#100நாடுகள்100சினிமா #WW2Cinema #47.UKRAINE - THE BATTLE OF SEVASTOPOL (2015)
7:18:00 AM
Serhiy
Mokrytskyi | Ukraine | 2015 | 122 min.
(*** English write-up &
Download Link given below ***)
சமீபத்தில் 'நிழல்' பத்திரிக்கைகளை மொத்தமாக வாங்கும் பாக்கியம் கிடைத்தது. அவற்றில் ஓரிதழிலில்
'அமெரிக்கன் ஸ்னைப்பர்
- இன்னொரு போலி வீரகாவியம்'
என்ற திரு. முருவேளது கட்டுரை கண்ணில் பட்டது.
அமெரிக்கர் ஒருவரது சாகச வாழ்க்கையை பழம்பெரும் இயக்குனர் Clint Eastwood இயக்கியத் திரைப்படம் American Sniper (2014). இந்தப் படத்தைப் போட்டுக்கிழி
கிழியென்று கிழியென்று கிழித்திருந்தார் திரு.
முருகவேள். இன்னொரு தேசத்தை ஆக்கிரமிப்பு செய்து,
அங்குள்ளவர்களைக் கொன்று குவித்த தங்கள் நாட்டின் படை வீரரது
வீரம் கண்டு புழங்காகிதம் அடைந்த முஸ்லீம் வெறுப்பார்களான அமெரிக்கர்கள் வழக்கம்போல
இந்தப் படத்தைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டாட,
அவர்களைத் தவிர உலக அரங்கில் சினிமா விமர்சகர்களும் சரி, ரசிகர்களும் சரி ஒரு சேர தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். தங்கள் நாட்டினரது தவறுகளையெல்லாம் நியாயப்படுத்தி விடாமல்
திரைப்படங்களாக எடுத்துத் தள்ளி, அந்தப் படங்களுக்கு அவர்களது நாட்டின் உயரிய மரியாதையான ஆஸ்கார் விருதுகளையும்
அள்ளிக்கொடுத்து வரும் ஹாலிவுட்காரர்களது போக்கை இனியும் சகித்துக்கொள்ள எவரும் தயாராக
இல்லை என்பதையே இது காட்டுகிறது.
அமெரிக்கன் ஸ்னைப்பர்
படத்தில் ஹீரோவாக சித்தரிக்கப்படும் US Navy SEAL
Chris Kyle மக்கள் விரட்டியடிக்கப்பட்டு அமெரிக்க ராணுவத்தில் கட்டுப்பாட்டில்
இருக்கும் பகுதிகளில் பாதுகாப்பானதொரு மறைவிடத்தில் இருந்துகொண்டு பொதுவெளியில் தாக்கவரும்
ஈராக்கியர்களை சுட்டுக்கொல்வார். போதாதகுறைக்கு 'முஸ்தபா' என்ற கற்பனை கேரக்டர் ஒன்றை உருவாக்கி, 'ஒலிப்பிக் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற அவர் ஈராக்
போரில் அமெரிக்கருக்கு பெரும் சவாலாக இருந்ததைப் போலவும் அவரை Chis Kyle கொன்றதாகவும் காட்டப்படுகிறது.
முஸ்தபா உட்பட இதுவரை
255 பேரை அவர் கொன்றிருப்பதாக படம் சொல்கிறது. ஆனால் நிஜத்தில் அமெரிக்க அரசால் நிரூபிக்கப்பட்ட கொலை எண்ணிக்கை
- 160 (160 Confirmed Kills) மட்டுமே. அமெரிக்கர்கள் Legend a.k.a
The Most Lethal Sniper in American History என்று
தலையில் தூக்கி வைத்துக்கொண்டாடும் Chris Kyle -ஐ விட மோசமான அல்லது மிக நேர்த்தியான ஸ்னைப்பர்களைக் கண்டிருக்கிறது இரண்டாம்
உலகப்போர். அமெரிக்காவின் ஈராக் யுத்தம்
போலில்லாமல் போர்ர்களத்தில் தங்களது உயிரைப்பணயம் வைத்து எதிரிகளைக்கொன்றிருக்கிறார்கள்
இந்த வீரர்கள்.
