#100நாடுகள்100சினிமா #37. U.A.E - CITY OF LIFE (2009)
7:19:00 AM
Ali
F. Mostafa | U.A.E | 2009
(***
English write-up & Download link given below ***)
அமீரகம் - குட்டிக்குட்டி தீவுகளாக இருந்த
7 நாடுகள் ஒன்றிணைந்து
1971 இல் United Arab Emirates
(அமீரகம்) ஆகியிருக்கிறது. ஷரியா
சட்டத்திற்கு (The Sharia Law) உட்பட்ட
இஸ்லாமிய நாடாக இருந்தாலும், பல்லாயிரக்கணக்கான இந்தியர்களுக்கும்
(27%), வெளிநாட்டவருக்கும் வாழ்வாதாரமாகத் திகழும் நாடு. மக்கள் தொகையில்
80% அதிகமானோர் வெளிநாட்டவர்களே.
அதனாலேயே பல்வேறு விதமான கலாச்சாரங்களிலும், கொண்டாட்டங்களிலும் திளைத்திருக்கும் கனவு தேசம். எண்ணையும், இயற்கை எரிவாயுவும் நாட்டின் வாழ்வாதாரங்கள்.
எல்லாம் இருந்தும் சினிமாவில் மட்டும் பின் தங்கித் தான்
இருந்து வருகிறது. இந்தியப்படங்கள்
உள்ளிட்ட வெளிநாட்டுப்படங்கள் பெருமளவில் எடுக்கப்படும் அமீரகத்திலிருந்து இன்றைய தேதிக்கு
மொத்தமாக 20 படங்கள் கூட வெளிவரவில்லை. முதல் படம் 'Al-Hilm' வெளியான ஆண்டு 2005. ஆனால் 2004 ஆம் ஆண்டிலிருந்து
Dubai Internation Film Festival என்ற பெயரில் சவதேசத் திரைப்படவிழா
நடத்தி வருகிறது அமீரகம். அதன் தாக்கத்தால் ஆண்டிற்கு இரண்டு மூன்று நேரடிப் படங்கள் இப்போது தொடர்ந்து
வெளிவந்துகொண்டிருப்பதாகத் தெரிகிறது.
அமீரகத்திற்கு 'City of Life' என்று இன்னொரு பெயரும் உண்டு. 'சென்னைக்குச் சென்றால் பிழைத்துக்கொள்ளலாம்' என்பது போய் 'எப்படியாவது துபாய் போய்விட்டால் போதும்,
பிழைத்துக்கொள்ளமால்'
என்று சொல்லவைத்த நாடு.
இதே பெயரில் முழுக்க துபாயில் எடுக்கப்பட்ட அமீரகத் தயாரிப்பான
இந்தப் படம், வெவ்வேறு கலாச்சாரப் பின்னணியில்
உள்ள மூன்று தனிநபர் கதைகளைச் சொல்கிறது.
Faisal
ஒரு அரபி. பணக்கார வியாபாரி ஒருவரின் மகன். ஃபைசலது தந்தைக்கு மகன் பொறுப்பில்லாமல் குடித்துக்கொண்டு, கூத்தடித்துக்கொண்டும் திரிவது சுத்தமாகப் பிடிக்கவில்லை. தனது வாரிசாக அவனை உருவாக்க நினைக்கிறார். ஆனால் ஃபைசலுக்கோ துபாயின் கேளிக்கை பக்கத்தின் மீது தான்
மோகம் அதிகமே தவிர, தந்தையின்
பிசினஸில் அல்ல. அவனது உயிர் நண்பன் Khalfan. வசதியற்றவன். சண்டைக்காரன். ஃபைசலுக்காக
எதையும் செய்யத் துணிந்தவன்.
Natalia
ஒரு ரோமானிய விமானப்பணிப்பெண்.
துபாய் ஏர்லைன்ஸ் ஒன்றில் பணியில் இருக்கிறாள். ஒரு சந்தர்பத்தில் அறிமுகமாகும் பணக்கார, ஒரு பெண் குழந்தைக்குத் தந்தையான விளம்பர ஏஜெண்ட் Guy Berger என்பவனோடு பழக்கம் ஏற்படுகிறது. நடாலியாவின் அவளது தோழி
+ ரூம்மேட் Olga. நடாலியா காதல், குடும்பம், குழந்தை போன்றவற்றில் நம்பிக்கையுள்ளவள். ஓல்கா நேர் எதிர்.
சந்தர்ப்பவாதி. பணமே பிரதானம்.
Basu
ஒரு டாக்ஸி டிரைவர்.
