11.14 | 2004 | US/Canada

8:53:00 AM

Vantage Point படத்தின் கதை பல பேருக்குத் தெரிந்திருக்கும். அமெரிக்க ஜனாதிபதி ஒரு மேடயில் பேசிக் கொண்டிருக்கும் போது சரியாக 12 மணிக்கு சுட்டுக் கொல்லப்படுவார். அவர் பேசிக்கொண்டிருந்த மேடையிலும் குண்டு வெடிக்கும். அந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஒரு போலீஸ் அதிகாரி, கொலைகாரன், ஒரு பார்வையாளன், ஜனாதிபதி, வில்லன் என்று பலர் பார்வையில் படம் நகரும். ஒரே சம்பவம் பலர் பார்வையில் 12 மணிக்கு முன் - 12 மணிக்குப் பின் என்று ஃப்ளாஷ்பேக்/ க்ரொனொலாஜிக்கல் டைப்பில் காட்டப்படும். 11.14 படமும் சரியாக இரவு 11 மணி 14 நிமிடத்தில் நடக்கும் ஒரு சம்பவம், அதில் சம்பந்தப்பட்டவர்களைப் பற்றியதே. 11:14 முன், 11:14 பின் என்றே நகரும். ஆனால் Vantage Point படத்திற்கும் இதற்கும் ஒரு பெரிய வித்யாசம் உண்டு. இந்தப் படத்தில் இடம்பெரும் சம்பவத்திற்கும், அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கும் ஒருவருக்கொருவர் சம்பந்தமே இருக்காது. ச்சே... ஏகப்பட்ட சம்பவம்/சம்பந்தம் என்று குழப்பிவிட்டேன். நேரடியாக விஷயத்திற்கு வந்து விடுகிறேன்.

11.14 படத்தின் கதை என்று எதுவும் இருப்பதாய்த் தெரியவில்லை. சீரீஸ் அஃப் இன்சிடெண்ட்ஸ் மட்டுமே. அதை வரிசையாகச் சொல்ல ஆரம்பித்தால் முழுப்படத்தையும் சொல்ல வேண்டியிருக்கும். அதனால் அறிமுகம் மாதிரி கொடுத்துவிடலாமென்று நினைக்கிறேன்.

சம்பவம் 1

படத்தின் முதல் காட்சி. வேகமாக ஒரு கார் வருகிறது. அதில் கொஞ்சம் குடித்து விட்டு, செல் போனில் பேசியபடியே கார் ஓட்டிக்கொண்டு வருகிறான் ஜாக்’. காரின் டாஷ்போர்ட் கடிகாரம் 11:14 என்று காட்டுகிறது. திடீரென்று அவன் கார் முன்பாகம் மேல் வந்து ஏதோ டம்மென்று விழ, காரை நிருத்திவிட்டுப் பயத்தோடு போய் பார்க்கிறான். விழுந்தது, முகம் சிதைந்த நிலையில் ஒரு பிணம்! மிரண்டு போய் திரும்ப பின்னால் ஒரு கார் வருவது போல் தெரியவும், பாடியை என்ன செய்வதென்று தெரியாமல், கார் டிக்கிகுள் மறைக்கிறான். பின்னால் வந்த காரில் வருபவள் நார்மா’. நடுரோட்டில் காரை நிப்பாட்டி வைத்திருக்கும் ஜாக்கிடம், ஐய்யையோ, மானை இடித்துவிட்டாயா? உதவி வேண்டுமா” என்று கேட்கிறாள். அவன் வேண்டாம்மென்று சொல்லியும் கேளாமல், போலீஸ் சீப் என் ஃப்ரெண்ட் தான் என்று கூறி போலீஸிற்கு போன் செய்து விட்டுப் போய்விடுகிறாள். டிக்கியில் பிணத்துடன் ஜாக் என்ன செய்வதென்று தெரியாமல், எஸ் ஆவதற்குள் போலீஸ் வண்டி வந்து விடுகிறது. வண்டியினுள்ளே ஏற்கனவே கைதிகள் டஃப்பி’, பஸ்ஸி’ இருவர் இருக்க, ஆபீஸர் ஹன்னாகன்’ இறங்குகிறார்

