#100நாடுகள்100சினிமா #4. ALBANIA - SLOGANS (2001)
8:04:00 AM
Gjergj Xhuvani | Albania | 2001 | 90 min.
இரண்டாம் உலகப் போர்
– நான் தேந்தெடுத்துள்ள 100 நாடுகளில் சுமார் 30 நாடுகள்
வரை இரண்டாம் உலகப் போர் சம்பந்தப்பட்ட படங்களை எடுத்துள்ளனர். ஜெர்மனி, ரஷ்யா, ஜப்பான் - பல நாடுகளின் தலையெழுத்தை மாற்றியமைத்த நாடுகள்.
போருக்குப் பிறகு 'கம்யூனிஸம்' என்ற பெயரில் கூட்டு சேர்ந்து இன்னும் சில நாடுகளைக்
கதிகலங்க வைத்த நாடுகள் இரண்டு
- ரஷ்யா, சீனா. அப்படி பாதிப்பிற்குள்ளான
நாடுகளில் ஒன்று - Albania. ஐரோப்பிய கண்டத்திலுள்ள
மிகச் சிறிய நாடு.
Albanian Flag & Location |
'உலக திரைப்பட வரலாறு' என்ற ஒன்றை எழுதினால், அதில் அல்பேனிய சினிமாவிற்கென்று ஒரு கால்பக்கம் கூடத் தேறாது. இத்தனைக்கும் 1911 களிலேயே அல்பேனியாவில் சினிமா காலூன்றிவிட்டது.
ஆரம்பத்திலிருந்தே வெறும் டாக்குமெண்டரிகளாக எடுத்துத் தள்ளியிருக்கிறார்கள். இரண்டாம் உலகப்போர் சமயங்களில் போர் சம்பந்தப்பட்ட டாக்குமெண்டரிகள். அதன் பின் அல்பேனியா ரஷ்யாவின் கம்யூனிஸ அலையில் சிக்கிக்கொள்ள
மீண்டும் ரஷ்யா, கம்யூனிஸம், லெனின், ஸ்டாலின் புகழ் டாக்குமெண்டரிக்கள் பிறகு சீனர்கள் பெருமை என்றே படம் பார்த்திருக்கின்றனர். 1960 களில் தான் முழுநீளத்திரைப்படங்கள் வரத் தொடங்கியிருக்கிறது. அதுவும் பெரும்பாலும்
'போரினால் நாங்கள் பட்ட பாடு'
ரகமாகவே இருந்திருக்கிறது.
அவ்வபோது வெளிவந்த சில கேளிக்கைப் படங்களும் பெரிதாக உலக
அரங்கில் எடுபடவில்லை. 1990களில்
கம்யூனிஸம் கொஞ்சம் கொஞ்சமாக அல்பேனியாவை விட்டு விலகிய பிறகு தான் அங்கு சினிமாவிற்கு
விடிவுகாலமே பிறந்திருக்கிறது.
இந்தப் படத்திற்கு
வருவோம்.
அல்பேனியாவில் உள்ள
மலைப்பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமத்திற்கு வருகிறார் 'பயாலஜி' வாத்தியாரான ஆன்ட்ரியா (Andre). கம்யூனிஸ சித்தாந்தங்களில் ஊறியுள்ள,
கம்யூனிஸத் தலைவர்களது பார்வை தங்கள் மேல் பட்டு அவர்களது
நிரந்தர அபிமானிகளாக இருக்க வேண்டும் என்று மட்டுமே சதா யோசித்துக்கொண்டிருக்கும் கும்பல்
ஒன்று அந்தப் பள்ளியை நடத்துகிறது. மாணவர்களுக்கு பாடம் நடத்துவதை விட,
அவர்களை வைத்து அந்த ஊர் மலைச்சரிவுகளில் 'கம்யூனிஸ புகழ் பாடும் கோஷங்களை
(Slogans)' வெள்ளைக்கற்கள் கொண்டு அடுக்கி வைத்து 'டிஸ்ப்ளே' செய்யவேண்டும் என்பதிலேயே குறியாக இருக்கின்றனர்.
