சிறுகதை : உயிர்

8:41:00 AM


-----------------------------------------------------------------------------------------------------------------------
18+ … இந்தக் கதை கண்டிப்பாக வயது வந்தோருக்கானது மட்டுமே … 18+
-----------------------------------------------------------------------------------------------------------------------

"கன்ஃபர்ம்... 3 மன்த்ஸ் மிஸ்...ம்ம்ம்... மிஸ் ஷீலா... நிலைமை ரொம்ப க்ரிடிகல். பேபி ஃபார்ம் ஆக ஆரம்பிச்சிருச்சு"

"நோ நோ நோ நோ... ஷிட்... வாட் வில் ஐ டூ நௌ... காட்... நோ டாக்டர் யு நோ இந்த...இந்த பேபியெல்லாம், ஐ கான்ட், என்னால குழந்தை... யு நோ ஐ ஆம்...ஐ ஆம் ஜஸ்ட் 19. என்னால எப்படி குழந்தை... ஐ டோன்ட் நோ ஹௌ திஸ்...திஸ்... காட் எனக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகல"

"கல்யாணம் ஆகலைனா எப்படி இது, வாட்ஸ் இஸ் திஸ்... திஸ் ஜெனரேஸன் இஸ் சில்லி. இப்பத்தான் நிறைய மெத்தட்ஸ் இருக்கே. கேர்ஃபுலா இருக்கக் கூடாது? உனக்கு அந்த காஷன் இருக்க வேண்டாமா? சரி, உன் பாய்பிரண்ட் என்ன பண்றான். அவனுக்காவது தெரிய வேண்டாம்... வேர்ஸ் ஹி?"

"பாய்பிரண்ட்... பிரண்ட்ஸ்... யார்னு தெரியலயே...த்ரீ மன்த்ஸ்… யு செட் த்ரீ மன்த்ஸ், ரைட்... அப்ப... அப்ப தேவ் தான், யா... யா தேவ். நியூ யர், பார்ட்டி, ஹேங்க் ஓவர்... தேவ் தான்"

"என்ன மிஸ் ஷாலி... குத்து மதிப்பா 'தேவ்' னு சொல்றீங்க... ஹும்... சரி நான் கொஞ்சம் மெடிசின்ஸ் தரேன். ரெகுலரா சாப்பிடுங்க. அதுக்கு முதல்ல 'தேவ்' தானானு கன்ஃபர்ம் பண்ணுங்க. ஷிட், பி கேர்புல் தட் அ லைப் இஸ் க்ரோயிங் இன்சைட் யு"

ஹாஸ்பிடலை விட்டு வெளியே வந்த ஷீலாவிற்கு 19 வயது. பாத்தால் அப்படித் தெரியாது. 2010ன் நவீன மங்கை. வீட்டில் வசதி அதிகம், அக்கறை குறைவு என்பது போட்டிருந்த கருஞ்சிவப்பு ஸ்லீவ்லெஸ் 'பேப்' டி-சர்ட்டிலும், ஜீன்ஸ் பாட்டமிலும் (அதுவும் 'லெஸ்' வகைதான்) தெரிந்தது. முகத்தில் பயம், பீதி, கவலை ரேகைகள். "ஏற்கனவே ஒரு முறை இது போல் நடந்திருக்கிறது. ஸ்டீவுடன் நியுயார்க் போயிருந்த போது. ஆனால் அது பெரிய பிரச்சனை ஆகவில்லை. வாஷிங் வாஸ் நாட் அ பிக் பிராப்ஸ் தட் டைம்... ஆனா இப்போ, இட்ஸ் வெரி லேட்... எப்போதும் ஜாக்கிரதையாகத்தான் நடக்கும். ஆனால் இந்த டக்கீலா எக்ஸ்ட்ரா ரெண்டு ஷாட் உள்ளே போய் விட்டால் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் போய்விடுகிறது. இந்த பசங்களும் ரொம்ப மோசம்...காட்"

குழம்பியபடியே கீக் கீக், என்று கண்சிமிட்டித் திறந்த தன் வெர்சாவில் ஏறிக்கொண்டாள். ஐ-போனை எடுத்தாள். டச் ஸ்க்ரீனில் ஏதோ தடவி, காதருகில் கொண்டுபோனாள்.

