100 நாடுகள் 100 சினிமா #3 BHUTAN - THE CUP (1999)
4:47:00 AM
Khyentse Norbu | Bhutan | 1999 | 93 min.
(*** English Synopsis given below ***)
படத்திற்குப் போகும்
முன், திபெத்தியர்களைப் (Tibetians) பற்றியும் திபெத்திலிருந்து வெளியேறி
இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ள புத்தத்துறவிகளைப் பற்றியும் சிறிது தெரிந்து வைத்துக்கொள்ளுத்தல்
அவசியம். 1950களில் திபெத் என்ற குட்டி
நாட்டை தனதாக்கிக்கொள்ளத் திட்டமிட்டு அதன் மீது படையெடுத்தது சீனா. நூற்றுக்கணக்கில் திபெத்தியர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். திபெத்திய போராளிகள் புத்தத்துறவிகளும் எவ்வளவோ முயன்றும்
பெரும் சீன சாம்ராஜ்ஜியத்தை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியவில்லை. 1959 ஆம் ஆண்டு சண்டை தீவிரமடைந்து கொண்டிருந்த சமயம் சீனாவின்
தொடர் அச்சுறுத்தல் காரணமாக, திபெத்தின் புனிதத்தலைவரான தலாய் லாமா (புனிதத்திரு. Tenzin
Gyatso, 14 ஆவது தலாய் லாமா) மார்ச் 30 ஆம் தேதி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அன்றிலிருந்து இன்றுவரை தாய்நாடு திரும்பும் கனவுடன் இந்தியாவில்
வசித்து வருகிறார். இந்திய அரசாங்கம் ஹிமாச்சலப் பிரதேசத்தில் திபெத் அகதிகளுக்கென ஒதுக்கிக்கொடுத்துள்ளது. 'தர்மஸ்தலா' (or Little
Lhasa) என்றழைக்கப்படும் அங்கு தான் திபெத் அரசாங்கம் இயங்கி வருகிறது. இதை 'Government in
Exile' என்று சொல்வார்கள். தலாய் லாமா இந்தியா வந்த பிறகு இந்திய - சீன உறவில் பெரிய விரிசல் ஏற்பட்ட்து உண்மை. தங்களது எதிரிக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்துள்ளதாக நினைக்கிறது
சீனா.
His Holiness the 14th Dalai Lama |
திபெத்திற்கும் சீனாவிற்குமிடையே நடந்த நடந்து கொண்டிருக்கிற
பிரச்சனை, அதில் இந்தியா உள்ளிட்ட
உலக நாடுகளின் பங்களிப்பு என்பது மிகப்பெரிய டாப்பிக். நான் குறிப்பிட்டுள்ளது ஒரு துளி அளவிலான அனைவரும் அறிந்த
விஷயமே. தலாய் லாமாவின் சிறு வயது வாழ்க்கை தொடங்கி அவர் இந்தியா வந்து சேர்ந்தது வரையிலான வரலாற்றை Kundun (1997) என்ற படத்தின் மூலம் நம் கண்முன் நிறுத்தியிருக்கிறார் இயக்குனர் Martin Scorsese. தலாய் லாமாவைத் தொடர்ந்து
திபெத்திலிருந்து பலர் இந்தியாவிற்கும் மேலும் சில நாடுகளுக்கும் தஞ்சம் புகுந்து வருகின்றனர். இந்தியாவில் தங்கி, ஆஸ்ரமம் (Monastery என்பது தான் சரி. தமிழில் 'மடம்') அமைத்து புத்த மதப் பெருமைகளைப் பரப்பித் தொண்டு செய்து வருகின்றனர். அப்படி ஒரு மடத்தில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில்
எடுக்கப்பட்டது தான் இந்தப் படம்.
எந்த ஒரு போர்டிங்
ஸ்கூலிலும் நடக்கும் சம்பவங்கள் தான் அந்த புத்தமடத்திலும் நடக்கிறது. திபெத்திலிருந்து நேப்பாளம் வழியாகத் தப்பி வந்த சிறுவர்கள்
மடத்தில் தஞ்சமடைந்து புத்ததுறவியாக படித்துவருகின்றனர். சிறுவர்களுக்கே உரிய குறும்புகளும், சுட்டித்தனங்களும் அவர்களிடமும் குறைவில்லாமல் இருக்கிறது. மடத்தலைவரான லாமா தனது அன்பால் மடத்தைச் சிறந்த முறையில்
வழிநடத்தி வருகிறார். அங்கிருக்கும் இளம் துறவிகளில் தீவிர கால்பந்து ரசிகனான Orgyen Tobgyal உம் ஒருவன். 1998 ஆம் ஆண்டு. உலகக்கோப்பை கால்பந்து நடந்து கொண்டிருக்கும் சமயம். தனது சக ஃபுட்பால் ரசிகர்களோடு சேர்ந்து இரவு ரகசியமாக மடத்திலிருந்து
எஸ்கேப் ஆகி அருகில் உள்ள கிராமத்திற்குப் போய் மேட்ச் பார்த்து வருகிறான். சரியாக ஃபைனல்ஸ் நெருங்கும் சமயம் பார்த்து மாட்டிக்கொள்கிறான். ப்ரான்ஸிற்கும் ப்ரேசிலிற்குமான ஃபைனல் மேட்ச்சை அவனால் பார்க்க
முடிந்ததா இல்லையா என்பது தான் The Cup படத்தின் கதை.
