#100நாடுகள்100சினிமா #40. BELGIUM - JCVD (2008)

9:53:00 AM

Mabrouk El Mechri | Belgium | 2008 | 96 min.


(*** English write-up & Download link given below ***)

Bloodsport (1988) என்றொரு படம். முன்பு அடிக்கடி ஸ்டார் மூவிஸில் போடுவார்கள். ப்ரூஸ் லீ-இன் Enter the Dragon படம் போன்ற ஒரு கதை. அந்தப் படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த அறிமுகமானார் Jean-Claude Van Damme. பெல்ஜிய நடிகர். 10 வயதில் கராத்தே கற்றுக்கொள்ளத் தொடங்கி 18 வயதில் பிளாக் பெல்ட் வாங்கியவர். கராத்தே மட்டுமல்லாமல் Muay Thai மற்றும் Taekwondo கலைகளிலும் தேர்ச்சி பெற்றவர். பாடிபில்டிங்கிற்காக Mr. Belgium பட்டம் பெற்றவர். கிக்பாக்ஸிங்கில் 19 போட்டிகளில் 18 வெற்றிகளை நாக்-அவுட் மூலம் பெற்ற சாம்பியன். ‘The Muscles from Brussels’ என்றழைக்கப்படும் ஹாலிவுட் ஆக்ஷன் ஸ்டாரான JCVD, தனது சொந்த நாடான பெல்ஜியம் மட்டுமல்லாமல், உலகம் முழுக்க (குறிப்பாக ஆசியா, ஐரோப்பா) ரசிகர்களைக் கொண்டவர். Kickboxer (1989), Double Impact (1991), Universal Soldier (1992), Hard Target (1993) என்று வரிசையாக ஹிட் படங்களைக் கொடுத்தவர். ஹாங்-காங் அதிரடிப்பட இயக்குனர்களான John Woo, Corey Yuen, Tsui Hark, Ringo Lam ஆகியோரை ஹாலிவுட்டிற்கு அழைத்து வந்தது இவரே. திரைக்கதை, தயாரிப்பு, இயக்கம் என்று நடிப்பு தாண்டி சினிமாவின் பிற துறைகளிலும் பணியாற்றியவர்.

இவ்வளவு பெருமைகள் இருந்தும் இன்று 'Van Damme' என்றாலே ஹாலிவுட் சினிமா ரசிகர்களைப் பொறுத்தவரை அவர் ஒரு B-grade ஆக்ஷன் ஹீரோ மட்டுமே. காரணம் அவர் அடுதடுத்து நடித்த படங்கள். அனைத்தும் லோ-பட்ஜெட். ரத்தம் தெறிக்க தெறிக்க உடல்கள் சிதற சிதற வெறும் ஸ்டண்ட்களை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட தரம்குறைந்த படங்கள். உலகம் முழுக்க ரசிகர்கள் இருந்தாலும், இவரது எந்தப் படமும் தியேட்டரில் வெளியாகாது. அப்படியே வெளியானாலும் லிமிடட் ரிலீஸ் தான். பெரும்பாலும் Direct-to-home என்று கேசட்களாக மட்டுமே வெளியாகும். நான் Bloodsport பார்த்தது சிறு வயதில். அதன் பின்னர் ஆங்கிலப் படங்கள் பார்க்கத் தொடங்கிய காலகட்டங்களில் மீண்டும் Bloodsport பார்த்து (அடுக்கி வைத்த செங்கற்கட்டிகளில் சரியாக கடைசி செங்கல்லை உடைக்கும் காட்சியையும், கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியையும் மறக்க முடியுமா!), அதே உந்துதலில் வரிசையாக கிடைக்கும் Van Damme படங்களையெல்லாம் தேடிப் பிடித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் எனக்கேஎன்னக்கன்றாவிடா இதுஎன்றாகிப்போனது. ஸ்டீரியோடைப்பாக வெறும் ரத்தமும் சத்தமுமாக சிறிதும் குவாலிட்டி இல்லாமல் வதவதவென்று குவிந்து கிடந்தன Van Damme படங்கள். 90களின் இறுதிகளில் தொடங்கிய சரிவு, John-Claude Van Damme என்று ஒருவர் இருப்பதே மறந்து போகுமளவிற்கு நிலைமை மோசமானது. வான்-டேம் மட்டுமல்ல ஆக்ஷன் பட உலகில் முடிசூடா மன்னர்களாக இருந்த Chuck Norris, Dolph Lundgren, Steven Seagal, Jet Li என பலரது நிலை இது தான். இப்போதிருக்கும் ஆட்களில் Tony Jaa, Scott Adkins, என்ற இரு அருமையான, அவரவர் நாடுகளில் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருந்த மார்ஷியல் ஆர்ட்ஸ் கலைஞர்களை வீணடித்துக்கொண்டிருக்கிறது ஹாலிவுட்.