சம்பவம் 2

நண்பர்கள் டிம்’, மார்க்’, எடீ’ மூவரும் முழுமுட்டக் குடுத்து விட்டு தங்கள் காரிலிருந்தபடியே போற வர வண்டிகள் மீதெல்லாம் எதையாவது தூக்கி எறிந்து அட்டகாசம் செய்துகொண்டே போகிறார்கள். அதிலும் மார்க் எடீ கண்ணாடி வழியாக உச்சா போக, வண்டி ஓட்டிக்கொண்டிருக்கும் மார்க் பின்னால் திரும்பி கத்த, ரோட் க்ராஸ் பண்ணிக்கொண்டிருக்கும் செர்ரீ’ மீது கார் மோதிவிடுகிறது. செர்ரீ 7/G சோனியா மாதிரி பறப்பதை பார்க்கும் டஃப்பி’ துப்பாகியுடன் ஓடிவருகிறான்...

சம்பவம் 3:

தன்னிடம் கார் வாங்கிக்கொண்டு போன மகள் 'செர்ரீ', இரவு வெகுநேரமாகியும் வீடு வராத தால் அவளைத் தேடிப் போகும் ஃப்ராங்க் அவள் கார் சாவியை ஒரு கல்லறையில், தலை சிதைந்த நிலையிலிருக்கும் ஒரு பிணத்தின் அருகில் கண்டெடுக்கிறார். இறந்து கிடப்பது 'ஆரோன்'. பிணத்தை மறைக்க நினைக்கும் ஃப்ராங்க், ஆரோன் காரிலேயே உடலை தூக்கிப் போட்டுக்கொண்டு ஒரு பாலத்திலிருந்து கீழே போடுகிறார். பிணம் டம்மென்று எதன் மீதோ விழும் சத்தம் கேட்கிறது. சிறிது நேரத்தில் கீழே ரோட்டைலிருந்து பாலம் ஏறி அந்த வழியே வரும் ஃப்ராங்கின் மனைவி 'நார்மா' பாலத்தின் கீழே யாரோ ஒருவன்(ஜாக்) ஒரு மானை காரில் இடித்துவிட்டதாகவும், போய் பார்க்கும்படியும் சொல்கிறாள்...

சம்பவம் 4:

'பஸ்ஸி' தான் வேலை செய்யும் சூப்பர் மாக்கெட்டில் தனியாக இருக்கிறாள். அப்போது கூட வேலை செய்யும் 'டஃப்பி' வந்து, தன் காதலி ஜெர்ரீ கர்பமாகிவிட்டதாகவும், களைக்க பணம் வேண்டும் என்றும் அதனால் 500$ திருடப்போவதாகவும் சொல்கிறான். அதற்குள் அங்கு 'ஜெர்ரீ' வந்து விட, டஃப்பி, அவளுடன் பண ஏற்பாட்டைப் பற்றிப் பேசுகிறான். டஃப்பியின் துப்பாக்கியை பஸ்ஸி அழுத்த அது கண்ணாடிக்கதவை உடைத்துக்கொண்டு வெடிக்கிறது. சீக்கிரம் பணத்துடன் வா என்று ஜெர்ரீ கிளம்ப, நிஜமான ஒரு திருட்டு போல் இருக்க வேண்டும் என்று பஸ்ஸி கையில் சூட்டு, 9-1-1 க்கு போன் செய்கிறான் டஃப்பி. ஆனால் அவன் எதிர்பார்த்ததற்கு முன்பே போலீஸ் வந்துவிடுகிறது. அடித்துப்பிடித்து ஓடி ரோட்டின் அந்தப்பக்கம் நின்று கொண்டிருக்கும் ஜெர்ரீ யை அழைக்கிறான். ஜெர்ரீயும் ரோட்டைக் க்ராஸ் செய்கிறாள்...

