நானும் எந்திரனும்...
1:28:00 PM
ஒரு வழியாக எந்திரன் டிக்கெட் கிடைத்து விட்டது. ஆனால் எவ்வளவு முயன்றும், எவ்வளவு பணம் செலவழிக்க தயாராக இருந்தும் முதல் நாள் கிடைக்கவில்லை. பெங்களூரில் ரஜினி படங்கள் என்றால் எதாவது பிரச்சனை இருந்து கொண்டே தான் இருக்கிறது. 'சிவாஜி' வெளியான சமயத்தில் நான் மங்களூரில் இருத்தேன். இதோ இதோ என்று கடைசி வரை கர்நாட்டக்காவில் படத்தை ரிலீஸ் செய்யவே இல்லை. சில புண்ணியவான்கள் 'ரஜினி படம் ஓடினால், கல்லால் அடிப்போம்' என்று கத்தியதால் தியேட்டர் உரிமையாளர்கள் பயந்து விட்டனர். சிவாஜி எப்படிப் பார்த்தேன் என்பது மறக்கமுடியாத அனுபவம். அதைப் பற்றி பிறகு சொல்கிறேன். இப்பொழுது எந்திரனுக்கு வருவோம்.
பெங்களூரில் எந்தெந்த தியேட்டர்களில் எந்திரன் ரிலீஸ் என்று சரியான தகவல் நேற்று வரை இல்லை. தமிழகத்தில் கடந்த வெளிக்கிழமையே முன்பதிவு தொடங்கிய போதிலும், பெங்களூரில் எந்த சுவடுமில்லை. B.T.M ல் இருக்கும் எனக்கு அருகில் உள்ள தியேட்டர்கள் என்று பார்த்தால் மகேஸ்வரி, லக்ஷ்மி, ஜெயா நகர் INOX அல்லது PVR. இதில் எங்கள் ஊர் 'போடி' யில் இருக்கும் ஜீவன் தியேட்டரைவிடக் மகாக்கேவலமாக இருக்கும் மகேஸ்வரி தியேட்டரில் எந்தப் படம் ஓடும் என்று தியேட்டர்காரர்களுக்கே தெரியாது. ஆனாலும் சொல்ல முடியது, வாராவாரம் எதாவது ஒரு புது தமிழ் படம் அங்கு ஓடும். பெங்களூரில் தமிழ் 'ராவணன்' நான்கு திரையரங்குகளில் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. அதில் ஒன்று இந்த மகேஸ்வரி. PVR, INOX ல் கூட ஹிந்தி 'ராவன்' தான் ஓடியது. ஆனால் பிரச்சனை என்னவென்றால் எந்திரனுக்கு ராவணனுக்கு நடந்தை விட பல மடங்கு பெரிதாக அடிதடி, தடியடி நடக்கும். ரசிகர்கள் தவ்வித்தவ்வி ஆடி, பேப்பர் பறக்க விட்டு, விசிலடித்து, சீட்டின் மேல் ஏறி நின்று படமே தெரியாது, முன்னல் இருப்பவன் தலை தான் தெரியும் (ராவணனுக்கு அப்படித்தான் ஆனது). லக்ஷ்மியிலும் கிட்டத்தட்ட இதே நிலைமை தான். அங்கும் முன்பதிவிற்கான சுவடே இல்லை. பேப்பரிலும் லக்ஷ்மியின் பெயர் இல்லை. INOXல் செவ்வாய் அன்று திடீரென சொல்லாமல் கொள்ளாமல் புக்கிங் ஓபன் ஆக, நான் அங்கு போவதற்குள் முதல் நாள் ஃபுல்.
