நானும் எனது டிவிடிக்களும்... பாகம் 01
12:41:00 PMபத்தாம் வகுப்பு முடிக்கும் வரை தமிழ் படங்களே அதிகம் பார்க்காதவன் இப்போது தியேட்டரில் வாரம் இரு படம், வீட்டில் தினம் ஒரு படம் என்னும் அளவிற்கு சினிமா என்னை ஆட்கொண்டதைப் பற்றி பல நாட்கள் எழுத வேண்டும் என்கிற ஆசை இருந்து கொண்டே இருந்தது (யாரும் படிக்கப் போவதில்லை என்றாலும் வருங்காலத்தில் பார்த்து மகிழ ஒரு டைரி குறிப்பு மாதிரியாவது கிடக்கட்டுமே என்று தான்).
சரி ஆதிகாலத்திலிருந்து வருவோம். அப்பாவுடன் மொத்தமாக ஒரு பத்து ஆங்கிலப் படங்கள் தியேட்டரிலும், சில படங்கள் டிவியிலும் பார்த்திருந்தாலும், ஆங்கிலப் படங்களின் மேல் அதீத ஆர்வம் வந்ததற்கு முக்கிய காரணம் நான் வளர்ந்த ஊரான தூத்துக்குடியில் இருந்த பாய் காம்ப்ளெஃஸ் (Bhai Complex). ஆங்கிலப் பட சிடிக்களை அங்கு குமித்து வைத்திருப்பார்கள். ஒரு குறுகிய சந்தில் முப்பதிற்கும் மேற்பட்ட கடைகள். அதில் சுமார் இருபது சிடி கடைகள். நாள் கிழமையென்றெல்லாம் கிடையாது. எத்தனை மணிக்குப் போனாலும், என்று போனாலும் கூட்டம் அலை மோதும். ஆனாலும், அவ்வபோது போலீஸ் ரெய்டு வந்து மொத்தமாக அள்ளிச் சென்று விடுவார்கள். ஒரே வாரம் தான், மறுபடியும் கச்சேரி கலை கட்டிவிடும். இதில் என்னுடன் பக்கபலமாய்ச் செயல் பட்டது எனது நீண்ட நாள் (இப்போதும்) நண்பனான வசந்த்.
கம்ப்யூட்டர் வாங்கித் தருவார்கள், படம் பார்க்கலாம் என்பதற்காகவே +1, +2 வில் கம்ப்யூட்டர் சயின்ஸில் சேர்ந்தவன் நான். வீட்டில் எனக்கு கொடுக்கப்படும் கைக்காசு, அதுபோக வீட்டில் நான் சுடும் காசு என அனைத்தும் ஆங்கிலப் பட சிடிகளாய் உருமாறின. ஸ்டார் மூவீஸ், எம்.ஜி.எம் பார்த்து விட்டு ஆங்கிலப் படக்கதைகளை சொல்லும் பயல்கள் ஒரு சிலரே இருந்ததால் மற்றவர்களுக்கு பெயர் கூடத் தெரியாத ஆங்கிலப் படங்களைப் பற்றிப் பேசும் நான் நண்பர்கள் மத்தியில் சீக்கிரமே பேமஸ் ஆனேன். நாளொறு படம், பொழுதொறு சினிமா என்று நாசமாய்ப் போனது எனது +1, +2. பிறகுதான் தஞ்சாவூர் பேமஸ் 'SASTRA' பல்கலைக்களகத்தில் எனக்கு சீட் கிடைத்தது. சிடிக்கள் டிவிடிக்களாக மாறிக் கொண்டிருந்த கால கட்டம் அது. என்னிடம் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆங்கிலப் பட சிடிக்களை என்ன செய்வதென்றே தெரியவில்லை. அங்கு இங்கு என்று வீட்டிலும் ஒளித்து வைக்கவும் முடியவில்லை. ஓசி வாங்கிச் சென்ற நண்பர்களும் திருப்பித் தரவில்லை. மீதியிருந்ததில் பாதியை பாதி விலைக்கு விற்று விட்டு, மீதியை உடைத்தெறிந்து விட்டு தஞ்சாவூர் வந்து சேர்ந்தேன். தஞ்சாவூர் என் சினிமா வாழ்க்கையை (?!?!) மாற்றிப் போட்டது.
(படத்துல இருக்குறது நானில்லிங்கோ...)