1) "தேவ், யு தேர்?"
2) "வேர் ஆர் யு?"
3) "யா, இட்ஸ் இம்ப்பார்ட்டண்ட். ஐ அம் கம்மிங் தேர்..."
4) "யப்"

நான்கே வரிகள்; அடுத்த பத்தாவது நிமிடம் போய் இறங்கியது தேவ் வீட்டில். தேவ் போன நியு யர் ஸ்விங்கெர் பார்ட்டிக்கு ஆனந்துடன் போன போது ஸ்வாப்பில் கிடைத்தவன். அதன் பிறகு சரியாக மூன்று முறை அவனுடன் ‘டேட்’ செய்துள்ளாள்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

காலிங் பெல்லை அழுத்த "கம் இன் ஹாட்டி, த டோர்ஸ் ஓபென்" என்று குரல் கொடுத்த தேவ், பீன் பேக்கில் ‘ஜாக்கி’ ஷார்ட்ஸ் மட்டும் போட்டுக் கொண்டு பாதி படுத்தபடி 'வீ' பார்த்துக்கொண்டிருந்தான். இப்போது வாசலைப் பார்த்தபடி திரும்பிக் கொண்டிருந்தான். ஷீலா வந்தவுடன், "டேம்ன், யு லுக் வெரி வெரி ஹாட்... செக்ஸி" கண்கள் அவளது உடலழகை தழுவ, வழிந்தான். "யா, ஐ நோ ஐம் ஹாட் தீஸ் டேஸ், பிகாஸ் ஐம் ஃபக்கின் ப்ரெக்னன்ட், ஷிட்" வந்ததும் வராததுமாக கத்தினாள். "வாட்ட்ட்…" ஸ்ருதி குறைந்திருந்தது தேவிடமிருந்து வந்த அந்த 'வாட்'டில். "ப்ரெக்ன... வாட், ஷிட்... டிட் சம் பிக் ஜாப்ஸ் வித் ஆனந்த் ?" கண்சிமிட்டியபடி கேட்டான்.

"ஆனந்த்... யு செட் ஆனந்த்...ஃபக் யு"

"யா, ஆனந்த்… ஹீ இஸ் யுவர் பாய்பிரண்ட் ரைட்?"

"கோ டு ஹெல் டேமிட், ஐ வாஸ் டேட்டிங் யு தட் டைம்"

"வாட்ட்ட்ட… யு மீன் டு... ஐ மீன்… யு ஸே இட்ஸ்... நான் தான் காரணம்னு சொல்றியா?" குரலில் தடுமாற்றம் தெரிந்தது.

"யா...இட் ஷுட் பீ யு... ரிமெம்பர் தட் டேம்ன் ஃபக்கின் நியு யர் பார்ட்டி?"

"யா ஐ...ஐ சா யு தேர் ஃபார் த ஃபர்ஸ்ட் டைம்... ஆனா நீ ஆனந்த் கூட தான இருந்த" பம்மினான்.

"டோன்ட்ட்... டோன்ட் ஃபக்கின் மென்ஷன் ஆனந்த் ஹியர். ஆனந்த் கூடதான் நான் வந்தேன். ஆனா படுத்தது...?" வெடித்தாள்.

"ஷிட்...டோன்ட் யூஸ் தட் வேர்ட்"

"டோன்ட் மென்ஷன் வாட்? 'ஃபக்கின்?'"

"நோ தட் லாஸ்ட் திங் யு செட்"

"எனிவே தட்ஸ் வாட் வி டிட். நவ் லுக், நான் கர்ப்பம்... இட்ஸ் டூ லேட்... வாஷ் பண்ண முடியாதுன்னு டாக்டர் சொல்லிட்டாங்க. சே மி வாட்... நான் இப்போ என்ன செய்ய"

"எங்கிட்ட எதுக்கு நீ இத கேக்குறனே எனக்குப் புரியல... ஐம் நாட் ரெஸ்பான்ஸிபிள் ஃபார் திஸ்... திஸ் யு நோ, இட்ஸ் அ பிராமிஸ்..." அவள் வயிற்றைக் காட்டினான்.

"டோன்ட் ஸே தட் தேவ்... ப்ளீஸ், ஐ நோ இட்ஸ் யு, டக்கீலா எனக்கு ஷாட் ஷாட்டா ஊத்திக்குடுத்ததே நீதான்... உன்கூட தான் நான் இருந்தேன். என்ன வீட்ல விட்டதே நீதான்"

"யா... நௌ ஐ கேன் எஃஸ்ப்ளைன் வாட் ஹேப்பண்ட்... உன்ன வீட்ல விட்டது நான் இல்ல; உன் வீடே எனக்கு அப்போ தெரியாது. ரிசார்ட்ல... ஐ அம் ஷ்யூர், ஐ வாஸ் சேஃப் வென் வி டிட் தட்... ஐ ஹேவ் 'இட்' ஆல் த டைம்... தென் ஐ கேவ் யு பேக் டூ ஆனந்த். அவன் தான் உன்ன வீட்ல விட்டிருப்பான், போய் அவங்கிட்ட கேளு"

"நோ நோ நோ... டோன்ட் லை டூ மீ பாஸ்டர்ட்... ஆனந்த்... அவன் அந்த மாதிரி 'ஏமாத்தி' செய்ற ஆள் இல்ல... ஐ நோ யு... ஐ ஃபக்கின் நோ யு..."

