#100நாடுகள்100சினிமா #44. KYRGYZSTAN - THE LIGHT THIEF (2010)

6:24:00 AM

Aktan Arym Kubat | Kyrgzstan | 2010 | 80 min.


(*** English write-up & Download Link given below ***)

கிர்கிஸ்தான் (Kyrgyzstan) - இப்படி ஒரு நாடு இருப்பதே இந்தப் படம் பார்த்த பின்பு தான் தெரியும். இந்தியாவின் தலைக்கு மேல் நாற்புரமும் மலைகளால் சூழப்பட்ட மிகச்சிறிய நாடு. செங்கிஸ்கான் வரலாறு / படம் பார்த்தவர்களுக்கு பட்டுப்பாதை (Silk Road) பற்றித் தெரிந்திருக்கும். கிழக்காசிய நாடுகளையும் ஐரோப்பாவையும் இணைத்த சரித்திரப்புகழ் வாய்ந்த வணிகப்பாதை. அந்தப் பாதையில் இருந்த நாடுகளில் கிர்கிஸ்தானும் ஒன்று. சோவியத் யூனியன் நாடுகளில் ஒன்றாக இருந்த காரணத்தால் கிரிஜிக் (Kyrgyz) இனத்தவர் தவிர, ரஷ்யர்களும் அதிகளவில் இருக்கிறார்கள். சோவியத் யூனியன் உடைந்த பிறகு தனி நாடாக தன்னை அறிவித்துக்கொண்டது கிர்கிஸ்தான். ஆசிய நாடாக இருந்தாலும், இஸ்லாத் பிரதான மதமாக இருந்தாலும், பல்வேறு கலாச்சாரங்களும், பழக்கவழக்கங்களும் கொண்ட நாடு. கிர்கிஸ்தானின் முதல் ஜனாதிபதியான Askar Akayev மீதும் அவரது குடும்பத்தார் மீதும் இருந்த ஊழல் குற்றச்சாட்டுகள் எக்கச்சக்கம். அதனால் உள்நாட்டுக் கலவரம் ஏற்பட்டு (Tulip Revolution), Askar Akayev ரஷ்யாவிற்கு விரட்டியடிக்கப்பட்டா. இந்தக் கதை அந்த காலகட்டமான 2005 இல் நடப்பதாக சில விமர்சனங்களில் படித்தேன். நேரடியாகச் சொல்லப்படவில்லையென்றாலும் சில காட்சிகளில் இது சம்பந்தமாக கதாப்பாத்திரங்கள் பேசிக்கொள்கிறார்கள். இந்த குட்டி ஹிஸ்டரி தெரிந்திருந்தால் படத்தை இன்னும் கொஞ்சம் ஈடுபாடோடு பார்க்க முடியும்.

கிர்கிஸ்தான் மலைக்கிராமம் ஒன்றில் எலெக்ட்ரீசியனாக இருக்கிறார் Svet-Ake. வரை Mr. Light என்றே உள்ளூர் மக்கள் அழைக்கிறார்கள். பெரும்பாலும் வயதானவர்கள் மட்டுமே அந்த ஊரில் இன்னும் வசித்து வருகிறார்கள். இளைஞர்கள் வேலை தேடி ரஷ்யாவிலும் சீனாவிற்கு போய்விடுகிறார்கள். அந்த ஏழை கிராம மக்களுக்கு திருட்டுத் தனமாக கரெண்ட் கனெக்ஷன் கொடுப்பதை வழக்கமாக வைத்திருப்பதால் அடிக்கடி பிரச்சனையிலும் சிக்கிக்கொள்கிறார் மிஸ்டர் லைட். ஊர் நடுவே ஓடும் ஆற்றிற்கு அந்தப் பக்கமிருக்கும் நிலப்பறப்பில் காற்றாடிகளை வைத்தால் மொத்த ஊருக்கும் தேவையான மின்சாரத்தை தயாரிக்கலாம் என்பது அவர் கணக்கு. தன் வீட்டிலேயே ஒரு சிறிய காற்றாடியைத் தயார் செய்து அவ்வபோது பரிசோதனைகளைச் செய்து வருகிறார். வரிசையாக நான்கு பெண் பிள்ளைகளிலிருக்கும் அவருக்கு ஒரு ஆண்பிள்ளை இல்லையே என்ற கவலை.  

Bekzat ந்த ஊரின் மிகப்பெரிய பணக்காரன். அவனுக்கு அந்த ஊர் மக்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி அவர்களது நிலங்களை வளைத்துபோட்டு சீனர்களுடன் கூட்டுவியாபாரம் செய்யவேண்டுமென்று ஆசை. ஊரின் மேயரோ பிடிவாதக்காரராக இருக்கிறார். ஒருபிடி மண்ணைக்கூடத் தருவேனா என்று பிரச்சனை பண்ணுகிறார். இப்படியான ஒரு மோசமான பொருளாதாரச் சூழலில் தனது குடும்பத்தை தங்கவைத்திருக்கும் 'மிஸ்டர். லைட்' தன்னைவிட பெரிய திருடனான பேக்சாத் ஆல் என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொண்டார் என்பதைச் சொல்கிறது இந்தப் படம்.

