#100நாடுகள்100சினிமா #30.ISRAEL - THE HUMAN RESOURCE MANAGER (2010)

10:12:00 PM

Eran Riklis | Israel | 2010 | 103 min.

(*** English write-up & Download Link given below ***)

பயணம் செய்ய யாருக்குத்தான் பிடிக்காதுபுதுப்புது இடங்களும், மக்களும், அவர்களது பழக்கவழக்கங்களும், கதைகளும் என்றுமே சுகமான அனுபவங்களே! ஆனால் எல்லா பயணங்களும் நாம் விரும்பிச் செய்வதாக அமைந்துவிடாது. ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் சில மோசமான பயணங்களும் நடந்திருக்கும். அதிகப் பயணம் செய்பவனல்ல என்றாலும், பயணம் சம்பந்தப்பட்ட படங்கள் எனது பேவரிட். ரோட் மூவிஸ் என்றல்ல, கதாநாயகன் / நாயகியின் தேடல் பிரதானமாக இருக்கும் படங்கள் எதையும் மிஸ் பண்ணாமல் பார்த்துவிடுவது வழக்கம். அந்தவரிசையில் Synopsis மட்டும் படித்துவிட்டுப் பார்த்த படம் - The Human Resource Manager (2014)

ஜெருசலேமில் உள்ள பிரபல பேக்கரி ஒன்றில் தற்காலிகப் பணியில் இருக்கும் ஐரோப்பியப் பெண் ஒருவர், நகரில் நடக்கும் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் இறந்துவிடுகிறார். அடையாளம் தெரியாமல் மார்ச்சுவரில் கிடத்தப்பட்டிருக்கும் அவரது பிணத்திலிருந்து பேக்கரியின் ஐ.டி கார்டைக் கண்டுபிடிக்கும் ஒரு பத்திரிக்கையாளர் - 'பிரபல பேக்கரி தனது ஊழியர்களை நடத்தும் லட்சணம் இதுதான்' என்று கொட்டை எழுத்தில் கட்டுரையாகப் போட, பேக்கரி மானத்தைக் காப்பாற்ற வேண்டி, அந்தப் பெண்ணின் பிணத்திற்கு பொறுப்பேற்று, மார்ச்சுவரியிலிருந்து மீட்டு, அவளது சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கமுடிவு செய்கிறது பேக்கரி. இந்தப் பொறுப்பு பேக்கரியின் மனிதவளமேலாளரிடம் (H.R Manager) ஒப்படைக்கப்படுகிறது. சிறிது விருப்பம் கூட இல்லையென்றாலும், தனது வேலையைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டி, வேண்டாத இந்தப் பயணத்தை ஏற்றுக்கொள்கிறார் HR Manager. அவரது இந்தப் பயண அனுபவம் தான் இந்தப் படம்.

உலகளவில் அகதிகளாக மக்கள் அதிகம் புலம்பெயரும் நாடுகளில் ஒன்றாக இஸ்ரேலும் இருக்கிறது. சுலபமாக அந்த மக்களுக்கு வேலையும் கிடைக்கிறது. ஆனால் அவர்கள் யார்? அவர்களது பின்புலம் என்ன? அவர்களது தேவை என்ன? என்று எதையுமே இஸ்ரேலும், அங்கிருக்கும் கம்பனிகளும் கண்டுகொள்வதில்லை என்பதை மறைமுகமாகக் குத்திக்காட்டியிருக்கிறார் படத்தை இயக்கியிருக்கும் Eran Riklis. Lemon Tree (2008), The Syrian Bride (2004) போன்ற சிறந்த படங்களை இயக்கி உலகளவில் கவனம் பெற்றவர். A Woman in Jerusalem (by A.B. Yehoshua) என்ற புத்தகத்தின் அடிப்படையில் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்.

எந்தக் கதாப்பாத்திற்கும் படத்தில் பெயர் இல்லை. HR Manager, The Consul, The Grandmother, The Driver, The Secretary என்றே படம் முழுவதும் அழைத்துக்கொள்கிறார்கள். படம் பார்க்கும் நமக்கு இதுவே பெரிய வசதியாக இருக்கிறது. இறந்த பெண்ணின் முகம் கூடத் தெரியாத HR Manager, தனக்காக, தன் வேலைக்காகவே வேண்டா வெறுப்பாக ஜெருசலேமிலிருந்து கிழக்கு ஐரோப்பாவிற்கு பயணம் செய்கிறார். ஆனால் அந்தப் பயணத்தில் அவர் சந்திக்கும் மனிதர்கள், ஏற்படும் அனுபவங்கள், தங்கும் இடங்கள் அவரையும் அவரால் மற்றவர்களையும் எப்படி மாற்றுகிறது என்பது தான் படம்.

