#100நாடுகள்100சினிமா #45. COLOMBIA - THE COLORS OF THE MOUNTAIN (2010)

7:09:00 AM

Carlos César Arbeláez | Colombia | 2010 | 90 min.


(*** English write-up & Download Link given below ***)

9 யதுச் சிறுவன் Manuel, விவசாயம் செய்தும் கால்நடைகளை வளர்த்தும் பிழைத்து வரும் தனது தந்தை, தாய் மற்றும் கைக்குழந்தையான தம்பியுடன் வசித்து வருகிறான். மானுவலுக்கும் அந்த ஊர் சிறுவர்களுக்கும் ஃபுட்பால் என்றால் கொள்ளை பிரியம். நண்பர்களது கிண்டல் கேலிக்கு இடையே பழைய ஃபுட்பால் ஒன்றை வைத்தே விளையாடிவரும் மானுவலுக்கு பிறந்தநாள் பரிசாக ஒரு புதிய ஃபுட்பாலையும், கோல்கீப்பர் கையுறையையும் வாங்கித்தருகிறார் அவனது தந்தை. ஊரில் எல்லையில் இருக்கும் சிறிய மைதானத்தில் தனது புதிய ஃபுட்பாலை நண்பர்களிடம் காட்டி மானுவல் பெருமை பீத்திக்கொண்டிருக்க, விளையாட்டு வாக்கில் பந்து மைதானத்தைத் தாண்டிப்போய் விழுகிறது. அதை சிறுவர்கள் எடுப்பதற்குள் இன்னொருபக்கம் மானுவலது தந்தை படாதபாடு பட்டு இழுத்து வந்து முரட்டுப்பன்றி ஒன்று பிடியை விட்டு பந்து போன பக்கமே ஓட, அதை மானுவலும், அவனது தந்தையும், மற்ற சிறுவர்ககளும் துரத்திக்கொண்டு ஓட - படாரென்று வெடித்துச் சிதறுகிறது பன்றி.

உள்ளூர் கிளர்ச்சியாளர்களான கெரில்லாக்கள் அந்த மைதானத்தைச் சுற்றி ஆங்காங்கே கன்னிவெடிகளைப் புதைத்து வைத்திருப்பது தெரிகிறது. அந்தப் பக்கம் யாரும் போக வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறது. இப்படியான சூழலில் எப்படியும் புதுப்பந்தை எடுத்தே தீருவது என்று தனது நண்பர்கள் இருவரை கூட்டுசேர்த்துக்கொண்டு திட்டம் போடுகிறான் மேனுவல். பந்தை எடுத்தானா இல்லையா என்பது தான் கதை.    

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் (Colombia) நடைபெற்றுவரும் உள்நாட்டுப்போரை லகின் மிக நீண்ட யுத்தம் என்று சொல்கிறார்கள். யுத்தத்திற்கு முக்கிய காரணமாகச் சொல்லப்படுவது - போதைப்பொருள் கடத்தல். Colombian Drug War என்று தான் இந்தச் சண்டையை அழைக்கிறார்கள். 1948 இல் ஒரு பிரபல அரசியல்வாதி கொல்லப்பட La Violencia (The Violence) என்ற பெயரில் தொடங்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது இந்த கொலம்பிய உள்நாட்டு யுத்தம். கிட்டத்தட்ட 1958 வரை 10 ஆண்டுகள் நடந்த இந்த யுத்தத்தில் அமைதியைக் கொண்டு வருகிறேன் என்று வழக்கம்போல அமெரிக்கா மூக்கை நுழைக்க அதுபிடிக்காத இடது சாரி அமைப்புகள் களத்தில் இறங்கி கெரில்லா தாக்குதல்களை நடத்தத் தொடங்க (FARC, Left-wing Guerrillas), இன்று வரை பிரச்சனைதான். இதை 'யுத்தம்' என்று சொல்வதை விட 'மோதல்' என்று சொல்லலாம் - The Colombian Conflict. கொலம்பிய ராணுவம் தவிர்த்து துணைராணுவமான Colombian Paramilitary Forces இந்த மோதலில் பெரும்பங்கு வகிக்கிறது. கெரில்லா படைகள் தாங்கள் சாமினியர்களுக்காக அவர்களது உரிமைகளுக்காக பணக்காரர்களை எதிர்த்து சண்டையிடுவதாகச் சொல்கிறது, பாராமிலிட்டரி கெரிக்காக்களை எதிர்த்து சண்டையிடுவதாகச் சொல்கிறது. இதற்கிடையில் கார்டெல் (Drug Cartels) என்றழைக்கப்படும் போதைப் பொருள் மாஃபியாக்கள் நம்மூர்களில் 'கஞ்சாசெடி' என்று அழைக்கப்படும் கொகோ செடி (Coco Plant) மூலம் தயார் செய்யப்படும் கொகைன் (Cocaine) உற்பத்தியில் ஒருபக்கம் பட்டையைக்கிளப்ப, ஆளாளுக்கு ஒருவர் மாற்றி ஒருவர் விடாது சண்டையிட்டுக்கொண்டிருக்கிறார்கள். வழக்கம்போல இவர்களுக்கிடையில் சிக்கிச்சாவது என்னவோ அப்பாவி பொதுமக்கள் தான்.