Dir.Khyentse Norbu |
JAVA 'வை விட வளர சிம்பிளான கதை. அதைக் கொடுத்த விதத்தில் தான் அசத்தியிருக்கிறார் இயக்குனர் Khyentse Norbu. இவர் ஒரு புத்தமத்துறவி. துறவி என்று சொல்வதை விட 'லாமா' என்று சொன்னால் தான் சரியாக இருக்கும். லாமா என்பவர் புனிதத்தலைவர் அந்தஸ்த்து உடையவர் (புத்தரின் மறுஅவதாரம்). அப்படிப்பட்டவர் சினிமா ஆர்வத்தில் கலிபோர்னியாவில் உள்ள NYC Film School சென்று சினிமா கற்று, உதவி இயக்குனராக Little Buddha (1993) என்ற படத்தில் வேலை செய்து
இந்தப் படத்தின் மூலம் இயக்குனராகியிருக்கிறார். பூட்டான் தயாரித்த முதல் படம். இந்தியாவில் படமாக்கப்பட்டிருக்கிறது. முழுக்க முழுக்க பூட்டானில் படமாக்கப்பட்ட முதல் படம் இந்த
லாமாவின் இரண்டாவது படமான Travellers and
Magicians (2003).
சின்னச் சின்ன சுவாரஸ்யமான
விஷயங்கள் படம் முழுக்க நிறைந்திருக்கிறது. Orgyen ஆக நடித்திருக்கும் சிறுவனது உடல்மொழி இளவயது ப்ரூஸ் லீயை
நினைவுபடுத்துகிறது. பேசிப்பேசியே காரியம் சாதிக்கும் அவனது சேட்டைகளை ரசிக்காதவர் இருக்க முடியாது. 'ஃபுட்பால்' பற்றி மடத்தின் மூத்த லாமாவிற்கும் அவரது சீடரான இளைய லாமாவும் பேசிக்கொள்ளும்
காட்சி எனது பேவரிட்.
லாமா:
எப்போது போர் நடக்கப்போகிறது?
சீடர்:
போரா? என்ன போர்?
லாமா:
ஒரு பந்திற்காக இரு நாடுகள் சண்டையிட்டுக்கொள்வார்கள் என்று
சொன்னீர்களே அந்தப் போர்..
சீடர்:
அது இன்று நள்ளிரவிற்கு மேல் நடக்கும்.
லாமா:
நள்ளிரவா? போரிட்டுக்கொள்ள வேறு சமயமே கிடைக்கவில்லையா அவர்களுக்கு? (சிறிய கோப்பை ஒன்றில் தேநீர் அருந்திக்கொண்டே) சரி... போரில் ஜெய்ப்பவருக்கு என்ன கிடைக்கும்?
சீடர்:
கோப்பை!
தனது கையிலிருக்கும்
கோப்பையைப் பார்த்து லாமா சிரிப்பதுடன் அந்தக் காட்சி முடியும். பல நுணுக்கமான விஷயங்கள் இந்த உரையாடலில் புதைந்திருப்பதை
நீங்கள் கவனிக்கலாம். படத்தில் பேசப்படும் ஒவ்வொரு வசனமும் உள்ளர்த்தம் கொண்டதாக எழுதப்பட்டுள்ளது. புத்தமதம், துறவம், மட வாழ்க்கை பற்றியும்
திபெத், இந்தியா, நேப்பாளம், சீனாவைப் பற்றியும் பல விஷயங்களை தனது கருத்துக்களாக வசனங்களின் மூலம் நமக்குச்
சொல்கிறார் இயக்குனர். கான் சர்கதேசத் திரைப்பட விழாவில் Director’s Fortnight பிரிவில் திரையிடப்பட்டது
இந்தப் படம். சிறுவர்களுக்கான சினிமா. வளர்ந்த சிறுவர்களும் அவசியம் பார்த்தே தீர வேண்டிய வளர சிம்பிள்
சினிமா.
படம் YouTube இல் ஆங்கில சப்டைட்டிலுடன் காணக்கிடைக்கிறது.
Based on True events, The Cup is the story of a young Buddist Monk, Orgyen
living in a monastery in exile in India. Orgyen is a football enthusiast and
will do anything to watch the World Cup, 1998. He sneaks out of the monastry
during night sometime alone and sometimes with his friends to watch the world
cup matches. But eventually he gets caught right before the Finals between
France and Brazil, his favourite two teams. Did Orgyen watch the Finals?
A very simple story written and directed by a Bhutanese Lama - Dir.
Khyentse Norbu who went to California’s NYC Film School to learn film making.
He has given made 3 wonderful films so far – The Cup (1999), Travellers and
Magicians (2003),Vara: A Blessing (2013). ‘The’ Cup premiered at the Cannes Director’s
Fortnight. A must watch movie for all ages.
Movie is available in YouTube with English Subtitles.
Other Recommended Bhutanese Films:
Travellers and Magicians (2003)
0 comments
மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...