#100நாடுகள்100சினிமா #5. ROMANIA - SILENT WEDDING (2008)

8:22:00 AM

#5. ROMANIA

(*** English write-up given below ***)

SILENT WEDDING (Nunta muta)


Horatiu Malaele | Romania | 2008 | 85 min.

கம்யூனிஸச் சித்தாந்தங்களால் பாடாய்படுத்தப்பட்ட அல்பெனியர்களது கதையைச் சொன்ன படம் - Slogan. அல்பேனியர்களைப் போலவே ரஷ்ய அடிவருடிகளான கம்யூனிஸ்ட் ஆட்சியாளர்களால் பாதிப்பிற்குள்ளான ரோமானியர்களைப் பற்றிய ஒரு மிகச்சிறந்த திரைப்படம் - Silent Wedding. 


இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ரஷ்யா (USSR) ஆதரவுடன் ரோமானியாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்தது. 1947 இல் தொடங்கிய கம்யூனிஸ்ட்களின் அட்டகாசம், 1989 ஆம் ஆண்டு மொத்தம் 45,000 பேரைக் காவு வாங்கிய 'ரோமானியப் புரட்சி' இன் இறுதியில் முடிவிற்கு வந்துள்ளது. இந்தப் படம் நடக்கும் ஆண்டு 1953. கம்யூனிஸ்ட் தலைவர் ஜோசப் ஸ்டாலின் இறந்த வருடம்.

ஆச்சரியங்களும் அமானுஷ்யங்களும் நிறைந்த பகுதிகளுக்குச் சென்று படம்பிடிக்கும் குழு, ரோமானியாவின் ஒதுக்குப்புறமான கிராமம் ஒன்றிற்குப் பயணப்படுகிறது. சிதிலமடைந்த நிலையில் இருக்கும் அந்தக் கிராமத்தின் கதையை அங்குள்ள பெண் ஒருவர் சொல்லத் தொடங்குகிறார். அது ஒரு திருமணம் நடந்த கதை.

Iancu - Mara இருவரும் காதலர்கள். சதா சர்வகாலமும் காதலில் திளைத்திருக்கும் வெறித்தனமான காதலர்கள். பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்தாலும், அந்த கிராம மக்கள் மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள். இந்நிலையில் காதலர்களை இப்படியே விட்டால் சரியாக இருக்காது என்பதால் சிலபல சலம்பல்களுக்குப் பிறகு இவர்களுக்குத் திருமணம் செய்து வைக்க முடிவுசெய்கிறார்கள். தடபுடலாக திருமண ஏற்பாடுகள் நடைபெருகிறது. சரியாக விருந்து தொடங்கும் நேரம், ரஷ்யாவிலிருந்து கம்யூனிஸப்படை அதிகாரி ஒருவர் அந்த ஊருக்கு வருகிறார். "எங்களது தலைவர் ஜோசப் ஸ்டாலின் இறந்துவிட்டார். நாடே ஒருவாரம் துக்கம் அனுஷ்டிக்க இருக்கிறது. எந்தக் கொண்டாடங்களும் இருக்ககூடாது. அழுகைச் சத்தம் தவிர வேறு எந்த சத்தமும் கேட்கக்கூடாது. மீறினால் கடும்தண்டனைக்கு ஆளாக்கப் படுவீர்கள்" என்று சொல்லிவிட்டுச் சென்றுவிடுகிறார். ஊரில் உள்ள அனைவரையும் ஒன்றுகூட்டி, கையிலிருக்கும் காசையெல்லாம் போட்டு விருந்து ஏற்பாடு செய்து வைத்திருக்கும் பெண்ணின் தந்தை என்ன ஆனாலும் நான் இந்தத் திருமணத்தைக் கொண்டாடியே தீருவேன் என்று முடிவுசெய்கிறார். திருமணக் கொண்டாடங்கள் நடந்தது எப்படி? அந்த ஊருக்கு என்ன ஆனது? என்ற கேள்விகளுக்கு விடை தான் படம்.

இதுவும் ஒரு பிளாக் காமெடி படம் தான். 'சிரிப்பு' இந்தப் படத்தில் பெரும் பங்காற்றியிருக்கிறது. எதற்கெடுத்தாலும் சிரித்துக்கொண்டிருக்கும் இந்தக் கிராமத்தினரின் செய்கைகள் ஒவ்வொன்றிலும் நகைச்சுவை நிரம்பியிருக்கிறது. சிரிப்பினூடே தங்களது பொருளாதார நிலையையும், கம்யூனிஸ ஆட்சியில் இருக்கும் ஓட்டைகளையும் ஆங்காங்கே அடிக்கோடிட்டுக்காட்டுகிறார்கள். கட்சிக்கு ஆள் சேர்க்க உள்ளூர் கம்யூனிஸ்ட்கள் படும்பாடும், அடிக்கும் லூட்டிகளும் செம்ம காமெடி. கம்யூனிஸம் என்றால் என்னவென்றே தெரியாத அவர்கள் தான் ஆட்சியின் பிரதிநிதிகள். ஹீரோவின் நண்பனாக வரும் குள்ளனின் கதையை மறக்க சில தினங்கள் ஆகலாம்.

மக்களை வழிநடத்திக் கொண்டு போக வேண்டிய அதிகாரம், சாமானியர்களை நசுக்கவே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு எந்த நாடும் விதிவிலக்கல்ல. மக்களால் தேர்தெடுக்கப்படுபவர்களே இப்படியிருக்கும் போது, அடித்துப்பிடுங்கி ஆட்சியமைத்தவர்கள் என்னென்ன செய்வார்கள்?

படத்தை எழுதி இயக்கியிருப்பவர் Horatiu Malaele. இயக்குனராக இது இவருக்கு முதல் படம்.

பி.கு: அவசியம் பார்க்க வேண்டிய பிற ரோமானியப் படங்களைக் கடைசியில் கொடுத்துள்ளேன். அவற்றையும் பார்த்துவிடுங்கள்.

A Romanian comedy-drama, set in a small village in 1953, about a young couple about to get married. Guests arrive, the feast is ready and everything is prepared. Just then a Russian Milittary Officer arrive and announces the death of Stalin. He informs ‘One week of National mourning’ effective immediately. Wedding and the party should be cancelled or there will be consequences. But the girl’s father decide to celebrate it anyway - just silently.

Another must-watch Black-Comedy Drama about the influenzes of the USSR Communism in smaller countries just like Albania’s SLOGANS (2001). With a hard-hitting climax this simple, small movie is definitely worth your time.


Recommended movies from Romania:

4 Months, 3 Weeks and 2 Days (2007)
Aferim! (2015)

Tuesday, After Christmas (2010)

You Might Also Like

0 comments

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...