#100நாடுகள்100சினிமா #43. DOMINICAN REPUBLIC - LA SOGA (2009)

5:55:00 AM

Josh Crook | Dominican Republic | 2009 | 103 min.


(*** English write-up & Download Link given below ***)

சிறுவயதில் ஒரு சாதாரண வாக்குவாதத்தில் கண்முன்னே தன் தந்தை சுட்டுக்கொல்லப்படுவதை காண்கிறான் Luisito. தந்தையைக் கொன்றவனைப் பழிவாங்க போலீஸில் சேர்கிறான். குற்றம் பெருகிப்போயிருக்கும் நாட்டில் ரகசிய போலீஸின் தலைமைக் கமாண்டர் General Colon என்பவரது வேட்டைநாயாக, அவர் சொல்பவரைக் கொல்லும் அரசிற்கு ஹிட்மேனாக வேலை செய்கிறான். அமெரிக்காவிற்கு தப்பி ஓடி விட்ட தனது தந்தையின் கொலைகாரனை என்றாவது ஒரு நாள் பழிதீர்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறான். இடையே சிறுவயதுத் தோழியுடன் காதல்.

அசத்தலான ஒரு துரத்தலுடன் தொடங்குகிறது படம். குறுகிய வீதிகளினூடே போதைப்பொருள் கடத்தும் ஆசாமி ஒருவனை Luisito வும் அவனது பார்ட்னரும் (cousin உம் கூட) விரட்டிப் பிடிக்கிறார்கள். மேலிட உத்தரவின் பேரில் பிடிபட்ட அவனைக் கைது செய்யாமல் அங்கேயே அனைவர் முன்பும் அவனை சுட்டுக்கொன்று, தங்களது வண்டியில் அவனது பிணத்தை ஊர்வலமாக எடுத்துச் செல்கிறார்கள். சுடுவது Luisito. குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றி தண்டனை பெற்றுத் தருவதை நம்புபவன் அல்ல. அந்த ஊர் அப்படி. குற்றவாளி என்று தெரிந்துவிட்டால் உடனடி தண்டனை. இடையிடையே பிளாஷ்பேக்கில் Luisito-வின் சிறுவயது அனுபவங்கள் சொல்லப்படுகிறது. இடையிடையே ஒரு காதலும். கசாப்புக்கடைக்காரரின் மகன் என்பதாலும் தந்தை இறந்ததை நேரில் கண்டவன் என்பதாலும் சிறு வயதிலேயே ரத்தம் பழகியிருக்கிறது. அதனாலேயே அவனைத் தேர்தெடுத்து வளர்க்கிறார் General Colon. இந்த ஜெனரல் ஒரு ஊழல் பேர்விழி என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை. பன்றி ஒன்றை இதயத்தில் குத்திக்கொன்று, தோலுறித்து, துண்டுதுண்டாக வெட்டி கசாப்பு போடும் காட்சி ஒன்று படத்தில் உண்டு. நிஜ கசாப்புக்கடைக்காரர் ஒருவரை வைத்து எடுக்கப்பட்ட ஒரிஜினல் காட்சி அது.   

இது ஒரு மாமூல் ஆக்ஷன் திரைப்படம். City of God பாதிப்பில் / பாணியில் எடுக்கப்பட்டிருக்கும் மற்றுமொரு படம். தந்தையைக் கொன்றவனைப் பழிவாங்கத் துடிக்கும் ஹீரோவின் கதைகள் தமிழில் மட்டுமே சுமார் 1000 வந்திருக்கும். புதிதாக இருப்பது கதை நடக்கும் களம்.