ம்பவம் 5:

இரவு வீட்டை விட்டு வரும் ஜெர்ரீ, தன் காதலன் ஆரோனுடன் ஒரு கல்லறைக்கு அருகே உல்லாசமாய் இருக்கிறாள். அப்போது அந்த கல்லறையில் பதிக்கப்பட்டிருக்கும் சிலையின் தலை வாகாக படுத்துக் கொண்டிருக்கும் ஆரோன் தலையில் விழுந்து அவன் அந்த இடத்திலேயே முகம் சிதைந்து இறக்கிறான். பயத்தில் அலறியடித்து அந்த இடத்தை விட்டு ஓடும் ஜெர்ரீ தன் கார் சாவியை அந்த இடத்திலேயே விட்டு விட்டு ஓடிவிடுகிறாள். தன் தந்தையிடம் கார் வாங்கிக்கொண்டு டஃப்பியின் கடைக்கு போகிறாள்...

மேற்கூறிய 5 சம்பவங்களையும் சரியாக ஒரு புள்ளியில் இணைத்தால் கதை என்று ஒன்றுமேயிருக்காது. ஒரு ஆக்ஸிடண்ட்; அதற்கு அரை மணி நேரம் முன் நடப்பவை தான் மொத்தப் படமுமே. முழுக்க முழுக்க திரைக்கதை மட்டுமே. அபாரம், அற்புதம், சூப்பர் என்று நான் கொண்டாடும் படங்களில் இந்தப் படமும் உண்டு.

படத்தின் இயக்குனர் Greg Marcks

படத்தின் லிங்க்...

http://rapidshare.com/files/228525100/eleven_fourteen_-_11_14__2003__DVDrip_with_eng_srt_subtitles.part2.rar
http://rapidshare.com/files/228525106/eleven_fourteen_-_11_14__2003__DVDrip_with_eng_srt_subtitles.part6.rar
http://rapidshare.com/files/228525157/eleven_fourteen_-_11_14__2003__DVDrip_with_eng_srt_subtitles.part7.rar
http://rapidshare.com/files/228525187/eleven_fourteen_-_11_14__2003__DVDrip_with_eng_srt_subtitles.part1.rar
http://rapidshare.com/files/228525241/eleven_fourteen_-_11_14__2003__DVDrip_with_eng_srt_subtitles.part4.rar
http://rapidshare.com/files/228525360/eleven_fourteen_-_11_14__2003__DVDrip_with_eng_srt_subtitles.part5.rar
http://rapidshare.com/files/228525407/eleven_fourteen_-_11_14__2003__DVDrip_with_eng_srt_subtitles.part3.rar

ி.கு: இதே கதையை அப்படியே நம் ஊருக்கு ஏற்றார்போல் நான் முன்பு ஒரு சிறுகதை எழுதியிருக்கிறேன். அது இங்கே...

You Might Also Like

6 comments

  1. நண்பரே ,
    அறிமுகத்துக்கு நன்றி, இம்மாதிரி படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

    அன்புடன்,
    லக்கி லிமட்

    ReplyDelete
  2. ஆமாம் தல. vantage point ரொம்ப interesting -ஆன படம்.அதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லியா ?. நல்லவேளை. ஏற்கனவே டவுன்லோடு பண்ணிட்டேன். கதையே இல்லாம (?) விறுவிறுப்பாக இருக்கும்னு சொல்லிட்டிங்க .
    உடனே பாத்துடுவோம்.ஏற்கனவே பின்னோக்கி இந்த படத்தை எழுதிட்டார்.ஆனா நீங்க வேற மாதிரி எழுதிட்டிங்க . repeated - ஆக தெரியலை.இன்னும் நிறைய படங்களை எழுதுங்க.ஓட்டுபோட்டுட்டேன்.

    ReplyDelete
  3. @Lucky Limat லக்கி லிமட், @kailash,hyderabad
    வருகைக்கு நன்றி நண்பர்களே...

    ReplyDelete
  4. நல்ல விவரணை. படம் கொஞ்சம் பயமா இருக்கும்னு நினைக்கிறேன்... :)

    ReplyDelete
  5. @மயில்ராவணன்: அட பயமெல்லாம் இல்லிங்க...:) வித்யாச அனுபவமா இருக்கும். கண்டிப்பா பாருங்க...

    ReplyDelete
  6. Fantasti film.i have seen a year back.Its in my top 20 list of favourite..Good music too in the film

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...