ்தீனப்
பகுதி துண்டாவதை அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். இஸ்ரேலைப் பிறவி எதிரியாகப் பார்த்தனர்.
1948 ஆம் ஆண்டு, ஐ,நா உத்தரவுபடி பிரிட்டன் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறியது. இதுதான் சமயம்
என்று காத்திருந்த மற்ற அரபு நாடுகளான ஜோர்டான், சிரியா, ஈராக், எகிப்து அனைத்தும் ஒன்று சேர்ந்து புதிதாக உருவாகியிருந்த
கன்னிநாடான இஸ்ரேல் மீது தாக்குதல்கள் நடத்தியது. அந்தத் தாக்குதல்களையும் அடுத்தடுத்து நடந்த
தாக்குதல்களையும் எப்படியோ சமாளித்த இஸ்ரேல், திருப்பித் தாக்கியதோடு மட்டுமல்லாமல் ஐ.நா தனக்கு
அளிக்காத, பாலஸ்தீனத்திற்கு
அளிக்கப்பட்ட பகுதிகளில் 60% வரை கைபற்றியது. ஜோர்டான் பகுதியான West Bank அப்படிக் கைபற்றப்பட்ட பகுதிகளில் ஒன்று. ஆக்கிரமிப்பு
செய்யப்பட்ட பகுதிகளிலிருந்து அரபுகளை ஓட ஓட விரட்டியது இஸ்ரேல். குட்டியூண்டு
புதிய நாடான இஸ்ரேலை அனைத்து அரபுநாடுகளும் ஒன்று சேர்ந்து தாக்கியும் ஒன்றும் செய்ய
முடியவில்லை.
அதிகாரபூர்வமாக
“பாலஸ்தீனம்” என்ற ஒரு அரபு
நாடு பிறக்கவேயில்லை. ஆனால் “இஸ்ரேல்” என்ற யூத நாடு பிறந்து, ஐ.நாவின் அங்கீகாரத்தையும் பெற்றது.
இஸ்ரேலது
இந்தப் பெருவளர்ச்சிக்கு முக்கிய காரணம் உலகமெங்கும் பரவிக்கிடந்த யூதர்கள். ஹிட்லர் அழித்தது
போக மீதமிருந்த யூதர்கள்! அமெரிக்கா ஃபுல் சப்போர்ட் கொடுத்தது இஸ்ரேலுக்கு (சோவியத் யூனியன்
சப்போர்ட் பாலஸ்தீனிற்கு). “இஸ்ரேல் மன்னர்” என்றழைக்கப்பட்ட ஏரியல் ஷாரன் (Ariel Sharon). ஆரம்பகாலகட்டங்களில் ராணுவத் தளபதியாகவும் பின்னர் இஸ்ரேல் பிரதமராகவும் இருந்தவர். இரும்புக்கோட்டையாக
இஸ்ரேலைக் காத்தார் (பாலஸ்தீனர்களை வழிநடத்தியவர்களில் முக்கியமானவர் யாசர் அராபத்!).
தங்களுக்கு
கிடைத்த தனி நாடை கெட்டியாகப்பிடித்துக்கொண்டனர் யூதர்கள்.
இஸ்ரேலது
எந்தவொரு அமைதிப்பேச்சுவார்த்தைக்கும் அரபுநாடுகள் செவிசாய்க்கவில்லை. ஆக்கிரமிப்பு
செய்த பகுதிகளை திருப்பிக்கொடுத்துவிடு என்ற ஐ.நாவின் கோரிக்கையை இஸ்ரேல் ஏற்கவில்லை. கடுப்பான அரபுநாடுகள், பாலஸ்தீனத்தில்
கூடாரம் அமைத்து அடுத்தடுத்து மனிதவெடிகுண்டுகளை இஸ்ரேலுக்குள் அனுப்பி தாக்குதல் நடத்தியது. 2000 – 2003 வரை West Bank பகுதியில்
மட்டும் 73 குண்டுவெடிப்புகள்
நிகழ்ந்ததாகச் சொல்கிறது இஸ்ரேல்.
இப்படியே
போய்க்கொண்டிருந்தால் நிம்மதியாக வாழ முடியாது என்று முடிவு செய்த இஸ்ரேல், கடும் எதிர்ப்பையும்
மீறி, 2002 ஆம் ஆண்டு ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்திற்கு நடுவே, அரபுகள் வசிக்கும்
பகுதியைப் பிரித்து 708 கி.மீ நீளம் சுமார் 25 அடி உயரத்திற்கு நீண்ட சுவர் ஒன்றை எழுப்பியது. அந்த சுவர்
இந்த Omar திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக வருகிறது.
The Wall (Israeli West Bank barrier) என்றழைக்கப்படும் இந்த சுவரை ஒருவன் துப்பாக்கி குண்டுகளை மீறித் தாண்ட முயற்சிப்பதாகத்
தொடங்குகிறது படம். அவன் பெயர்
Omar. இளைஞன். இஸ்ரேலுக்கு எதிராகப் போராடும் பாலஸ்தீனப் போராளிக்
குழுக்கள் எதிலும் இணையாதவன். ஆனால் அவனுக்குள்ளும் கிளர்ச்சித்தீ கொளுந்துவிட்டு எரிந்துகொண்டு
தான் இருக்கிறது. தன்
இரு நண்பர்களுடனும் சேர்ந்து இஸ்ரேலுக்கு எதிராகச் செயல்பட ஆயத்தமாகிக் கொண்டிருப்பவன். அவனது காதலி
சுவருக்கு அந்தப் பக்கம் வசிப்பவள். அவளைக் காணவே உயிரைப் பணயம் வைத்து ஓமர் சுவர் ஏறிக்குதிப்பது
அவளைப் பார்க்கத்தான்.
