#100நாடுகள்100சினிமா #48.ICELAND - RAMS (2015)

7:51:00 AM

Grimur Hakonarson | Iceland | 2015 | 92 min.


(*** English write-up and Download Link given below ***)

இரு சகோதரர்கள். இருவருக்கும் வயது அறுபதுக்கும் மேல். திருமணமாகாதவர்கள். இருவரும் அந்தப் பகுதியின் பிரதானத் தொழிலான ஆடு வளர்ப்பதையே செய்துவருகிறார்கள். இருவரும் 40 ஆண்டுகளாக ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதில்லை.

இந்தக் கிழவர்கள் தான் இந்தக் கதையின் நாயகர்கள்.

செம்மரி ஆடுகளுக்கென்று வருடந்தோரும் நடத்தப்படும் போட்டியுடன் தொடங்குகிறது படம். கதாப்பாத்திரங்கள் அறிமுகமாகிறார்கள். போட்டியில் அண்ணது ஆட்டிற்கு முதல் பரிசும், தம்பியின் ஆட்டிற்கு இரண்டாவது பரிசும் கிடைக்கிறது. அண்ணன் தம்பி இருவரும் ஒரே இன ஆடுகளைத் தான் வளர்த்து வருகிறார்கள். தன் ஆடு ஏன் தோற்றது என்பதைத் தெரிந்து கொள்ள ரகசியமாக அண்ணனது ஆட்டைச் சோதிக்கிறார் தம்பி. அந்தச் சோதனையில் மொத்தப் பள்ளத்தாக்கையும் பாதிக்கக்கூடிய ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்கிறார். அண்ணனது வெற்றி ஆடு 'Scrapie' என்ற ஒருவகைத் தொற்றுநோயால் தாக்கப்பட்டிருக்கிறது. வேகமாகப் பரவக்கூடிய அந்தப்பகுதி மட்டுமல்லாமல் அந்த ஊரிலிருக்கும் ஆடுகள் அனைத்தையும் கொன்று விடும் கொடிய நோய் என்பதால் ஆடுகளையெல்லாம் மொத்தமாக கொன்றுவிட உத்தரவிடுகிறது அரசாங்கம் (நாமக்கல் பண்ணைகளில் பறவைக்காய்ச்சல் சமயம் கொத்துக்கொத்தாக கோழிகள் கொல்லப்பட்டது நினைவிற்கு வருகிறதா?). சகோதரர்கள் தங்களது வாழ்வாதாரமான, ஒரே துணையான தங்களது ஆடுகளை என்ன செய்தார்கள் என்பது தான் இந்தப் படம்

முதல் காட்சியிலேயே படம் எதைப் பற்றியது என்பதைச் சொல்லிவிடுகிறார்கள். மண்ணும் மண் சார்ந்த கதைகளும் என்று கேள்விப்பட்டிருப்போம். இது பனியும், பனி சூழ்ந்த ஐஸ்லாந்து கதை. அட்டகாசமான ஒளிப்பதிவின் மூலம் ஐஸ்லாந்தின் பரந்த நிலப்பரப்பைக் கண்முன் கொண்டுவந்திருக்கிறார்கள். அகண்ட திரையில், துல்லியமான ஒளி, ஒலியில் இந்தக் காட்சிகள் அட்டகாசமாக இருக்கும். சகோதரர்கள் ஏன் பேசிக்கொள்வதில்லை என்பதற்கான காரணம் எங்குமே சொல்லப்படுவதில்லை என்றாலும், அவர்களுக்குள் இருக்கும் சிறு சிறு போட்டியையும், சேதாரமில்லாப் பொறாமையையும் அழகாகக் காட்சியப்படுத்தியிருக்கிறார்கள். சற்றே பெரிய குழந்தைகள் இவர்கள் அவ்வளவே.

அண்ணன் தம்பி இருவரைப் பற்றிய கதை என்றாலும் தம்பி Gummi -க்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஐஸ்லாந்தின் பிரபல நடிகரும், நகைச்சுவையாளரும், திரைக்கதையாசிரியருமான Sigurður Sigurjónsson என்பவர் Gummi ஆக பட்டையைக்கிளப்பியிருக்கிறார். அண்ணன் Kiddi ஆக Theodór Júlíusson என்பவர் நடித்திருக்கிறார். இவர்களைத் தவிர நாய் ஒன்றும் படத்தில் உண்டு. ஒரே நிலப்பரப்பில் அருகருகே வாழ்ந்தாலும் பேசாமல் இருக்கும் இந்த இருவருக்கும் 'போஸ்ட் மேன்' வேலை செய்வது அண்ணன் வளர்க்கும் நாய்.

அக்மார்க் உலக சினிமா. வெகு நிதானமாகவே நகர்கிறது காட்சிகள். படம் பார்க்கப் பொறுமை வேண்டும். கிட்டத்தட்ட டாக்கு-பிக்ஷன் போலத் தான் எனக்குத் தெரிந்தது. ஆனால் படம் முடிந்த பிறகு ஒரு நல்ல படத்தைப் பார்த்து திருப்தி ஏற்படுவது படத்தின் வெற்றி. ஐஸ்லாந்து மக்களது வாழ்க்கையை இந்த இரு சகோதரர்கள் வாயிலாக நமக்குச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் Grimut Hakonarson.

2015 ஆம் ஆண்டு Cannes திரைப்பட விழாவில் Un Certain Regard பிரிவில் விருது வென்றிருக்கிறது இந்தப் படம். இது தவிர Toronto திரைப்பட விழாவிலும் பங்குபெற்றது. சென்ற ஆண்டு சென்னைத் திரைப்பட விழாவில் உலக சினிமா ரசிகர்கள் அதிகம் கொண்டாடிய படங்களில் இதுவும் ஒன்று.

பிடித்திருந்தால் லைக் & ஷேர் செய்யுங்கள். நண்பர்களுக்கும் இந்தப் பக்கத்தைப் பரிந்துரைத்து மகிழ்ந்திருங்கள் :)

*********************************

Rams is the story of two brothers who haven't spoken to each other for forty years. Sheep (Ram) farming is the major occupation of the area and the brothers are top breeders of the area. Both have the Ram breed. The Elder brother Kiddi's Ram wins the first prize in a local competition which makes the younger brother Gummi jealous. While secretly examining Kiddi's winning Ram, he finds symptoms of a deadly infection called Scrapie. Soon the news spread and the government orders the people of the valley to destroy all their sheep and burn their barns to avoid re-infection. The two unmarried brothers have nothing but their Sheep. What happened next is the story.

Iceland's famous actor, Screenplay Writer, Comedian - Sigurður Sigurjónsson as Gummi is awesome. He does his part with ease and so does Theodór Júlíusson who plays Kiddi. There is a sheep-dog that belongs to Kiddi which works as the postman carrying messages between the brothers.

The movie has some excellent visuals showing us the life and landscape in Iceland. The movie is slow, more of a docu-drama type portraying the life in Iceland through 2 old brothers. But that doesn't stop it from being a good movie. It's a small movie and you will be completly satisified in the end.

Dir. Grimur Hakonarson
Directed by Grimur Hakonarson, Rams (2015) won the Prix Un Certain Regard, in Cannes and was screened at the Contemporary Section at Toronto.




Hit Like & Share. Recommend this page to your friends. Happy movie watching :)

You Might Also Like

0 comments

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...