#100நாடுகள்100சினிமா #14. SLOVENIA - CIRCUS FANTASTICUS (2011 - Silent Sonata)
6:49:00 AM
Janez Burger | Slovenia | 2011 | 75 min.
(*** English write-up and download link given below ***)
யுகோஸ்லாவியாவிலிருந்து பிரிந்த நாடுகளான Serbia, Macedonia, Croatia, Bosnia, Kosovo நாட்டுப்படங்களைப் பார்த்துவிட்டோம். கீழே உள்ள லின்க்களில் அந்தப் படங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.
1) Serbia - The Trap (2007) - http://babyanandan.blogspot.in/2016/06/100100-9-serbia-trap-klopka-2007.html
2) Macedonia - The Third Half (2012) - http://babyanandan.blogspot.in/2016/06/100100-10-macedonia-third-half-2012.html
3) Croatia - The Priest's Children (2013) - http://babyanandan.blogspot.in/2016/06/100100-11croatia-priests-children-2013.html
4) Bosnia - Fuse aka Gor Vatra (2004) - http://babyanandan.blogspot.in/2016/06/100100-12-bosnia-fuse-aka-gori-vatra.html
5) Kosovo - Kolona aka Column (2013) - http://babyanandan.blogspot.in/2016/06/100100-13kosovo-kolono-column-2013.html
கடையாக இருப்பது Slovenia. ஸ்லோவேனியாவிலிருந்து நிறைய படங்கள் வெளிவருகிறது. உலக சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் படம், The Slovenian Girl (2009). கசமுசா காட்சிகள் அதிகமிருந்தாலும் (அல்லது அதிகமிருப்பதாலேயே) அவசியம் பார்க்க வேண்டிய படம். Landscape No: 2 (2008) என்ற ஒரு படம் உண்டு. Blog இல் எழுதியிருக்கிறேன் (http://babyanandan.blogspot.in/20…/…/landscape-no2-2008.html). உலகத் திரைப்படவிழாவில் பார்த்தது. ஆனால் - அதிகம் வெளியே தெரியாத படங்களையே அதிகம் எழுத வேண்டும் என்ற லட்சிய வெறி இருப்பதால் இந்தப் படத்தைத் தேர்தெடுத்துள்ளேன்.
யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. முதல் காட்சியிலேயே வானிலிருந்து வீசப்படும் குண்டுமழைக்கு தனது மனைவியை பலிகொடுக்கிறார் நம் ஹீரோ. ஆள் அரவமில்லாத இடத்தில் தனித்திருக்கும் தனது வீட்டில் டீன் ஏஜ் மகள், மகனுடன் உயிருக்கு பயந்தபடி வசித்து வருகிறார். ஒரு அமைதியான இரவு வேளையில் வாகனங்கள் வரும் சத்தம் கேட்கிறது. மகளையும் மகனையும் ரகசிய அறையில் பதுங்க வைத்துவிட்டு தனது ரைஃபிலை எடுத்துக்கொண்டு மறைந்து நிற்கிறார். இரண்டு பெரிய வண்டிகளிலிருந்து வெளிச்சமடித்துப் பார்க்கிறார்கள். வண்டியிலிருந்து பலர் குதித்து இறங்கும் சத்தம் கேட்கிறது. உயிரையும் ரைஃபிலையும் இறுக்கப் பிடித்தபடி காத்திருக்கிறார் ஹீரோ. ஒரு உருவம் வீட்டினுள் வருகிறது. பாய்ந்து அந்த உருவத்தைத் தாக்கி, துப்பாக்கியால் சுட்டு, உரண்டு பிரண்டு எழுந்து பார்த்தால், வண்டியிலிருந்து வந்தவர்கள் அனைவரும் தரையில் படுத்தபடி கைகளைத் தூக்கிக் கிடக்கிறார்கள். ஹீரோ நினைத்தது போல அது ஆர்மி வண்டி கிடையாது, சர்கஸ் வண்டி. இவர்களுக்குள் நடக்கும் சம்பவங்களே கதை.
இந்தப் படத்தைத் தேர்தெடுக்க முக்கிய காரணம் இது ஒரு மௌனப்படம். கமல் 'பேசும் படம்' என்று 1987 ஆம் ஆண்டே இதைச் செய்துவிட்டார். அது கமர்ஷியல் படம். இது உலக சினிமா. சிறிய படம். கதையோடு நகராமல் வெறும் காட்சிகளைக் கொண்டு படத்தை கொண்டு செல்கிறார்கள்.
மென்சோகம் என்று சொல்லமுடியாது Surrealism என்று வகைப்படுத்தக்கூடிய வகையில் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்கள். அவை ஒரு பார்வையாளனாக, வித்தியாசமானதொரு அனுபவத்தைத் தருகிறது. கடலை ஒட்டிய அந்த நீண்ட நிலப்பரப்பும் ஒரு கதாப்பாத்திரமாகவே வருகிறது.
கேமரா கோணங்கள், கேமரா அசைவு, ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டுள்ள வண்ணங்கள் என்று அனைத்தும் அற்புதம். பீச் சைக்கிள் காட்சியும், கிளைமாக்ஸ் சர்க்கஸ் காட்சியும் மனதிலேயே தங்கிவிட்டது.
படத்தை எழுதி இயக்கியிருப்பவர் Janez Burger. இயக்குனராக மூன்றாவது படம். சொல்லவந்ததை வசனமில்லாமல் அதே சமயம் இன்னும் ஆழமாகச் சொல்லியிருக்கிறார். போரின் அவலத்தை இப்படியும் சொல்லலாம் என்று பாடமெடுத்திருகிறார்.
பார்த்தே தீர வேண்டிய படம் என்று சொல்ல முடியாது. வித்தியாசமான படங்களைத் தேடிப் பார்ப்பவர்கள் இந்தப் படத்தைத் தவர விடவேண்டாம்.
யுகோஸ்லாவிய யுத்தத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள -https://goo.gl/pQS2tW
*************************
A family who just lost the mother is living in an isolated, almost destroyed house in the Balkan regions out of nowhere. One night, a circus troupe visits them. What happens between the two parties next in the story. The Film has no dialogues. Visual story telling with stunnig cinematography, surrealistc images and weird camera angles are compelling and gives us a different movie watching experience.
Dir.Janez Burger |
Directed by Janez Burger this is a one-time watchable movie for fans who expect something different.
Other Recommended movies from Slovenia:
A Slovenian Girl (2009)
Landscape No: 2 (2008)
Hit Like & Share. Recommend this page to your friends. Happy movie watching
0 comments
மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...