‪#‎100நாடுகள்100சினிமா‬ #16. FINLAND RARE EXPORTS: A CHRISTMAS TALE (2010 )

7:39:00 AM

Jalmari Helander | Finland | 2010 | 81 min.

(*** English write-up & Download Link given below ***)

நமது இந்த 100 நாடுகள் 100 சினிமா தொடரில் அனைத்து வகையான படங்களும் (genres) இடம்பெற்றிருக்க வேண்டும் என்பதால் சரியான 'ஃபான்டஸி' படம் ஒன்றைத் தேடிக்கொண்டிருந்தேன். Finland நாட்டிலிருந்து இந்தப் படம் கிடைத்தது. வெறும் Fantasy மட்டுமல்லாமல் Cult Fantasy என்று வகைப்படுத்தக்கூடிய கதை.

பின்லாந்தைப் பொறுத்தவரை இயக்குனர் Aki Kaurismaki இன் The Man Without a Past (2002) படத்தைப் பார்க்காமல் அடுத்த படத்திற்குப் போகக்கூடாது என்பது விதி (தலைவிதி அல்ல, ரூல் விதி ). So, முதலில் அதைப் பார்த்துவிட்டு இந்த Rare Exports பக்கம் வரவும். (Aki இன் 'Finland Trilogy' பற்றித் தனியாக பிறகு எழுதுகிறேன்)

பின்லாந்திலுள்ள பனிசூழ்ந்த Lapland என்ற இடத்தில் நடக்கிறது கதை. கிறிஸ்துமஸ் நெருங்கிக்கொண்டிருக்கும் சமயம். அமெரிக்க நிறுவனமொன்று அந்தப் பகுதியில் இருக்கும் Korvatunturi மலையை வெடிவைத்துப் பலநாட்களாக குடைந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறது. சுற்றியிருக்கும் அப்பகுதி மக்கள் அந்த இடத்தை நெருங்க முடியாதபடி பலத்த பாதுகாப்பு வேறு. அந்தப் பகுதிகளில் அதிகம் வசிக்கும் 'கலைமான்'களை (Reindeer. நன்றி: கூகிள்) வேட்டையாடி பிழைப்பு நடத்தும் கசாப்புக்காரன் Rauno. அவரது இளவயது மகன் Pietari. கிறிஸ்துமஸிற்கு முதல் நாள் நூற்றுக்கணக்கான கலைமான்கள் அந்தப் பனிமலையெங்கும் கொடூரமாகச் செத்துக்கிடக்கிறது. தொடர் வெடிசத்தத்தால் காடுகளிலிருந்து மக்கள் வாழும் பகுதிகளுக்கு இறங்கிய பெரும் ஓநாய் கூட்டம் ஒன்று தான் இந்தக் காரியத்தைச் செய்து தங்களது பிழைப்பில் மண்வாரிப்போட்டது என்று நினைக்கிறான் Rauno. பெருங்கோபத்துடன் அமெரிக்கர் கூடாரத்திற்குள் தனது சகாக்களுடன் அத்துமீறி நுழைகிறான். இவர்களைத் தொடர்ந்து Pietari யும் உள்ளே செல்கிறான். அங்கு அவர்கள் கண்டது என்ன? முதலில் அமெரிக்கர்கள் அங்கு வந்தது எதாற்காக? அவர்கள் மலையைக் குடைந்து எதைக் கண்டுபிடிக்க? - இது தான் Rare Exports படத்தின் கதை.