PVR தான் ஒரே வழி அதுவும் புதன் காலை 10 மணிக்கு தான் புக்கிங் ஓப்பன் என்று அங்கு சென்று கேட்டு வந்தவர்களில் பலர் சொன்னார்கள். PVR தான் முடிவு செய்து நானும் காலை சீக்கிரமே அலாரமெல்லாம் வைத்து எழுந்து, 9 மணிக்கெல்லாம் அங்கு சென்று பார்த்தால் கூட்டமே இல்லை. என்னடா இது தலைவருக்கு இவ்வளவு தான் மரியாதையா என்று நினைக்க, ஃபோரம் மாலில் இருபுறமும் இருக்கும் டிக்கட் கவுன்ட்டர்களில் ஒரு கவுன்ட்டர் முழுவதையுமே எந்திரனுக்காக பிளாக் பண்ணி வைத்திருக்கிறார்கள் என்று தெரிந்தது. நான் ஓடிச் சென்று பார்த்த போது கூட்டம் பின்னியெடுத்துக் கொண்டிருந்தது. செக்யூரிட்டிகளும், 'கோட்' போட்ட ஆபீஸர்களும்(!) கூட்டத்தை சரிபடுத்திக்கொண்டிருந்தனர். டிக்கெட் இன்னும் கொடுத்திருக்கவில்லை. முன்பின் முகம் தெரியாதவர்கலெல்லாம் பேசிக்கொண்டிருந்தோம். முதல் ஷோ டிக்கட் விலை 750 ரூபாய் என்று செய்தி வந்தது. அனைவரும் தம்தம் பாக்கெட்டுகளை தடவிக்கொண்டும், செல்போனில் "மாப்ள 750 ரூபாயாண்டா, உனக்கும் வாங்கிரத்தானே... இல்ல கேட்டேன்" என்று பேசிக்கொண்டிருந்தனர்.
முதலில் விலை விபரத்தை டிஸ்ப்ளே செய்தார்கள். முதல் காட்சி 750 ரூ, மற்றவை அனைத்தும் 500 ரூ, கோல்ட் கிளாஸ் எனப்படும் 'சோபா செட்' போட்ட வி.ஐ.பி ஸ்கிரீனில் 1500ரூ! டிக்கெட் கொடுக்கும் ஆட்கள் ஸ்டைலாக, சரியாக 10 மணிக்கு வந்தார்கள். அறிவித்தார்கள். "FRIDAY TICKETS COMLETELY SOLD OUT". வெறியானது நின்றிருந்த கூட்டம். அதெப்படி இன்னும் ஓபன் பண்ணவே இல்லை; அதற்குள் முடிந்துவிட்டது என்று ஒரே தகராறு. யாரும் டிக்கெட் வாங்காதீர்கள் என்று ஒருவர் கத்த, நான் என் பங்கிற்கு ஒரு கவுன்ட்டரை மறைத்துக் கொண்டு நின்று விட்டேன். எனக்குப் பின்னால் இருந்தவர் யாரையும் டிக்கெட் வாங்க விடவில்லை. ஒரே கூச்சலாக, தமிழ், ஆங்கிலம், கன்னடம், ஹிந்தி என மாறி மாறி கத்தல்களுமாக இடமே அலறிக்கொண்டிருது. PVR ஆட்கள் யார் யாரோ வந்தார்கள், "நேற்று இரவே ஓப்பன் செய்து விட்டோம், நீங்கள் பார்க்கவில்லையென்றால் நாங்கள் என்ன செய்வது, டிக்கேட் இருந்தால் உங்களுக்கு கொடுப்பதில் எங்களுக்கு என்ன, வேண்டுமென்றால் போலீஸில் கூட புகார் கொடுங்கள்" என்று எதேதோ பேசினர். இங்கு காலையில் இருந்து காத்துக்கொண்டிருப்பவர்களுக்காவது டிக்கெட் கொடுங்கள் என்று கேட்டால், அதற்கும் இதே பதில் தான்.