விருதுப்படங்கள் வரிசையில் மட்டுமே இந்தப் படத்தை சேர்க்க முடியும். பரபர ஆக்ஷன் காட்சிகளோ, ரசிகனைக் இறுதிவரை கட்டிப்போடும் சுவாரஸ்யமான திரைக்கதையோ, கமர்ஷியல் சமாச்சாரங்களோ படத்தில் இல்லை. மாறாக ஒரு நாட்டின் மிக முக்கியமான ஒரு பிரச்சனையை சாமானியன் பார்வையில் சொல்கிறது இந்தப் படம். விட்டால் டாக்குமெண்டரி ஆகியிருக்ககூடிய காட்சிகளைக் காப்பாற்றுவது லைட் திருடனாக நடித்திருக்கும் Aktan Arym Kubat. படத்தின் இயக்குனரும் இவரே. சிற்றூரில் வசிக்கும் கொஞ்சம் விவரமான எலெக்ட்ரீசியனாக பட்டையைக் கிளப்பியிருக்கிறார். சிறிய படமாக இருந்தாலும் கிளைமாக்ஸிற்குள் இந்தக் கதாப்பாத்திரம் எப்படி, எந்த சூழலில் எப்படி எதிர்வினையாற்றும் என்பது நமக்குத் தெரிந்துவிடுகிறது. இவர் தவிர படத்தில் வரும் அனைவரும் புதுமுகங்களே.

படத்தில் ஒளிப்பதிவு அசத்தல். மலைக்கிராமத்தை, மிஸ்டர் லைட் மின் கம்பம் ஏறும் காட்சிகளை, நீரோடைகளை, குறிப்பாக ஏழெட்டு பேர் குதிரைகள் மீது உட்கார்ந்துகொண்டு ஒரு ஆட்டுக்குட்டியை நடுவில் வைத்து ஃபுட்-பால் போல் ஒரு ஆட்டம் ஆடுகிறார்கள் - மிகத் திறமையாகப் ஒளிப்பதிவு செய்யப்பட்ட காட்சி அது.
   
கிர்கிஸ்தான் போன்ற ஒரு மிகச்சிறிய நாட்டில், ஐரோப்பிய நிதி கொண்டு தயாரிக்கப்பட்டு, நல்ல உலகசினிமாக்களை சர்வதேச அரங்கில் கொண்டு சேர்க்கும் ஜெர்மன் கம்பெனியான The Match Factory மூலம் வெளியாகி, Cannes திரைப்படவிழாவில் Directors' Fortnight பிரிவில் திரையிடப்பட்டு, Toronto திரைப்படவிழாவில் சிறந்த உலகசினிமாவிற்கான Contemporary World Cinema விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்று கிர்கிஸ்தான் சார்பாக ஆஸ்காருக்கும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது இந்தப் படம்.

பிடித்திருந்தால் லைக் & ஷேர் செய்யுங்கள். நண்பர்களுக்கும் இந்தப் பக்கத்தைப் பரிந்துரைத்து மகிழ்ந்திருங்கள் :)

****************************

The Light Thief is a small-scale story about a Kyrgyz electrician called Svet-Ake called as Mr. Light, an expert in tapping the electricity and suppling it to the poor villagers. He gets into trouble with the authorities evey now and then and is constantly saved by the good Mayor of the town. Bekzat is a young businessman who has aims of becoming the village's Local Deputy with plans of grabbing hold of land ownership to start business with corrupt Chinese. Mr. Light gets caught in the middle of this mayhem and how he is affected and how he reacts is the story. 
Dir. Aktan Arym Kubat
Director Aktan Arym Kubat plays Mr. Light in this movie. His effortless acting is the biggest plus point and the only saviour of the movie from giving a documentary feel. From a land-locked country that's not so famous and known for its corrupt government, like Kyrgyzstan a movie like 'The Light Thief' produced with European Funds and distributed through the German Art-House Cinema distribution company, The Match Factory should be much appriciated

The movie was screened in Cannes under Directors' Fortnight and in Toronto under Contemporary World Cinema. It was also nominated for Best Foreign Language Film at the Oscars.
Hit Like & Share. Recommend this page to your friends. Happy movie watching :)

You Might Also Like

1 comments

  1. அனைவருக்கும் வணக்கம்

    புதியதாக உதயமாயிருக்கும் (superdealcoupon.com)நமது தளம் .இந்த தளத்தின் சிறப்பு இந்தியாவில் முதன்மையான ஆன்லைன் ஷாப்பிங் தளம் மற்றும் மொபைல் ரீசார்ஜ் ஆகிய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆபர் பற்றிய தகவல்களை உங்களிடம் பகிர்ந்து உங்கள் பணத்தை யும் உங்கள் நேரத்தையும் சேமிப்பதே எங்கள் கொள்கை .

    நன்றி

    நமது தளத்தை பார்க்க Superdealcoupon

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...