காதலும்
காதலின் வலியும் தான் இந்தப் படத்தின் ஒற்றைவரிக்கதை என்றாலும், இந்தக் கதை
நடக்கும் சூழலும், அதில் பங்குபெரும் மனிதர்களும் இந்தப் படத்தை முக்கியமானதொரு
படைப்பாகவே மாற்றுகிறார்கள். போர் சூழலில் கருகிப் போகும் உறவுகள், சிதைக்கப்படும்
நம்பிக்கைகள், துரோகங்கள், வலிகள் என்று
அந்நாட்டு அரசியல் பிரச்சனையை / முக்கியமாக அந்த நீண்ட பெரிய சுவரை வெகு அழகாக படத்தின் ஒரு
கதாப்பாத்திரம் போலவே உலாவ விட்டிருக்கிறார் இயக்குனர்.
2005 ஆம் ஆண்டு வெளியான மிக முக்கியமான உலகத் திரைப்படம் - Paradise Now. இஸ்ரேலுக்குள் மனிதவெடிகுண்டாக அனுப்பப்படவிருக்கும் இரண்டு இளைஞர்காளைப் பற்றிய
திரைப்படம் அது. அந்தப்
படத்தின் இயக்குனரான Hany Abu-Assad இயக்கத்தில் வெளிவந்திருக்கும் மற்றுமொரு அருமையான படம் - Omar. வெறும் 4 நாட்களில் Omar படத்தின் மொத்தத்
திரைக்கதையையும் தயார் செய்த இயக்குனர்
Hany Abu-Assad, படத்தில் இஸ்ரேல் ராணுவ ஏஜன்டாக வரும் Waleed Zuaiter உடன்
சேர்ந்து படத்தைத் தயாரித்திருக்கிறார். முழுக்க முழுக்க பாலஸ்தீனியர்களால் தயாரிக்கப்பட்ட முதல்
திரைப்படம் Omar என்பது குறிப்பிடத்தக்கது. 2013
Cannes திரைப்படவிழாவில் Special Jury Prize உள்ளிட்ட பல
சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வாரிக்குவித்த இந்தப் படம் சிறந்த வெளிநாட்டுத்
திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதை இத்தாலியின் The Great Beauty (2013) படத்திடம்
தோற்றது.
பாலஸ்தீனத்திலிருந்து
ஆஸ்காருக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் திரைப்படம் Divine Intervention (200). ஆனால் ஆஸ்கார்
கமிட்டியில் இருந்த லிஸ்ட்டில் பாலஸ்தீனம் ஒரு நாடாகவே கணக்கில் கொள்ளப்படவில்லை என்பதால், அந்தப் படம்
நிராகரிக்கப்பட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டு
Paradise Now பரிந்துரைக்கப்பட்ட போதும், இதே பிரச்சனை
எழுந்துள்ளது. ஆனால்
இயக்குனரது சாமர்த்தியத்தால், பாலஸ்தீனத்தில் இடைக்கால சுய அரசாங்காமாக (Interim Self Government) இயங்கி வந்த The Palestinian
National Authority மூலம் பரிந்துரைக்கப்பட்ட
படமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு போட்டியில் இடம்பெற்றிருக்கிறது. ஆஸ்காரில்
இடம் பெற்ற முதல் பால்ஸ்தீனப்படம் Paradise
Now. இரண்டாவது படம் Omar (2013). ஓமர் பரிந்துரைக்கப்பட்ட
போதும் பிரச்சனைகள் எழுந்துள்ளது. ஆனால் இம்முறை ஆஸ்கார் பாலஸ்தீனம் என்றே குறிப்பிட்டு படத்தைப்
போட்டிப் பிரிவில் அனுமதித்தது.
படத்திற்கு
தேவையான வரலாறை மட்டுமே சொல்லியிருக்கிறேன். மொத்தக்கதையையும் தெரிந்து கொள்ள - http://goo.gl/u5dxdD
பிடித்திருந்தால்
லைக் & ஷேர் செய்யுங்கள். நண்பர்களுக்கும் இந்தப் பக்கத்தைப் பரிந்துரைத்து மகிழ்ந்திருங்கள் :)
**************************************
Only after knowing the exact problem in Israel and Palestine, Omar
movie’s story and importance can be understood.
So First-things-first. To know about the Israel – Palestine (Arab)
Conflict, please watch this simple video - https://www.youtube.com/watch?v=ngFYOLOkmaI (U.S Version)
Omar (2013) is a MUST WATCH tale of a young boy stuck between love, war
and friendship living in the occupied areas of Palestine. The 25 foot, 718 KM
long wall (Israeli West Bank barrier) that separates muslims and isralies in
the Isralei occupied West Bank region plays an important role in the film.
Dir. Hany Abu-Assad |
Directed by the acclaimed Director of Paradise Now (2005) - Hany
Abu-Assad, Omar is the first Palestinian Film to be entirely funded by
Palestinians and was was screend at the 2013 Cannes Film Festival where it won
the Special Jury Price. It was also nominated for the Academy Award for Best
Foreign Language Film.
1) Paradise Now (2005)
2) Salt of this Sea (2008)
3) The Time that Remains (2009)
4) Divine Intervention (2002)
Download Link – http://www.mkvcage.com/omar-2013-720p-brrip-subbed-850mb/
Hit Like & Share. Recommend this page to your friends. Happy movie
watching :)
0 comments
மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...