"ஹூ யு காலிங் அ பாஸ்டர்ட், யு பிக் ஃபக்கின் பிட்ச்... தினம் ஒரு ஆளோட போற தே... நீ, என்ன பார்த்து பாஸ்டர்ட் சொல்ற நீ... வெளிய போடி மொதல்ல... போய் எவன் கூட படுத்த, என்ன கூத்தடிச்சனு கண்டுபிடி... இல்லனா வயிதுல வளருதே அது உன்ன மிஞ்சிரும்" கழுத்தைப் பிடித்துத் தள்ளினான். வயிற்றில் லேசாக வலித்தது, ஷீலாவிற்கு.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

"வாட்ட்ட், நீ கர்ப்பமா இருக்கியா... யு ஃபக்கின் சீரியஸ்?, டேம்ன்… ஷிட்... அடிப்பாவி… உன்ன, உன்ன நான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைச்சேன், நீ என்னடானா ஊர் மேஞ்சிட்டு வந்து நிக்கிற... ப்ளட்டி பிட்ச்"

"நோ... நோ.. நோ" தேவ்விடம் கேட்ட அதே வார்த்தை மறுபடியும்… மறுபடியும் ஆனந்திடம் கேட்டு பைத்தியம் பிடித்தவளாய் வீட்டிற்கு வந்து அடைந்து கிடந்தாள். 10,000 பேருக்கு முதலாளியான அப்பா, மெஷின் ஆப்பரேட்டர் மகளுக்கு குழந்தை பிறந்ததற்கு வாழ்த்த ஆஸ்பத்திரிக்கே போயிருந்தார். தொழிலாளர் சக்தி! அம்மா எல்லா பணக்கார அம்மாகளைப் போல் லேடீஸ் கிளப் மட்டுமே கதி என்று கிடந்தாள். பெண் சக்தி(!)
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அந்த நவீன 3D அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனரின் மானிடரில் கை, கால் போல் ஏதோ தெரிந்தது. உருவமாக எதுவும் தெரியவில்லை. கட்டி போல் இருந்தது. தலை, கண் போல், காது போல் ஏதோ மாதிரி இருந்தது. பார்த்து விட்டு திரும்பிய டாக்டர், "இட்ஸ் வெரி வெரி டேஞ்சரஸ், ப்ளீஸ் லெட் மீ டாக் டூ யுவர் பேரண்ட்ஸ். அவங்க சிக்னேச்சர் இல்லாம என்னால ஆபரேஷன் பண்ண முடியாது... நெவர்"

"ப்ளீஸ் டாக்டர்... என் நிலைமைய புரிஞ்சிக்கோங்க... எவ்வளவு பணம் வேணும், கேளுங்க... ப்ளீஸ் டேக் திஸ் ஷிட் அவுட் ஆப் மை பெல்லி... ப்ளீஸ்" அழுதாள்.

"இங்க பாருங்க ஷீலா, உள்ள உயிர் வளர ஆரம்பிச்சிருச்சு. ஐ கேன் கிவ் யு 50-50 சேன்ஸ் ஒன்லி. நான் குடுக்குற பேப்பர்ஸ்ல கையெழுத்து போட்றுங்க... எங்களுக்கு நாளபின்ன பிரச்சன வரக்கூடாது பாரு... பட் அகைன் ஐ அம் சேயிங், நல்லா வளர்ந்த கருவ கலைக்கிறது ஆபத்து"

"நாட் அ மேட்டர் ஆப் டாக் டாக்டர் ... ஜஸ்ட் வாஷ் இட் அப். நான் நீங்க சொல்ற எத வேணும்னாலும் செய்றேன்... ஐ அம் ரெடி ஃபார் எனித்திங் பட் நாட் திஸ்”, மானிடரைக் காட்டினாள் "

"ரிசப்ஷன் போங்க... கேஷியர் வில் கிவ் யு த பில்... தாமத்திக்காம நாளைக்கு மதியம் வாங்க. ஆப்ரேட் பண்ணிடலாம்"