வான் டேமைப் பொறுத்தவரை, சினிமா இப்படி என்றால் சொந்த வாழ்க்கையிலும் ஏகப்பட்ட சரிவுகளைச் சந்தித்திருக்கிறார். நான்கு முறை திருமணம் செய்து கொண்டார். போதை பழக்கத்திற்கு அடிமையாகி மீண்டு வந்திருக்கிறார். பை-போலார் டிஸ் ஆர்டர் பிரச்சனை வேறு இருந்திருக்கிறது. பத்திரிக்கையாளர்கள் முன் சகநடிகர்களுடன் கட்டி உருண்ட சம்பவங்களெல்லாம் நடந்திருக்கிறது.  

தொடர் சரிவைச் சந்தித்து வந்த நிலையில் வான்-டேமின் பரம விசிறியான ப்ரென்ச் இயக்குனர் Mabrouk El Mechri உடனான சந்திப்பு நடந்திருக்கிறது. ஏற்கனவே பெல்ஜியத் தயாரிப்பாளர் ஒருவர் தயார் செய்து வைத்திருந்த கதையில் மாற்றங்கள் செய்து வான்-டேமிடம் சொல்ல, இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையிலிருந்த வான்-டேமும்ஓக்கேசொல்ல, JCVD (2008) என்ற இந்தப் படத்தின் மூலம் நமக்கு Jean-Claude Van Damme என்ற அருமையான 'நடிகரை' அடையாளம் காணும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இந்தப் படத்தில் Jean-Claude Van Damme ஆகவே வருகிறார் JCVD. நிஜ வாழ்க்கையில் அவருக்கு இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் படத்திலும் உண்டு. அடுத்தடுத்து மொக்கையான படங்களில் நடித்துக்கொண்டிருப்பதால் திரைவாழ்க்கையே கிட்டத்தட்ட முடிவிற்கு வரும் நிலையில் இருக்கிறது. விவாகரத்து பெற்ற மனைவி தங்களது ஒரே மகளையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு சென்று விட, வக்கீலுக்குக் கொடுக்கக்கூட கையில் சள்ளிக்காசில்லாமல், தன்னை தொடர்ந்து ஏமாற்றி வரும் ஏஜெண்டிடம் சண்டை போட்டுவிட்டு சொந்த நாடான பெல்ஜியத்திற்கு வந்திருக்கிறார் JCVD. வந்த இடத்தில் இவரை அடையாளம் கண்டு போட்டோ எடுத்துக்கொள்கிறார்கள் வீடியோ ஸ்டோர் நடத்தும் இரு நண்பர்கள். அவர்களிடமிருந்து விடைபெற்று எதிரிலிருக்கும் வங்கிக்குள் (போஸ்ட் ஆபீஸ் என்கிறார்கள். ஆனால் அது வங்கி தான்) ஒன்றினுள் நுழைகிறார்.

