#100நாடுகள்100சினிமா #10 MACEDONIA- THE THIRD HALF (2012)

7:05:00 AM

#100நாடுகள்100சினிமா

# MACEDONIA

THE THIRD HALF (2012)


Darko Mitrevski | Macedonia | 2012 | 113 min.

(*** English write-up & Download link given below ***)

இரண்டாம் உலகப்போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அதிகம் வெளியே தெரியாமல் போன நாடுகளில் மாசிடோனியாவும் ஒன்று. போர் சமயம் யுகோஸ்லாவியா பக்கத்து நாடானா பல்கேரியா உதவியுடன் ஜெர்மனியால் தாக்கப்பட, நாஜிப்படையின் யூதர் வேட்டையிலிருந்து மாசிடோனியாவும் தப்பவில்லை. சாதரணக் குடிமகனில் தொடங்கி பெரும் செல்வந்தர்களும், ஊரின் பெரிய மனிதர்களாக இருந்தவர்களும் பாரபட்சம் இல்லாமல் இனத்தைக் காரணம் காட்டி பலிகடா ஆக்கப்பட்ட வரலாறு தான் இந்தப் படம். கூடவே கொஞ்சம் ஃபுட்பாலும், ஒரு காதலும்  கலந்து சொல்லப்பட்டிருக்கிறது.

யுகோஸ்லாவியாவிலேயே சிறந்த ஃபுட்பால் கிளப் ஆக மாசிடோனிய கிளப் இருக்க வேண்டுமென்பது அதன் நிறுவனரான Dimitri இன் ஆசை. ஆனால் அவரது டீமில் இருக்கும் வீரர்களோ வெவ்வேறு வயதில், வெவ்வேறு வேலையில், வெவ்வேறு பொருளாதாரச் சூழலில் இருக்கும் விளையாட்டின் தீவிரம் புரியாத சோம்பேறிகளாகவும் இருக்கின்றனர்டீமின் ஸ்டார் பிளேயரான Kosta விற்கு அந்த ஊரின் பணக்கார வீட்டுப்பெண்ணான Rebecca மீது அளவில்லா காதல்

ஒரு முடிவு எடுத்தவராக முன்னாள் ஜெர்மானிய வீரரும் மிகச்சிறந்த கோச்சுமான Rudolph Spitz என்பவரை வரவழைக்கிறார். இது ஒருபுறமிருக்க புதிய கோச் வந்த பிறகு பக்கத்து ஊர்களிடையேயான மேட்ச்களில் எல்லாம் சின்னச்சின்ன வெற்றிகளைச் சுவைத்து அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறிச் செல்கிறது மாசிடோனியன் டீம்

இப்படியான சூழலில் இரண்டாம் உலகப்போர் தொடங்குவதற்கான அறிகுறிகள் தெரிகிறது. வானில் ஃபைட்டர் ஜெட்கள் பறந்த வண்ணம் இருக்கிறது. பக்கத்து நாடான பல்கேரியா Axis Powers என்றழைக்கப்படுகிற ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் நாடுகளுடன் சேர்ந்து கொள்ள, யுகோஸ்லாவியாவும், கிரேக்கமும் (Greece) தாக்கப்படுகிறது. பல்கேரியப் படையில் உதவியுடன் மாசிடோனியாவில் கால்வைக்கிறது நாஜிப் படை. ஃபுட்பால் உள்ளிட்ட அனைத்திலும் தனது ஃபாசிஸம் என்னும் நஞ்சைக் கலக்கிறது தனது வெறியாட்டத்தைத் தொடங்குகிறது.  

முழுக்க உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் பிரதானமாகச் சொல்லப்படுவது ஒரு காதலும், ஃபுட்பால் டீமும் தான் என்றாலும், இந்தப் படத்தை தங்களுக்கு நடந்த கொடுமைகளின் வரலாற்றுப் பதிவாகவே கொண்டாடுகின்றனர் மாசிடோனிய மக்கள். விருதுகளையும், வசூலையும் அள்ளிக்கொடுத்து படத்தை பெருவெற்றி அடையச் செய்திருக்கிறார்கள். படத்தின் 'கன்டன்ட்' அறிந்து ஒரு மில்லியன் யூரோ கொடுத்து தயாரிப்பில் உதவியிருக்கிறது மாசிடோனிய அரசு.