கடைசியில் ஒன்றும் நடக்கப்போவதில்லை என்று ஆன பின், "சனிக்கிழமையும் வேகமாக தீர்ந்து கொண்டிருக்கிறது" என் அறிவிப்பு வர, நான் போய் காலை ஷோவிற்கு டிக்கெட் வாங்கி விட்டேன். செம எரிச்சல். எல்லாமே வேஸ்ட். கடுப்புடன் வீடு வந்து வந்தேன். மாலை அலுவலகத் தோழி ஒருவர் அவர் தம்பியின் நண்பர் PVR ரில் வேலை பார்ப்பதாகவும் அவர் ஒருவரே முதல் நாள் ஷோவிற்கு கிட்டத்தட்ட 90 டிக்கெட்களை வாங்கி விற்றதாகவும், அதிலேயே 40,000 ரூபாய் லாபம் கண்டுவிட்டதாகவும் கூறினார். அடங்கொக்க மக்கா, 40,000ரூ! என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. ரஜினி படமென்றால் யாராக இருந்தாலும், எந்த வழியாக இருந்தாலும் லாபம் தான் என்பது உறுதியானது. ஒருவனே 90 டிக்கெட் வாங்கினான் என்றால், எங்களுக்கு எப்படிக் கிடைக்கும். என்ன நடக்கிறது அங்கே. எதுவும் புரியவில்லை. ஒன்று மட்டும் உறுதி. கடைசி நேரத்தில் மகேஸ்வரியில் போடப்போகிறார்கள், வெள்ளிக்கிழமை முதல் ஷோ சட்டை கிழிந்து, லத்தியடி வாங்கி தான் தலைவர் படம் பார்க்கப் போகிறேன் என்று நினைக்கிறேன். அதன் பின் பொறுமையாக PVR சனிக்கிழமை காலை பார்த்துக்கொள்ளலாம்.
சிவாஜிக்கு நடந்ததெல்லாம் மிகப்பெரிய கதை. மங்களூரில் ரிலீஸ் ஆகவில்லை என்று தெரிந்ததும், விடியற்காலையிலேயே எழுந்து ரயில் பிடித்து, இரண்டு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, கேரளாவில் ஒரு ஊரில் இறங்கி, அங்கிருந்து அரை மணி நேரம் ஆட்டோவில் சென்று, அந்த டொக்கு தியேட்டரைக் கண்டுபிடித்து கூட்டத்தில் தள்ளுமுள்ளுகளை சமாளித்து, டிக்கெட் வாங்கி, விசிலடித்து விசிலடித்து வாய் வலித்து, இண்டர்வலிலேயே அடுத்த ஷோவிற்கும் டிக்கெட் வாங்கி ஒரே நாளில் இரண்டு முறை அடுத்தடுத்து சாப்பிடாமல் கொள்ளாமல் சிவாஜி பார்த்ததெல்லாம் மறக்கவே முடியாத அனுபவம்.
நாங்கள் சென்ற அந்த ஊரின் பெயர் மறந்து விட்டது. ஆனால் மிகவும் ரம்மியமாக இருந்தது அந்த சிறிய ஊர். லேசாகத் தூரிக்கொண்டு, பச்சைப் பசேல் என்று சொர்க்கபூமியாகத் தெரிந்தது.
சன் டிவியும் 5 நிமிடத்திற்கு ஒரு முறை தனது 5 சேனல்கள் என்ற கணக்கில் சன் டிவி, கே டிவி, சன் மியூசிக், சன் செய்தி, சுட்டி டிவி என்று தொடர்ந்து டிரைலர், ஷங்கர் பேட்டி, ரஹ்மான் பேட்டி என்று ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கிறார்கள். படத்தைப் பார்க்காதவர்கள் கடும் தண்டனைக்கு ஆளாவார்கள் என்று தான் இன்னும் சொல்லவில்லை. மொத்தத்தில், தலைவர் படமென்றால் அது சும்மா "வந்தோமா பாத்தோமா" கேஸெல்லாம் இல்லை, அதிரடி அனுபவம் தான். அடுத்த அனுபவத்திற்காக காத்திருக்கிறேன்.
டிஸ்க்: இந்தப் படம் சிவாஜி பெங்களூரில் பலப் பிரச்சனைகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆன போது எடுத்ததாம். நெட்டில் கிடைத்தது...
22 comments
Why can't you wait and watch the movie after 15 days?
ReplyDeletenice...
