#100நாடுகள்100சினிமா #8 NORWAY - NOKAS (2010)
7:42:00 AM
Eric Skjoldbjaerg | Norway | 2010 | 90 min.
(*** English write-up and download link given below ***)
குறைந்தது ஒரு 25 வங்கிக்கொள்ளை
படங்களாவது பார்த்திருப்பேன். ஒரு முறை கூட சலிப்பு தட்டவில்லை. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதத்தில் ஈர்த்துவிடுகிறது. தேடித் தேடிப் பார்த்து,
தொகுத்து 'வங்கிக்கொள்ளை சினிமா' என்று ஒரு பதிவு எழுதி முடித்துவிட்ட பிறகும் நிறைய படங்கள் கிடைக்கிறது. என் வசதிக்காக அந்தப் பதிவை அவ்வபோது அப்டேட் செய்து கொண்டே
வருகிறேன் (http://babyanandan.blogspot.in/2015/08/genre.html). இப்போது 100/100 க்காக 'நார்வே' நாட்டிலிருந்து வெளிவந்த
படங்களில் எதை எழுதலாம் என்று தேடிக்கொண்டிருந்த போது இந்தப் படம் கண்ணில் பட்டது. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட டாக்கு-டிராமா டைப் திரைப்படம்.
கண்முன்னே ஒரு வங்கிக்கொள்ளையைப் பார்த்த உணர்வு. அசந்துவிட்டேன்.
Nokas Cash Handling - நார்வே நாட்டின் Stavanger நகரில் உள்ள வங்கிகளுக்குப் பணப்பட்டுவாடா செய்யும் தனியார்
கம்பனி (570 கோடி இந்தக் கம்பெனி கன்டெய்னரில்
இருந்தால் நம்பலாம்). ஏப்ரல் 5, 2004. காலை சுமார் 8 மணி. 11 பேர் கொண்ட கும்பல் ஒன்று
கண்னாடி ஜன்னல் ஒன்றை உடைத்து இந்தக் கம்பெனிக்குள் நுழைந்து சுமார் 57.4 மில்லியன் க்ரோனர்
(Kroner - நார்வே கரென்சி)
பணத்தை சுருட்டிக்கொண்டு சென்றுள்ளனர். அமெரிக்க டாலர் மதிப்பிற்கு சுமார் 10 மில்லியன் டாலர்கள்.
இந்திய மதிப்பில் சுமார்
67 கோடி ரூபாய்.
நார்வே நாட்டின் மிகப்பெரிய கொள்ளையாகக் கருதப்படும் இந்தச் சம்பவத்தை அப்படியே
திரைக்கதையாக்கி படமாக்கியிருக்கிறார்கள்.
சின்னச் சின்ன விஷயங்களை மிக அருமையாக ஹேண்டில் செய்திருக்கிறார்கள். என்ன நடக்கப்போகிறதோ என்ற ஆர்வம் படம் பார்க்கும் நமக்கும்
தொறிக்கொள்வதே படத்தின் வெற்றி. படத்தைப் பற்றி வேறு எதுவும் சொல்ல வேண்டாமென்று நினைக்கிறேன். படம் பார்த்துவிட்டு
Nokas Robbery பற்றிய தகவல்களையும் படித்துவிடுங்கள்.
வழக்கமாக நார்வே என்றாலே இந்தப் படங்கள் தான் நினைவிற்கு வரும் - #1. Headhunters (2011) பார்த்தவர்கள் எல்லாம்
சிலாகித்த படம். சந்தேகமே இல்லாமல், மிகச் சிறந்த க்ரைம் திரில்லர்.
#2. Kon-Tiki (2012) - நான் பார்த்த நார்வே நாட்டுத் திரைப்படங்களிலேயே
மிகச் சிறந்த படம். 4,300 மைல்கள்
தூர கடற்பயணத்தை ஒரு தோணியில் கடந்த சாகஸ ஆராய்ச்சியாளரின் உண்மைக்கதை. விஷுவல் பிரம்மாண்டம்.
பார்த்தே தீர வேண்டிய படம்.
#3. Oslo August 31st (2011) என்ற படம் சென்னைத் திரைப்பட
விழா உள்ளிட்ட சர்வதேசத் திரைப்படவிழாக்களில் ஒரு ரவுண்ட் வந்தது. போதைக்கு அடிமையான ஒருவனது கதை.
#4. King of Devil's Island (2010) - திடீரென்று ஃபேஸ்புக் முழுக்க
இந்தப் படத்தைப் பற்றித் தான் பேசிக்கொண்டிருந்தனர்.
