#100நாடுகள்100சினிமா #33.ECUADOR - CRONICAS (2004)

10:23:00 PM

Sebastian Cordero | Ecuador | 2004 | 108 min.


(*** English write-up & Download Link given below ***)

மியாமியில் உள்ள நகரின் பிரபல செய்திச்சேனல் ஒன்றின் ஸ்டார் ரிப்போர்ட்டர் Manolo Bonilla. களத்தில் இறங்கி வேலைசெய்து செய்திகளைச் சுடச்சுடத் தரும் கெட்டிக்காரன். அவனுக்கு உறுதுணையாக இருப்பது இருவர் - சேனல் ப்ரோடியூசரின் மனைவி Marisa, ஒளிப்பதிவாளர் Ivan. இம்மூவரும் Ecuador கிராமம் ஒன்றில் நடைபெற்றுவரும் தொடர்கொலைகள் பற்றிய செய்திகளைச் சேகரிப்பதற்காக வருகிறார்கள். வந்த இடத்தில் ஒரு கார் விபத்தில் சிறுவன் ஒருவன் இறந்துவிட, அந்தக் காரை ஓட்டி வந்த பைபிள் விற்பனையாளரான Vinicio Cepeda என்பவரை அங்கிருக்கும் கும்பல் அடித்துத் துவைப்பதைப் பார்க்கிறார்கள். அந்தக் கும்பலிடமிருந்து அவரைக் காப்பாற்றுகிறான் மனோலோ. அதைக் கேமாராமேன் இவான் திறம்பட ஒளிப்பதிவு செய்து சேனலுக்குக் கொடுக்க, மனோலோ எக்குவடோரிலும் பிரபலமாகிறான். ஜெயிலில் இருக்கும் வினிசிகோ, அங்கு வரும் மனலோவைச் சந்தித்து தான் நிரபராதி என்றும் தன்னைப் பற்றிய செய்தியை அவரது மியாமி சேனலில் சொன்னால், 'The Monstor of Babahoyo' என்றழைக்கப்படும் சீரியல் கில்லர் பற்றி தன்னிடமிருக்கும் தகவல்களைச் சொல்வதாகவும் சொல்கிறான். இதுவரை ஒரு சிறு தடயம் கூட கிடைக்காத ஒரு கேஸ் பற்றி வினிசிகோவிற்குத் தெரிவது எப்படி? 'The Monstor of Babahoyo' சிக்கினானா இல்லையா? தொலைக்காட்சி ரிப்போர்ட்டரான மனோலோ செய்தது என்ன?

படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடத்தில், வினிசிகோ ஸ்டார்ட் செய்யும் காருக்குள் ஒரு சிறுவன் வந்து விழுந்து இறப்பதும், அந்த சிறுவனது தந்தையின் தலைமையில் முரட்டுக்கும்பல் ஒன்று அவனை அங்கேயே அடித்துத் துவைத்தும் காட்சி வருகிறது. மிக மிக அருமையாக எடுக்கப்பட்டிருக்கும் அந்தக் கலவரக்காட்சி படத்தின் ஹைலைட். அந்த ஊரைப்பற்றியும், தொடர்கொலைகளால் பீதியிலும் கோபத்திலுமிருக்கும் மக்களது மனநிலை பற்றியும், போலீஸாரது கையறு நிலை பற்றியும், பத்திரிக்கையாளர்கள் சம்பவங்களை வெறும் செய்திகளாக மட்டுமே அணுகும் விதம் பற்றியும் - அனைத்தையும் அந்த ஒரே காட்சியில் சொல்லிவிட்டு படத்தைத் தொடங்குகிறார்கள். எந்த மாதிரியானதொரு உலகத்தில் நடக்கும் கதையிது எனபதற்கு அந்த ஒரு காட்சி ஒரு சோறு பதம்.    

If it's on TV, it must be the truth - படத்தின் டேக்-லைன். தொலைக்காட்சியில் எப்படியாவது தன்னைப் பற்றிச் சொல்லிவிட்டால், தவறுதலாக நடந்த விபத்தின் பின்விளைவுகளிலிருந்து தப்பித்து குடும்பத்தாருடன் இணையலாம் என்று நினைக்கிறான் வின்சியோ. ஊரையே கதிகலங்க வைத்திருக்கும் கொலைகாரனைப் பற்றிய செய்தித் தொகுப்பை வழங்கினால் தனது கேரியரிலேயே மிகப்பெரிய ஏற்றத்தக்கொடுக்கும் என்று நினைக்கிறான் மனோலோ. தொலைக்காட்சியில் சொல்வதையெல்லாம் மக்கள் நம்புகிறார்கள். ஆனால் சேனல்களோ உண்மையை விட பரபரப்பான சென்சேஷனல் செய்திக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. வினிசியோ தாக்கப்படும் அதே காட்சி - கச்சிதமாக எடிட் செய்யப்பட்டு, ஸ்லோ மோஷனில், கேப்ஷன்களுடன் செய்தியாக தொலைக்காட்சியில் வரும். ஒரு நொடியில் நடந்து முடிந்து விடும் ஒரு கலவரத்திற்கும் அதையே செய்தியாக ஒரு சேனலில் பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசத்தையும், தாக்கத்தையும் மிகச் தெளிவாகக் காட்சியப்படுத்தியிருக்கிறார்கள். இந்தப் படம் வெளியான ஆண்டு 2004. அப்போதிருந்த அதே உக்தியைத் தான் இன்னமும் வெற்றிகரமாகப் பயன்படுத்தி மக்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன சேனல்கள்.