படத்தின் முக்கியமான மேட்டர் ஒன்றை இங்கு சொல்லவில்லை. IMDB உள்ளிட்ட பல தளங்களில், ஏன் படத்தின் பல போஸ்டர் டிரைலர்களில் கூட படத்தின் 'அந்த' முக்கிய ஆச்சரியத்தை ஜஸ்ட் லைக் தட் சொல்லியிருக்கிறார்கள். முதல் இருபது நிமிடங்களுக்குள்ளாகவே அது என்ன என்பது தெரிந்துவிட்டாலும், அது தெரியாமல் படம் பார்ப்பது இன்னும் அசத்தல் அனுபவமாக இருக்கும் என்பது என் எண்ணம். எனவே முடிந்தால், படம் பற்றி வேறு எதையும் தேடிப் படிக்காமல், டிரைலரையும் தவிர்த்து விட்டு, நம்பி இந்தப் படத்தைப் பாருங்கள். நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும். தெரிந்துவிட்டாலும் பாதகமில்லை. படத்தில் அதைத் தாண்டி ரசிக்ககூடிய விஷயங்கள் எவ்வளவோ உண்டு. படத்தின் ஒளிப்பதிவு, குறிப்பாக கிளைமாக்ஸ் எடுக்கப்பட்டிருக்கும் விதம் பார்ப்பவரை அசத்தப்போவது உறுதி.

படத்தை இயக்கியிருப்பவர் Jalmari Helander. 2003 ஆம் ஆண்டு இவர் இயக்கி வெளியிட்ட Rare Exports Inc., அதன் இரண்டாம் பாகமான Rare Exports: The Official Safety Instructions (2005) குறும்படங்களின் முழுநீளத்திரைப்பட வடிவமே இந்தப் படம். பல்வேறு திரைப்பட விழாக்களில் சிறந்த இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட பல விருதுகளைக் குவித்துள்ள இந்தப் படத்தை பிரபல விமர்சகரான Roger Ebert தனது விமர்சனத்தில் வெகுவாகப் புகழ்ந்து தள்ளியுள்ளார். பின்லாந்து தாண்டி படம் பரவலாக கவனம் பெற அந்த விமர்சனமே காரணமாக இருந்திருக்கிறது. அத்தோடு நிற்காமல், இயக்குனர் Jalmari க்கு தனது முதல் ஹாலிவுட் படத்தை இயக்கும் வாய்ப்பையும் பெற்றுத் தந்தது. Rare Exports இல் Pietari ஆக நடித்த சிறுவன் Onni Tommila உடன் Samuel L. Jackson நடித்த சுமார் படமான Big Game (2014) தான் அந்தப் படம்.

ஹாரர் + த்ரில்லர் + ஃபான்டஸி + மித் (myth) கலந்த கதை. அவசியம் ஒரு முறை பார்க்கலாம்.

பிடித்திருந்தால் லைக் & ஷேர் செய்யுங்கள். உங்களது நண்பர்களுக்கும் இந்தப் படத்தைப் பரிந்துரைத்து மகிழ்ந்திருங்கள் :)

*************************

Rare Exports: A Christmas tale is a story happening in the Korvatunturi Mountain region of Lapland where an American Company is digging a Big hole trying to unearth a Legendary secret. Rauno is a local reindeer slaughterer. he has a young son, Pietari. Just a day before Christmas, Rauno wakes up to witness hundered of reindeers lying dead around the American camp. He strongly believes that the explosions made by the Americans in that area have driven the wolves pack which has killed the reindeers. Accompanied by his friends he crosses the barriegates to confront the Americans. What he sees there is the rest of the story.

The Story has an important secret or sort of surprise element which I have not mentioned. That's the keypoint to the whole story but it's revealed everywhere including the promotional posters, trailers, IMDB / Rotten Tomoto synopsis etc. My strong advice is to skip all other info reg. the movie and watch it directly. You will be amazed.

Dir. Jalmari Helander
Directed by Jalmari Helander, this movie is the extended version of his previous Cult Short Films Rare Exports Inc. (2003) and Rare Exports: The Official Safety Instructions (2005). The film has won numerous awards for Best Director and Best Cinematography and has received 3.5 stars out of 4 from the famous critic Roger Ebert.

A different Horror Fantasy Cult Thriller not to be missed.


Other Recommended movies from Finland:
#1. The Man Without a Past (2002)
#2. Mother of Mine (2005)
#3. Frozen Land (2005)



Hit Like & Share. Recommend this page to your friends. Happy movie watching :)

You Might Also Like

0 comments

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...