காதலி Rebecca வின் பிளாஷ்பேக்கில் தான் படம் சொல்லப்படுகிறது (அப்படியே Titanic / மதராசபட்டினம் ஸ்டைலில்). சின்னச் சின்னக் காட்சிகளின் வாயிலாக சென்சிடிவ் விஷயங்களையும் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள் படத்தில். ஒருபக்கம் இளம் ஜோடியின் காதல் - அதற்கு எதிர்ப்பு, மறுபக்கம் ஃபுட்பால் டீம் - கோச் - மேட்ச், இன்னொருபக்கம் நாஜி வருகை - அவர்களது அராஜகங்கள் - யுதர்கள் இடபெயர்ப்பு - கேம்ப் என ஒவ்வொன்று கொஞ்சம் விரிவான ஏரியா என்பதால் படம் பெரிதாக இருந்தாலும் தேவையான காட்சிகள் குறைவாகவே இருக்கிறது. முக்கியமாக படத்தின் 'டைட்டில்' ஆன ஃபுட்பால் சம்பந்தப்பட்ட காட்சிகள். இன்னும் கொஞ்சம் மேட்ச்கள், பிரச்சனைகள், தவறுகள், அதிலிருந்து கற்கும் பாடங்கள், கோச்-ப்ளேயர்ஸ் உறவு அதுஇதுவென்று இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆர்ப்பாட்டமான ஒளிப்பதிவுடன் அருமையாக கோரியோகிராப் செய்யப்பட்ட மேட்ச்கள் ஆரம்பித்த வேகத்தில் முடிந்துவிடுகிறது. ஏதாவது ஒன்றை முழுமையாக கவனித்து செய்திருக்கலாம். சிறிய குறை தானே தவிர படத்தை அது பெரிதாக பாதிக்கவில்லை.

உண்மையான எதிரி ஜெர்மனியின் நாஜிப்படை அல்ல. அவர்களுடன் சேர்ந்துகொண்டு பல்கேரியர்கள் தான் யூதர்களைக் காட்டிக்கொடுத்து, வேட்டையாடினர் என்று ஸ்ட்ராங்காகச் சொல்கிறது இந்தப் படம். சர்ச்சைக்குரிய இந்த ஹிஸ்டரியில் உண்மை இருப்பதாகவே தெரிகிறது. "The Bulgarian Fascists broke into our Homes and threw us out in the middle of the night. They loaded us into the trains to Treblinka Death Camp and gave the list to Germans" - இது அந்தக் கோரத்திலிருந்து தப்பித்தவர்களது வாக்குமூலம். பல்கேரியாவும் மாசிடோனியாவும் பக்கத்து பக்கத்து நாடுகள்.

எத்தனையோ நாடுகளிலிந்து எத்தனையெத்தனையோ உலகப்போர் சம்பந்தப்பட்ட படங்கள் வந்துவிட்டது. கதை, திரைக்கதையிலும் சரி டெக்னிக்கல் சமாச்சாரங்களிலும் சரி அந்தப் படங்களின் தரத்தில் பாதியளவு கூட இந்தப் படத்தில் இல்லை என்றாலும் இது மாசிடோனியர்களின் கதை. அவர்களது பதிவு. ஒரு முறை பார்க்கக்கூடிய படம்.

யுகோஸ்லாவிய யுத்தம், அதிபர் டிட்டோ பற்றி தெரிந்து கொள்ளhttps://goo.gl/pQS2tW

பிடித்திருந்தால் ஷேர் செய்யுங்கள். நண்பர்களுக்கும் இந்தப் பக்கத்தை பரிந்துரைத்து மகிழ்ந்திருங்கள்.

************************************

Dimitri, a local Journalist and a soccer enthusiast wants to build the Best Football Team in whole Yugoslavia. But his dreams are continuosly shattered by his lethargic team. So he hires Europe's finest Football Coach Rudolf Spitz, a German and a former football champion. The Coach's entry turns things upside down. Macedonian team starts winning local matches and begin to challenge Internation Teams. On the other side, the Team's Star Player, Kosta is in love with a rich businessman's daughter Rebacca. All is good before the Yogoslavian Government decides to extend their support to the Axis Powers (Germany, France, Japan...) which brings the Nazis inside Macedonia.

Just like any other WW2 movie, The Third Half also deals with holocoust and Jew massacre by the Nazis. But their love for Football and the German Coach's story is the fresh part here. A one-time watchable movie.


Other Recommended movies from Macedonia
Before the Rain (1994)
The Piano Room (2013)
The Great Water (2004)


Pls Share & Recommend this page to your friends.

Thank You for Your Support      



You Might Also Like

0 comments

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...