#100நாடுகள்100சினிமா #18. Congo (Africa) - VIVA RIVA! (2010)
8:44:00 AM
Djo Tunda Wa Munga | Congo | 2010 | 96 min.
(*** English write-up & Download Link given below
***)
பெட்ரோல் தட்டுப்பாடால் ஊரே அல்லோலப்பட்டுக்கொண்டிருக்கும்
பொழுது ஒரு டிரக் நிறைய கடத்தல் பெட்ரோலோடு வந்திறங்குகிறான் ஹீரோ Riva. அவனது பாஸ் Cesar என்பவனை டபுள் கிராஸ் செய்து Angolaவிலிருந்து பெட்ரோல் கடத்தி வந்திருக்கிறான்.
பதுக்கி வைத்து விலை ஏற்றி விற்க ஏற்பாடாகிறது. ஊரிலிருக்கும் சமயம் வாழ்வது எதற்கு வையகத்தில் சுகங்களை
வாழ்கையில் பெறதானே என்று குடியும் கூத்துமாக செம்ம ஜாலியாகப் பொழுதைக் கழிக்கும் ரிவா - ஒரு பார்ட்டியில்
Nora என்ற அழகிய தேவதையைச் சந்திக்கிறான் (சந்தித்துதானே ஆகவேண்டும்!).
அந்த ஊரின் பெரும்புள்ளி
/ கடத்தல்காரனான Azor என்பவனது காதலி அவள். எப்படியாவது நோராவை அடைய விரும்பி ரிவா அவளையே சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருக்க, ரிவா வைத் தூக்க தனது படையுடன் வந்திறங்குகிறான் சீசர். ரிவா என்ன ஆனான் என்பது தான் கதை.
Viva Riva! என்றால் 'ரிவா வாழ்க! (Long Live
Riva!)' என்று அர்த்தம்.
Brazil ற்கு 'City of God (2002)'
என்றால் Congo விற்கு இந்த Viva Riva! மண்ணின்
மைந்தர்களது கதை. நிலப்பரப்பும் மக்களும்
தான் முக்கியக் கதாப்பாத்திரங்கள். ஏழை, பணக்காரன், போலீஸ், மிலிட்டரி, பாதிரியார்
என்று படத்தில் உள்ள அனைவருமே நெகட்டிவ் கதாப்பாத்திரங்கள். சிறுவர்கள் மட்டுமே ஆங்காங்கே நல்லவர்களாக இருக்கிறார்கள். பெட்ரோல் தட்டுப்பாடு என்பதை மேலோட்டமாக காட்டிவிட்டு, ரிவா-நோரா காதல் கதைக்கே பெரும் பகுதியைச் செலவழித்துவிட்டனர். ஒரு ஆறுதல் - நாம் இதுவரை பார்த்திருக்கும் ஆப்ரிக்க படங்கள் அல்லது ஆப்ரிக்கர்கள் சம்பந்தப்பட்ட
படங்களில் காட்டப்படுவது போல் பசி, பஞ்சம், பட்டினி, குழந்தைத் தீவிரவாதிகள்,
வைரக்கடத்தல் என்றில்லாமல் பெட்ரோல் பஞ்சப்பின்னணியில் ஒரு
காதல் என்று புதிய (!) டிராக்கில்
பயணிக்கிறது படம்.
இதே படத்தை இதே ஆட்கள்,
இடத்தை வைத்து முழுக்க முழுக்க க்ரைம் த்ரில்லராக எடுத்திருந்தால்
பட்டையைக் கிளப்பியிருக்கும். காரணம் - டெக்னிகலாக படம் டாப் கிளாஸாக
இருக்கிறது.
குறிப்பாக ஒளிப்பதிவு.
'என்னடா ஃபாரின் ஃபாரின்னு
சொன்ன... ஊரே யூரின் போன மாதிரி
இருக்கு' என்று 'அயன்' படத்தில் ஜெகன் சொல்வதைப் போலத் தான் இருக்கிறது கதை நடக்கும் Congo நகரான Kinshasa. சில ஷாட்கள் இந்தியாவை நினைவுபடுத்தியது
(வட இந்தியா). சுத்ததில் நம் ஊர் வொர்ஸ்ட் என்றால் அவர்கள் ஊர் ரொம்ப வொர்ஸ்ட் ஆக இருக்கிறார்கள். நாம் கருப்பு என்றால் அவர்கள் காட்டுக்கருப்பு. அவ்வளவு தான் வித்தியாசம்.
கதை நடக்கும் நிலப்பரப்பை அப்படியே கச்சிதமாகப் படம்பிடித்து
அந்த ஏரியாக்களில் நாம் உலாவுவதைப் போன்ற உணர்வைக் கொடுக்கிறது ஒளிப்பதிவு.
படத்தை எழுதி இயக்கியிருப்பவர்
Djo Tunda Wa Munga. ஆப்ரிக்க நாட்டுத் திரைப்படங்களுக்காக
உயரிய விருதான Africa Movie Academy Awards (AMAA) வில் 12 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு 6 விருதுகளை வென்றிருக்கிறது இந்தப் படம். இன்றும் முறியடிக்கப்படாத சாதனை இது. ஆப்ரிக்க நாடு ஒன்றிலிருந்து ஹாலிவுட் தரத்தில்(!) ஒரு படம் வந்திருப்பது தான் சரித்திர வெற்றிக்கு முக்கிய
காரணம் என்று நான் நினைக்கிறேன். அமெரிக்காவிலும் படம் வெளியாகி ஒரு ரவுண்ட் வந்திருக்கிறது.
படத்தில் என்னை அதிகம் கவர்ந்தது வில்லனாக வரும் சீசர் தான். Hoji Fortuna என்பவர் நடித்துள்ளார். லேசாகக் கூன்விழுந்ததைப் போலக் குனிந்தபடி நடந்து வரும் உடல்மொழியும் (ஆள் செம்ம ஹைட்டு வேற),
வசன உச்சரிப்பும் செம்ம சூப்பராக இருந்தது.
தாராளமாக ஒரு முறை பார்கக்லாம்.
பிடித்திருந்தால் லைக்
& ஷேர் செய்யுங்கள்.
உங்களது நண்பர்களுக்கும் இந்தப் படத்தைப் பரிந்துரைத்து மகிழ்ந்திருங்கள் :)
*************************
Congo is suffering from a huge fuel Crisis and Riva, a
young playboy comes to its Capital City Congo with a truck full of Gasoline.
The Truck belongs to his former Boss, Ceaser from Angola. Riva meets Nora,
Lover of a local smuggler Azor in a party and falls for her. Meanwhile Ceaser
comes to Congo in search of Riva. What happened to Riva is the story.
Dir. Djo Tunda Wa Munga |
Directed by Djo Tunda Wa Munga, the movie is high in
standards when compared to any South African movie made so far and its the most
celebrated movie in South Africa till date winning 6 awards in The Africa Movie
Academy Awards. Unlike the usual South African films dealing mostly on Poverty,
Diamond Smuggling and Child Labour, this movie focuses more on Love more than
the Fuel Crisis part.
One-time Watchable.
Download Link - https://torrentz.eu/ df17cdbf441c3c886f0e5fe9938 cc4a51025fc34
Other Recommended movies from Congo:
Hit Like & Share. Recommend this page to your friends.
Happy movie watching :)
0 comments
மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...