'ஜீவ சைத்தன்யா ஹாஸ்பிடல்ஸ் - வி சேவ் லைவ்ஸ்' என்று 1க்குப் பக்கத்தில் பல 0 போட்ட தொகையை வாங்கிய கேஷியர் உட்கார்ந்திருந்த ரிசப்ஷனில், சில்வர் மெட்டலில், கொட்டை எழுத்தில் எழுதியிருந்தது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சரியாக ஒரு வாரம் கழித்து, தன் வீட்டு நீச்சல் குளத்திலேயே பிணமாக மிதந்து கிடந்தான் தேவ். நீச்சலடித்துக் கொண்டிருக்கும் போது காலில் 'க்ராம்ப்ஸ்' தசைப்பிடிப்பு ஏற்பட்டு நீந்த முடியாமல், மூழ்கி, உள்ளே சென்று, மூச்சுத் திணறி நிறைய தண்ணீர் குடித்து, வயிறு வெடித்து...
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தன் புதுக்காதலி ஷாலியைப் பார்க்க காப் ஷாப்பிற்கு வேகமாய் வேகனாரில் பறந்து கொண்டிருந்த ஆனந்த் எதிரே ஒரு லாரி தடம் மாறி வருவதை கவனிக்கவில்லை. கவனித்தபொழுது பிரேக் போட அவகாசமில்லை, பிரேக் பிடிக்கவில்லையென்று கூட நினைத்தான். நினைத்த நிமிடம் முடிவதற்குள் லாரி இவனது காரை அணைத்து முத்தமிட்டடிருந்தது. கண்ணாடியை உடைத்துக் கொண்டு டாஷ்போர்ட் வழியே உள்வந்த ஏதோ ஒன்று வயிற்றில் குத்தியதில் நொடிப்பொழுதில் அருமையான மரணம் அவனுக்குக் கிடைத்தது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

"யெஸ் இன்ஸ்பெக்டர், நான் டாக்டர் தான் பேசுறேன். போன வாரம் அந்தப் பொண்ணு... அதான் சார் ஷீலா, தன் கைப்பட எழுதுன அக்சப்டன்ஸ் லெட்டர், சைன் பண்ண பேப்பர்ஸ் எல்லாமே சப்மிட் பண்ணிடேன். நம்ம ஹாஸ்பிட்டலுக்கு எந்தப் பிரச்சனையும் வராம நீங்க தான் பாத்துக்கனும்... ஆமாம்.. நீங்க கேட்டதையும் அனுப்பிவச்சிட்டேன். அந்தப் பொண்ணோட பேரன்ட்ஸ் கிட்டயும் கொஞ்சம் சொல்லி வைங்க. தினம் வந்து கத்திட்டுப் போறாங்க. பொண்ண என்னமோ நாங்க தான் கொன்னோம்ங்கிற மாதிரி. சின்ன பொண்ணு, செய்யக்கூடாத ஆப்ரேஷன், செத்துட்டா, நாங்களா பொறுப்பு...ஓக்கே இன்ஸ்பெக்டர்... வச்சிடுறேன்" ரிசீவரை கீழே வைத்துவிட்டு திரும்பிய டாக்டர், ஆன் செய்யப்பட்டிராத அந்த ஸ்கேனரின் மானிடரில் ஏதோ உருவம் தெரிவதைப் பார்த்தார். கால், கை, முகம்... அது அந்த மூன்று மாதக்கரு...! ஷீலா வயிற்றை ஸ்கேன் செய்த போது தெரிந்த அதே கரு!!

ஸ்கேனர் சொருகப்பட்டிருந்த ப்ளக் பாய்ண்ட் ஷார்ட் சர்க்யூட் ஆகி வயரிங் தீப்பிடிக்க ஆரம்பித்ததை பீதியில் உறைந்திருந்த டாக்டர் கவனித்திருக்க வாய்ப்பில்லை...

P.S - செய்த கொலைக்கு மரணத்தை தண்டனையாகப் பெற்ற ஷீலா, தேவ், ஆனந்த் மற்றும் டாக்டர் நால்வருக்கும் என் அனுதாபங்கள்.

கதையைப் படித்தவர்களுக்கு:

1) ஒரு பெண்ணை இவ்வளவு கேவலமாகச் சித்தரித்திருக்கிறேன் என்று என்னை தயவு செய்து தப்பாக எண்ண வேண்டாம். எனது வலைப்பதிவை விடமால் படிக்கும் வாசகர்களில் என் அக்காள் உட்பட பெண்கள் அதிகம் என்பதை நான் அறிவேன். எனக்குத் தோன்றிய கதையை அப்படியே அதன் போக்கில் எழுதியுள்ளேன். அவ்வளவே...

2) நிறைய ஆங்கிலம் இருப்பதற்கும் மன்னிக்கவும். கதைக்கு தேவையான 'கவர்ச்சி'க்காக மட்டுமே ஆங்கிலத்தைப் பயன்படுத்தியுள்ளேன். மேலும் நம் மக்கள் சர்வசாதாரணமாக உபயோகிக்கும் வார்த்தைகளையே நான் இங்கு உபயோகித்துள்ளேன்.

3) ஒரு ஸ்மால் டவுட், இந்தக் கதையை பின்நவீனத்துவ வகையில் சேர்க்கலாமா?

Baby ஆனந்தன்...

You Might Also Like

0 comments

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...