வீடியோ ஸ்டோர் நண்பர்கள் அந்தப் பக்கம் வரும் போலீஸ்காரரிடம் வான்-டேம் வந்ததாகச் சொல்லி அவரது பெருமையைப் பேசிக்கொண்டிருக்கும் போதே வங்கிக்குள்ளிருந்து துப்பாக்கிச் சத்தம் கேட்கிறது. போலீஸ்காரர் பதுங்கியபடி அருகில் சென்று பார்க்க - ஜன்னல் வழியே முக்கத்தில் ரத்தக்காயங்களுடன் 'கிட்ட வராத... அந்தப் பக்கம் போ' என்று சொல்லும் வான்-டேமைப் பார்க்கிறார். “வங்கியைக் கொள்ளையடிக்கிறார் வான்-டேம்என்ற செய்தி ஊர் முழுக்கப்பரவ, அந்த ஏரியாவே களைகட்டத்தொடங்குகிறது.

வான்-டேம் அந்த வங்கிக்குள் சென்றது ஏன்? உள்ளே இருக்கும் ஹாஸ்டேஜ்கள் என்ன ஆனார்கள்? போலீஸார் என்ன செய்தார்கள்? - இவை தான் இந்தப் படம்.      

படத்தின் ஆரம்பமே அதிரடி தான். தயாரிப்புக்கம்பெனியின் லோகோவிலேயே தோன்றி தனது பிரபல Roudhouse Kick உடன் தோன்றுகிறார். ஆரம்பக்காட்சியே சிங்கிள் ஷாட்டில் ஒரு செம்மையான ஆக்ஷன் சீக்வென்ஸ் தான். Universal Soldier டைப்பில் சிதிலமடைந்த ஒரு ராணுவ முகாம் போன்ற செட்டப்பிலிருந்து ஒரு கைதியைக் காப்பாற்றி கூட்டி வருகிறார். கையில் கிடைக்கும் ஆயுதங்களையெல்லாம் எடுத்துத் தாக்கி, இருக்கும் கராத்தே வித்தைகள், கிக்குகள் அத்தனையையும் இறக்கி எதிரிகள் அனைவரையும் போட்டுத்தள்ளுகிறார். டிபிக்கல் JCVD. கிளைமாக்ஸிற்கு முன் ஆறரை நிமிடங்களுக்கு இன்னொரு சிங்கிள் ஷாட் காட்சி உண்டு. நாம் இதுவரை பார்த்திராத, ஏன் கேள்வியே பட்டிராத JCVD. கேமராவைப் பார்த்து தனது வாழ்க்கையைப் பற்றி, வெற்றி தோல்விகளைப் பற்றி, பிரச்சனைகளைப் பற்றி ரசிகர்களிடம் பேசுவதாக அமைக்கப்பட்டிருக்கும் அந்த சீன் - எக்ஸலண்ட். விமர்சகர்களை வாயடைக்கவைத்து 'இவருக்கு பிளாக் பெல்ட் தேவையில்லை ஆஸ்காரைக் கொடுங்கள்' என்று சொல்ல வைத்த காட்சி அது (Richard Corliss, Time magazine).   

இதுவும் லிமிடட் ரிலீஸ் தான். இப்படியொரு படம் வந்தது எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. வான்-டேம் என்ற ஒரு செம்ம ஆக்ஷன் ஹீரோ இருந்தார் என்பதையே 2013 ஆம் ஆண்டு YouTube இல் வெளியான Volvo Truck விளம்பரமான Epic Spilt பார்த்துத் தான் நினைத்துப்பார்த்திருப்பார்கள். The Expendables (2010) முதல் பாகத்திற்காக ஸ்டாலோன் முதலில் அணுகியது வான்-டேமைத் தான். ஆனால் அவரோ Universal Soldier படத்தின் அடுத்த பாகத்தை எடுக்கப்போகிறேன் என்று வந்த வாய்ப்பை உதறித்தள்ளிவிட்டார். இப்படி கிட்டத்தட்ட மறக்கப்பட்ட, என்னைப்போல பலரது சிறுவயது ஹீரோவின் அவசியம் பார்த்தே தீர வேண்டிய இந்தப் படத்தை நமது #100நாடுகள்100சினிமா தொடரில் சேர்த்துவிட்டேன். நிச்சயம் பெல்ஜியத்திலிருந்து வெளிவந்த சிறந்த படம் இது கிடையாது. ஆனால் வான்-டேமின் மிகச்சிறந்த படம் இதுவே. 'கபாலி' இல் ரஜினி என்ற நடிகரைப் பார்த்தேன் என்று சிலாகிப்பவர்கள் அவசியம் இந்தப் படத்தைப் பார்க்கவேண்டும். வான்-டெமிற்கு நடிக்கவும் வரும் என்று கனவிலும் நினைத்துப்பார்த்திருக்க மாட்டோம், இந்தப் படம் பார்க்கும் வரை. தன்னைத் தானே தரை ரேஞ்சிற்கு விமர்சித்துக்கொள்ளும் (கிட்டத்தட்ட வானத்தைப் பார்த்து துப்புவதைப் போலத்தான்) அந்த ஆறரை நிமிட சிங்கிள் ஷாட் - மாஸ்டர்பீஸ்.