ReplyDelete//சிவாஜிக்கு நடந்ததெல்லாம் மிகப்பெரிய கதை. மங்களூரில் ரிலீஸ் ஆகவில்லை என்று தெரிந்ததும், விடியற்காலையிலேயே எழுந்து ரயில் பிடித்து, இரண்டு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, கேரளாவில் ஒரு ஊரில் இறங்கி, அங்கிருந்து அரை மணி நேரம் ஆட்டோவில் சென்று, அந்த டொக்கு தியேட்டரைக் கண்டுபிடித்து கூட்டத்தில் தள்ளுமுள்ளுகளை சமாளித்து, டிக்கெட் வாங்கி, விசிலடித்து விசிலடித்து வாய் வலித்து, இண்டர்வலிலேயே அடுத்த ஷோவிற்கும் டிக்கெட் வாங்கி ஒரே நாளில் இரண்டு முறை அடுத்தடுத்து சாப்பிடாமல் கொள்ளாமல் சிவாஜி பார்த்ததெல்லாம் மறக்கவே முடியாத அனுபவம்.//
ReplyDeleteBoss, great experience.....
என்னால நினச்சு குட பார்க்க முடியல .......நீங்க தான் உண்மையான ரஜினி விரும்பி..... அந்த linesaa முச்சு விடாம படிச்சேன்......Great Boss...
Oct -1 nite 10:30 வரைக்கும் வெயிட் பண்ண முடியல...........................
@Vee: பார்க்கலாம் தான், ஆனால் அதென்னமோ தெரியவில்லை. ரஜினி படமென்றல் எப்படியவது முதல் ஷோ பார்த்துவிடுவேன். அதில் தான் எனக்கு மகிழ்ச்சி. வருகைக்கு நன்றி.
ReplyDelete@புதிய மனிதா: நன்றி நண்பரே
@Raj: நீங்க நம்மாளு நண்பரே, வருகைக்கு நன்றி...
@ கருந்தேள்: நண்பரே ரஜினி படம் பார்ப்பது, அதுவும் முதல் நாளே பார்ப்பது எனக்கு அதிகமான மகிழ்சியைத் தரும் விஷயம். அவ்வளவுதானே தவிர, அதனால் ரஜினிக்கு என்ன பயன், முதல் நாள் படம் பார்க்கும் என்னைப்போன்ற ரசிகர்களுக்கு அவர் என்ன செய்தார், என்ன நினைக்கிறார் என்பதைப் பற்றியெல்லாம் எனக்குக் கவலையேயில்லை. நான் சந்தோஷமடைகிறேன், அது தான் எனக்கு முக்கியம். ரஜினி என்ன மதிக்கல (அல்லது ரசிகர்களை மதிக்கல), அதனால அவர் படத்த நான் பார்க்கமாட்டேன் என்று நீங்கள் சொன்னால், யாரும் உங்களைத் தடுக்கப் போவதில்லை. அதனால் உங்காளுக்கும், மற்றவர்களுக்கு, ரஜினிக்கும் எந்தப் பிரயோஜனமும் இல்லை. உங்களுக்கும் எனக்கும் ஒரு சிறிய வித்யாசம் தான். நான் படங்களை மட்டுமே பார்க்கிறேன். அதிலிருக்கும் நல்ல கதை, திரைக்கதை, வசனம், இசை இவற்றையெல்லாம் தான் எதிர்பார்க்கிறேன். நீங்காள் அதில் வேலை செய்தவர்களையும், நடிப்பவர்களையும் சேர்த்து எதிர்பார்க்கிறீர்கள். யார் எப்படிப் போனால், என்ன செய்தால், எப்படி பேட்டி கொடுத்தால், எப்படி புகழ் பெற்றால் நமக்கென்ன? அந்தப் படங்களால் நாம் சந்தோஷமடந்தோமா? அது தான் முக்கியம். சினிமாவை ரசிப்பவனுக்கு, சினிமா மட்டும் தான் தெரியவேண்டும். அதில் நடித்தவர்கள் என்ன செய்கிறார்கள், எப்படி வளர்கிறார்கள், எதைப் பார்த்து இப்படி நடித்தார்கள் என்பதெல்லாம் தேவையில்லை என்பது என் கருத்து :)