கம்யூனிஸ (ரஷ்ய) தலைவர்கள் அவ்வூர் பக்கமாகச்
சொல்லும் போது, இந்த பிரம்மாண்ட கோஷ டிஸ்ப்ளே
அவர்களது கண்ணில் பட்டால் அந்த ஊர் கம்யூனிஸ லீடருக்குப் பெருமை (தலைவர்கள் இதை மயிரளவு கூட மதிப்பதில்லை என்பது வேறு சங்கதி). இதில் சிக்கிக்கொண்டு தவிப்பது அப்பாவிப் பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் தான்.
முழுக்க முட்டாள்த்தனமான இந்த
'ஸ்லோகன்' வேலையை அவ்வபோது தங்களது எதிரிகளைப் பழிவாங்குவதற்கும் பயன்படுத்திக்கொள்கின்றனர். இப்படியான அட்டகாசங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் சுயசிந்தனையில்
பின்தங்கிப்போயிருக்கும் ஒரு ஊரில், ஆன்ட்ரியா என்ற கொஞ்சமே கொஞ்சம் முற்போக்குச் சிந்தனையுள்ள, அடக்குமுறைகளைக் கேள்விகேட்டுப் பழகிய ஒரு வாத்தியார் என்ன
ஆனார் என்பது தான் இந்தப் படம்.
2001
ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம்,
பிரான்ஸ் அரசின்
'Fonds Sud Cinéma funding program' என்ற சினிமாவில் பின்தங்கியிருக்கும் தேசங்களுக்கு உதவும்
அமைப்பின் உதவியினால் எடுக்கப்பட்டிருக்கிறது. பிரான்ஸ்
இருந்ததாலேயே இந்தப் படம் வெளி உலகத்திற்குத் தெரிந்திருக்கிறது. Cannes திரைப்பட
விழாவில் பங்குபெற்ற முதல் அல்பேனியத் திரைப்படம் Slogans. இது தவிர
இன்னும் சில திரைப்படவிழாக்களில் பங்கெடுத்து விருதுகளை வென்றிருக்கிறது இந்தப் படம். படத்தின்
இயக்குனர் Gjergj Xhuvani.
ஒருவகையில் இது ஒரு
பிளாக் காமெடி படம். ஒரு
காட்சி விடாமல் கம்யூனிஸத்தைப் பகடி செய்கிறார்கள்.
'பந்தியில திங்கிறது நீ மொயெழுதுறது மட்டும் நானா' என்று ஊர்பக்கம் சொல்வார்கள்.
அந்த கதை தான் இந்தப் படம்.
இரண்டாம் உலகப்போருக்கு முன் ரஷ்யா (USSR) மட்டுமே கம்யூனிஸ சித்தாந்தங்களை பின்பற்றி வந்த ஒரே பெரிய
நாடு. போருக்கு பின்னான சூழலில் (பெரும்பாலும் அமெரிக்கா மீது உண்டான வெறுப்பால்) ரஷ்யாவுடனான நட்பை வளர்த்துக் கொண்டு கம்யூனிஸத்திற்கு ஆதரவு
தெரிவித்த (ஐரோப்பிய) நாடுகளில் முக்கியமானவை Romania, Albania,
Yugoslavia. இதில் அல்பேனியா தான் ரொம்பப் பாவம். 1944 இல் தொடங்கி 1985 இல் தான்
சாகும் வரை 40 ஆண்டுகளுக்கு அல்பேனியாவை ஒருவழி செய்த கம்யூனிஸத் தலைவரான Enver Hoxha. இரண்டாம்
உலகப்பொருக்குப் பிறகு அல்பேனியாவை மீட்டெடுத்தவர் இவர்தான் என்றாலும், தனது 'கம்யூனிஸ' (Anti Revisionist Marxism-Leninism) முறைகளால் இவர் செய்த அட்டகாசங்கள் கணக்கில் அடங்காதவை. 'சீனப்பெருஞ்சுவர்' மாதிரி எதிரிகளிடமிருந்து
நாட்டைக் காப்பாற்ற bunkerization என்ற பெயரில்
ஆயிரக்கணக்கில் கான்க்ரீட் பங்கர் கட்டிய கதையை Bunkers (1996) என்ற
படத்தில் சொல்லியிருக்கிறார்கள். Tirana
Year Zero (2001) என்ற
படத்தில் வானிலிருந்து வரும் எதிரிகளிடமிருந்து காத்துக்கொள்ள ஆயிரக்கணக்கில் ஈட்டிக்களை
நட்டு வைத்த கதையைச் சொல்லுகிறது.