எந்தச் செய்தியை, எந்த நேரத்தில் வெளியிட்டால் கல்லா கட்டலாம் என்று சேனலுக்குத் தெரிந்திருக்கிறது. ஒரு செய்தியை உருவாக்கி அதையே பரபரபாக்கும் வித்தை மனோலோவிற்கு தெரிந்திருக்கிறது. தன்னைக்காப்பாற்ற இவனை விட்டால் ஆள் இல்லை என்பது வினிசியோவிற்குத் தெரிந்திருக்கிறது. இவர்களை இணைக்கும் புதிர் கேள்வி - யார் அந்த கொலையாளி? தெரியாமல் நடந்த விபத்திற்காக சிறையில் இருக்கும், ஊரே நல்லவன் என்று சொல்லும், மனைவி மகன் மெச்சும் வினிசியோ உண்மையில் நல்லவனா கெட்டவனா என்ற சஸ்பன்ஸை இறுதிக்காட்சி வரை தக்கவைத்திருப்பது திரைக்கதையின் பலம்.

ரிப்போர்டர் மனோலோவாக John Leguizamo. இவரைப் பல ஹாலிவுட் படங்களில் அட்டகாசமான துணைக்கதாப்பாத்திரங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம். Ice Age படங்களில் வரும் Sid the Sloth கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுப்பவர் இவரே. ஸ்டார் ரிப்போர்ட்டராக பட்டையைக்கிளப்பியிருக்கிறார். அப்பாவி வினிசியோவாக Damian Alcazar என்பவர் நடித்திருக்கிறார்.

லத்தீன் அமெரிக்கப்படங்களுக்கே உரிய வெயிலும், அழுக்கும், வறுமையும், வன்முறையும் படத்தில் பெரும்பங்காற்றியிருக்கிறது. யார் வேண்டுமானாலும் சென்று வரும் சத்திரம் போல இருக்கிறது ஜெயில். பேச்சிலர் அறை போன்ற செட்டப்பில் இருக்கும் ஜெயிலையும், தண்ணீர் குட்டைகளின் மேல் பாலம் அமைத்துக் கட்டப்பட்டிருக்கும் வீடுகளையும், நெருக்கமான வீதிகளையும் ஓட்டமும் நடையுமாக சிறப்பாகக் காட்சியப்படுத்தியுள்ளது ஒளிப்பதிவு. படத்தை எழுதி இயக்கியிருப்பவர் Sebastian Cordero. படத்தை தயாரித்தவர்களுள் பிரபல மெக்ஸிகன் இயக்குனர்களான Guillermo del Toro, Alfonso Cuaron ஆகியோரும் அடங்குவர்.  

நம்மை புரட்டிப்போடும் அசத்தல் த்ரில்லர் இல்லையென்றாலும், அவசியம் பார்க்க வேண்டிய நல்ல படம்.          

பிடித்திருந்தால் லைக் & ஷேர் செய்யுங்கள். நண்பர்களுக்கும் இந்தப் பக்கத்தைப் பரிந்துரைத்து மகிழ்ந்திருங்கள் :)

**********************************************

Miami based TV Reporter Manolo bonilla is in an Ecuador vilalge covering news about an infamous serial killer who preys on young children. While filming one of the victims's funeral Manolo and his crew, exceutive producer Marisa and cameraman Ivan witness an accident in which a young boy is instantly killed. The angry mob drags the driver, a local salesman Vinicio Cepeda and beat him severly only to be saved by Manolo. This is one of the key scenes of the movie where know about the People's, Media's and the Police's state of mind. Vinicio is now in jail and when Manolo comes there for an interview, Vinicio confronts him and pleads to do an exclusive with his story. He strongly believes Manolo's program will get him out of jail. Inturn he promises to share all the information he knows about the serial killer - 'The Monstor of Babahoyo'. He even gives him a clue which makes Manolo belive that he is saying the truth. What happens next is the rest of the story.

John Leguizamo as Manolo is super convincing and the Ice Age's Sid the Sloth voice actor does it with ease. Damian Alcazar as Vinicio is equally awesome. the mystery behind him is excellently built and maintained till the end of the movie.

Dir. Sebastian Cordero
Directed by Sebastian Cordero, the movie is a joint production of Ecuador and Mexico where Guillermo del Toro, Alfonso Cuaron are one of the producers.

Definitely a worthy thriller 

Other Recoomended movies from Ecuador

1)   Ratas, ratones, rateros (1999)
2)   How Much Further (2006)




Hit Like & Share. Recommend this page to your friends. Happy movie watching :)

You Might Also Like

0 comments

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...