@ கருந்தேள்: நண்பரே, எந்திரன் முதல் நாள் டிக்கெட் வேண்டுமென்றால் சொல்லுங்கள். எப்படியாவது ஏற்பாடு செய்கிறேன் :)
ReplyDeleteஉங்க கருத்தைப் படிச்சப்புறம்தான், பீர் அபிஷேகம் எட்ஸெட்ரா செய்யும் ரசிகனின் மனப்பான்மை எனக்குப் புரிகிறது.. ;-)
ReplyDelete//சினிமாவை ரசிப்பவனுக்கு, சினிமா மட்டும் தான் தெரியவேண்டும். அதில் நடித்தவர்கள் என்ன செய்கிறார்கள், எப்படி வளர்கிறார்கள், எதைப் பார்த்து இப்படி நடித்தார்கள் என்பதெல்லாம் தேவையில்லை என்பது என் கருத்து :)//
ரைட் .. இதே கருத்தை மற்ற விஷயங்கள்லயும் வெச்சிருக்கீங்களா ;-) .. எது நடந்தாலும் சரி.. எது எப்புடிப் போனாலும் சரி.. எனக்கு சந்தோஷம் வேணும்.. அவ்வளவு தான்.. இதுதான் எல்லா விஷயங்கள்லயும் உங்க கருத்தா? :-)
மத்தபடி, டெஃபனைட்டா ரஜினியின் சுயநலம் அத்தனை பெருக்கும் தெரிந்த ஒன்று தான் ;-). ஊரையே ஏமாற்றிக்கொண்டிருக்கும் அந்த ஆள், தன்னோட படம் ரிலீஸாகும்போது மட்டும் ரசிகர்களை கவர இண்ரட்வியூ கொடுப்பார். . மத்த நேரங்களில் ஆள் டோட்டல் அப்ஸ்காண்ட் ;-) ..
ஏங்க.. இவ்வளவு சுயநலமன ஒரு ஆளின் படத்தை, அப்படித்தான் பார்ப்பேன் என்று சொல்றீங்க.. ;-) .. ரைட்டு.. எஞ்சாய் ;-)
பை த வே, ஃபர்ஸ்ட் டே டிக்கட் எனக்குத் தேவையே இல்லை ;-) .. வேறு யாராவது பீர் அபிஷேக ரசிகருக்கு.. ச்சே.. வெறியருக்கு அனுப்பவும் ;-)
நான் ஆட்களையும் எடை போடுவதற்குக் காரணம், எனக்குள் இருக்கும் சமூக அக்கறை என்ற ஒரு சின்ன விஷயம் தான் ;-) .. வேற ஒண்ணும் இல்லை ;-) ..
ReplyDeleteபதிலுக்கு நன்றி நண்பரே... இதோ எனது பதில்கள்
ReplyDelete//ரைட் .. இதே கருத்தை மற்ற விஷயங்கள்லயும் வெச்சிருக்கீங்களா ;-) .. எது நடந்தாலும் சரி.. எது எப்புடிப் போனாலும் சரி.. எனக்கு சந்தோஷம் வேணும்.. அவ்வளவு தான்.. இதுதான் எல்லா விஷயங்கள்லயும் உங்க கருத்தா? :-)//
சினிமாவைற்கு மட்டும் தான் இப்படி. மற்ற விஷயங்களில் நான் அப்படியே உல்டா. என்னை என்ன ஸேடிஸ்ட் என்று நினைத்து விட்டீர்களா என்ன? சினிமா இப்போதைக்கு எனக்கு ஒரு Entertainment Media அவ்வளவுதான்...
//மத்தபடி, டெஃபனைட்டா ரஜினியின் சுயநலம் அத்தனை பெருக்கும் தெரிந்த ஒன்று தான் ;-). ஊரையே ஏமாற்றிக்கொண்டிருக்கும் அந்த ஆள், தன்னோட படம் ரிலீஸாகும்போது மட்டும் ரசிகர்களை கவர இண்ரட்வியூ கொடுப்பார். . மத்த நேரங்களில் ஆள் டோட்டல் அப்ஸ்காண்ட் ;-) ..