டாரண்டினோ ஸ்டைலிம் தலைப்பு வைத்து பகுதியகாளாகப் பிரிக்கப்பட்ட நான்-லீனியர் திரைக்கதை உத்தி, அசத்தலான ஒளிப்பதிவு, படம் நெடுக பட்டையைக்கிளப்பும் வசனங்கள், வங்கிக்குள் நடக்கும் காட்சிகள், வெளியே வான்-டேமைச் சரணடைய வைக்க நடந்தேறும் களேபரங்கள் என்று பட்டையைக்கிளப்பும் பிளாக்-ஹுயூமர் காட்சிகள் என்று இந்தப் படத்தைப் அவசியம் பார்த்தே தீர பல காரணங்கள் உண்டு

பிடித்திருந்தால் லைக் & ஷேர் செய்யுங்கள். நண்பர்களுக்கும் இந்தப் பக்கத்தைப் பரிந்துரைத்து மகிழ்ந்திருங்கள் :)

************************************

Jean-Claude Van Damme (playing himself) is an aging action star going through a bitter divorce and custody battle for his only daughter. He is totally bankrupt with no money to pay his lawyers. His agent is an asshole and all his new roles are completely hopeless. In the middle of extreme pressure both in his career and personal life, Van Damme visits Brussels to clear his head. When he tries to reach a Bank, two local video store friends recognise him and take photos. As he enters the Bank a police offer passes by to who the friends brag about seeing Van Damme and show him the photos. Just then, a gun-shot is heard from the Bank and the Police officer quickly goes near only to witness Van Damme asking him to move away from the place and blocking the window with a cupboard. News spreads about Van Damme, the Country's Icon trying to rob a bank and the caos begins. What happens next is the story.

JCVD, a martial arts expert well known for his Karate, Muay Thai, Taekwondo and Kickboxing skills has proved that he is also a very good actor through this movie. The film is very near to his real life version with Van Damme facing several flops, decling career and almost forgotten-hero image.

Dir. Mabrouk El Mechri
Directed by a Van Damme fan, French Director Mabrouk El Mechri, the opening action sequence is a 5-minute single shot with JCVD kicking asses, shooting guns, handling enemy with fire-flame guns and granades which is a typical Van Damme style which we see in all his movies wheres as the Six miute long single take where he talks to us, the audience about his life, rise and fall is something which we could have never imagined from someone like JCVD. 

This is definitely not the BEST from Belgium, but the BEST from one of the best Martial Artists alive and my childhood action Hero - Jean-Claude Van Damme. 

Trailer - https://www.youtube.com/watch?v=4z_6UfkQ-c0
Download Link - http://extratorrent.date/torrent/5096232/JCVD+%282008%29+720p+BluRay+x264+700MB+%28Ganool%29-XpoZ.html

Blog - http://babyanandan.blogspot.in/2016/05/100-100.html
Letterboxd - https://letterboxd.com/pradeepsastra/list/100-countries-100-films-100-100/

Hit Like & Share. Recommend this page to your friends. Happy movie watching :)

You Might Also Like

0 comments

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...