#100நாடுகள்100சினிமா #41. INDIA - CHITTAGONG (2012)

12:00:00 PM

Bedabrata Pain | India | 2012 | 105 min.

(*** English write-up & Download link given below ***)


ஆங்கிலேயருக்கும் இந்தியாவிற்குமான தொடர்பு 1498 ஆம் ஆண்டு வாஸ்கோடகாமாவின் இந்திய வருகையில் ஆரம்பித்து, 1600 ஆம் ஆண்டு இந்தியாவில் வாணிபம் செய்ய கிழக்கிந்திய கம்பெனிக்கு அனுமதி கொடுக்கப்பட்டதிலிருந்து தொடங்கியது. அதன் பின் கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் ஆங்கிலேயருக்கு நாம் அடிமையாக இருந்துள்ளோம். ஆங்கிலேயர்கள் முழுமையாக இந்தியாவை அடிமைப்படுத்தி நம்மை ஆளத் தொடங்கிய காலகட்டங்களில் எத்தனையோ முறை சுதந்திரத்திற்கான போராட்டங்கள் இந்தியாவின் பல பகுதிகளில் வெடித்துள்ளது. இந்தப் போராட்டங்களுக்கெல்லாம் வித்தாகச் சொல்லப்படுவது 1806 ஆம் ஆண்டு வேலூர் கோட்டையில் நடந்தப் புரட்சி (http://goo.gl/lsxvRK). அதன் பிறகு 1875 இல் மீரட் நகரத்தில் தொடங்கிய சிப்பாய்க் கலகம் மிக முக்கியமான சம்பவம். இதை முதல் இந்திய சுதந்திரப் போர் என்றே அழைக்கின்றனர் வரலாற்று ஆசிரியர்கள். அன்று தொடங்கிய போர் / போராட்டம் 1947 வரை தொடர்ந்து நடைபெற்றுள்ளது. இந்த நெடிய போராட்ட வரலாற்றில் மறக்கப்பட்ட எத்தனையோ சுதந்திரப் போராட்ட வீரர்களில் சிலர் சூரியா சென்னும் அவரது புரட்சிக்குழுவினரும்.

(இந்திய சுதந்திரப் போராட்டக் கால வரிசை - http://goo.gl/282MYJ)

சிட்டகாங்இப்போது வங்காளதேசத்தில் இருக்கும் துறைமுக நகரம். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்நகரத்தில் சூரியா சென் என்ற பள்ளிக்கூட வாத்தியார் நடத்திய ஆயுதப்புரட்சி, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மிக முக்கியமான ஒன்று.

இயக்குனர் Bedabrata Pain தயாரிப்பு, இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியாகி சிறந்த முதல் பட இயக்குனருக்கான தேசிய விருதை வென்ற இந்தப் படம், சூரியா சென்னைப் பற்றியும், 18 ஏப்ரல் 1930 அன்று அவரது தலைமையிலான புரட்சிக்குழு நடத்திய தாக்குதலைப் பற்றியும் பேசும் இந்தப் படம் மிக முக்கியமான பதிவு.

படம் சொல்லும் கதைக்குப் போகும் முன்மாஸ்டர்டாஎன்று அன்போடு அழைக்கப்பட்ட சூரியா சென் பற்றிக் க்ஒஞ்சம் தெரிந்து கொள்வோம்.

Masterda Surya Sen
22 மார்ச் 1894-இல் சிட்டகாங் பகுதியில் உள்ள நவபரா கிராமத்தில் பிறந்தவர். இவரது தந்தை இரமணிரஞ்சன் சென்னும் பள்ளிக்கூட வாத்தியார் தான். பெஹரம்பூரில் (முர்சிதாபாத் மாவட்டம்) 1916-இல் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே இந்திய விடுதலை இயக்கத்தின் பால் ஈர்க்கப்பட்ட சூரியா சென், அனுசீலன் சமித்தி (Anushilan Samiti) என்றழைக்கப்பட்ட வங்காள புரட்சி இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். கல்லூரி படிப்பு முடிந்த பின்பு சிட்டகாங்கில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்தார். அனுசீலன் சமித்தியின் ஓர் அங்கமான ஜுகந்தர் (Jugantar) கொள்கைகளை சிட்டகாங்கில் பெருமளவில் பரப்பி சுதந்திரப்போராட்டத்தைத் தூண்டியுள்ளார்

