சென்ற வாரம் - டைரி குறிப்புகள்...

11:02:00 AM


நினைத்த மாதிரியே 'சென்ற வாரம்' பல வாரம் கழித்து எழுதுகிறேன். சென்ற வாரம் வாராவாரமாக இல்லாமல் பல வாரம் விட்டு ஒரு வாரம் என்றாகிவிட்டது. வேலை பளு என்றெல்லாம் காரணம் சொல்லமாட்டேன். வார நாட்களில் பெரும்பாலான நேரம் சில சமயம் வேலையே இல்லையென்றாலும் ஆபீஸிலேயே கழிவதால், எழுத நேரம் கிடைப்பதில்லை. "கொடுத்த வேலையை முடித்து விட்டு நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள்" என்று மட்டும் என் லீட் சொல்லட்டும் தினம் ஒரு பதிவு என்று ஒரு கலக்கு கலக்கலாம். ஆனால் எந்த ஐ.டி கம்பெனியிலும் அப்படி நடக்க வாய்ப்பேயில்லை. வேலை இருக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக 9 மணி நேரம் ஆபீஸில் இருக்க வேண்டும். ஆனாலும் நன் பல சமயம் ஜகா வாங்கிவிடுவேன்.

ஐடி கம்பெனிகளில் நடக்கும் கூத்துகளைப் பற்றி ஒரு தொடர் பதிவு எழுதவேண்டுமென்பது என் நீண்ட நாள் ஆசை. பார்க்கலாம்...

நண்பன் ஒருவன் "மச்சி விண்ணைத்தாண்டி வருவாயா படம் பத்தி உன் ஸ்டைல எழுதுடா" என்று எஸ்.எம்.மெஸிருந்தான். என் ஸ்டைல் என்று எதைக்கூறுகிறான் என்று தெரியவில்லை. அந்த நட்புக்கு ஒரு மெசேஜ்: நண்பா நாமதான் கொள்கைனு வந்துட்டா உசிரேபோனாலும் மீறுவதில்லையே... அதனால விமர்சனமெல்லாம் எழுத போறது இல்ல. அந்த படம் என்னுள் ஏற்படுத்திய “பாதிப்புகளை” மட்டும் அடுத்த பதிவில் சொல்கிறேன் (நன்றி ‘கருந்தேள்’). இன்னிக்கே எழுதலாம், ஆனா நாளை மறுபடியும் வி.தா.வ போறேன். ஃபுல் இம்பாக்ட்ல வந்து கவிதையா கொட்டிருறேன்... ஓக்கேவா... ஒன்ன மட்டும் இப்பவே சொல்லிறுறேன். படத்தோட முதல் பாதி நான் வாழ விரும்பும் வாழ்க்கை... மற்றவை நாளை...

ண்டிப்பாக இன்னொரு படத்தைப் படத்தைப் பற்றியும் எழுத வேண்டும். அது 'ஆப்தமித்ரா' - நம் P.வாசு இயக்கத்தில், கன்னட நடிகர் விஷ்ணுவர்தன் நடித்த 200 ஆவது படம். கர்நாடகாவில் வசூல் சாதனை செய்து கொண்டிருக்கும் அவரது கடைசிப் படம். நான் பார்த்த முதல் கன்னடப் படம். படம் சும்மா சொல்லக் கூடாது, நன்றாகவே இருந்தது. பல வருடங்களுக்கு முன் எழுதிய கதைக்கு இரண்டாம் பாகம் எழுதுவது அவ்வளவு ஒன்றும் சுலபமான காரியம் அல்ல. ஆனாலும் P.வாசு அதைச் சரியாகச் செய்து வெற்றியும் பெற்றுவிட்டார்.

சென்ற வாரங்களில் ரிலீசான படங்கள் ஏறக்குறைய எல்லாமே பார்த்தாகிவிட்டது. தீராத விளையாட்டுப் பிள்ளை ஜாலியாக இருந்தது. ஜக்குபாய் நான் இந்த வருடம் பெரிதும் எதிர்பார்த்த படம். கவுண்டர் இருந்தும் படத்தில் ஒன்றும் இல்லை. ஆனால் ஷ்ரேயாவைப் பற்றி கண்டிப்பாகச் சொல்லயே ஆகவேண்டும். அருமையான நடிப்பு. செம க்யூட் அண்ட் செக்ஸி. அருமையாக நடித்திருக்கிறார்.

