FROM PARIS WITH LOVE | ENGLISH | 2010

11:07:00 PM

நல்ல ஒரு ஜாலியான ஆக் ஷன் படத்திற்கு விமர்சனம் எழுதி பல நாள் ஆகிவிட்டது. கவனிக்கவும், 'தரமான படம்' என்று நான் சொல்லவில்லை. சுற்றி வளைக்காமல் நேராக படத்தின் கதைக்கு வந்து விடுவோம்.ஜேம்ஸ் ரீஸி (Jonathan Rhys Meyers), பிரான்ஸிலிருக்கும் அமெரிக்கன் அம்பாஸடருக்கு பெர்சனல் அஸிஸ்டண்ட், அழகான ப்ரென்ச் காதலி என்று பக்கா செட்டில்டாக இருந்தாலும், விருப்பமெல்லாம் தான் செய்யும் 'அன்டர்கவர்' C.I.A வேலையில் தான். C.I.A விற்கு துக்கடா பக்கடா வேலைகள் மட்டுமே செய்துகொண்டிருக்கும் ரீஸிற்கு முழுநேர சீக்ரட் ஏஜண்ட் ஆக வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. சரி ரைட் .கே சொல்லும் C.I.A, ஒரு பெரிய அஸைன்மண்ட் கொடுக்கிறது. அதன் முதல் பகுதியாக ஏர்போர்ட்டில் கஸ்டம்ஸில் சிக்கிக்கொண்டிருக்கும் டாப் சீக்ரட் ஏஜண்ட்டும் அவனது பார்ட்னருமான வேக்ஸை விடுவிக்க வேண்டும். தன்னுடைய 'எனர்ஜி ட்ரிங்க்' டின்கள் இல்லாமல் நகரமாட்டேன் என்று ப்ரென்ச் கஸ்டம்ஸை கண்டபடி திட்டிக்கொண்டிருக்கும் ரீஸின் புது பார்ட்னர், சார்லீ வேக்ஸ் (John Trovolta).வந்த நாளே ஒரு சைனீஸ் ரெஸ்டாரண்டில் புகுந்து, இருப்பவர்களையெல்லாம் சுட்டு வீழ்த்தி அவர்கள் போதைமருந்து கடத்தும் லோக்கல் கேங்குடன் சம்பந்தமுடையவர்கள் என்பதை வேக்ஸ் கண்டுபிடிக்கிறான். வேக்ஸின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாத ரீஸி, "அவன் சொல்வதை மட்டும் செய், மற்ற எதுவும் பேசாதே" என்று மேலிடமும் கூறுவதால் வேறு வழியில்லாமல் அவன் பின்னாலேயே சுற்றுகிறான். அங்கே இங்கே என்று சுற்றி அனுமார் வாலை பிடித்த மாதிரி அடுத்தடுத்த சண்டை, சேஸிங்கிற்குப் பிறகு மெயின் தீவிரவாதி கேங்கை கண்டுபிடிக்கிறது வேக்ஸ் - ரீஸி கூட்டணி. தீவிரவாதிகளுடைய ப்ளான் பிரான்ஸில் நடக்கும் 'அமெரிக்க சம்மிட் கூட்டம்' ஒன்றில் பாம் வைப்பது. அவர்களது சதிவேலையில் தானும் ஒரு 'டார்கெட்'டாக இருப்பதை உணரும் ரீஸி, வேக்ஸை மட்டுமே நம்பும்படியாகி விடுகிறது. சின்ன டுவிஸ்டுடன் கிளைமாக்ஸ்.
இந்தப் படம் முன்பே சொன்னது போல ஒரு ஜாலியான ஆக் ஷன் படம். படத்தில் முழுக்க முழுக்க நம்மை ஆட்கொள்பவர் 'வேக்ஸ்' Trovolta மட்டுமே. மொட்டைத்தலையும், ப்ரென்ச் தாடியுமாக ஆரம்பத்தில் 'எனர்ஜி ட்ரிங்க்' டின்களில் தனது பேவரிட் கைத்துப்பாக்கியான 'மிஸ்டர் ஜோன்ஸை' மறைத்து எடுத்து வருவதிலிருந்தே ஆட்டத்தை ஆரம்பித்துவிடுகிறார். எவனையும் கண்டுகொள்ளாமல், வாயில் வந்ததைப் பேசிக்கொண்டு, குருவி சுடுராப்போல் வருபவனையெல்லாம் டப்பு, டுப்பு என்று சுட்டுக்கொண்டே போகிறார். ட்ரொவால்டாவின் வேகத்திற்கும் நடிப்பிற்கும் ஈடுகொடுக்கமுடியாமல் தவிக்கும் ஜோனத்தனிற்கு, கிளைமாக்ஸில் மட்டுமே நடிப்பு கொஞ்சம் தேறலாம். இவரது ப்ரென்ச் காதலி (Kasia Smutniak - Goal! படத்தில் நடித்திருப்பார்) கொள்ளை அழகு.பல முறை பார்த்து பழகிவிட்ட கதை, திரைக்கதை, பாத்திர அமைப்பு, கிளைமாக்ஸ் என்பதால் பாக்ஸ் ஆபீஸில் இந்தப் படத்திற்கு வரவேற்பு இல்லை போல. 'அதிரடி ஆட்டக்காரர்கள்' என்று தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவந்தால் நல்ல வசூல் நிச்சயம். கமர்சியல் மசாலாகள் நிறைய இருக்கிறது. சும்மா ஃப்ரீயா இருக்கும் போது பாருங்க...

You Might Also Like

1 comments

  1. நண்பரே,

    ட்ரெயிலரைப் பார்த்தும், லுக் பேசனின் பங்களிப்பை அறிந்தும் தவிர்த்து விட்ட படம். ஆக்‌ஷன் பிரியர்களிற்கு உகந்தது என்றார்கள் நீங்களும் அதையே கூறுகிறீர்கள். பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...