#100நாடுகள்100சினிமா #9 SERBIA - THE TRAP (Klopka - 2007)
7:03:00 AM
Srdan
Golubovic | Serbia | 2007 | 106 min.
(***
English write-up & download link given below ***)
யுகோஸ்லாவியாவிலிருந்து
பிரிந்த நாடுகளில் பரப்பளவிலும் சரி, மக்கள் தொகையிலும் சரி செர்பியா தான் கொஞ்சம் பெரிய நாடு. அதிபர் 'டிட்டோ' இறந்த பிறகு மத்திய ஆட்சியிலிருந்து
பல சலுகைகளை அப்போதைய செர்பிய அதிபர் 'மிலோசெவிக்' (Milosevic) சுரண்டத் தொடங்கியது தான் யுகோஸ்லாவிய யுத்தத்திற்கான ஆரம்பம் என்று சொல்லலாம். இறுதிவரை மொத்த யூகோஸ்லாவியாவையும் தனது கட்டுப்பாட்டில்
வைத்திருக்கவேண்டும் என்று நினைத்தவர்களில் முக்கியமானவர்கள் செர்பிய அரசியல்வாதிகள். போருக்கும் பிறகான இன்றைய சூழலில் சாதாரண குடும்பம் ஒன்றில்
நடக்கும் கதை தான் இந்த The Trap திரைப்படம். நாவல்
ஒன்றின் அடிப்படையில் இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் Srdan
Golubovic. இவரது Circles (2013) படத்தைப் பற்றி ஏற்கனவே இங்கு எழுதியிருக்கிறேன்.
Mladen,
கட்டிட கான்ட்ராக்டராக இருக்கும் நடுத்தரவர்க்க குடும்பத்
தலைவன். அரசு வேலை. அவரது மனைவி Maridja பள்ளி ஆசிரியை. இவர்களது
ஒரே மகன் Nemanja. இருப்பதை வைத்து சந்தோஷமாக
வாழ்ந்துகொண்டிருக்கும் குடும்பத்திற்கு இடியாக வந்து விழுகிறது மகன் Nemanjaவிற்கு இருக்கும் இதய நோய்.
26,000 யூரோ செலவழித்து ஜெர்மனியில் ஆப்ரேஷன் செய்யவில்லை என்றால்
அவனது உயிருக்கே ஆபத்து என்கிற நிலை. நேர்மையான வழியில் சம்பாதிக்கும் யாராலும் புரட்ட முடியாத அந்தப் பெரும் தொகையை
நினைத்து விம்மிக்கொண்டிருக்கும் போது Mladen க்குப் பண உதவி செய்வதாகவும் அதற்கு பதில் அவர் ஒரு வேலை செய்ய வேண்டுமென்றும்
போன் வருகிறது. போன் செய்தது யார்? என்ன வேலை? பணம் கிடைத்ததா இல்லையா? இது தான் இந்தப் படம்.
கேவலம் பணத்திற்காக
சாமானியன் ஒருவன் பெருங்குற்றம் செய்யத் துணியும் மிகச் சாதாரணமான கதை. பணம் எவ்வளவு முக்கியம் என்பதை காட்சிக்கு காட்சி இந்தப்
படம் சொல்கிறது. டீச்சராக இருக்கும் Maridja பணத்திற்காக தனது மாணவி ஒருவருக்கு ப்ரைவேட் டியூஷன் எடுக்கச்
செல்வார். அந்த எப்பிஸோடை மறக்க முடியாது. அதே போல பேங்கில் லோன் கேட்டுச் செல்லும் காட்சி. இரண்டே நிமிடம் என்றாலும் சொல்ல வந்த விஷயத்தைத் தெளிவாக
உணர்த்திச் செல்கிறது அந்தக் காட்சி. உள்நாட்டுப் போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஒரு நாட்டில், அரசியல் சூழலினால் மக்கள் நசுக்கப்பட்டு வரும் சூழலிலும்
ஏழை - பணக்காரன் என்ற இரு வர்கத்தினரின்
மத்தியில் இருக்கும் இடைவெளி, நிச்சயம் அதிர்ச்சியாகவும் அதே சமயம் ஆச்சரியமாகவும் இருக்கிறது. பிழைக்கத் தெரிந்தவனுக்கு மட்டுமே இவ்வுலகில் இடமுண்டு, நல்லவர்களுக்கு இல்லை என்பது சரிதான். கிளைமாக்ஸ் அசத்தல்.
க்ளாஸிக் படமெல்லாம்
கிடையாது. ஆனால் பார்க்கவேண்டிய படம். IMDB மற்றும் சில வலைதளங்கள் இந்தப் படத்தைத் Thriller, Noir என்றெல்லாம் சொல்லியிருக்கிறது. நானும் அதைப் பார்த்துவிட்டுத் தான் இந்தப் படத்தை செலெக்ட்
செய்தேன். ஆனால் இந்தப் படம் பக்கா 'குடும்ப டிராமா'.
அவ்வளவுதான். தமிழ் சூழலுக்கு ஏற்றபடி இந்தக் கதையை அருமையாக மெருகேற்றி எடுக்கலாம்.
யுகோஸ்லாவிய யுத்தம், அதிபர் டிட்டோ பற்றி தெரிந்து கொள்ள -
பிடித்திருந்தால்
ஷேர் செய்யுங்கள். நண்பர்களுக்கும் இந்தப் பக்கத்தை பரிந்துரைத்து மகிழ்ந்திருங்கள்.
Mladen
is a middle-class construction contractor working on Govt. projects. His wife
Maridja is a teacher and their only son Nemanja goes to school. Fate strikes a
blow when Nemanja is diagonised with a terminal Heart illness for which he
should undergo an operation costing 26,000 Euros in Germany. The Father and
Mother try various methods to raise the funds but in vain. The desparate Mladen
gets a phone call. He is asked to do a job in return for full payment for his
son's surgery. Who made the call? What was the job? Did Mladen get the money to
save his son? is the story.
A
simple yet hard-hitting story in which a middle-class family in State jobs is
struggling to make a livelihood. This movie is said to be the depiction of life
in Post-Milosevic Serbian Society. Not a classic but a watchable film.
Download
Link - https://www.youtube.com/watch?v=HiYuYSIOaiU
Other
Recommended movies from Serbia
A
Serbian Film (2010) – http://karundhel.com/2011/05/serbian-film-2010serbian.html (Thanks to Karundhel Rajesh)
The
Fourth Man (2007) – https://goo.gl/okXEK3
Circles
(2013) - https://goo.gl/QPmz0d
Pls Share & Recommend this Blog with your friends.
Thank
You for Your Support
0 comments
மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...