அகிம்சை வழியில் நம்பிக்கையில்லாமல் ஆயுதப்போராட்டக்குழுவாக இயங்கி வந்த 'மாஸ்டர்டா' சூரியா சென் தலைமையிலான படை தங்களை ‘ஹிந்துஸ்தான் சுதந்திரப்படை, சிட்டகாங் கிளை’ என்று அழைத்துக்கொண்டார்கள். 65 பேர் கொண்ட இந்தப் படையில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள். 18 ஏப்ரல் 1930 அன்று சிட்டகாங் நகரில் தகவல் தொடர்புகளைத் துண்டித்து, போலீஸ் ஆயுதக்கிடங்கில் திடீர் தாக்குதல் நடத்தி, ஒரு நாள் முழுக்க சிட்டகாங் நகரை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்து இந்திய தேசியக் கொடியை ஏற்றியிருக்கிறார்கள். சுதந்திர வேட்கை பற்றி எரிந்து கொண்டிருந்த அந்நாளில் இது மிகப்பெரிய சாதனையும், ஆங்கிலேயருக்கு மிகப்பெரிய அடியுமாகும்.

தங்களது தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத ஆங்கிலேய அரசு, பெரும் படை கொண்டும் இயந்திரத்துப்பாக்கிகளைக் கொண்டும் தாக்குதல்கள் நடத்தி சிட்டகாங்கை மீட்டது. பலர் கொல்லப்பட்டார்கள், சிறைபிடிக்கப்பட்டவர்கள் அந்தமான் சிறைக்கு அனுப்பப்பாட்டார்கள்.

நேத்ரா சென் என்பவனால் பிப்ரவரி 16, 1933 அன்று காட்டிக்கொடுக்கப்பட்ட சூரியா சென்னின் நகங்களைப் பிடுங்கி, சுத்தியால் பற்களை நொறுக்கி, கால்முட்டிகளை உடைத்து, மயக்கநிலையில் தூக்கு மேடைக்கு அழைத்து வந்து கொன்று பழி தீர்த்துக்கொண்ட ஆங்கிலேயர்கள், அவரது உடலை இரும்புப்பெட்டிக்குள் வைத்து வங்ககடலில் வீசியிருக்கிறார்கள்.

Subodh Roy aka Jhunku
சூரியா சென்னின் படையிலேயே இளையவரான Jhunku என்றழைக்கப்பட்ட Subodh Roy என்பவரது பார்வையில் சொல்லப்படுகிறது இந்தப் படம். ஆங்கிலேயருக்கு வேண்டப்பட்ட பணக்கார குடும்பத்தில் பிறந்திருந்தாலும் மாஸ்டர்டா சூரியா சென்னின் படையில் சேர்ந்து ஆயுதமேந்திப்போர் செய்து, சிறைசென்று, சித்திரவதைகளை அனுபவித்து, வெளியேறி சிட்டகாங் ஆயுதக்கிடங்கு தாக்குதல் நடத்தப்பட்டு 10 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் அதே சிட்டகாங்கில் இளைஞன் Jhunku ஊர் மக்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டிப் போராடுவதாக முடிகிறது படம். 1945 ஆம் ஆண்டு நடந்த Tebagha Uprising என்றழைக்கப்பட்ட இந்தப் போராட்டம் தான் வெள்ளையர்கள் வெளியேரக் காரணமாக இருந்த ஆரம்பப்புள்ளி.

படத்தின் இறுதியில் 90 வயது Subodh Roy பேசும் காணொளி ஒன்று இடம்பெற்றிருக்கிறது.  