அப்புறம் இன்னொரு விஷயம். இந்த ஒரிஜினல் டி.வி.டி கள் இருக்கிறதே, அதன் வரத்து தமிழில் மிகவும் தாமதமாக இருக்கிறது. இப்போது தான் 'நான் கடவுள்' டி.வி.டியே ரிலீஸாகியிருக்கிறது. தெலுங்கில் 'மகதீரா'வே வந்துவிட்டது. தெலுங்கர்கள் இந்த விஷயத்தில் கலக்குகிறார்கள். Sri Balaji Videos என்று ஒரு கம்பெனி. எப்படியும் ரிலீசான 5,6 மாதத்திற்குள் ஒரிஜினல் டி.வி.டி களை கௌத்துவிடுகிறார்கள். விலை எந்தப் படமாகயிருந்தாலும் 150 ரூ தான். தமிழில் மோசர்பேரை விட்டால் வேறு நாதியில்லை. அவர்களும் இப்போது தான் மோதி விளையாடு, சுப்ரமணியபுரம், அஞ்சாதே, சந்தோஷ் சுப்ரமணியம், அபியும் நானும், நான் கடவுள் என்று ஆமைவேகத்தில் ஆரம்பித்திருக்கிறார்கள். தலைவர் படம் சிவாஜி எல்லாம் வந்த 6 மாதத்தில் ஒரிஜினல் டி.வி.டி வந்திருந்தால் சேல்ஸ் கண்ணாபிண்ணாவென்று இருந்திருக்கும். இப்போது விட்டால் யாரும் மதிக்கக்கூடமாட்டார்கள். எல்லோரும் எந்திரனுக்காக வெய்டிங். சிவாஜியை மறந்து ரொம்ப நாளாகிவிட்டது. ஹிந்தியின் வேகம் அபாரமானதாகயிருக்கிறது. பா படம் நள்ளாயிருக்கு என்று நான் முடிவு செய்வதர்குள், டி.வி.டி வந்து விட்டது. படம் கொஞ்சம் முன்னே பின்னே இருந்தால் படு சீக்கிரமாகவும், ஹிட் படமென்றால் கொஞ்சமே கொஞ்சம் லேட்டாகவும் டி.வி.டி வெளிவருகிறது. உலகத்தரத்திற்கு தமிழ் சினிமாவை உயர்த்தவேண்டுமென்றால் ஹிந்தி, தெலுங்கு போல் தமிழ்ப் படங்கள் குறைவான, நியாயமான விலையில் சுலபமாக கிடைக்கும்படி செய்தல் அவசியம்... என்னால் புலம்பத்தான் முடியும்... சம்பந்தப்பட்டவர்கள் யோசிக்கவேண்டும்.

கடைசியாகப் படித்தப் புத்தகம், "Oh Shit, not again!" - எழுதியவர் Mandar Kokate. புதிதாக எழுத ஆரம்பித்திருக்கும் இந்திய எழுத்தாளர். சேத்தன் பகத் ஸ்டைலில் நக்கல், நையாண்டி, காதல், காமம், குசும்பு என்று முயற்சித்திருகிறார். ஆனால் கதை என்னவோ அவரது புத்தகத் தலைப்பு போல் தான் உள்ளது. ஒரு சிவில் என்ஜினியர் அளவில் நல்ல முயற்சி.

பீமானந்தா, நித்யானந்தா என்ரு ஆரம்பித்து கல்கி பகவான் வரை நாறி விட்டார்கள். இன்னும் ஒன்றிரண்டு சாமியார்கள் தான் ('பேமஸ்' சாமியார்களைச் சொல்கிறேன்). அவர்களும் கூடிய விரைவில் வீடியோ 'தரிசனம்' தர்வார்கள். அதிலும் இந்த கல்கி பகவானை அடுத்த கிருஷ்ணர் அவதாரம் என்றெல்லாம் என் நண்பன் ஒருவன் கூறிக்கொண்டிருப்பான். இங்கு என்னவென்றால், அவதாரம் போதயைப் போட்டு ஆடிக்கொண்டிருக்கிறது. கருமம்... மக்கள் இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்காகவும், எதையுமே நம்பாமல் கடவுளின் பெயரைச் சொல்பவர்களை கடவுளே கண் முன் தோன்றியிருக்கிறார் என்று நம்புவதும்... என்னவென்று சொல்வது, கடவுளின் பெயரைச் சொல்லி தொழில் செய்பவர்களை நம்பாமல், செய்யும் தொழிலில் கடவுளைக் காண முயற்சி செய்வதே நன்று...(நன்றி: ஆப்தமித்ரா :-))

நாளை காலை ஆஸ்கார் தொடங்குகிறது. ரிசல்ட்ஸ் தெரிவதற்குள் நாமினேட் ஆன படங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் பார்த்து விட வேண்டும் என்று நினைத்தேன். வழக்கம்போல் அதுவும் நடக்கவில்லை. சில படங்கள் தான் பார்க்க முடிந்தது. ஒன்றும் செய்வதாகத் தெரியவில்லை, ஆனல் எதற்கும் நேரமிருப்பது போல் தெரியவில்லை. யப்பேய்... ஹார்ஸ்பவரில் ஓடும் காலத்தில் என்னால் எதுவுமே சரியாகச் செய்யமுடியவில்லை...

You Might Also Like

4 comments

 1. நண்பரே,

  ஒரு நிமிடத்தைக் கூட வீணடிக்க மாட்டீர்கள் போலிருக்கிறதே. சிறப்பான பகிர்வு.

  ReplyDelete
 2. ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா இருந்திச்சி படிக்க . .ரீசண்டா சிவாஜி மறுபடி பார்த்தேன் . .என்னா படம் !! சரியான காமெடி மற்றும் ஆக்‌ஷன். . சூப்பரா இருந்திச்சி . . கல்கி போதையப் போட்டு ஆடிக்கினு இருந்த காட்சியும் அதோட டிஸ்க்ரிப்ஷனும் அபாரம் :-) . . கலக்குங்க !!

  ReplyDelete
 3. @Kanavukalin Kathalan: ஸார் நல்லா கலாய்க்றீங்கனு தெரியுது, ம்ம்ம் பரவயில்ல... பெருசா எதுவுமே செய்ற மாதிரி தெரியல, ஆனா நேரம் போவது மட்டும் உண்மை...

  ReplyDelete
 4. நன்றி கருந்தேள்... ஆனா இந்த கல்கி சமாச்சாரம் என்ன 'நித்யா' விஷயத்தவிட ரொம்ப டென்ஷன் பண்ணிருச்சு... என் நண்பன் குடும்பமே அந்த ஆள சாமியா கும்பிட்டுகிட்டு இருக்காங்க. ஆன இந்த ஆளு...ச்சே என்ன சொல்லி போங்க..

  ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...