ஏங்க.. இவ்வளவு சுயநலமன ஒரு ஆளின் படத்தை, அப்படித்தான் பார்ப்பேன் என்று சொல்றீங்க.. ;-) .. ரைட்டு.. எஞ்சாய் ;-) ..//
சரிதான் நண்பரே... மறுபடியும் நான் சொன்னதையேத்தான் சொல்கிறேன். ரஜினி எப்படிப் போனாலும், எப்படிப் பட்ட ஆளாக இருந்தாலும் எனக்கென்ன பாஸ். அவரது படம் எனக்கு திருப்தியைத் தருகிறது. நண்பர்களுடன் சேர்ந்து ஆட்டம் போட ஒரு நல்ல சந்தர்பத்தைத் தருகிறது. நாங்கள் அனைவரும் சந்தோஷமடைகிறோம். அது தான் எனக்கு முக்கியம். மற்றபடி நான் எந்த நடிகருக்கும் வெறியன் அல்ல (கமல் உட்பட ;)) நல்ல சினிமா, எனக்கு திருப்தி அளிக்கும் சினிமா, ஏதாவது ஒரு வழியில் என்னை மகிழ்விக்கும் சினிமாவின் வெறியன் நான் அவ்வளவுதான்... அது ரஜினி படமாக இருந்தாலும் சரி, கருணாஸ் படமாக இருந்தாலும் சரி...
//நான் ஆட்களையும் எடை போடுவதற்குக் காரணம், எனக்குள் இருக்கும் சமூக அக்கறை என்ற ஒரு சின்ன விஷயம் தான் ;-) .. வேற ஒண்ணும் இல்லை ;-) ..//
சமூக அக்கறை என்பது சின்ன விஷயம் அல்ல, நல்ல விஷயம். தொடரட்டும் உங்கள் பணி... :)
(பி.கு: உங்களது கமல் பற்றிய பதிவுகளில், பல இடங்களில் "நான் ஒரு ரஜினி ரசிகன்" என்று நீங்கள் சொல்லியிருப்பதாய் ஞாபகம்...)
நண்பரே,
ReplyDeleteஎன்சாய் :))
Padam super hit
ReplyDeletePadam super hit
ReplyDelete@வெற்றி: தல விடுங்க தல, கருந்தேள் என் நண்பர். இங்கு அவர் கருத்துக்களைக் கூற அவருக்கு உரிமை இருக்கிறது. நாம் அதற்கு பதில் சொல்லலாம். கோபப்படக்கூடாது...
ReplyDeleteவருகைக்கு நன்றி. படம் பார்த்துவிட்டு கருத்துகளைப் பகிரவும்:)
போடி 'ஜீவன்' தியேட்டர் தனம்,ஆனந்த்,பொன்னு,சென்ட்ரல் தியேட்டர்களை விட நல்லாத்தானே இருந்தது.இப்ப என்ன ஆச்சு?அங்க படம் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டன.கடைசியாக அங்கே பார்த்த ரஜினி படம் 'எஜமான்'.
ReplyDeleteதலைவா.........நீங்க போடியா!!!!!!!!!! நானும் போடிநாயக்கனூர் தான்
ReplyDelete@Mohan: ஜீவன் அப்படியேதான் இருக்கிறது, தனம் வெற்றி DTS ஆகிவிட்டது, மற்றபடி மீனாட்சியில் சிறிது மாற்றங்கள் செய்யப்பட்டு கொஞ்சம் நன்றாக இருக்கிறது. பொன்னு சினிமாவில் எந்த மாற்றமும் இல்லை. உங்களின் அறிமுகம் கிடைத்ததில் மகிழ்ச்சி. வருகைக்கு நன்றி.
ReplyDelete@Lucky Limat லக்கி லிமட்: ஆமாம் தல, நானும் போடிக்காரன்தான். SCISM School பக்கத்தில் தான் வீடு. இப்போது வேலையில் இருப்பது பெங்களூர். வருகைக்கு நன்றி. ஊர்க்காரர் அறிமுகம் கிடைத்ததில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி :)
@ கனவுகளின் காதலன்: நன்றி நண்பரே. நீங்க எப்போ பார்க்கப்போறீங்க?
