#100நாடுகள்100சினிமா #15. BULGARIA - THE LESSON (Urok 2014)
9:43:00 AM
Kristina
Grozeva & Petar Valchanov | Bulgaria | 2014 | 111 min.
(***
English write-up & Download Link given below ***)
படத்தின் முதல் காட்சி. வகுப்பறை. ஆசிரியை ஒருவர் தனது கைப்பையிலிருந்து பணம் திருடியது யார் என்று விசாரித்துக்கொண்டிருக்கிறார். திருடியவன் திருந்த வாய்ப்புக் கொடுப்பதாகச் சொல்கிறார். அவர் பெயர் Nadezhda. இளம் ஆசிரியை. காதலித்து
திருமணம் செய்துகொண்டவர். எந்த வேலைக்கும் போகாமல் வீட்டிலிருக்கும் கணவனது கடமைகளையும் சேர்த்து தான்
செய்து வருபவள். வீட்டிலிருக்கும் தந்தையையே
அதிகம் விரும்பும் அழகான மகளுக்குத் தாய்.
கணவனது சோபேறித்தனத்தாலும்,
குடிபழக்கத்தாலும் பெரும் கடனுக்கு ஆளாகிறார். கடனை அடைக்கவும்,
தன்னிடமிருந்து பணம் திருடிய மாணவனையும் கண்டுபிடிக்க என்னென்ன
செய்தார் என்பது தான் இந்தப் படம்.
இது ஒரு 'இறைவி'யின் கதை. Nade வாக வருப்பவர் Margita Gosheva. மிகையில்லாத நடிப்பால்
கவர்ந்துவிட்டார். ஆசிரியராக, மனைவியாக, தாயாக, மகளாக, கடன்காரர்கள் முன் அவமானப்படும் குடும்பத்தலைவியாக அருமையாக
எழுதப்பட்டிருக்கிறது இவரது கதாப்பாத்திரம்.
படம் முழுவதும் இவரைச் சுற்றித்தான் நடக்கிறது. இவர் இல்லாத ஒரு ப்ரேம் கூட படத்தில் இல்லை. கதை மெதுவாகவே நகர்கிறது.
ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இவர் நடந்தோ, காரிலோ, பஸ்ஸிலோ செல்வதை மட்டும் சுமார் 20 நிமிடத்திற்கும் அதிகமாகக் காட்டுகிறார்கள்.
கதாப்பாத்திரம் அலைகழிக்கப்படுவதை ரசிகனும் உணர வேண்டுமென்றே
வைக்கப்பட்ட காட்சிகள் அவை. அது நன்றாக வொர்க் அவுட் ஆகிறது. எங்கும் ஆதரவில்லாமல் போகும் இடமெல்லாம் ஏமாற்றப்படும், பந்தாடப்படும், அவமானப்படுத்தப்படும் Nade கதாப்பாத்திரத்துடன் நம்மை அறியாமல் நாம் ஒன்றிவிடுகிறோம். 'கெத்து' என்று கொச்சையாகச் சொல்வதை விட 'வைரக்கியம்' என்று
சொன்னால் சரியாக இருக்குமென்று நினைக்கிறேன்.
Nade எதிர்கொள்ளும் ஒவ்வொருவரும் அவரது வைக்காக்கியத்தை சோதித்துப்பார்க்கும்
இடங்கள் அருமையாக கோர்க்கப்பட்டுள்ளது. தன்னிடம் பணம் திருடிய மாணவனை எப்படியாவது கண்டுபிடித்திட வேண்டும் என்ற பிடிவாதத்திலும் (obsession), ஒரு சமயம் வெறும் 1.25 டாலருக்காக அவர் படும்பாடும் சிறிய உதாரணங்கள்.
புதிதாகப் படத்தில்
எதுவும் சொல்லப்படவில்லை. பின்னணி இசை இல்லை. பொறுமையைச் சோதிக்கும் வேகத்திலேயே கதை நகர்கிறது.
'மனதில் உறுதி வேண்டும்',
'அவள் ஒரு தொடர்கதை'
போன்ற பல படங்களில் அலசப்பட்ட அதே பெண் கதாப்பாத்திரங்களின்
கதை. பெரும்பாலும் நாம் எதிர்பார்க்கும்
சம்பவங்களே அடுதடுத்து நடக்கிறது. ஆனாலும் படம் மனதை ஏதோ செய்கிறது. கிளைமாக்ஸ் காட்சி எது சரி, எது தவறு என்ற கேள்விக்கான பதிலை ஒருமுறைக்கு மறுமுறை யோசிக்கவைக்கிறது. அதுதான் படத்தின் வெற்றி.
படத்தை எழுதி இயக்கியிருப்பவர்கள் Kristina Grozeva & Petar Valchanov. முதல்
படம். Toronto சர்வதேசத் திரைப்படவிழாவில்
முதலில் திரையிடப்பட்டு பின்னர் பல திரைப்படவிழாக்களில் விருது வென்றிருக்கிறது படம்.
பார்த்தே தீர வேண்டிய
படமில்லை என்றாலும், இது
போன்ற நிறைய படங்கள் தமிழிலேயே உண்டு என்றாலும்,
ஒரு முறை பார்க்க வேண்டிய படம்.
'இறைவி'யைக் கொண்டாடுபவர்கள் அவசியம் இந்தப் படத்தையும் பார்க்க வேண்டும். கொண்டாட வேண்டும்
:)
பிடித்திருந்தால்
லைக் & ஷேர் செய்யுங்கள். உங்களது நண்பர்களுக்கும் இந்தப் பக்கத்தைப் பரிந்துரை செய்யுங்கள்.
*****************************
The
Lesson is the story of a Young Bulgarian Teacher, Nadezhda. Her husband is a
drunkard with no job and wastes all her earnings on a good-for-nothing Van.
When the debt raises and her home and pride are questioned, the desparate woman
will do whatever it takes to save her family.
Directors: Kristina Grozeva & Petar Valchanov |
Other
Recommended Movies from Bulgaria:
Hit
Like & Share. Recommend this page to your friends. Happy movie watching :)
1 comments
Bro, please make a separate list of worlds best gangster movies as well as crime thrillers.....!!would be great
ReplyDeleteமேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...