#100நாடுகள்100சினிமா #WW2Cinema #46.NETHERLANDS - BLACK BOOK (2006 - Zwartboek)
10:39:00 PM
Paul Verhoeven | Netherlands |
2006 | 145 min
(*** English write-up &
Download Link given below ***)
இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் வீழ்த்தப்பட்டதற்கு நேசப்படைகள் (Allies) மட்டும் காரணமல்ல.
ஆரம்பத்திலிருந்தே
ஹிட்லருக்கு ஏகப்பட்ட எதிரிகள். நல்லவனோ கெட்டவனோ 'தலைவன்' ஒருவன் உருவானால் அவனைக் கொல்ல ஒரு கூட்டம் கிளம்பும். இது காலம்காலமாக
நடக்கும் சங்கதி. ஹிட்லரது
அடாவடித்தனங்கள் பிடிக்காத நாஜிக்களே பலமுறை அவரைக் கொல்லத் திட்டமிட்டிருக்கின்றனர். Tom Cruise நடிப்பில் Bryan Singer இயக்கிய Valkyrie (2008) படம் அப்படி ஒரு சம்பவத்தைப் பற்றியது தான். மொத்தமா சுமார் 27 முறை ஹிட்லரைக்கொல்ல முயற்சி செய்யப்பட்டதாகச்
சொல்லப்படுகிறது. ஹிட்லரது
கடைசி நாட்களை Downfall (2004) என்ற படமாக எடுத்து விருதுகளை அள்ளிய இயக்குனர் Oliver Hirschbiegel இன் சமீபத்திய
படமான 13 Minutes (2015), அவசியம் பார்த்தே தீர வேண்டிய படம். Georg Elser என்பவர் ஹிட்லரைக் கொல்ல
முயற்சி செய்த சம்பவத்தைப் பற்றிய முக்கியமான படம்.
(கொசுருத் தகவல் - ஹிட்லர் ஜுஜுப்பி. க்யூபா அதிபர் பிடல் கேஸ்ட்ரோ இதுவரை 600 க்கும் அதிகமான
கொலை முயற்சிகளில் இருந்து தப்பித்திருக்கிறார். அதில் பாதியைச் செய்தது அமெரிக்காவின் CIA)
விஷயத்திற்கு
வருகிறேன்.
உள்ளூர்
கிளர்ச்சியாளர்கள் ஒருபுறம் இருக்க, அச்சுப்படைகள் ஆக்கிரமிப்பு செய்யும் நாடுகளிலெல்லாம் கிளர்ச்சிப்படைகள் (Resistance / Partisan Groups) உருவாகி பெரும் தலைவலியைக் கொடுத்துக்கொண்டிருந்தன. கலவரத்தைத் தூண்டுவது, திடீர் தாக்குதல்கள்
நடத்தி அதிகாரிகளைக் கொல்வது, குண்டு வைப்பது, உளவாளியாகச் சென்று குழப்பங்கள் விளைவிப்பது, தண்டாவாளங்கள், பாலங்களைத்
தகர்த்து பின்னடைவு ஏற்படுத்துவது, எதிரிகள் கூடாரங்களுக்குள் ஊடுருவி துப்பு கொடுப்பது, போர்க்கைதிகளை
விடுவித்து அவர்களை நாடுகடத்திக் காப்பாற்றுவது என்று பல லட்சம் யூதர்களையும் நாஜிப்பிடியில்
சிக்காமல் காப்பாற்றியிருக்கிறார்கள். முதல் கிளார்ச்சிப்படை உருவானது ஹிட்லரது முதல் டார்கெட்
ஆன போலாந்தில் தான். ஆனால் புரட்சி மூலம் முதன்முதலாக பெருவெற்றி பெற்றவர்கள்
யூகோஸ்லாவியர்கள். Yugoslav Partisans என்ற போராளிக்குழுவின் தலைவராக இருந்த Josip Broz Tito தான் பின்னாளில் ஆட்சியைப் பிடித்தது அதிபர் ஆனார். சர்வாதிகாரி Benitto Musolinni யைக் கொன்று
இத்தாலியில் பாசிச ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது French Resistance கிளர்ச்சிப்படை. அணு ஆயுத ஆராய்ச்சியில்
ஜெர்மனி பெரும் பின்னடைவைச் சந்திக்கக் காரணமாக இருந்தது Norway நாட்டுக்கிளர்ச்சிப்படை. Polish Resistance, Jewish Partisans, Dutch
Resistance, Danish Resistance, Greek Resistance, Italian Resistance, French
Resistance, Belgian Resistance என்று பல கிளர்ச்சிப்படைகள்
உருவாகி இரண்டாம் உலகப்போரில் நேசப்படைகளுக்கு மறைமுகமாகப் பெரும் உதவிகளைச் செய்து, ஹிட்லரைத்
தோற்கடித்தது.
