நம்ம ராசியே இப்படிதாங்க...

7:24:00 AM


சென்ற வார 'நாளைய இயக்குனர்' (05.09.2010) பார்க்காமல் விட்டதால், YouTubeல் தரவிறக்கி இன்று பார்த்தேன், நொந்தேன். எதாவது ஒரு குறும்படத்தையாவது வெற்றிகரமாக எடுத்து விட வேண்டும், உயிரைக்கொடுத்து ஓடிக்கொண்டிருக்கிறேன். ஹும்... முடிந்தபாடில்லை. எல்லோரும் முதலில் எடுக்க ஆசைப் படும் ஒரு காதல் கதையைத் தான் நானும் முதலில் எடுக்க ஆசைப்பட்டேன். ஒத்து வரவில்லை. நண்பர்களுக்கு நம் 'Tragedy Ending' டைப் கதைகள் பிடிக்கவில்லை.

சரி, வேற மாதிரி எதாவது முயற்சி செய்யலாம் என்று 'அழகி' கதையை எழுதினேன். கதை கேட்ட இரண்டு பெண்கள் என் பக்கம் கூட அடுத்டு திரும்பவில்லை. ஹீரோயின் பிராப்ளம்! சரி, துணை நடிகைகள் யாரையாவது வைத்து சென்னையில் எடுக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது, விழுந்தது முதல் இடி. அப்படியே அழகி கதை போன்ற கான்செப்டில் 'Jodi No 01' தீபக் நடிக்க 'மானாட மயிலாட' ஜார்ஜ் ஒரு கதையை எடுத்திருந்தார். வேறு வேறு கதைகளாக இடுந்தாலும் ஒரே தளத்தில் இருக்கும் இந்த மாதிரி கதைகளை ஒரு முறைக்கு மேல் ரசிக்க முடியாது. முதல் முறை "ஆஹா, வித்யாசமான முயற்சி என்று பாராட்டுபவர்கள், அடுத்த முறை கண்டுகொள்ளமாட்டார்கள்". ஹீரோயினும் கிடைக்கவில்லை, தளமும் பழையதாகி விட்டது என்ற காரணத்தால், அழகியை பாதியிலேயே இறக்கி விட்டு, தாத்திமாவைக் கையில் எடுத்தேன். இந்தக் கதையை போல யாரும் எடுக்க முடியாது. ஏனென்றால் இதில் கதையே கிடையாது. கதை, தளம் என்று ஒன்று இருந்தால் தானே இந்தப் பிரச்சனை எல்லாம்? இப்போது 'தாத்திமா' முடிவடையும் தருணத்தில் உள்ளது.

ஆனாலும், ஹீரோயின் கிடைக்காத விரக்தியில் அடுத்த கதையை கையில் எடுத்தேன். கதையின் ஒன் லைனே 'நடிக்க ஒரு பொண்ணு கெடச்சா நாங்க ஏன் இப்படி யோசிக்கப்போறோம்?' என்பது தான். ஆனால் அதே கதை அப்படியே நாளைய இயக்குனரில் வரும் என்று நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. "ஐய்யோ சாமி, போதும்டா உன் லீலை" என்றாகி விட்டது என் புலம்பலின் டெசிபள். அது ஃஜ்ன்ன கதை என்று கேட்க்கிறீர்களா? நாங்கள் கேட்கவேயில்லை என்றாலும் நான் சொல்லாமல் விட மாட்டேன். நான் போன வருடம் எழுதிய 'விவகாரம்' தான் அந்தக் கதை. பெண்களுக்கு பதில் ஆண்கள் என்று மாற்றி, லீட் ரோல் பெயர் கூட முடிவு செய்து வைத்திருந்தேன் - ஜோதி (எ) ஜோதிலிங்கம். அதே கதை 'சக்தி' என்று மாறி சுடச் சுட கலைஞர் டிவியில் வந்து விட்டது. கதையின் பெயர் 'என் உயிர் சக்தி'. எடுத்திருந்தவர் பெயர் - ராகேஷ். எப்படி பட்ட கதை என்று கேட்டதற்கு 'இதுவும் ஒரு காதை கதை' என்று அழகாகச் சொன்னார்.

இது யாருடைய குற்றம்?

சத்தியமாக விதியின் குற்றமே!

பி.கு: 'என் உயிர் சக்தி' நன்றாகவே எடுக்கப்பட்டிருந்து. நான் முதலிலேயே ஊகித்து நோக ஆரம்பித்துவிட்டாலும் மற்றவர்களுக்கு கடைசில் தான் தெரிய வரும். அந்த அளவிற்கு 'சஸ்பென்ஸ்' வசனங்களின் மூலம் மிகவும் நேர்த்தியாக இருந்தது. ராகேஷுக்கு பாராட்டுக்கள்.



பி.கு 2: த்தூ... இது ஒரு பிரச்சனை என்று நீங்கள் துப்பினாலும் எனக்குப் பிரச்சனையில்லை :)

You Might Also Like

2 comments

  1. உங்களுக்குக் காமெடி நல்லா வருது தல ;-) பின்றீங்க போங்க

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...