#100நாடுகள்100சினிமா #34.ARGENTINA - LION’S DEN (Leonera / 2008)
10:28:00 PM
Pablo
Trapero | Argentina | 2008 | 113 min.
(***
English write-up & Download Link given below ***)
ரத்த சகதியில் கண்விழிக்கிறாள் ஜூலியா.
கல்லூரி மாணவி. அருகில்
உயிருக்குப்
போராடிக்கொண்டு ஒருவனும் பிணமாக அவளது காதலனும் கிடக்கிறார்கள். போலீஸ்
ஜூலியாவைக் கைது செய்து, விசாராணை முடியும் வரை சிறையில்
அடைக்கிறது. சிறையில்
தான் 4 மாதம் கர்ப்பமாக இருப்பது ஜூலியாவிற்குத் தெரிகிறது. கர்பிணிகளுக்கான
பிரத்யேக
சிறைக்கு மாற்றப்படுகிறாள். சிறைவாசம் பழகி, சிறைவாசிகளுடன் நட்பாகி, அங்கேயே ஒரு மகனைப் பெற்றெடுத்து, அவன்
வளரும் வேகத்திற்கு கூட வளராத கேஸால் ஜூலியா சந்திக்கும் பிரச்சனைகள், மகனுக்காக எடுக்கும் முடிவுகள் தான் இந்தப் படம்.
சிறைக்கம்பிகளுக்குப்
பின்னிருப்பவர்களது கதைகளை, வலிகளை, கனவுகளை, அவர்களது பிரச்சனைகளை,
சிறையிலும் விடாது துரத்தும் அரசியலையும், அதிகாரத்தையும்,
என்றாவது ஒரு நாள் விடுதலையாவோம் என்று நம்பிக்கையை மட்டும்
சுமந்து கொண்டு கடக்கும் நாட்களையும் எத்தனையோ படங்களில் பார்த்திருப்போம். ஆனால் அதுவே ஒரு பெண்கள் சிறைச்சாலை என்று வரும் போது, கைதி ஒரு கர்ப்பிணியாக இருக்கும் போது, சிறைச்சாலையில் நடக்கும் கதையே என்றாலும், புதிய களமாக தனித்து நிற்கிறது.
குற்றவாளி என்றாலும்
(இன்னும் நிரூபிக்கப்படாத)
ஜூலியா மீதும், அவளது மகன் மீதும் நம்மையும் அறியாமல் வித பிணைப்பு ஏற்படுகிறது. அவளுக்காக நாம் வருந்தத்தொடங்குகிறோம். வெளியுலகம் காணாமலே வேகமாக வளர்ந்து வரும் அவனது மகனைக் காணும்
போதெல்லாம் ஜூலியாவுடன் சேர்ந்து நாமும் பதறுகிறோம்.
சென்ற ஆண்டு வெளியான மிகச் சிறந்த படங்களில் ஒன்றான Room (2015) படத்தைவிட அதிக தாக்கத்தைக் கொடுக்கக்கூடிய
படமிது. அன்று அந்த வீட்டில் என்ன தான் நடந்தது? என்ற கேள்விக்கு
படத்தில் பதிலே இல்லை. படத்தில் எனக்குப் பிடித்த விஷயமும் அதுதான்.
சிறையிலடைக்கப்படும் ஜூலியா, அங்கு அவள் பெற்றெடுக்கும்
மகன், அவர்களது சிறைவாசம், முடிவு - இதைத்தான் காட்ட
நினைத்திருக்கிறார் இயக்குனர். கதைக்கு (திரைக்கதைக்கு) தேவையில்லாத எதையும் விளக்கிக்கொண்டிருக்காமல்
தான் சொல்ல வந்த விஷயத்தை தெளிவாக சொல்லி அருமையான படத்தைக்
கொடுத்திருக்கிறார்.
டி.வி சீரீஸ் பார்ப்பவர்களுக்கு பெண்கள் சிறை என்றாலே நியாபகத்திற்கு
வருவது Netflix இன் Orange is the New Black சீரீஸ் தான். இந்தியப் படங்களில்
'பெண்கள் சிறையை'
இதற்கு முன் ஆசிக் அபு வின்
22 Female Kottayam (2012) படத்தில் பார்த்திருக்கிறோம். சிறையில்
வளரும் குழந்தை கான்செப்ட் பார்த்திபன் நடித்து
K. சுபாஷ் இயக்கத்தில் வெளிவந்த 'அபிமன்யு (1997)'
திரைப்படத்தின் ஆரம்பக்காட்சிகளில் வரும். அருமையான
போலீஸ் படம் அது. கதாப்பாத்திர அறிமுகமாக சிறிது நேரம்
மட்டுமே சிறைக்காட்சிகள் வரும். கொரிய Miracle in Cell No. 7 (2013) திரைப்படத்தின்
பெரும்பாலான காட்சிகள் சிறைச்சாலையினுள் நடக்கும். சிறையில் இருக்கும் தந்தையுடன் வளரும் சிறு பெண்ணின் கதை.
