#100நாடுகள்100சினிமா #13.KOSOVO - KOLONO (Column 2013)
8:43:00 AM
Ujkan
Hysaj | Kosovo | 2013 | 22 min.
(***
English write-up & Download Link given below ***)
யுகோஸ்லாவிய யுத்ததில்
கடைசியாகச் சுந்திரம் பெற்று செர்பியாவில் இருந்து விலகி தனி நாடாகத் தன்னை அறிவித்துக்கொண்ட Kosovo நாட்டுத் திரைப்படத்தைப் பார்க்கலாம். திரைப்படங்களுக்கு இணையாக முக்கியத்துவம் வாய்ந்தவை குறும்படங்கள். இன்றைய சூழலில் தமிழில்
'குறும்படம்' என்பது சினிமாவிற்கான விசிட்டிங் கார்டாகவே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு
வருகிறது. ஆனால் உலகளவில் குறும்படங்களுக்கென்றிருக்கும்
மவுசு இன்னும் குறையவில்லை. குறையாது. ஒரு முழு நீளத் திரைப்படம்
சொல்ல வேண்டிய விஷயத்தை ரத்தினச்சுருக்கமாக
20 நிமிட குறும்படமாக பொட்டில் அறைந்தார் போல் சொல்பவர்கள் இன்றும்
இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் கோசோவ
இயக்குனர் - Ujkan Hysaj. இந்தக் குறும்படம்
இவரது முதல் முயற்சி. சொல்லப்பட்ட
விஷயத்திலும், காட்சிகளில் உள்ள தரத்திலும்
இது வெறும் முயற்சியாகத் தெரியவில்லை. ஒரு முழுநீள உலகத்திரைப்படத்தைக் கண்ட திருப்தி.
ஒரு கோசோவர்களின்
திருமணம் ஒன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
வரிசையாகக் கார்கள் செல்ல,
கடைசியாக வரும் காரில் மணமகள் அமர்ந்திருக்கிறார்கள். காரை ஓட்டிக்கொண்டு வருபவருக்கு அந்த நீண்ட நெடும் தார்சாலையின்
ஒரு குறிப்பிட்ட இடத்தை நெருங்கும் வேளையில் பழைய நினைவுகள் வந்து போகிறது. 1999 ஆம் ஆண்டு அந்தச் சாலையில் அவருக்கு என்ன நடந்தது? இது தான் இந்தப் படம்.
இயக்குனர் மணிரத்னம்
அவர்களின் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில்
'விடைகொடு எங்கள் நாடே...'
என்று ஒரு பாடல் வரும்.
M.S.V இன் குரல் கேட்ட நொடி தொண்டையைக் கவ்வும் ஒரு துக்கப் பந்து. போரின் கோரத்தால் சொந்த வீடு,
நாடு, மக்கள் விட்டு மனம் நிறைய துக்கத்துடனும் உடலில் வேதனையுடனும் புலம்பெயரும்
மக்கள் கூட்டம் அந்தப் பாடலின் காட்சிகளில் சொல்லப்பட்டிருக்கும். அந்தக் காட்சி தான் இந்தப் படம்.
உலகமெங்கும் பல்வேறு
திரைப்படவிழாக்களில் விருதுகளை அள்ளிக் குவித்திருக்கும் இந்தக் குறும்படத்தை அவசியம்
பார்த்தே தீர வேண்டிய ஒன்று.
YouTube
இல் ஆங்கில சப்-டைட்டிலுடன் காணக்கிடைக்கிறது - https://www.youtube.com/watch?v=YpbWMF7KxV4
அல்பேரியர்களது (Albania) கட்டுப்பாட்டில் இருக்கும் கோசோவாவில் வாழும் செர்பியர்களைப்
பற்றிய ஒரு படம் உண்டு. Enclave (2014) - இதுவும் அவசியம் பார்த்தே தீர வேண்டிய படம்.
செர்பியத் தயாரிப்பாதலால் இந்தப் படத்தை Kosovo நாட்டுத் திரைப்படமாக எழுதவில்லை.
**************************************************
The
opening scene is a Kosovan wedding. We see a cars speeding on a highway and in
the last car is a man with a family driving the Bride. At one particular point
in the Highway he stops the vehicle and we see what happened to him on that
same road back in 1999.
Dir. Ujkan Hysaj |
Directed by Ujkan Hysaj this film is just
22 minutes long, this short film shockingly delivers what a feature film would
do in 90 minutes. The Story is simple and message is loud and clear. Released
in 2012, this Short Film is the Directors feature and has won numerous awards
in Festivals around the world.
Other
Recommended movies from Kosovo:
Enclave
(2014)
a Serbian production about the lives of Serbians living
in Albanian controlled territory of North Kosovo.
Anatema
(2006)
Hit
Like & Share. Reccommend this page to page to your friends. Happy movie
watching
0 comments
மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...