சூரியா சென் ஆக Manoj Bajpayee, அவரது தளபதி நிர்மல் சென் ஆக Nawazuddin Siddiqui, நிர்மல் சென்னின் காதலியும் ‘Dogs and Indians not allowed’ என்று எழுதப்பட்டிருந்த ஐரோப்பிய கிளப்பில் தாக்குதல் நடத்தி சைனைடு விழுங்கி வீரமரணமடைந்த Pritilata Waddedar ஆக Vega (‘சரோஜா’, ‘பசங்க’), சூரியா சென் உடனிருருந்து கடைசிவரை போராடியவரும் ஆயுதத்தாக்குதல்களுக்கு தலைமை வகித்தவரும் பின்னாட்களில் கல்கத்தா மேயருமான Lokenath Bal ஆக Rajkummar Rao (Shahid, Queen, Kai Po Che!) ஆகியோர் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு உயிரூட்டியுள்ளார்கள். இவர்களையெல்லாம் விட படத்தைத் தாங்கி நிற்பது சிட்டகாங் புரட்சியியை நேரில் கண்ட சாட்சியாக, சூரியாசென்னின் கதையை நமக்கு சொல்லும் சிறுவன் Junku ஆக வரும் Delzad Hiwale, மிகச் சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளார்.

படத்திற்கு இசை Shankar Ehsaan Loy. ஒலியமைப்பு Resul Pookutty.

2010 ஆம் ஆண்டு இயக்குனர் Ashutosh Gowariker இயக்கத்தில் அபிஷேக் பச்சன் நடிப்பில் வெளியான Khelein Hum Jee Jaan Sey என்ற படமும் சிட்டகாங் புரட்சி பிண்ணனியில் எடுக்கப்பட்ட படமே. சூர்யா சென் பார்வையில் அவரது கதையைச் சொல்கிறது படம். இரண்டுமே தரமான படங்கள், பார்த்தே தீர வேண்டிய படங்கள் என்றாலும் வணிகரீதியாக தோல்விப்படங்கள்.

எழுபதாவது சுதந்திர தினத்தைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். #100நாடுகள்100சினிமா தொடரில் இந்தியப் படம் எதையும் எழுத வேண்டாம் என்று தான் நினைத்திருந்தேன். எதை எழுதுவது என்ற குழப்பம் தான் முக்கியக்காரணம். சுதந்திர தினத்தன்று மறக்கப்பட்ட எத்தனையோ வீரர்களில் சிலரை இந்தத் தொடர்மூலம் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தலாம் என்று தோன்றியதால் – இதோ எழுதிவிட்டேன்.

பிடித்திருந்தால் லைக் & ஷேர் செய்யுங்கள். நண்பர்களுக்கும் இந்தப் பக்கத்தைப் பரிந்துரைத்து மகிழ்ந்திருங்கள் :)

*****************************

Chittagong tells us the story of the brave 56 warriors who on 18 April 1930, raided the Police Armoury and Auxiliary Forces armoury, attacked the European Club Headquarters under the name Hindustan Republican Army, Chittagong Branch and hoisted our National Flag and had Chittagong under their control for one full day. They failed to locate ammunition but did succeed in cutting telephone and telegraph wires and disrupting train movements.

This is the story of ‘Masterda’ Surya Sen who influenced young minds and laid the foundation for Indian Independence in the Bengal Province of British India (now in Bangladesh) narrated by Jhunku aka Subodh Roy who was the youngest to join masterda’s army and also the youngest to be sent to Andaman Prison. The story begins with his effort to escape police while narrating his participation in the Chittagong Armoury raid and ends with the beginning of Tebagha Uprising.

Dir. Bedabrata Pain
Directed and Produced by Bedabrata Pain, the movie won 60th National Film Award for the Best Debut Film of a Director. With great actors like Manoj Bajpayee, Nawazuddin Siddiqui, Rajkummar Rao, Vega Tamotia, Music by Shankar-Ehsaan-Loy and sound by Resul Pookutty Chittagong (2012) is a materpiece and a must-watch.

(Hum Jee Jaan Sey (2010) directed by Ashutosh Gowariker staaring Abhishek Bachchan and Deepika Padukone is also based on the story of Surya Sen and Chittagong Uprising)




Hit Like & Share. Recommend this page to your friends. Happy movie watching :)

You Might Also Like

1 comments

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...