எந்திரன் - சொன்னது போல் முதல் நாளே!

1:26:00 PM


ஒருவழியாக சபதம் நிறைவேறிவிட்டது. எந்திரன் முதல் நாளே பாத்தாச்சு... போன பதிவில் சொன்னமாதிரியே அதே மகேஸ்வரி தியேட்டர், முழி பிதுங்க வைக்கும் கூட்ட நெரிசல், காது கிழியும் விசில் சத்தம் என அக்மார்க் தலைவர் படமாக எந்திரனைப் பார்த்து விட்டேன்....


அடங்கப்பா சாமீ இந்த மாதிரி ஒரு தமிழ் படம் இது வரை நான் பார்த்ததே இல்லை. எல்லாப் புகழும் ஷங்கருக்கே (அவர் வெற்றிக்கு பின்னால் பெரிய சிம்மாசனத்தில் அமரர் சுஜாதா! - டெக்னிக்கல் விஷயங்கள், வசனங்கள் ஏ ஒன்!!) ஆரம்பம் முதல் இறுதி வரை அதகளம் தான். பல பேர் சொல்லியாச்சு, பரவாயில்லை நானும் சொல்லி விடுகிறேன், கடைசி அரை மணி நேரம், என் உணர்சிகளை என்னால் கட்டுப் படுத்த முடியவில்லை. சத்தியமாக இந்த அளவு நான் எதிர்பார்க்கவே இல்லை. கிளைமாக்ஸ் நான் எதிர்பார்த்துக்கொண்டு போனதைவிட அளவிற்கதிகமான திருப்தி... கண்டிப்பாக இந்தப் படம் ஓட வேண்டும். பெரும் பணம் போட்டு படம் எடுத்து அது ஓடவில்லையென்றால், இதுபோலான அடுத்தடுத்த முயற்சிகள் தடை பட்டுவிடும். அந்தக் கவலை வேண்டாம் என்று தான் நினைக்கிறேன். எந்திரன் நிச்சயமாக ஒரு வெற்றிப் படம் மட்டும் தான்.  இனி ஒரு மாதத்திற்கு எந்தப் படமும் ரிலீஸ் ஆகப் போவதில்லை. ரிலீஸ் ஆனாலும் ஓடாது. எல்லாம் எந்திர மயம்!

மறுபடியும் காலை 10 மணிக்கு எந்திரன் போகிறேன். இன்னும் எத்தனை முறை தியேட்டரில் பார்ப்பேன் என்று தெரியவில்லை. ஹேப்பி எந்திராவளி... :)

டிஸ்கி:

படம் பார்த்துவிட்டு இப்போது தான் வந்தேன். காலையிலிருந்து டிக்கெட்டுக்கு அலைந்ததில் எனது தளத்தைப் பார்க்கவே இல்லை. இப்போது பார்த்தவனுக்கு பயங்கர அதிர்ச்சி. எனது தளத்தின் மரியாதையே சில விஷமிகளால் கெட்டுவிட்டது. தயவு செய்து உங்களது மேதாவித்தனத்தையோ, சொந்தப்பகையையோ, அலப்பறைகளையோ எனது தளத்தில் காட்டாதீர்கள். தனிப்பட்ட எந்த நபரைப் பற்றியும் எனது தளத்தில் பேசாதீர்கள். அவ்வளவு அவசியமென்றால் யாரைப்பற்றியாவது பேசியே ஆகவேண்டுமானால் உங்கள் தளம் என்று ஒன்று இருந்தால் அங்கோ, அல்லது அவரகளது தளத்திலோ, மின்னஞல் முகவரியிலோ போய் கத்துங்கள், உங்கள் கருத்துக் குப்பைகளைக் கொட்டுங்கள். தயவு செய்து இங்கு வேண்டாம். யாருக்கும் அதற்கு அனுமதியில்லை. யாரைப் பற்றிப் பேசுவதற்கும் இது இடமல்ல.


நடந்த தவறுக்கு நண்பர்கள் மன்னிக்கவேண்டும். இனி இது போல் நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன். வழக்கம்போல் நமது நட்பு தொடர வேண்டும். உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி.

அடுத்த பதிவு எனது 100 ஆவது பதிவு. அது நிச்சயமாக எந்திரன் பற்றிய எனது கருத்துக்கள் தான். மீண்டும் உங்களை சந்திக்கிறேன்.

You Might Also Like

4 comments

  1. நண்பரே,

    ஜாலியா அனுபவியுங்க :))

    ReplyDelete
  2. உங்கள் விமர்சனம் அருமை. நினைத்தபடியே படத்தை முதல் நாளே பார்த்ததற்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. தலைவருக்காக விசமி என்ற பட்டம் எங்களுக்கு மகிழ்ச்சியே. உங்களை வருத்தப்படுத்தியதற்கு வருந்துகிறோம். அதே சமயம், ஒரு சின்னக் கோரிக்கை, தலைவரையோ அவரின் ரசிகர்களையோ தரக்குறைவான வார்த்தைகளில் விளையாடுவதையும் அனுமதிக்க வேண்டாம்.

    விசத்தை விசத்தால் முறித்தால் அதற்கு விசமம் அல்ல, மருத்துவமுன்னு நெனச்சோம்.

    அன்புடன்,
    விஜய்
    அணிமா
    கணேஷ்
    மற்றும்
    தேனி ரஜினி ரசிகர்கள்

    ReplyDelete
  4. நண்பர்களே, நானும் ஒரு தீவிர ரஜினி ரசிகன் என்று உங்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எனது முந்தைய இரு பதிவுகளையும், அடுத்து வரப் போகும் பதிவைப் படித்தால் அது உங்களுக்கு தெரியும். சம்பந்தப்பட்ட நண்பருக்கு அன்றே இனி இப்படியெல்லாம் என் தளத்தில் மட்டுமல்ல உங்கள் தளத்தில் கூட எழுதாதீர்கள் என்று தனிப்பட்ட முறையில் மின்னஞல் அனுப்பிவிட்டேன். கேட்பதும் கேட்காததும் அவர் இஷ்டம். அவர் எழுதிய அந்தப் பின்னூட்டத்தையும் அழித்துவிட்டேன், நீங்கள் முந்தைய பதிவை கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன்.

    மற்றபடி இந்தத் தளத்தில் எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியும் கீழ்தனமான வார்த்தைகளை உபயோகித்து பேசுவதை நான் அனுமத்திக்க மாட்டேன். அது மட்டும் உறுதி.

    தங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி. நானும் தேனிக்காரன்தான் (போடினாயக்கனூர்)

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...