ஸ்னைப்பர் வரலாற்றிலேயே
நம்பர் #1 இடத்தில் இருப்பவர் 'White Death' என்று சோவியத் வீரர்களால் அழைக்கப்பட்ட
பின்லாந்து வீரரான Simo Häyhä. இரண்டாம் உலகப்போரில் பின்லாந்திற்கும் சோவியத் யூனியனுக்கும் நடந்த சண்டையில் (1939-1940) தனது
Finnish M/28-30 ஸ்னைப்பர் ரைபிலை வைத்து மொத்தம் 505 ரஷ்ய வீரர்களைக் கொன்று குவித்திருக்கிறார். உண்மையிலேயே White Death என்ற பெயரைக்கேட்டாலே சோவியத் படை வீரர்கள் அதிர்ந்திருக்கிறார்கள்.
Battel
of Sevastopol (2015) என்ற இந்தப் படம் 'White Death' பற்றியதல்ல (2018 இல் இவரைப் பற்றி ஒரு படம் வருவதாக IMDB சொல்கிறது). மாறாக உலகின் நம்பர் #1 பெண் ஸ்னைப்பரைப் பற்றியது இந்தப் படம்.
அவரது பெயர் Lyudmila
Pavlichenko. இரண்டாம் உலகப்போரில் பங்கெடுத்த சோவியத் - உக்ரைன் வீரர். 309 பேரை கொண்டிருக்கிறார். அதில் 36 பேர் ஸ்னைப்பர்கள். அமெரிக்கன் ஸ்னைப்பரைப் பற்றிய திரு. முருகவேளது கட்டுரையைப் படித்தபோது, உக்ரைன் ஸ்னைப்பரைப் பற்றிய இந்தப் படம் தான் நியாபகத்திற்கு
வந்தது.
1957
ஆம் ஆண்டு சோவியத் யூனியனுக்குப் பயணப்படும் அமெரிக்க அதிபர்
ரூஸ்வெல்ட்டின் மனைவி Eleanor Roosevelt, தான் சந்திக்க விரும்பும் ஒரு பெண்ணைப் பற்றி ஒரு அமெரிக்க அதிகாரியுடன் பேசுவதாகத்
தொடங்குகிறது படம். 1942 ஆம்
ஆண்டு தான் முதன்முதலில் Lyuda-வை அமெரிக்காவில் வைத்து சந்தித்த நிமிடங்களைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்குகிறார். ஹிட்லருக்கு எதிரான போரில் அமெரிக்காவும்-சோவியத் யூனியனும் அப்போது நேசப்படைகளாக இருந்தன. போருக்காக நிதி திரட்டும் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக
சோவியத் சாதனையாளர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள்.
309 பாசிஸ்டுகளைக் கொன்ற வெறும்
25 வயதான Lyudmila Pavlichenko
என்ற அந்தப் பெண்ணை அன்று முதன்முறையாக சந்திக்கிறார் எலெனோர்
ரூஸ்வெல்ட். அங்கிருந்து Lyuda வின் இளமை காலத்திற்குச் செல்கிறது கதை.
1941.
Lyuda கல்லூரியில் படித்துத்கொண்டிருக்கிறார். ஜெர்மனி சோவியத் யூனியன் மீதான தனது தாக்குதல்களைத் தொடங்குகிறது. நண்பர்களுடன் விளையாட்டாக துப்பாக்கி சுடுதலில் ஈடுபடும் Lyuda-விற்கு இயற்கையாகவே திறமை இருப்பது தெரிய வருகிறது. தனது தோழியுடன் நர்சிங் பிரிவில் சேராமல் சோவியத் படையின் 25 ஆவது ரைபில் பிரிவில் சேர்கிறார் / சேர்க்கப்படுகிறார்.
