‪#‎100நாடுகள்100சினிமா‬ #11.CROATIA - THE PRIESTS CHILDREN (2013 Svecenikova Djeca)

8:56:00 AM

Vinko Bresnan | Croatia | 2013 | 93 min.

(*** English write-up and download link given below ***)

சீரியஸான படங்களாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஒரு மாறுதலுக்கு (முன்னாள் யுகோஸ்லாவியா) க்ரோவேஷியாவிலிருந்து வெளிவந்திருக்கும் ஒரு ஜாலியான திரைப்படத்தைப் பற்றிச் சொல்கிறேன்.

Father Fabijan ஒரு இளம் பாதிரியார். Dnevnik என்ற சிறிய க்ரோவேஷியா (Croatia) தீவிற்கு வந்து சேர்கிறார். வந்த சில நாட்களிலேயே அந்த தீவில் ஒரு மிக முக்கியமான பிரச்சனை இருப்பதைக் கண்டுபிடிக்கிறார் - ஜனத்தொகை. இறப்பு விகிதம் மட்டும் கூடிக்கொண்டே இருக்க புதிய ஜீவன்களின் ஜனனம் ஜூரோவாகவே இருப்பதைக் கண்டுபிடிக்கிறார். அந்த சமயத்தில் மனைவியின் வற்புறுத்தலால் இவரிடம் பாவமன்னிப்பு கேட்க வருகிறான் ஹார்பர் அருகே பெட்டிக்கடை வைத்திருக்கும் Petar - "இந்தத் தீவில் ஜனத்தொகை கம்மியாக இருக்க நான் தான் காரணம். என்னிடம் தான் இந்த தீவில் உள்ள அனைவரும் ஆணுறை வாங்குகின்றனர். என்னால் தான் இந்தத் தீவில் புதிதாய் யாரும் பிறப்பதில்லை. எனக்கு பாவமன்னிப்பு வழங்குங்கள் ஃபாதர்" என்கிறான். தீவிர யோசனைக்குப் பிறகு ஒரு முடிவிற்கு வருகிறார் ஃபாதர் Fabijan. பாவமன்னிப்பு வழங்குவதை விட செய்த பாவத்திற்கு பிராயச்சித்தம் செய்ய வழி சொல்கிறார்

Petar கடையிலிருக்கும் ஆணுறைகள் அனைத்தையும் ரகசியமாக தன் இடத்திற்கு எடுத்து வரச் சொல்கிறார். ஒவ்வொன்றாக தன் கைப்பட அந்த பாதுகாப்புக் கவசங்களில் குண்டூசியால் குத்தி ஓட்டை போட்டுத் திருப்பிக்கொடுக்கிறார். Petar உம் அவற்றை உள்ளூர்காரன் வெளியூர்காரன் என்று அனைவருக்கும் பரபரப்பாக விற்பனை செய்கிறான். ஃபாதரின் இந்த அதிரடி முடியாவால் அந்த தீவில் என்னவெல்லாம் நடந்தது என்பது தான் இந்தப் படத்தின் கதை.

போருக்குப் பிறகான சூழலில் க்ரோவேஷிய சினிமா என்பது அதிகம் கண்டுகொள்ளப்படாத ஏரியாவாகவே இருந்திருக்கிறது. சர்வதேச சினிமா அரங்கில் மட்டுமல்ல உள்ளூரிலேயே தங்களது நாட்டிலிருந்து வெளிவரும் சினிமாவை மீது மக்கள் அதிகம் கண்டுகொள்ளவில்லை, கன்னட சினிமா போல. கன்னடத்திற்கு ஒரு பவன் குமார் போல (Lucia, U-Turn) க்ரோவேஷியாவிற்கு இயக்குனர் Vinko Bresan என்கிறார்கள். இவரது படங்கள் அந்நாட்டு மக்களைத் திரையரங்குப் பக்கம் இழுத்து வந்திருக்கிறது. அதுவும் இந்தப் படம், The Priest's Children விடுதலைக்குப் பிறகான க்ரோவேஷிய சினிமாவில் மிகப்பெரிய ஓப்பனிங் பெற்ற படமாகவும், அதிக மக்கள் பார்த்த அதிகம் வசூலித்த படங்களில் ஒன்றாகவும் இருக்கிறது.