இந்தியன். அசப்பில் பிரபல பாலிவுட் ஸ்டார் Peter Patel போலிருப்பவன். அதனாலேயே
ஹீரோ கனவு விடாமல் துரத்துகிறது. துபாய்க்கு வரும் இந்திய படங்களிலெல்லாம் போய் விடாது வாய்ப்பு கேட்பவன்.
கதையில் இந்த மூவருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
ஒரே ஒரு சம்பவம்,
இவர்கள் மூவரையும் மாற்றுகிறது. மாற்றம் என்று சொல்வதை விட, வாழ்க்கையின்
அடுத்த கட்டத்திற்கு இவர்களை
நகரவைக்கிறது. கனவு தேசமான துபாய் அவர்களை
அரவணைத்துச் செல்கிறது. படத்தின் ஆரம்பக்காட்சியில் ஒரு கிழவர்
வருவார். காட்சிகளினூடே ஆங்காங்கே தென்படுவார். இறுதியில் அவருக்கும் வாழ்வழிக்கும்
துபாய் நகரம். அருமையான குறியீடு :)
துபாய் நகரத்தை அருமையாகப்
பதிவு செய்திருக்கிறார்கள். மூன்று மொழிகள் பேசும் பிரதானக் கதாப்பாத்திரங்கள்,
ஒவ்வொருவரும் துபாய் நகரின் வெவ்வேறு பொருளாதார நிலையைச்
சேர்ந்தவர்கள் என்பதால் மூன்று விதமான துபாய் வாழ்க்கையைப் பார்க்கிறோம். கதையென்று பார்த்தால் அப்படியே ஒரு பாலிவுட் படம் (தமிழும் தான்) பார்த்த உணர்வு. நட்பு, காதல், செண்டிமெண்ட் எதற்கும் பஞ்சமில்லை.
குழந்தை யூகித்துவிடும் அடுத்து என்ன நடக்குமென்று. அவ்வளவு எளிமையான திரைக்கதை.
ஆனால் இந்தப் படம் கொஞ்சம் ஸ்பெஷல். காரணம்,
அமீரகத்திலிருந்து
வெளியாகி, பரவலான கவனிப்பையும் பெற்ற
முதல் முழுநீளத் திரைப்படம் என்று City of Life படத்தைச் சொல்கிறார்கள். படத்தை எழுதி, இயக்கி, தயாரித்திருப்பவர்
27 வயதான Ali F. Mostafa. 20 நிமிடக்குறும்படம் ஒன்றும், விளம்பரப்பட அனுபவங்களையும் வைத்தே இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். துபாய் வாழ்க்கையைக் கதைக்களமாக்கி பாசிடிவ் ஆன ஒரு படத்தைக்
கொடுத்திருக்கிறார். எதிர்மறை
கருத்துக்கள் என்று படத்தில் எதுவும் இருந்ததாய்த் தெரியவில்லை.
பார்த்தே தீர வேண்டிய
கட்டாயமெல்லாம் இல்லை. ஆனால்
நல்ல படம்.
**********************************************
'City
of Life' follows the story of 3 individuals from different cultures, speaking
different languages and from different lifestyles in Dubai.
Faisal,
son of a rich Emirati man is Dubai current generation youth fond of fast cars
and booze. His friend a rather poorer Emirati is a loud mouth and street
fighter. Faisal's father just like any, want his son to fear God, get into
business and lead a healthy and meaningful life.
Natalia
is a Romanian Airhostess who strongly believes in love, relationship and
marriage. She meets and begins a relationship with a middle-aged, rich,
divorcee with a kid advetisement agent Guy Berger. Natalia's roommate is Olga
is exactly the opposite - an money minded opportunist.
Basu
is a taxi driver from India. He resembles a popular Bollywood star and has
dreams of becoming a star himself one day.
Faisal,
Natalia and Basu stories are not interlinked. They barely cross each other but
their lives are changed (transitioned to be precise) because of a common
incident. A neat, simple, filled with emotions movie that is very special
because of the Country where it is from. Emirates is known for its multi
national population and this movie gives an insight into what this city is all
about.
The
birth of United Arab Emirates (U.A.E) was on 1971 and the First Emirati film,
'Al-Hilm' released only on 2005. 'City of Life' is United Arab Emirates' first
major production (there have only been three other full-length features) and
the first with government funding.
Dir. Ali F. Mostafa |
Directed
& Produced by the 27 year old, Ali F. Mostafa the movie had its premiere in
the Dubai International Film Festival, 2009.
Not
a must watch but an important film, for a Country.
Download
Link - https://www.youtube.com/watch?v=D_hM6dqzxPc
Hit
Like & Share. Recommend this page to your friends. Happy movie watching :)
0 comments
மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...