இரண்டாம்
உலகப்போரின் ஹீரோக்களான இவர்களை சரித்திரம் கண்டுகொள்ளவில்லை என்றாலும், சினிமாக்காரர்கள்
விடவில்லை. கொட்டிக்கிடக்கிறது
படங்கள். அவற்றில்
நான் பார்த்த, பார்க்க
வேண்டிய ஒரு சிறு லிஸ்ட்டைக் கடைசியாகக் கொடுத்திருக்கிறேன். நோட் செய்து
பார்த்துவிடுங்கள்.
இந்த
படத்திற்கு வருவோம்.
நெதர்லாந்து
நாட்டின் புரட்சிப்படையான The
Dutch Resistance பற்றிய ஒரு மிக முக்கியமான படம் - Black Book (2006).
1944 ஆம் ஆண்டு. வஞ்சகத்தால் கண்முன்னரே தாய் தந்தை துப்பாக்கிக்குண்டுக்கு
பலியாவதைப் பார்க்கிறாள் இளம் பாடகியான Rachel
Stein. உயிர் பிழைத்தால் போதும் என்ற ஒரே குறிக்கோளுடன்
ஓடத்தொடங்குபவள் Dutch Resistance குழுவுடன் இணைகிறாள். தனது அழகு + குரலால் Ellis de
Vries என்று பெயர் மாற்றிக்கொண்டு நாஜி க்களுடன் கலக்கிறாள். முக்கிய ஜெர்மன்
அதிகாரியின் அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்து போராளிகளுக்கு உளவு பார்த்துச் செய்திகள்
அனுப்புகிறாள். அதே
சமயம் இவள் யூத இனம் என்பது தெரிந்தும் (கண்டுபிடித்தும்) காதலிக்கும் ஒரு நாஜி அதிகாரி மேல் காதல் கொள்கிறாள். அதனால் ஏற்படும்
குழப்பங்களால் 'தேச
துரோகி' என்று
குற்றம்சுமத்தப்பட்டு மீண்டும் ஓடத் தொடங்குகிறாள். ஒரு பக்கம் நாஜிப்படையும், மறுபக்கம்
கிளர்ச்சிப்படையும் துரத்த உயிரைக்காப்பாற்றிக்கொள்ள ரேச்சல் என்ன செய்தாள் என்பதை
உணர்ச்சிப்பூர்வமாகவும் அதே சமயம் ஒரு த்ரில்லருக்கே உரிய பரபரப்புடன் சொல்கிறது படம்.