HR Manager ஆக Mark Ivanir. 7 மொழிகள் பேசத் தெரிந்த இவரை Spielber இன் Schindler's List உட்பட பல படங்களிலும், டிவி சீரியல்களிலும் நாம் பாத்திருப்போம். பனி சூழ்ந்த மலைப்பிரதேசத்தில் ஒரு ஓட்டை வேனில் பிணத்தை ஏற்றிக்கொண்டு தெரியாத ஊருக்கு, பழக்கமில்லாத நபர்களுடன், வேண்டாவெறுப்பாகப் பேசிக்கொண்டு பயணம் செய்யும் ப்ரொபஷனல் சிடுமூஞ்சி ஹெச்.ஆராக மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். இவர் தவிர படம் நெடுக, பல சுவாரஸ்யமான சிறு சிறு கதாப்பாத்திரங்கள் வந்து செல்கிறது.     

படம் பற்றி சொல்வதற்கு அதிகமில்லை. அவசியம் கிளாஸிக் கிடையாது. கொஞ்சம் ஸ்லோ. ஆனால் பார்க்கவேண்டிய, வித்தியாசமான திரைப்படம்.

பார்த்தே தீர வேண்டிய பிற இஸ்ரேலியப் படங்களின் பட்டியல் கீழ் வருமாறு

1) Lebanon (2009) - முழுக்க முழுக்க ஒரு ஆர்மி டாங்கரின் உள்ளே எடுக்கப்பட்ட அருமையான திரைப்படம் - http://babyanandan.blogspot.in/2012/03/lebanon-israel-2009.html
2) Gett: The Trail of Vivianne Amsalem (2014) - இந்தப் படத்தை தான் முதலில் தேர்வு செய்துவைத்திருந்தேன். பரவலாகத் தெரிந்த படம். அவசியம் பார்த்தே தீர வேண்டிய படம்.
3) Waltz with Bashir (2008) - மிகப்பிரலமான, பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய, பார்த்தே தீர வேண்டிய அனிமேஷன் திரைப்படம்
4) The Lemon Tree (2008) - விருதுகளை அள்ளிக்குவித்த அருமையான படம்.
5) The Band's Visit (2007) - தவறுதலாக வேறு ஒரு ஊருக்கு வந்திறங்கும் பாரம்பரிய இசைக்குழுவின் கதை. கொஞ்சம் ஸ்லோ. எனக்குப் பிடித்தது - https://goo.gl/1pE1Fm

பிடித்திருந்தால் லைக் & ஷேர் செய்யுங்கள். நண்பர்களுக்கும் இந்தப் பக்கத்தைப் பரிந்துரைத்து மகிழ்ந்திருங்கள் :)

**************************

The Human Resource Manager (2010) is the story of a large industial Bakery's HR Manager who is forced to travel from Jerusalem to Eastern Europe to deliver the dead body of a former employee, an immigrant killed in a recent bomb blast, to her family in order to prevent public-relations disaster for the Bakery.

Dir. Eran Riklis
Directed by Eran Riklis, of Lemon Tree (2008) & The Syrian Bride (2004) fame, this movie is based on a book, A Woman in Jerusalem by A.B.Yehoshua. The characters in the film are mostly unnamed and are referred to as HR Manager, The Consul, The Grandmother, The Driver, The Secretary etc which itself gives a different and comfortablbe feel to us, the foreign audience.

Mark Ivanir - a well-known face in the Hollywood industry plays the role of the HR Manger and he does that with ease. The whole stroy is about him accepting the job to save his career, the so-called-unpleasant travel that he makes and the people he meet.    

Not a classic but definitely a must-watch movie.

Other Recommended movies from Israel -

1) Lebanon (2009)
2) Gett: The Trail of Vivianne Amsalem (2014)
3) Waltz with Bashir (2008)
4) The Lemon Tree (2008)
5) The Band's Visit (2007)




Hit Like & Share. Recommend this page to your friends. Happy movie watching :)

You Might Also Like

0 comments

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...