அதன்பிற்கு அவர் எதிர்கொண்ட
6 மாத கடுமையான பயிற்சி காலகட்டங்கள், போர்க்களத்தில் ஏற்பட்ட அனுபவங்கள், எதிரிகள் இவரது தலைக்குப் பரிசு அறிவித்த காலகட்டம், போரில் நான்கு முறை படுமோசமாக காயப்பட்டும் இவரை விடாது போர்களத்தில்
நிறுத்தும் சோவியத் ராணுவம், இவர் கடந்து வந்த மூன்று காதல்கள் என்று
'Lyuda' Lyudmila Pavlichenko என்ற பெண்ணின் கதையை நாம்
தெரிந்து கொள்கிறோம். வெறும்
பயோகிராபியாக இல்லாமல் அன்றைய காலகட்டங்களில் ராணுவத்தில் இருக்கும் பெண்களது உளவியல்
சார் பிரச்சனைகளையும் தொட்டுச் செல்கிறது படம்.
PTSD என்றழைக்கப்படும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் Lyuda -வை ஆயுதமாகப் பார்க்காமல்
(Lady Death) ஒரு பெண்ணாக பார்த்து,
பழகி, அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்து,
தனது தோழியாக ஏற்றுக்கொண்ட எலெனோர் ரூஸ்வெல்ட் பற்றிய முக்கிய
பதிப்பாகவும் இருக்கிறது இந்தப் படம்.
Lyudmila
Pavlichenko ஆக ரஷ்ய நடிகை Yulia Peresild
நடித்திருக்கிறார்.
நடித்திருக்கிறார் என்று சொல்வது திரையில் அவர் நிகழ்த்தியிருக்கும்
ஆளுமையைக் குறைத்துக்காட்டுவதைப் போலத் தெரிகிறது.
நம் விஜயசாந்தி சாயலில் இருக்கும் அவரது ஒரு சிறு பார்வை
கூட அவ்வளவு சக்திவாய்ந்ததாக காட்டப்பட்டிருக்கிறது.
உருவத்தில் சிறு பெண்ணாக இருந்தாலும் அதில் தெரியும் ஒரு
மிடுக்கு, அதிகாரிகள் பத்திரிக்கையாளர்கள்
காதலன் என்று யாரையும் அணுகும் போதிலிருக்கும் நேர்த்தி என்று திரையில் அவர் தோன்றும்
போதெல்லாம் ஆச்சரியப்படவைக்கிறார்.
உக்ரைன் - ரஷ்ய கூட்டுத்தயாரிப்பான இந்தப் படம் பெரும் பொருட்செலவில்
எடுக்கப்பட்டும் அதிகம் வெளியே தெரியாமல் இருப்பது ஆச்சரியமளிக்கிறது. The Battle of Sevastopol என்ற தலைப்பே என்னைக்கேட்டால்
தவறு. Sevastopol போர் என்பது ஒரு
சிறு பகுதியாகத் தான் இந்தப் படத்தில் வருகிறது.
ஹாலிவுட்காரர்கள் இந்தத் தலைப்பு விஷயத்தில் கெட்டிக்காரர்கள். American Sniper, Saving Private Ryan, The Lone Survivor, The Hurt
Locker, The Monuments Men என்று இவர்களது தலைப்பே
பாதி கதை சொல்லும். இந்தப்
படத்தின் உக்ரைன் தலைப்பு 'Indestructible'. அதற்கு The Battle of Sevastopol பரவாயில்லை.
மொத்தம் 2000 பெண்கள் சோவியத்படையில் ஸ்னைப்பர்களாக இருந்திருக்கிறார்கள். அதில் உயிர்பிழைத்தவர்கள்
500க்கும் குறைவே. ஒரு தேசிய வீரரது பெருமைமிகு கதையை சொல்லும் இந்தப் படம் தொழில்நுட்ப ரீதியாக
உச்சத்திலிருந்தாலும், ஹாலிவுட்
படங்களுக்குச் சவால் விட்டாலும், திரைக்கதை கொஞ்சம் ஆங்காங்கே நொண்டியடிக்கவே செய்கிறது. சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்க வேண்டிய பல காட்சிகள் ஏனோதானோ
என்று வந்துசெல்கின்றன. American Sniper படத்தில் இதை மிகத்திறமையாகக் கையாண்டிருப்பார் கிளிண்ட் ஈஸ்ட்வுட். அவரது அனுபவம் அப்படி.