ReplyDelete@Mrs. Krishnan: பின்ன இல்லாமலா, கண்டிப்பாக படம் சூப்பர் டூப்பர் ஹிட்... வருகைக்கு நன்றி
எனக்கு கமலை விடவும் பிடிக்காத நபர் ரஜினிதான் ;-) ..
ReplyDeleteமற்றபடி, நாம ஏங்க அடிச்சிக்கணும்? நீங்க இப்ப பாருங்க.. நான் நெக்ஸ்ட் வீக் பார்ப்பேன் ;-) ..
அப்புறம், இந்த வெற்றிங்குற ஆள், கொஞ்சம் அறிக்கைகளை போட்டு தாக்கிக்கினு இருக்காரு ;-) .. அவரு சொன்ன விஷயங்களை, ஒரு கல்வெட்டுல பொறிச்சி, ரசினிக்கி அனுப்பி வைக்க சொல்லுங்க ;-) அப்பவாவது அந்த ‘நடிகர்’, தன்னையே நம்பியிருக்கும் அப்பாவி ரசிகர்களை கடைத்தேற்றுறாரான்னு பார்ப்போம் ;-)
தம்பி வெற்றி.. கடிச்சித் துப்ப நீ என்ன நாயா? :-) நீ எந்த ஷோ பார்த்தா எனக்கென்ன ? :-) நான் பேசினது ஆனந்தன் கிட்ட.. நீ போயி போஸ்டர் ஒட்டுற வேலையப்பாரு ராசா ;-) போ போ.. சூ சூ..;-)
@ கருந்தேள் கண்ணாயிரம்: நாம எங்க தல அடிசிக்கிட்டோம். நான் என் கருத்தைச் சொன்னேன், நீங்க உங்க கருத்தைச் சொன்னீங்க, நடுவுல வெற்றி அவர் கருத்தைச்(!) சொன்னார்.
ReplyDelete//மற்றபடி, நாம ஏங்க அடிச்சிக்கணும்? நீங்க இப்ப பாருங்க.. நான் நெக்ஸ்ட் வீக் பார்ப்பேன் ;-) .. // - அவ்வளவு தான். டோன்ட் வொரி, பி ஹேப்பி :)
Baby ஆனந்தனின் பதிவுகளை படிப்பவன் என்ற முறையில்....
ReplyDeleteகமெண்ட் பார்த்திட்டு உண்மையிலேயே ரொம்ப சங்கடமா இருந்தது.கொஞ்சம் நல்ல விதமா பகிர்ந்துக்கலாமே..முகம் தெரியாத ஆட்களின் மீது ஏன் இப்படி.....
கருந்தேளுக்கும் Baby ஆனந்தனுக்கும் இடையே உள்ள புரிதலை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது.இது போன்ற புரிதல்களே பல கருத்துப் பரிவர்த்தனைகளுக்கு வழி வகுக்கும்.
தள நாகரிகம், கருதி எப்பூடி, வெற்றி அவர்களது பின்னூட்டங்கள் அழிக்கப் பட்டுவிட்டன.
ReplyDeleteஇனி இது போலான மட்டமான, மரியாதையற்ற பின்னூட்டங்கள் இட நினைப்பவர் எனது தளத்திற்கு தயவு செய்து வரவே வேண்டாம்...
@ நண்பர் கருந்தேள் மன்னிக்கவும், என்னை மீறி நடந்த தவறு இது. இனி இது போல் நடக்காது. ஸ்ல விஷமிகள் செயலால் நம் நட்பு பாதிக்காது என நம்புகிறேன்...
@ @ கொழந்த: நீங்களும் மன்னிச்சிக்கோங்க தல. ஆதரவிற்கு நன்றி
ஆஹா... உங்கள கமெண்ட் மாடரேஷன் போட வெச்சிட்டாங்களே ..
ReplyDelete@VJR: வருகைக்கு நன்றி நண்பரே. பலருக்கு அதிருப்தி அளித்த அந்த அந்தப் பின்னூட்டத்தை அழித்து விட்டேன்.
ReplyDeleteமேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...