அவனவன் வீட்டில் கொடுக்கும் காசை தம், தண்ணி, சாப்பாடு என்று கழிக்க, நான் தியேட்டர், தியேட்டராய் ஏறி இறங்கினேன். தியேட்டர் டிக்கட் பின்னால் பார்த்த படத்தின் பெயரை எழுதி வைத்து, முதல் செமஸ்டரின் விடுமுறையில் என் அப்பாவிடம் கொண்டு போய் கொடுத்தேன். அது என்னமோ எனக்கு ஜாலியாக இருந்தது, என் அப்பாவிற்கு கிலியாக இருந்திருக்கும். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தைச் சுற்றி ஏகப்பட்ட டி.வி.டி கடைகள் இருந்தது. தூதுக்குடியை விட இரு மடங்கு அதிகம். எங்கு காணினும் திருட்டு விசிடி அல்லது ஆங்கில டிவிடி. நான் டிவிடிகளாய் வாங்கித் தள்ளினேன். பல சமயம் டி.வி.டி வாங்க காசில்லாமல் என்னிடம் இருக்கும் டிவிடியையே எனக்கு ஒரு காப்பி போட்டு வைத்து விட்டு, வேறு யாருக்காவது விற்று விடுவேன். இப்போது நினைத்தாலும் சிரிப்பாக வருகிறது. 60 ரூபாய்க்கு வாங்கிய படத்தை, 120 ரூபாய்க்கு விற்று அதில் வேறு இரண்டு படங்கள் வாங்குவேன். என்னிடம் டிவிடி வாங்குவதற்கும் ஆள் இருக்கும். அப்படி விற்றதில் எனக்கு டைமண்ட் கஸ்டமர் ஆனவனெல்லாம் இருக்கிறான். முதல் இரு வருடங்கள் வீட்டில் இருந்த எனது கம்ப்யூட்டரை ஹாஸ்டலிற்கு எடுத்து வருவதில் அதிக சிக்கல் இருந்தது. என் அப்பா இந்த முறையும் ஏமாற விரும்பவில்லை. கம்ப்யூட்டரைக் கொடுத்தால் நான் கண்டிப்பாய் நாசமாய்ப் போவேண் என்ற நினைப்பில் அவர் படு ஸ்ட்ராங்காக இருந்தார். எப்படியோ அவரைச் சரிகட்டி மூன்றாம் வருடம் எனது சிங்கக்குட்டியை (என் இனிய கணிணி!) என்னுடன் எடுத்து வந்தேன். INTERVAL...
படு மொக்கையாக இருந்த என் சிஸ்டம் கான்பிகரேஷனை பக்காவாக அப்டேட் செய்து எனது செகண்ட் இன்னிங்க்ஸை தொடங்கினேன். தினம் இரண்டு படங்கள், வெளியே செல்வதென்றால் அது ஒன்று தியேட்டருக்குப் படம் பார்க்க அல்லது டி.வி.டி வாங்குவதற்காக என்று ஓடிக்கொண்டிருந்தது வாழ்க்கை. என்னைப் பார்த்தாலே கடைக்குள்ளிருந்து ஸ்டூல் எடுத்துப் போட்டு, கடைப் பையனிடன் டீ வாங்கி வரச் சொல்லும் கடைக்காரர்களெல்லாம் உண்டு. யாருமே இதுவரை பார்த்திராத தஞ்சை டிவிடி கொடௌனிற்கே என்னை அழைத்துச் சென்றவர்களெல்லாம் உண்டு (எவ்வளவு பெருமை, த்தூ... என்று நீங்கள் துப்புவது தெரிகிறது). அந்த வீதியில் இருக்கும் டிவிடி கடைகள் எல்லாவற்றிலும் ஏறி இறங்குவேன். குறைந்த பட்சம் ஒரு மணி நேரத்தையாவது சாதாரணமாக ஒரு கடையில் கழிப்பேன். ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு கலெக்ஷன் இருக்கும். யார் படம், யார் இயக்குனர் எதையும் அப்போது கண்டுகொள்ளவில்லை. என் லைப்ரரியில் இல்லையா, உடனே வாங்கி விடுவேன். அது என்னவோ தெரியவில்லை ஆரம்பத்திலிருந்தே படம் பார்ப்பதை விட படம் சேர்ப்பதில் எனக்கு அதீத ஆர்வம் இருந்தது. தஞ்சாவூரில் வாங்கிய டிவிடிகளில் பலதையே இன்னும் நான் பார்க்கவில்லை என்பதே உண்மை.