பாய்ஸ் ஹாஸ்டல்/ஹோம் ஒன்றில் நடக்கும் அக்கிரமங்களும் எதிர்ப்புகளும் தான் கதை. அருமையான டிராமா.
#5. Max Manus: Man of War (2008) - சோவியத் யூனியனுக்கு எதிராகப்
போராடிய வீரனின் உண்மைக் கதை. பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட ஹிஸ்டாரிக்கல் டிராமா. ஹிஸ்டரி, வார், ரெசிஸ்டன்ஸ் எனக்குப் பிடித்த
ஏரியா. இந்த 5 போக, #6. Troll Hunter
(2011) என்ற 'Found footage' டைப் ஃபான்டஸி த்ரில்லரையும் பலர் பரிந்துரைத்திருக்கிறார்கள். நான் பார்த்ததில்லை.
இந்த 5 படங்களையெல்லாம் ஏற்கனவே
பார்த்திருந்தால் அல்லது பார்த்து முடித்துவிட்ட பிறகு
'Nokas (2010)' படத்தைப் பாருங்கள்.
நிச்சயம் ஏமாற்றாது.
வங்கிக்கொள்ளை படங்கள் உங்களுக்கும் பேவரிட் என்றால் உடனடியாகப்
பார்த்துவிடுங்கள். மற்ற
படங்கள் காத்திருக்கட்டும்.
கொசுரு தகவல் 1: கொள்ளையடித்த 11 பேரும் ஒருவர் பின் ஒருவராக மாட்டியுள்ளனர். ஆனால் கொள்ளையடிக்கப்பட்ட
57 மில்லியன் க்ரோனரில் வெறும்
6 சொச்சம் மில்லியன் க்ரோனர் மட்டுமே மீட்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தக் கேஸை நடத்தி முடித்து கொள்ளையர்களுக்கு தண்டனை வாங்கிக்கொடுக்க அரசிற்கு
மொத்தமாக 160 மில்லியன் க்ரோனர் செல்வாகியிருக்கிறது!
கொசுரு தகவல் 2: Nokas இல்
இருந்த ஒரு புல்லர் ப்ரூஃப் ஜன்னலை உடைக்க
113 குண்டுகளைப் பயன்படுத்தியிருக்கின்றனர் திருடர்கள். 1994 - 2004 பத்து வருடங்களில் நார்வே போலீஸார்
சுமார் 79 குண்டுகளைப் பயன்படுத்தியுள்ளனர். அதில் 48, இந்த Nokas சம்பவத்தில் சுடப்பட்ட
குண்டுகள்.
இன்னும் நிறைய இருக்கிறது. படத்தைத் தவறவிடவேண்டாம். கூடவே சம்பவம் பற்றி இதர கூகிள், விக்கி தகவல்களையும்.
பிடித்திருந்தால் லைக் & ஷேர் செய்யுங்கள். இந்தப் படத்தையும் பக்கத்தையும் நண்பர்களுக்கும் ஷேர் செய்து மகிழ்ந்திருங்கள்
*******************
Bank Robbery movies are my favorites. 'Nokas' is a Norwagian film based
on the Biggest ever Heist in Norway. On April 5, 2004 11 heavily armed men
raided 'Nokas Cash Handling Company', a private concern responsible for Cash
Handling, Management and Distribution in Stavanger City. They escaped with
approx. 57.4 Million Kroner (~$10 Million / Rs. 67 Crores).
Dir. Erik Skjoldbjærg |
Directed by Erik Skjoldbjærg, the movie is completely based on real life facts and shot in the real
locations where the robbery took place. The movie script was written after
interviewing the persons involved in the original robbery who are now serving
sentences in various prisons across Norway. This what makes the movie more
interesting. It feels like watching a real-time robbery much like a Docu-Drama.
Other must watch films from Norway are Headhunters (2011), Kon-Tiki
(2012), Oslo august 31st (2011), King of the Devil's Island (2010), Max Manus:
Man of War (2008) and Troll Hunter (2011). All these are good, highly
reccomentded films from Norway. But if you are a huge fans of Heist Films
especially Bank Robbery, Nokas (2010) is definitely worth your time.
Recommend this movie and page to your friends.
Happy movie watching
1 comments
just stumbled upon your facebook page by chance. I'm grateful that i did. blown away by your movie love. followed you in fb!!keep up the good work brothr.....Kalakkunga:)
ReplyDeleteமேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...