மொத்ததில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக கொலம்பியாவில் நிலவிவரும் பொருளாதார, அரசியல், சமூக ஏற்றதாழ்வுகள் காரணமாக தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. 2013 ஆம் ஆண்டு வரை இந்த உள்நாட்டு மோதலில் இதுவரை 2,20,000 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். இதில் 1,77,307 பேர் பொதுமக்கள். அவ்வபோது ஆங்காங்கே நடக்கும் மோதல்கள் காரணமாக உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்த மக்கள் மட்டும் சுமார் 5,00,000 பேர். கொலம்பிய அரசால் எவ்வளவு முயன்றும் கார்டெல்களையும் தடுக்க முடியவில்லை, இடதுசாரி கெரிக்களையும் அடக்க முடியவில்லை. காரணம் - பாராமிலிட்டரி, கெரில்லாக்கள் இரு அமைப்பினருமே போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டுவருபவர்களே. அவர்களுக்கு இந்த மோதல் தேவையாய் இருக்கிறது.

இப்படியான ஒரு மோசமான சூழலில் ஒரு குழந்தைகள் திரைப்படம் எடுத்ததற்காகவே இயக்குனர் Carlos César Arbeláez பாராட்டவேண்டும். இத்தனைக்கும் இவருக்கு இது முதல் படம். ஈழப்போர் பின்னணியில் தாயைத் தேடும் ஒரு குழந்தையின் கதையை 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் சொல்லயிருப்பார் நம் இயக்குனர் மணிரத்னம். இது அதற்கு இணையான முயற்சி. படத்தில் மானுவலாக வரும் சிறுவனது நடிப்பு அபாரம். அவனுக்கு தன் ஊரின் பிரச்சனைகள் தெரியும். ஆனாலும் அது ஒரு சிறுவனுக்குரிய புரிதல் அளவிலேயே இருக்கிறது. எங்கும் 10 வயதிற்கு மீறிய அதிகப்பரசங்கித்தனமிருக்காது. யார் எக்கேடு கெட்டுப்போனாலும் அவனுக்கும் அவனது நண்பர்களுக்கும் ஃபுட்பால் விளையாட வேண்டும், அவனுக்கு ஃபுட்பாலை மீட்க வேண்டும். அந்தக்கிராமத்திலிருக்கும் பதட்டமான சூழ்நிலை, பெரியவர்களுக்கிருக்கும் பிரச்சனைகள் என்று அனைத்தையும் இந்தச் சிறுவர்களது பார்வையிலேயே நகர்த்தியிருப்பது சிறப்பு.

படத்தில் ஒரு ஆசிரியை கதாப்பாத்திரம் வருகிறது. புதிதாக அந்த ஊருக்குள் வரும் அவர் அந்த குழந்தைகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு சில முயற்சிகளையும் எடுக்கிறார். ஆனால் அவரது மனநிலை கூட அங்கிருக்கும் பிரச்சனைகளாலும் பாதுகாப்பின்மையாலும் நாளுக்கு நாள் மாறி இறுதியில் வேறுவழியில்லாமல் அந்த ஊரை விட்டுச் செல்வதை சிறப்பான காட்சிகள் மூலம் சொல்லியிருக்கிறார். புரட்சிப்படையில் சேர தொடர்ந்து கட்டாயப்படுத்தப்படும் மானுவலது தந்தை Ernesto, எப்படியாவது அந்த ஊரை விட்டுப்போய் விடவேண்டுமென்று தவியாய்த்தவிக்கும் தாய் Miriam, கெரில்லாவாக இருக்கும் தன் அண்ணனை நேசிக்கும் நண்பன் Julián, அல்பேனியனாக புட்டி கண்ணாடி அணிந்துவரும் இன்னொரு நண்பன் Poca Luz என அனைவரும் மிகச் சிறப்பான நடிப்பைக் கொடுத்து மனதில் தங்கிவிட்டார்கள். நீட்டி முழக்கிக்கொண்டிருக்காமல் சில காட்சிகளை குறியீடுகள் மூலமே விளக்கியிருப்பது அருமை.

சென்சிடிவ் பிரச்சனையை குழந்தைகள் பார்வையில் சொல்லியிருக்கும் இந்தப் படம் இயக்குனர்களுக்குப் பாடம். அவசியம் பார்த்தே தீர வேண்டிய திரைப்படம்.    

பிடித்திருந்தால் லைக் & ஷேர் செய்யுங்கள். நண்பர்களுக்கும் இந்தப் பக்கத்தைப் பரிந்துரைத்து மகிழ்ந்திருங்கள் :)

****************************

Manuel, a 9 year old lives with his father who is a farmer, his mother and infant brother. He and his friends are football lovers and they spend their time after school playing with Manuel’s worn-out football. To his surprise Manuel’s father Ernesto gifts him a new Football and a pair of goal-keeper gloves for his birthday. While Manuel shows his new new football to his mates, his father Ernesto is trying to control a wild pig. Both the ball and pig goes into a minefield killing the pig and forcing Manuel to abandon his new ball. How Manuel gets his ball forms the rest of the story. 
Dir. Carlos César Arbeláez
Kudos to debutante director Carlos César Arbeláez for giving a Children Film in the never-ending Colombian Conflict background. The town is troubled constantly by the Guerrillas and the paramilitary forces forcing them to vacate the place. The situation is so worse that a new teacher who comes with an ambition returns mid-way.

A must watch movie which I felt was similar to 'Kannathil Muthamittal' from Mani Sir.



Hit Like & Share. Recommend this page to your friends. Happy movie watching :)


You Might Also Like

0 comments

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...