யார்
நண்பர், யார்
எதிரி என்பதே தெரியாமல் வாழ்க்கை முழுவதும் ஓடிக்கொண்டே இருந்த ஒரு இளம்பெண்ணின் சர்வைவல்
கதை தான் இந்தப் படம். படம் முழுக்க
Rachel Stein பார்வையில் தான் சொல்லப்படுகிறது. ரேச்சல் ஆக
பட்டையைக் கிளப்பியிருப்பவர் பிரபல ஆங்கில தொலைக்காட்சித் தொடரான 'Game of Thrones' இல் Melisandre வாக வரும் Carice van Houten. ஆபத்தான அழகும், அருமையான நடிப்புமாக படம் முழுக்க பட்டையைக்
கிளப்பியிருக்கிறார். 4 மொழிகளைச் சரளமாகப் பேசுகிறார்.
படத்தை
இயக்கியிருப்பவர் Paul Verhoeven. பல உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில், உண்மையில்
வாழ்ந்த மனிதர்களின் பெயர்களையே பயன்படுத்தி இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். கலை இயக்கம்
படத்தின் மிகப்பெரிய பலம். நெதர்லாந்து வரலாற்றிலேயே மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்டு, பல விருதுகளையும்
பாராட்டுக்களையும் குவித்திருக்கிறது.
அவசியம்
பார்த்தே தீர வேண்டிய படம்.
பிடித்திருந்தால்
லைக் & ஷேர் செய்யுங்கள். நண்பர்களுக்கு இந்தப் பக்கத்தைப் பரிந்துரைத்து மகிழ்ந்திருங்கள் :)
***************************************
It's not just the Allies who defeated the Axis Powers during the World
War II. Major reason for the defeat was the Resistance groups who gave a tough
fight and proved to be the biggest head-ache for Hitler. It all started in
Poland, Hitler's first target. But the first major Victory was in Yugoslavia where
Resistance Leader Josip Broz Tito defeated the ruling government and became the
President. Benitto Musolinni was hanged to death in public by the French
Resistance. Hitler's nuclear waepons project was delayed by the Norwagian
Resistance. Likewise Polish Resistance, Jewish Partisans, Dutch Resistance,
Danish Resistance, Greek Resistance, Italian Resistance, French Resistance,
Belgian Resistance and many other groups were the actual reasons for Hitler's
Axis Powers defeat in World War II.
Balck Book (2006) is the story of one woman, Rachel Stein who worked as
a double agent both for the Dutch Resistance and the Nazis and survived the
war. When her parents are killed, she joins the Dutch Resistance and
infiltrates a high ranking Gernman officers office as a staff. There she
befriends and falls in love with a Nazi Officer.
Dir. Paul Verhoeven |
Directed by Paul Verhoeven, the movie is based on actual events and
characters and is the highest grosser in the History of Netherland cinema.
'Game of Thrones' Carice van Houten as Rachel just steals the show with her
beauty and amazing acting skills. The whole movie is on her and she carries her
role with ease.
A MUST WATCH story about a young Jewish woman and her survival after
becoming a spy and later labelled a traitor.
Other Recommended movies on World War II Resistance Groups
Hitler Assasination Attempts - Valkyire (2008), 13 minutes (2016)
Soviet Resistance - Come and See (1985)
Norway Resistance - The Heroes of Telemark (1965), Max Manus (2008)
Danish Resistance - Flame & Citron (2008)
Jewis Partisans - Defiance (2008)
French Resistance - Female Agents (2008), Army of Crime (2009)
Anti-Nazi Resistance - Sophie School (2005)
Hit Like & Share. Recommend this page to your friends. Happy movie
watching :)
2 comments
நிறைய நாடுகளின் படங்களின் விபரங்கள் இல்லைங்க. தயவுசெய்து அவற்றையும் சரி செய்யவும். உங்களின் சேவைக்கு நன்றி
ReplyDeleteஇந்தத் தொடர் 100நாடுகள் 100 சினிமா என்ற பெயரிலேயே புத்தகமாக வெளிவந்துவிட்டது நண்பா.. வாய்ப்பிருந்தால் வாங்கி வாசித்துப் பார்க்கவும் :)
Deletehttp://www.wecanshopping.com/products.php?product=100-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-100-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE
மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...