நிஜ சிறைச்சாலைகளில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். நிஜ கைதிகளை அனுமதி வாங்கி நடிக்கவைத்திருக்கிறார்கள் (உபேந்திரா
இயக்கி ஷிவ்ராஜ்குமார் நடித்த சூப்பர் ஹிட் படமான “ஓம்” பக்கா கேங்ஸ்டர் கதை. படத்தின்
தயாரிப்பாளரும் சூப்பர் ஸ்டாருமான ராஜ்குமார்,
தனது செல்வாக்கைப் பயன்படுத்தி நிஜ ரவுடிகளை நடிக்கவைத்து பரபரப்பைக்கிளப்பினார்)
படத்தை இயக்கியிருப்பவர் Pablo Trapero. இவரின் ஒவ்வொரு படமும் ஏதாவது ஒரு வகையில்
சமூக அவலங்களையும், மற்றவர்
பேச அஞ்சும் கருப்புப் பக்கங்களையுமே தீம் ஆகக் கொண்டிருக்கும், சமீபத்திய படமான
The Clan (2015) உட்பட. பல சர்வதேச விருதுகளை அள்ளிக்குவித்திருக்கும் இவர் இதுவரை 10 படங்களை இயக்கியிருக்கிறார்.
அதில் The Lion's Den
(2008), Carancho (2010), White Elephant (2012) என 3 படங்களில் தனது மனைவியையே நடிக்கவைத்திருக்கிறார். மூன்றுமே அருமையான படங்கள்.
படத்தின் கதாநாயகி Martina Gusmán. இயக்குனர் Pablo Trapero வின் மனைவி. படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர். படம் முழுக்க இவர்
மட்டும் தான். படத்தை மொத்தமாக தனது தோள்களில்
சுமந்திருக்கிறார்.
நடிப்பில் மட்டுமல்ல, உடலளவிலும் படத்தின் தொடக்கத்திலிருந்து
கதை நகரும் காலம் பொறுத்து மாற்றத்தைக் காட்டியிருக்கிறார். ஆரம்பக்காட்சிகளில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு தற்கொலைக்கு முயலும் காட்சிகளிலும், மகன் பிறந்த பிறகு அவனுக்காகவே வாழத் தொடங்குவதும், அவன் வளரவளர அவன் தன்னைவிட்டு ஒரு நாள் பிரிக்கப்படுவான்
என்ற நினைப்பும், அது நடக்காமலிருப்பதற்காக
எடுக்கும் முயற்சிகளுமாக பேய்த்தனமான ஈடுபாடு + நடிப்பு. பிரமாதம். இவரைத்தவிர
வேறு எந்த கதாப்பாத்திரமும் நியாபகத்தில் இல்லை. படத்தில் கண்டமேனிக்கு
பெண்கள் (கர்பிணிகள் உட்பட) பிறந்தமேனிக்குத்
திரிவதால் படம் பார்க்கும் பொழுது கவனம் தேவை.
அவசியம் பார்த்தே
தீர வேண்டிய அருமையான
படம்.
Don't miss it.
Wild
Tales (2014) படத்தைத்தான் முதலில் தேர்ந்தெடுத்து வைத்திருந்தேன். கிட்டத்தட்ட உலகசினிமா பிரியர்கள் அனைவரும் பார்த்துவிட்ட
அந்தப் படத்தை அறிமுகம் செய்வதால் என்ன பயன்?
ஆகவே அதிகம் வெளியே தெரியாத,
ஆனால் அவசியம் பார்க்க வேண்டிய இந்தப் படத்தை எழுதிவிட்டேன். Wild Tales தந்த தாக்கத்தை வேறு எந்தப் படமும்
கொடுக்காதுதான். ஆனால் இந்தப் படம் வொர்த். பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.
இந்தப் படங்கள் தவிர The Secret in their Eyes (2009), Nine
Queens (2000), The Motorcycle Diaries (2004), Burnt Money (2000), El Aura
(2005) படங்களும் பார்த்தே தீர வேண்டிய படங்களே!
*********************************************
College student Julia wakes up in her
apartment where her former lovers Nahuel and Romiro are lying in a pool of
blood. The police arrive and Julia is sent to prison where its found that she
is 4 months pregnant. She is sent to a prison for 'mothers and pregnant
convicts' where she gives birth to a son Tomas. Each day her feelings for the
boy becomes stronger but eventually she realizes how difficult it could be to
raise a son in prison and the truth that one day he will be gone. The movie is
about how Julia struggles to raise her son in prison and what she does to be
with him.
Pablo Trapero & Martina Gusmán |
Martina Gusmán, the Director's wife and the
co-producer of the film plays Julia, the single mother in Prison. The
dedication that she has put for her role physically and mentally is just
mind-blowing. Whole film is around her and she has given her soul and body to
the Film. She played lead in 2 of her Husband's other films Carancho (2010) and White Elephant (2012) which are equally good and important
like The Lion's Den (2008)
Other Recommended movies from Argentina:
1) Wild Tales (2014)
2) The Secret in their Eyes (2009)
3) Nine Queens (2000)
4) The Motorcycle Diaries (2004)
5) Burnt Money (2000)
Trailer
- https://www.youtube.com/watch?v=BVxj1-a5jbQ
Blog
- http://babyanandan.blogspot.in/2016/05/100-100.html
Letterboxd
- https://letterboxd.com/pradeepsastra/list/100-countries-100-films-100-100/
Hit Like & Share. Recommend this page to
your friends. Happy movie watching :)
0 comments
மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...