போர்க்களக்காட்சிகளில்,
Lyuda-வின் துப்பாக்கி சுடும் திறமையைச் சொல்லும் காட்சிகளில் மிரட்டியவர்கள், ஒரு பெண்ணாக Lyuda விற்குள் அந்தப் போர் ஏற்படுத்திய பாதிபுகளைக்கூட சரியாகப் பதிவு செய்திருக்கிறது. அதற்கு முக்கியக்காரணம் நடிகை Yulia
Peresild தானே தவிர திரைக்கதை அல்ல.
முன்-பின் நகரும் நான்-லீனியர் பாணி கதை சொல்லல் முறை தான் என்றாலும்,
மிகவும் தட்டையாக,
நாடகபாணியில், பார்வையாளனுக்கு ஓர் ஒட்டுதலே ஏற்படுத்தாமல் அவசரவசரமாக காட்சிகள் கடப்பது போலத்
தோன்றியது. Lyuda, Eleanor Roosevelt தவிர
மற்ற பலா முக்கிய கதாப்பாத்திரங்கள் தெளிவாகச் சித்தரிக்கப்படவில்லை. காதல் காட்சிகளில் அழுத்தம் இல்லை. பார்க்கும் ஆண்கள் எல்லாம்
Lyuda மேல் காதல் வயப்படுகிறார்கள்.
ஆனால் அவர் காதலில் விழுவது ஒருவர் மீது தான். அது ஏன் என்பது சரியாகச் சொல்லப்படவில்லை. 2013 ஆம் ஆண்டு ரஷ்யத் தயாரிப்பில்
Stalingrad என்ற படம் வெளிவந்தது.
முழுக்க IMAX 3D தொழில்நுட்பத்தில், மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட,
நான் பெரிதும் எதிர்பார்த்து ஏமாந்த - செம்ம மொக்கைப் படம்.
அந்தப் படத்திற்கு இந்தப் படம்
100 மடங்கு தேவலாம்.
அதுவரை எனக்கு மகிழ்ச்சியே!
படத்தின் இயக்குனர் Serhiy Mokrytskyi. ஒளிப்பதிவாளரான இவருக்கு
இயக்குனராக இது மூன்றாவது படம். Beijing திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது பெற்ற இந்தப் படம் Cannes திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட பெருமைக்குரியது.
அவசியம் பார்த்தே
தீர வேண்டிய படம். அமெரிக்கப்
போலி பிரச்சாரப்படங்களுக்கு தரும் ஆதரவை இந்த அசல் வீரர்களைப் பற்றிய படங்களுக்கும்
நாம் தர வேண்டும்.
பிடித்திருந்தால்
லைக் & ஷேர் செய்யுங்கள். நண்பர்களுக்கும் இந்தப் பக்கத்தைப் பரிந்துரைத்து மகிழ்ந்திருங்கள் :)
***************************
Battle
for Sevastopol is the biographical story of a young Soviet - Ukraine Sniper,
Lyudmila Pavlichenko who is considered one of the deadliest and most successful
snipers in World War II with 309 confirmed kills out of which 36 are enemy
Snipers. The movie begins with Eleanor Roosevelt remembering the first time she
met 'Lyuda' Lyudmila Pavlichenko, in 1942. From there we get to know the story
of a young college girl who with her natural shooting skills joins the Coviet
Red Army's 25th Rifle division along with 2,000 other women snipers.
Lyuda's
biography film is filled with excellent war sequences that challenge Hollywood
movies but fails to attract in other parts such as character development and
the romance part which is the main sub-plot of the movie. Russian actress
Yuliya Peresild does a great job with her wonderful acting and body language
bring a National Legend to Life.
Dir. Serhiy Mokrytskyi
Directed
by Cinematographer turned director Serhiy Mokrytskyi, the movie was screened at
the Cannes and in Berlin Film Festival where Yuliya won the Best Actress Award.
A
must watch Epic war movie of a Legend.
Other
Recommended movies from Ukraine:
1) The Tribe (2014)
2) Winter on Fire: Ukraine's Fight for Freedom (2014) – Documentary
3) Haytarma (2013)
Hit
Like & Share. Recommend this page to your friends. Happy movie watching :)
0 comments
மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...