Marxism, Leninism, Maoism வழியில் தன் பெயரில் Hoxhaism என்ற சித்தாந்தத்தை
உருவாக்கியிருக்கிறார். இந்தப் படம் இவரது ஆட்சிக்காலத்தில் நடப்பதாகத் தான் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
ஜாதி, மதம், இனம், மொழி மட்டுமல்ல
சித்தாந்தங்களும் (Ideology) மனிதனை வழிநடத்துவதற்காகவே சான்றோர்களால் தோற்றுவிக்கப்பட்டவை. அவற்றைத்
தவறாகப் புரிந்து கொண்ட சில முட்டாள ஜென்மங்களில் கைகளில் அதிகாரமும் வழங்கப்படும்போது
ஏற்படும் விளைவுகள் மிக மோசமானதாக இருக்கிறது. பிறந்தநாள்
என்றால் மாநிலம் முழுவதும் பானர், கட் அவுட்,
வலுக்கட்டாய இலவச திருமணம், காதுகுத்து, கும்பல்
மொட்டை, காவடி
கரகம், யாகம், ஊர்வலம்; ஒரு இடத்திற்குச்
சென்றால் வழிநெடுக வாழைத்தோரணம், பானர், கட்-அவுட், கொடி; வெள்ளம் வந்து செத்துக்கொண்டிருக்கும் மக்களுக்கு கொண்டுசெல்லப்படும்
நிவாரணப்பொருட்களில் கூட ஸ்டிக்கர் என்று இந்த அடிப்பொடிகள் செய்யும் அட்ராசிட்டிகள்
தான் பிரச்சனையே. ஸ்டிக்கர்
சரியாக ஒட்டியிருக்கிறதா, தோரணம் சரியாக கட்டப்பட்டிருக்கிறதா, மொட்டை தெளிவாக
அடிக்கப்பட்டிருக்கிறதா என்பதையெல்லாம் ஆட்சியில் இருப்பவர் திரும்பிக்கூடப்பார்க்கமாட்டார் - ஆனால் - ஒருவேளை
அவரது கடைக்கண்பார்வை ஒரு பக்கமாகப் பட்டால், அந்தப் பார்வை
படும் இடத்தில் தன் முகம் தெரிய வேண்டுமென்று குஞ்சுகள் செய்யும் வேலைகளால் நொந்து
நூடில்ஸ் ஆவது - அப்பாவிப் பொதுமக்களே. அது எந்த
நாடாக இருந்தாலும் சரி. தலைவர்களும் கவனிக்கிறார்களோ இல்லையோ, இதையெல்லாம்
விரும்பவே செய்கிறார்கள்.
அவசியம்
பார்க்க வேண்டிய படம். YouTube இல் ஆங்கில சப்-டைட்டிலுடன்
இருக்கிறது.
Biology teacher Andre, comes to
work in a small village in the mountains of Albania. He quickly discovers that his new schools authorities are more
interested in propagandizing revolutionary principles rather than teaching them
anything on the syllabus. He's expected to choose a 'Slogan' for himself (his
class, actually). Rather than teaching Biology in classroom, the teachers and
students have to spend their days on the surrounding hills where they will
assemble these prescribed slogans in white stones. About fifteen meters long
and two meters wide, the slogans are supposed to constantly demonstrate loyalty
to the ideas of communism which appels the local authorities ensuring support
to the Country's Political Agenda. Series of events takes place and that is the
sad, satirical story said in this 'Slogans'.
Albania, because of its
Communist Leader, Enver Hoxha who for
40 years ruled Albania under the heavy influence of the Communist ideologies
from Russia and later from China was literaly isolated from the other world
countries. Cinema in Albania goes back to the 1910s but only the post-commnist
period, with the help of French Government, Albanian Directors were able to
tell their stories to the world. This movie 'Slogans' is the first movie to
participate in Cannes. It premiered in the Directors Fortnight. It was
submitted to the Oscars also.
A must-watch satire movie which is funny and heavy at
the same time. The movie is available in YouTube with English subtitles.
0 comments
மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...