பார்ப்பது இருக்கட்டும் வாங்கிய டிவிடிகளை பாதுகாப்பது எவ்வளவு பெரும் பாடு தெரியுமா? நம்ம நட்பு தானே என்று என் ரூமிற்குள் புகுந்து, பையைத் திறந்து இருக்கும் டிவிடிக்களை 'பாத்துட்டு தந்துற்றேன் மாப்ள' என்று அள்ளி செல்லும் நண்பர்களிடமிருந்து அவற்றைத் திருப்பி வாங்குவது சாதாரண காரியமில்லை. திருப்பிக் கேட்டால் அவன் வைத்திருக்கிறான் இவன் வைத்திருக்கிறான் என்று சொல்வார்கள். அவர்களுக்கு அது 'after all' சினிமா டிவிடி. ஒன்று இரண்டு என்றுதான் என்னிடமும் இருந்தன என்றால் எனக்கும் அது 'so called' after all ஆகத் தான் இருந்திருக்கும். என் நிலைமையே வேறு. என் நேரம், ஆர்வம், முக்கியமாக அப்பா எனக்குத் தந்த பெரும் பாதி பணம் என்று எனக்கு அவை தான் எல்லாமே. ஏதாவது ஒரு அறை மூலையில் குப்பைக்கு நடுவில் எனது பேர் போட்ட டிவிடிகளை பல முறை பார்த்திருக்கிறேன். எவன் எடுத்துச் சென்றது, எப்படி இங்கு வந்தது என்று தெரியாது. ஆனாலும் ஹாஸ்டலையே ஒரு ரவுண்ட் அடித்து வரும் எனது பட டிவிடிகள். சும்மாவே வைத்திருந்தாலும் தூசி படிந்து ஸ்கிரேட்ச் (scratch) ஆனது. “அப்பா சாமி... முடியல” என்றானது என் நிலைமை.END OF PART 1.
டிஸ்கி 01: எவ்வளவோ ஆங்கிலப் பட டிவிடிகளை நான் பல வழிகளில் வாங்கியிருந்தாலும், நான் வைத்திருக்கும் தமிழ் பட டிவிடிக்கள் அனைத்தும் ஒரிஜினள்களே! அந்த அளவில் என்னால் முடிந்த வரை தமிழ் சினிமாவிற்கு தீங்கு விளைவிக்காமல் நடந்து கொண்டுவருகிறேன்.
டிஸ்கி 02: நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சரி, படித்தாலும் படிக்காவிட்டாலும் சரி, இதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் விரைவில் வரும்... முக்கியமான சங்கதிகள் நிறைந்திருக்கும் அந்த பகுதிக்காக காத்திருங்கள் :)
10 comments
nice post , waiting for the second part.
ReplyDeleteயாருமே இதுவரை பார்த்திராத தஞ்சை டிவிடி கொடௌனிற்கே என்னை அழைத்துச் சென்றவர்களெல்லாம் உண்டு (எவ்வளவு பெருமை, த்தூ... என்று நீங்கள் துப்புவது தெரிகிறது)//
i enjoyed the same privilege in trichy
Good hobby . Are you have world classic movies in your library.
ReplyDeleteஇடுகைக்கும்,பியானிஸ்ட்க்கும் ஒரு ஹாய்!
ReplyDelete@SPIDEY: வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி SPIDEY. திருச்சி தெப்பக்குளம் அருகில் இருக்கும் ஒரு கொடௌனிற்கு நானும் போயிருக்கிறேன் :)
ReplyDelete@muthu: வருகைக்கு நன்றி muthu. உலக சினிமாக்களும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு என் கலெக்ஷனில் உண்டு...
ராஜ நடராஜன்: நன்றி நண்பரே.
பாஸ்..உங்க பதிவு ஏன் feedburnerல் அப்டேட்
ReplyDeleteஆகல..ஒருவேள என்னுடைய ப்ளாக் கோளாறானா..மத்த பதிவுகள் சரியா அப்டேட் ஆகுது. கொஞ்சம் செக் பண்ணுங்க.
நீங்க சொன்ன மாதிரி டிவிடி, புத்தகங்கள் இவைகள இரவல் தர நா பெரிதும் யோசிப்பேன். நம்ம பாத்துத் பாத்து வாங்கி வெச்சிருப்போம். சுலபமா scratch பண்ணிருவாங்க. இல்ல தொலைச்சுருவாங்க.
//நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சரி, படித்தாலும் படிக்காவிட்டாலும் சரி, இதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் விரைவில் வரும்//
ReplyDeleteஅதுல முடிஞ்சா ரொம்ப கஷ்டப்பட்டு அலைஞ்சு திரிஞ்சும் கெடைக்காத ஒரு படம் தீடீர்னு கெடச்சா ஒரு சந்தோஷம் வருமே அது குறிந்தும் எழுதுங்க..
@கொழந்த: நண்பரே, இப்போது FeedBurner பிரச்சனை இல்லை என்று நினைக்கிறேன்.
ReplyDeleteகண்டிப்பாக நான் பல நாள் தேடிக் கிடைத்த படங்களைப் பற்றி எழுதுகிறேன். வருகைக்கு நன்றி
விகடனாவது விமர்சனம் எழுதலாமா இல்ல அதுவும் தப்பான்னு சொல்லிடுங்க சார்.
ReplyDeleteI enjoyed reading it. You must be having plenty of good collection. Thanks for sharing.
ReplyDeleteneenga nalla ezudureenga
ReplyDeleteமேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...