Self-narrration இல் தொடங்குகிறது படம். சற்று வயதான Father Fabijan மருத்துவமனையில் படுத்திருக்கிறார். அவரைப் பார்க்க இளம் பாதிரியார் ஒருவர் வருகிறார். அவரிடம் இந்த Dnevnik தீவுக்கதையைச் சொல்லத் தொடங்குகிறார். கிறிஸ்துவத்தையும், க்ரோவேஷிய அரசியல் சூழலையும், மக்கள் மனநிலையையும் அநியாயத்திற்கு ஓட்டித் தள்ளியிருக்கிறார்கள் இந்தப் படத்தில். இந்த Operation Condoms இன் ஆரம்பகட்ட காட்சிகள் அனைத்துமே விலா எலும்பைப் பதம் பார்க்கும் காட்சிகள். அடுத்தடுத்து வரும் பிரச்சனைகளை ஃபாதர் சமாளிக்கப் படாதபாடு படுவது ஒரு புறமிருக்க, அந்தக் காட்சிகளின் ஊடே சூசகமாகச் சொல்ப்பட்ட கருத்துக்கள் ஒவ்வொன்றும் அதிர்ச்சி ரகம். முக்கியமாக 'பிஷப் வருகை' எப்பிசோட். யூகோஸ்லாவியப் போரினால் பாதிக்கப்பட்ட, செர்பியர்களை வெறுக்கும், அரபுக்களை எதிரியாக நினைக்கும் தீவிர தேசபக்தனது கதாப்பாத்திரம் ஒன்றும் படத்தில் உண்டு. படத்தின் ஒளிப்பதிவைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். அவ்வளவு அருமை. பின்னனி இசையாக ஒரே ஒரு இசைக்கோர்வையே திரும்பத் திரும்ப வந்தாலும், அந்த இசை, அந்தக் குறிப்பிட்ட காட்சிகள் அனைத்தையுமே வேறு தளத்திற்கு எடுத்துச் செல்கிறது. முதல் பாதி முழுக்க காமெடியாக ஜாலியாக நகரும் கதை, பிற்பாதியில் ப்ளாக் காமெடியாக மனதைக் கவ்வுகிறது. குறிப்பாக கிளைமாக்ஸ்.

அவசியம் பார்த்தே தீர வேண்டிய படம்.    

யுகோஸ்லாவிய யுத்தம், அதிபர் டிட்டோ பற்றி தெரிந்து கொள்ள - https://goo.gl/pQS2tW

பிடித்திருந்தால் லைக் & ஷேர் செய்யுங்கள். கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள். நண்பர்களுக்கும் பரித்துரைத்து மகிழ்ந்திருங்கள்

**************************************

Dir. Vinko Bresnan
Father Fabijan is a young priest who comes to serve on a Croatian Island. Soon he realizes an important problem in the island - Decreasing Birth Rate. After a confession from the local vendor near the harbour who sells condoms to the locals and tourists, the priest makes a decision. To help God and Nature in increasing the island's birth rate, he decides to pierce all the condoms before they are sold.

The first half of the movie is hilarious and the second half is hilarious and shocking at the same time. Mocking the Church, the government and mindset of the after-war Croatian people this movie is one of the Highest Grossers in the History of Croatian Cinema. The Director, Vinko Bresnan is a veteran and considered one of the countries best.

A movie not to be missed.



Please Like, Share & give your suggestions in Comment. Recommend this page to your friends if you feel its worth. Happy movie watching 

You Might Also Like

0 comments

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...