அமெரிக்காவிற்கு அருகில் இருந்தும், ஆப்பிரிக்க நாடு போலத் தோற்றமளிக்கிறது டொமினிக்கன் ரிபப்ளிக். கரீபியத் தீவுகளில் அமைந்திருக்கும் சிறிய நாடு. வசதிகள் குறைவு. பிரச்சனைகள் அதிகம். போதாத குறைக்கு அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் குற்றவாளிகளின் உறைவிடமாக வேறு இருக்கிறது. டூரிசம் மட்டுமே நாட்டின் வருமானத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. சினிமா என்ற ஒரு 'துறையே' அங்கு இல்லை என்கிறார்கள். அப்படியும் ஆண்டிற்கு ஐந்து குறைவான படங்கள் வெளியாவது பாராட்டப்படவேண்டிய ஒன்று. அப்படி வெளியான படங்களில் இந்தப் படம் கொஞ்சம் பிரபலம். உள்ளூர் திருவிழா, சேவல் சண்டை, புழுதி, வெயில், கையாளாகாத போலீஸ், காசிற்கு வேலை செய்யும் மீடியா, ஊழல் அதிகாரிகள் என்று ஆக்ஷன் படமாக இருந்தாலும் மண் சார்ந்த படமாக வெளிவந்திருக்கிறது La Soga. நம் ஆடுகளத்தை விட அருமையாக, டீடெய்லாகப் படம் பிடிக்கப்பட்ட சேவல் சண்டைக்காட்சி ஒன்று படத்தில் உண்டு.

Josh Crook என்பவரது இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படம் Toronto திரைப்படவிழாவில் திரையிடப்பட்ட ஒரே டொமினிக்கன் நாட்டுத் திரைப்படம். கதை எழுதியதோடு மட்டுமல்லாமல், இணை தயாரிப்பாளராகவும் ஹீரோ Luisito வாகவும் நடித்திருப்பவர் Manny Perez. ஹாலிவுட் டிவி சீரீஸ்களில் இவரைப் பார்த்திருக்கலாம். ப்ரென்ச் தாடியும், கூலர்ஸுமாக தெலுங்கு ஹீரோ கணக்கா ஜம்மென்று இருக்கிறார். நம்மூர் ஹீரோ போல ரொம்ப நல்லவனாக, சண்டை என்று வந்துவிட்டால் கில்லியாக, விலங்குகளிடம் பாசமாக, காதலியிடம் கனிவாக என்று வெரைட்டி காட்டியிருக்கிறார்.

ஒரு முறை பார்க்கக்கூடிய பரபர ஆக்ஷன் திரைப்படம்

பிடித்திருந்தால் லைக் & ஷேர் செய்யுங்கள். நண்பர்களுக்கும் இந்தப் பக்கத்தைப் பரிந்துரைத்து மகிழ்ந்திருங்கள் :)

**************************


'La Soga' Luisito is a government enforcer working for General Colon, the head of the secret police. Luisito's job is to track drug dealers and other crooks, assassinate them in public and parade their bodies around as a message. He has a troubled past witnessing his dad's death by a local thug who's now in hiding in the U.S. Luisito waits patiently for the day his father's killer is deported back to Santiago so he can have his revenge. The past is said in flashback which includes a childhood love story also.

Movie begins with an excellent chase thorugh the narrow streets of Santiago City giving us an excellent view of its landscape, people and life in Dominican Republic. Luisito father is a butcher and there is a pig butchering scene in the movie which is 100% real. There is also a rooster fight scene which is excellently picturised.

The movie is a Dominican Production and was shot in Dominican Republic which is rare for a country without a Film Industry which makes this usual action movie special.

Dir. Josh Crook
Directed by Josh Crook, La Soga becomes the only film to be screened in the Toronto International Film Festival. Manny Perez, the Luisito is also the story writer and Co-producer of the movie.

One Time watchable racy action movie

Trailer - https://www.youtube.com/watch?v=dtwJClRONjA
Download Link - http://extratorrent.date/torrent/3103534/La+Soga+%2A2009%2A+%5BDVDRip%5D+%5BXviD-BiDA%5D+%5BLektor+PL%5D+%5BAgusiQ%5D.html

Blog - http://babyanandan.blogspot.in/2016/05/100-100.html
Letterboxd - https://letterboxd.com/pradeepsastra/list/100-countries-100-films-100-100/


Hit Like & Share. Recommend this page to your friends. Happy movie watching :)

You Might Also Like

0 comments

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...